சித்திரப்பாவை என் சிறுநகையோ ச...

Oleh Vaishu1986

43.9K 2.9K 632

மிதமிஞ்சிய பணத்திமிரில் தன் வீட்டில் வேலை பார்க்கும் பணிப்பெண்ணின் மகனை பாடாய்படுத்தி எடுக்கும் நாயகி, பின்னா... Lebih Banyak

❤ சிறுநகை 1
❤ சிறுநகை 2
❤ சிறுநகை 3
❤ சிறுநகை 4
❤ சிறுநகை 5
❤ சிறுநகை 6
❤ சிறுநகை 7
❤ சிறுநகை 8
❤ சிறுநகை 9
❤ சிறுநகை 10
❤ சிறுநகை 11
❤ சிறுநகை 12
❤ சிறுநகை 13
❤ சிறுநகை 14
❤ சிறுநகை 15
❤ சிறுநகை 16
❤ சிறுநகை 17
❤ சிறுநகை 18
❤ சிறுநகை 19
❤ சிறுநகை 20
❤ சிறுநகை 21
❤ சிறுநகை 22
❤ சிறுநகை 23
❤ சிறுநகை 24
❤ சிறுநகை 25
❤ சிறுநகை 26
❤ சிறுநகை 27
❤ சிறுநகை 28
❤ சிறுநகை 29
❤ சிறுநகை 30
❤ சிறுநகை 31
❤ சிறுநகை 32
❤ சிறுநகை 33
❤ சிறுநகை 34
❤ சிறுநகை 35
❤ சிறுநகை 36
❤ சிறுநகை 37
❤ சிறுநகை 38
❤ சிறுநகை 39
❤ சிறுநகை 40
❤ சிறுநகை 41
❤ சிறுநகை 42
❤ சிறுநகை 43
❤ சிறுநகை 44
❤ சிறுநகை 45
❤ சிறுநகை 46
❤ சிறுநகை 47
❤ சிறுநகை 48
❤ சிறுநகை 49
❤ சிறுநகை 50
❤ சிறுநகை 51
❤ சிறுநகை 52
❤ சிறுநகை 53
❤ சிறுநகை 54
❤ சிறுநகை 55
❤ சிறுநகை 56
❤ சிறுநகை 57
❤ சிறுநகை 58
❤ சிறுநகை 59
❤ சிறுநகை 61
❤ சிறுநகை 62
❤ சிறுநகை 63
❤ சிறுநகை 64
❤ சிறுநகை 65
❤ சிறுநகை 66
❤ சிறுநகை 67
❤ சிறுநகை 68
❤ சிறுநகை 69
❤ சிறுநகை 70
❤ சிறுநகை 71
❤ சிறுநகை 72
❤ சிறுநகை 73
❤ சிறுநகை 74
❤ சிறுநகை 75
❤ சிறுநகை 76
❤ சிறுநகை 77
❤ சிறுநகை 78
❤ சிறுநகை 79
❤ சிறுநகை 80
❤ சிறுநகை 81
❤ சிறுநகை 82
❤ சிறுநகை 83
❤ சிறுநகை 84
❤ சிறுநகை 85
❤ சிறுநகை 86
❤ சிறுநகை 87
❤ சிறுநகை 88
❤ சிறுநகை 89
❤ சிறுநகை 90
❤ சிறுநகை 91
❤ சிறுநகை 92
❤ சிறுநகை 93
❤ சிறுநகை 94
❤ சிறுநகை 95
❤ சிறுநகை 96
❤ சிறுநகை 97
❤ சிறுநகை 98
❤ சிறுநகை 99
❤ சிறுநகை 100

❤ சிறுநகை 60

345 32 2
Oleh Vaishu1986

நாளை சந்தனாவின் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்பதற்காக சஞ்சீவ், கல்பனா, ஜனார்த்தனன்
பிள்ளைகள் அனைவரும் இன்றே நாகர்கோவிலுக்கு வந்து சேர்ந்திருந்தனர். மினுவும் சஞ்சீவுடன் மிஸ்டர் ரேஷை பார்க்க வருவேன் என்று அடம்பிடித்து சஞ்சீவ் அவளுக்கு செய்த அட்வைஸ் மழையின் ஈரம் தாங்காமல் தன் அண்ணனிடம் தலைக்கு மேல் ஒரு கும்பிடாக போட்டு அவள் வேலையைப் பார்க்க போயிருந்தாள்.

