சித்திரப்பாவை என் சிறுநகையோ ச...

By Vaishu1986

43.9K 2.9K 634

மிதமிஞ்சிய பணத்திமிரில் தன் வீட்டில் வேலை பார்க்கும் பணிப்பெண்ணின் மகனை பாடாய்படுத்தி எடுக்கும் நாயகி, பின்னா... More

❤ சிறுநகை 1
❤ சிறுநகை 2
❤ சிறுநகை 3
❤ சிறுநகை 4
❤ சிறுநகை 5
❤ சிறுநகை 6
❤ சிறுநகை 7
❤ சிறுநகை 8
❤ சிறுநகை 9
❤ சிறுநகை 10
❤ சிறுநகை 11
❤ சிறுநகை 12
❤ சிறுநகை 13
❤ சிறுநகை 14
❤ சிறுநகை 15
❤ சிறுநகை 16
❤ சிறுநகை 17
❤ சிறுநகை 18
❤ சிறுநகை 19
❤ சிறுநகை 20
❤ சிறுநகை 21
❤ சிறுநகை 22
❤ சிறுநகை 23
❤ சிறுநகை 24
❤ சிறுநகை 25
❤ சிறுநகை 26
❤ சிறுநகை 27
❤ சிறுநகை 28
❤ சிறுநகை 29
❤ சிறுநகை 30
❤ சிறுநகை 31
❤ சிறுநகை 32
❤ சிறுநகை 33
❤ சிறுநகை 34
❤ சிறுநகை 35
❤ சிறுநகை 36
❤ சிறுநகை 37
❤ சிறுநகை 38
❤ சிறுநகை 39
❤ சிறுநகை 40
❤ சிறுநகை 41
❤ சிறுநகை 42
❤ சிறுநகை 43
❤ சிறுநகை 44
❤ சிறுநகை 45
❤ சிறுநகை 46
❤ சிறுநகை 47
❤ சிறுநகை 48
❤ சிறுநகை 49
❤ சிறுநகை 50
❤ சிறுநகை 51
❤ சிறுநகை 52
❤ சிறுநகை 53
❤ சிறுநகை 54
❤ சிறுநகை 55
❤ சிறுநகை 56
❤ சிறுநகை 57
❤ சிறுநகை 59
❤ சிறுநகை 60
❤ சிறுநகை 61
❤ சிறுநகை 62
❤ சிறுநகை 63
❤ சிறுநகை 64
❤ சிறுநகை 65
❤ சிறுநகை 66
❤ சிறுநகை 67
❤ சிறுநகை 68
❤ சிறுநகை 69
❤ சிறுநகை 70
❤ சிறுநகை 71
❤ சிறுநகை 72
❤ சிறுநகை 73
❤ சிறுநகை 74
❤ சிறுநகை 75
❤ சிறுநகை 76
❤ சிறுநகை 77
❤ சிறுநகை 78
❤ சிறுநகை 79
❤ சிறுநகை 80
❤ சிறுநகை 81
❤ சிறுநகை 82
❤ சிறுநகை 83
❤ சிறுநகை 84
❤ சிறுநகை 85
❤ சிறுநகை 86
❤ சிறுநகை 87
❤ சிறுநகை 88
❤ சிறுநகை 89
❤ சிறுநகை 90
❤ சிறுநகை 91
❤ சிறுநகை 92
❤ சிறுநகை 93
❤ சிறுநகை 94
❤ சிறுநகை 95
❤ சிறுநகை 96
❤ சிறுநகை 97
❤ சிறுநகை 98
❤ சிறுநகை 99
❤ சிறுநகை 100

❤ சிறுநகை 58

352 30 14
By Vaishu1986

காலையில் சூரியகாந்தி மலர் போல் கண்களுக்கு விருந்தளித்தவள், மதிய வேளையில் நீலக்குவளை போல் கதிரின் கண்களுக்கு காட்சியளித்தாள். அவனது அன்னை ரேஷ் ட்ரெஸ்ஸஸில் இந்தக் காலத்தின் யுவதிகளுக்கு விருப்பமான உடை எதுவென அறிந்து கொண்டு, அவளுக்கென தேடி தேடி எடுத்து வந்த உடைகளில் தேர்ந்தெடுந்து ஒரு நீல நிற உடையை அணிந்திருந்தாள்.

வீட்டில் வளர்ந்து வந்த பிச்சிக்கொடிக்காக பாகேஸ்வரி
அமைத்திருந்த பந்தல் போன்ற அமைப்பின் அருகில் குளித்து முடித்து நின்று கொண்டிருந்தவள், அவளது இடைக்கு சற்று மேலே ஏறியிருந்த கூந்தலை துண்டால் துவட்டிக் கொண்டிருக்க, "இந்த துண்டுல உனக்கு என் வாசம் அடிக்குதா சூபொ?" என்று அவளிடம் கேட்க கதிருக்கு ஆசை தான்..... ஆனால் ஏதோ தவறு செய்து விட்டவன் போல் அவளது அருகில் கூட போகாமல் நூறு மீட்டர் தூரத்தில் நின்று அவளை கண்களால் மட்டும் ரசித்துக் கொண்டிருந்தான்.

கட்டி அணைத்தது, கழுத்தோரம் கடித்தது, அவளது வாசத்தில் மயங்கி கிடந்தது, அவளது உடல் பாகங்கள் ஒன்று விடாமல் தன்னுடைய உடலால் அளந்தது என்று நினைத்த காதல் லீலைகளை எல்லாம் தங்குதடையின்றி செய்து விட்டு
அவளிடம் என் வாசத்தை நீயும் உணர்ந்தாயா? என் போல் நீயும் நம்முடைய தேகத்தீண்டல்களால் களித்தாயா என்ற கேள்விகளை இப்போது கேட்டால் அதற்குப்பிறகு நிகழப்போகும் விபரீதமான 
பின்விளைவுகளை நினைத்து ஒன்றும் பேசாமல் கமுக்கமாக பம்மிக் கொண்டு நின்று விட்டான்.

தன்னுடைய கையிலிருந்த ஸ்க்ரூ ட்ரைவரால் செடிகளுக்கு தண்ணீர் செலுத்தும் ஹோஸ்களில் இரண்டு மூன்று இடங்களில் குத்தி துளையிட்டவன், பைப்பை திறந்துவிட்டு, தான் போட்டு துளைகளின் வழியே பீய்ச்சி அடித்த தண்ணீரைப் பார்த்து,

"ஆங்.... வருது! வருது..... ஒரு ஆள் நனையுற அளவுக்கு நல்லாவே தண்ணி வருது!" என்று திருப்திப்பட்டுக் கொண்