இந்த வீட்டிற்கு வந்ததில் இருந்து எல்லோரும் ஹாலிடே மூடில் சுற்றிக் கொண்டிருக்க சஞ்சீவ் மட்டும் கதிரை தனியே அழைத்துப் போய் சென்னை வீட்டை இந்த அக்கா எப்போது உங்களிடமிருந்து வாங்கி ரெஜிஸ்டரேஷன் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று கேளுங்கள் என்று கதிரின் சட்டையைப் பிடித்து இழுத்து அவனுடைய முதுகை சுரண்டிக் கொண்டிருந்தான்.

"அடேய் இருடா.... இப்பத்தான் வந்து இறங்கி எங்க ஸாரப் பத்தி கொஞ்ச நேரம் எங்கிட்ட பேசிட்டு, பிள்ளைங்களோட சேந்து வீட்ட சுத்திப் பாத்துக்கிட்டு இருக்காங்க. வந்ததும் வராததுமா அவங்க கிட்ட போயி எப்டி இதெல்லாம் நான் பேச முடியும்? கொஞ்சம் டைம் குடு. அக்கா ஊருல இருந்து கெளம்புறதுக்குள்ள நான் அவங்க வீட்டுக்காரருட்ட மெதுவா இதப்பத்தி பேசுறேன்!" என்று சொன்ன கதிரிடம் முடியாதென தலையசைத்தவன் நேராக ஜனார்த்தனனிடம் போய் நின்று விட்டான்.

"மிஸ்டர் ஜனார்த்தன்! நைஸ் ட்டூ மீட் யூ! நான் மிஸ்டர் கதிரோட அஸிஸ்டெண்ட்; நீங்க அவரோட சென்னை வீட்ட வாங்கிக்கப் போறீங்கன்னு எங்கிட்ட சொன்னாரு! நான் ஏற்கனவே அவரோட பிஸினஸ் நடக்குற ஷாப்ஸையும் நல்ல அமௌண்ட் கெடச்சா கைமாத்தி விடணும்னு யோசிச்சுட்டு இருக்கேன்.ஸோ அவரோட சென்னை வீட்டுக்கு நீங்க எவ்ளோ குடுப்பீங்கன்னு தெரிஞ்சா எனக்கு கொஞ்சம் ஹெல்ப்புல்லா இருக்கும்!" என்று பக்காவான பிஸினஸ்மேன் போல் என்ன
விலைக்கு வீட்டை வாங்கிக் கொள்ளப் போகிறாய் என்று
அடித்துக் கேட்டுக் கொண்டிருந்த சஞ்சீவின் அருகில் பதட்டத்துடன் சென்று நின்றான் கதிரேசன்.

"நம்ம கிட்ட நான் உங்க எக்ஸ் எம்ப்ளாயின்னு ஒரு பிரகஸ்பதி சொல்லுச்சே; எங்கப்பா அந்த மானஸ்தன? எக்ஸ் எம்ப்ளாயி இப்படித்தான் இப்ப நீங்க என்ன செய்யணும்னு கேட்டு நெஞ்சுல
அடிச்சுக்குவானா?" என்று சஞ்சீவ் ஜனாவிடம் பேசிக் கொண்டிருந்த போது தன் மனதிற்குள்ளாக தோன்றிய கேள்வியில் சிரித்துக் கொண்ட கதிர் கையைக் கட்டிக் கொண்டு அவர்களுடைய உரையாடல் முடியட்டும் என காத்திருந்தான்.

சஞ்சீவ் பேசி முடித்ததும் கதிர் ஜனார்த்தனனிடம், "ஸார்.... எதுவும் தப்பா எடுத்துக்காதீங்க ஸார்! அக்கா கிட்ட இவன் பேசுனத எல்லாம் சொல்லிடாதீங்க; கதிர் என்னடா இப்டியெல்லாம் யோசிக்க ஆரம்பிச்சுட்டான்னு அவங்களும் என்னை தப்பா எடுத்துக்கப் போறாங்க! இந்தப் பையன் எப்பவுமே இப்டித்தான் ஸார்.... வேலைன்னு வந்துட்டா ரொம்ப ரொம்ப கண்டிப்பானவன்! ஒவ்வொரு நேரம் அவன் சொல்ற வேலைய நான் செஞ்சு முடிச்சதுக்கப்புறம் தான் என்னைய சோத்துல கூட கைய வைக்க உடுவான்..... ஆனா என்னோட வளர்ச்சி மொத்தமுமே இவனால நடந்தது தான் ஸார்!" என்று ஜனார்த்தனனுக்கு விளக்கம் கொடுத்தான்.

"மிஸ்டர் ஜனார்த்தன்! டோண்ட் மிஸ்டேக் மீ! இவர் சொல்ற மாதிரி தான் நான்; ஒவ்வொரு பெயிண்டிங்காகவும் கதிர் மெனக்கெடுற மெனக்கெடல் எனக்குத் தெரியும். ஸோ அந்தப் பணத்துல கெடச்ச ஒரு ரூபா கூட வேஸ்ட் ஆகிடக் கூடாதுங்குறதுல நான் ரொம்ப தெளிவா இருக்கேன்!" என்றவனைப் பார்த்து சிரித்த ஜனார்த்தனன்,

"தட்ஸ் ரைட் மிஸ்டர் சஞ்சீவ்! கதிரோட பிராப்பர்ட்டிக்கு அவர் எனக்கு ஒரு எக்ஸாக்ட்டான வெலையே சொல்ல மாட்டேங்குறாரு. நானும் அவர்ட்ட அந்த வீட்டுக்கான கரெண்ட் ரேட்ட குடுத்துடுறேன்னு பொதுவா தான் சொல்லியிருந்தேன். உங்க பாஸோட பிராப்பர்ட்டி நல்ல விலைக்குப் போகணும்னு நினைக்குற நீங்களே அதுக்கு ஒரு
விலைய சொல்லுங்களேன்..... என் பட்ஜெட்க்கு ஓகேன்னா நாம அந்த விலைக்கே டீல பைனலைஸ் பண்ணிடலாம்!" என்று சொன்னான் ஜனார்த்தனன்.

"ஃபைன் மிஸ்டர் ஜனார்த்தன்! லெட்ஸ் டிஸ்கஸ்!" என்று சொன்ன சஞ்சீவ் அவரை கையோடு அழைத்துச் சென்று கோழியை அமுக்குவது போல் அமுக்கி அவரிடம் அந்த ஏரியாவின் தற்போதைய இட மதிப்பீடு, தனி வீட்டுக்கான விலை இவைகளை எல்லாம் புள்ளி விபரமாக சொல்லி சென்னை வீட்டிற்கான அவன் நினைத்த நிர்ணயத்தொகையை ஜனார்த்தனனிடம் கேட்ட போது
கல்பனாவின் கணவனும் சிறு புன்னகையுடன் சஞ்சீவ் கேட்ட அந்த தொகைக்கு ஒத்துக் கொண்டான்.

"யேய்..... வீடு சூப்பரா இருக்குடா! ரொம்ப ஆர்ட்டிஸ்டிக்கா, நிறைய யுனீக் ஐயிட்டம்ஸோட அழகா இருக்கு!" என்று கதிரிடம் சொன்ன கல்பனாவிடம் தன் நெஞ்சைத் தொட்டு "நான் இல்ல..... எல்லாம் அவன் வேல தான்!" என்று சஞ்சீவின் பக்கமாக
கை காட்டினான்.

"என்ன கதிர் நடக்குது இங்க? ரெண்டு பேரும் இவ்ளோ சீரியஸா பேசிட்டு இருக்காங்க?" என்ற கேள்வியுடன் கதிரின் முகத்தைப் பார்த்த கல்பனா தன்னுடைய கணவன் அவளை கையாட்டி அழைக்கவும் அவனருகில் சென்றாள்.

"ஐயயோ.... என்ன கொள்ள போவுதுன்னு இந்த லூசுப்பய இந்த பண விசயத்த எல்லாம் வந்தவொடனே அக்கா அவங்க வீட்டுக்காரர்ட்ட பேசிக்கிட்டு இருக்கான்னு தெரியலயே..... இந்த ஆட்டைக்கு நான் வரலப்பா!" என்று சொன்ன கதிர் அங்கிருந்து நழுவி பாகேஸ்வரியிடம் ஓடி விட்டான்.

சற்று நேரத்திற்கு பின்னர் கல்பனா, ஜனார்த்தனன், அவளுடைய அலைபேசியில் இருந்து கதிரின் புரஃபொஸர் மாணிக்கவேல் மூவரும் கதிருடைய வீட்டை வாங்கிக் கொள்ள தங்களுக்கு முழு சம்மதம் என்று நிறைவான புன்னகையோடு சொல்லவும் கதிரும், பாகேஸ்வரியும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

"உங்க வீட்ட மறுபடியும் நான் அக்கா கிட்டயே திருப்பி குடுக்குறதுல எனக்கு ரொம்ப சந்தோஷம் ஸார்! என்ன ஸார் நீங்க இந்தப் பக்கமெல்லாம் வரவேயில்ல?" என்று கேட்டவனிடம்,

"இந்த ஊரோட க்ளைமேட்டும், டீயும் இங்கயே என்னை கட்டிப் போட்டு வச்சுருக்குடா கதிர்! கல்யாணம் ஆனவுடனே உன் வொஃய்ப கூட்டிட்டு ஒருதடவ இங்க வந்துட்டுப் போ மேன்! யூ வில் கெட் வெரைட்டி ஆஃப் இன்ஸ்பிரேஷன்!" என்று சொன்னவரிடம்,

"பாக்குறேன் ஸார்! நீங்க உங்க உடம்ப பாத்துக்குங்க. உங்க பையன நான் விசாரிச்சதா சொல்லுங்க ஸார்!" என்று அவரிடம் சொல்லி விட்டு வைத்தான்.

கல்பனாவையும், ஜனார்த்தனனையும் பார்த்து முறைத்துக் கொண்டே போன கிருஷ்ணராஜை பெரிதாக யாரும் கண்டுகொள்ளவுமில்லை அதே நேரம் முழுதாக விலக்கவுமில்லை.

"இந்தாங்க தாத்தா! உங்களுக்காக நாங்க ஊர்ல இருந்து வரும் போது ட்ரெஸ்ஸூம், ஸ்வீட்ஸூம் வாங்கிட்டு வந்தோம்!" என்று அவரிடம் ஒரு பையை நீட்டிய வெண்மதியிடம் பல்லை திறந்து காட்டியவர் அவளிடம் அந்தப் பையை மறுக்காமல் வாங்கிக் கொண்டார்.

தன்னுடைய மூத்த பெண்ணும், மாப்பிள்ளையும் முதன்முறையாக
வீட்டிற்கு வந்த சந்தோஷம் பாகேஸ்வரிக்கு. இங்கு வந்ததில் இருந்து அவருக்கு மிகவும் பிடித்தமான வேலையாக இருக்கும்
கடைக்குப் போக வேண்டும் என்பது கூட இன்று மறந்து போய் விட்டது அவருக்கு.

"எங்க கூட வெளையாட வா பாட்டி!" என்று அவரின் கையைப் பற்றி இழுத்த வெண்மதி, இளமதியிடம்,

"ஓ.... வெளயாடலாமே! ஆமா, என்னடா வெளையடலாம்? முதல்ல கொஞ்சூண்டு சாப்ட்டுட்டு தான் அப்புறமா வெளையாட்டு!" என்று சொல்லி அவர்கள் இருவரின் பின்னால் ஓடிக் கொண்டிருந்தார்.

இப்போது கதிரை தனியாக அழைத்துச் சென்ற கல்பனாவிடம்,
"மன்னிச்சுடுங்க அக்கா! எல்லாம் அந்தப்பய வேல தான்; என்னைய ஒண்ணும் தப்பா நெனச்சுக்காதீங்க!" என்று வருத்தக்குரலில் கேட்டான் கதிர்.

"டேய்.... உன்னைய எவடா தப்பா நெனச்சா? ஜனா சைடுல சஞ்சீவ் சொன்ன அமௌண்ட் நல்ல அமௌண்ட் தான்! அவரும், நானும் ரொம்ப ஹேப்பி! அத விடு.... எப்டி போயிட்டு இருக்கு உன் லவ் லைஃப்? சந்தனா கூட எல்லாம் ஓகே தான?" என்று கேட்ட கல்பனாவிடம்,

"ம்க்கும்.....! என்னத்த ஓகே தான? அன்னிக்கு வீட்டுக்கு வந்தாக்கா! என்னடீ எங்கூட நாள் பூரா இருந்துட்டுப் போவம்னு நெனச்சுட்டு வந்தியான்னு நான் கேட்டதுக்கு சொன்னா பாருங்க ஒரு பதிலு....!" என்று நிறுத்தியவனிடம்,

"டேய்..... எப்பப் பாரு உனக்கு இதே வேலையாப் போச்சு!
நல்ல நேரத்துலயா கொண்டு போயி சஸ்பென்ஸ வப்ப? அவ என்னடா சொன்னா?" என்று ஆர்வமாக கேட்டாள் கல்பனா.

"அவ வீட்ல அன்னிக்கு நான்வெஜ் வாங்கியிருந்தாங்களாம். வீட்ல இருந்தா எங்கப்பா என்னையும் ஜெபாவையும் நெறய வெங்காயமும் பூண்டும் வெட்ட உட்டுடுவாரு; அதோட ஸ்மெல்லே ஒரே அலர்ஜியா இருக்கும்!
அதனால இங்க ஒடியாந்துட்டேன்னு சொல்றாக்கா! ரெண்டும் நல்லா கிச்சன் டைனிங் ஏரியாவுல வக்கனையா போய் ஒக்காந்துக்கிட்டு, ப்ளோரெசென்ட் எல்லோ ப்ளேட்னா எனக்கு பிடிக்கும்; இத எங்க வாங்குனன்னு கேட்டு என் சாப்பாட்டுத் தட்டையும் புடுங்கி, அதுல இருந்த உருளைக்கிழங்கு வறுவலையும் புடுங்கி தின்னுட்டாக்கா....!" என்று குறை படித்தவனின் பேச்சைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்தாள் கல்பனா.

"நீ பாதி அர்னால்ட் மாதிரி இருந்தும் ஒண்ணும் பிரயோஜனம் இல்ல போலிருக்கே கதிர்! நம்ம இளமதி கூட உன்னைய விட தெளிவா இருப்பா போலிருக்கு! உன்னை இப்டி சந்தோஷத்தோட பாக்க ரொம்ப நிம்மதியா இருக்குடா!" என்று சொன்னவளிடம்,

"இன்னும் முழுசா சந்தோஷம் வரலக்கா! அவ என்னைய கல்யாணம் பண்ணிக்கிட்டான்னா தான் முழு சந்தோஷமும் வரும்!" என்றவன்,

"அக்கா.... ஒரு நிமிஷம் எங்கூட வாங்க!" என்று சொல்லி கல்பனாவை மாடிக்கு அழைத்துச் சென்றான்.

"இது நானே வரைஞ்ச டிஸைன்.... நல்லா இருக்காக்கா?" என்று கேட்டு அவனுடைய நிச்சயதார்த்த மோதிரத்தை கல்பனாவிடம் காட்டினான்.

"இது அவளுக்கு... இது எனக்கு....!" என்று அவன் காட்டிய மோதிரத்தை ஒவ்வொன்றாக பார்த்த கல்பனா அந்த மோதிரத்தை உற்று உற்று பார்த்து சற்றே குழப்பமடைந்து போனாள்.

"என்னடா டிஸைன் இது? தனியா நிக்குற மானா? இல்ல பேரோட இனிஷியலா? இது நல்லாவேயில்ல போடா!
என்னத்த வரைஞ்சுருக்கியோ எனக்கு ஒண்ணுமே புரியல!" என்று சடைத்தவளிடம் சற்றே தயங்கிய படி, இரண்டு மோதிரங்களையும் ஒன்றை ஒன்று ஒட்ட வைத்து காட்டினான் கதிர்.

"ஏய்! வா......வ்! கதிர் நீ பெரிய கள்ளன்டா!" என்று சொன்ன கல்பனா அவனுடைய மோதிரங்கள் இரண்டையும் அவன் வைத்திருந்தது போலவே தன்னுடைய கையில் வைத்துப் பார்த்தாள்.

ஒரு ஆண் மானும், ஒரு பெண் மானும் முத்தமிட்டு நிற்பது போலவும், அவைகள் இரண்டின் கழுத்துகளும் ஒன்று சேரும் இடத்தில் ஒரு இதய வடிவம் இருப்பது போலவும் அந்த மோதிரங்களில் டிஸைன் செய்திருந்தான் கதிரேசன்.

ஒரு மோதிரத்தை தனியாக வைத்துப் பார்த்தால் அதில் உள்ள டிஸைன் அவர்களுடைய முதல் எழுத்தை மட்டுமே காட்டும்! இரண்டு மோதிரங்களும் ஒட்டி இருந்தால் மட்டுமே அவனுடைய டிஸைன் முழுமையாக தெரிந்து ஒரு அர்த்தத்தையே கொடுக்கும்!

சந்தனாவிடம் அவள் வந்த அன்றே இதைக் காட்டி அவளை மகிழ வைக்கலாம் என்று தான் நினைத்திருந்தான்..... ஆனால் அவனுடைய மான்குட்டி அவனை அன்று சொர்க்கத்தின் பக்கத்திலேயே தூக்கிச் சென்று போய் விட்டாள். அதனால் தான் அவன் வாழ்வில் மதிக்கும் சில நபர்களில் ஒருத்தியான
கல்பனாவிடம் முதன் முதலாக இந்த மோதிரங்களை காட்டி விட்டான்.

"ரொம்ப அழகாயிருக்கு கதிர். அவ மட்டும் தான் வேணும்னு இத்தன வருஷம் நீ தனியா இருந்தது பெரிசில்ல! ஒரு காலத்துலயும்
உங்க அப்பாவ மாதிரி ஆகிடாம சந்தனாவுக்கு சுதந்திரம் கொடுத்து, அவள காதலிச்சு உங்க வாழ்க்கையில டெய்லி ஒரு சந்தோஷமான பக்கத்த சேர்த்துட்டே போகணும்.... ஆனா அது ஒண்ணும் அவ்ளோ ஈஸியில்ல கதிர்!" என்று சொன்ன கல்பனாவிடம் உற்சாகமாக புன்னகைத்தவன்,

"ரொம்ப ரொம்ப கஷ்டமா இருந்தாலும் நாங்க முயற்சி பண்றத விட மாட்டோம் கல்பனாக்கா! அவள ரொம்ப நல்லா பாத்துக்குவேனான்னு என்னால சரியா சொல்ல முடியலக்கா; ஏன்னா இப்பல்லாம் அவ தான் எனக்காக ஒவ்வொரு விஷயத்தையும் பாத்து பாத்து செஞ்சுட்டு இருக்கா...... ஆனா ஒருநாளும் எங்கப்பன மாதிரி ஆகி நான் என் லஷ்மிய தனியா தவிக்க விட மாட்டேன்!" என்றான் உறுதியான குரலில்.

சிறுநகை மலரும்!

Lanjutkan Membaca

Kamu Akan Menyukai Ini

116K 4.2K 68
காதல் என்பது ஒரு மாயாஜாலம் இவர்கள் இவர்களுக்குத்தான் என்று இறைவன் முடிவு எடுத்து விட்டால் நாடுகள், கண்டங்கள் தாண்டி சேர்ந்தே தீருவார்கள். இதான் நம்ம...
82.5K 4.5K 55
அவன் அரச பரம்பரையைச் சேர்ந்தவன். அவளோ, அவனது பாட்டனாரின், வேலைக்காரரின் மகள். அவர்களுக்கிடையில் பிரச்சனையாக இருந்தது வெறும் அந்தஸ்து மட்டும் தானா? அல...
10.6K 1.1K 30
காதல் என்ற வார்த்தையையே வெறுக்கும் நாயகன், தன் மனதிற்கு பிடித்தவளை சந்திக்கும்போது, காதலில் விழாமலா போய்விடுவான்? தனக்கு ஏற்பட்டிருந்த கசப்பான அனுபவத...
167K 1.6K 13
அந்த ஒற்றை இரவில் மகிழ்ச்சியான தனது திருமண வாழ்க்கை தலைகீழாக மாறி, ஒரு கெட்ட சொப்பனமாக மாறக் கூடும் என்று அவள் ஒருபோதும் நினைத்திருக்கவில்லை. அவன் அவ...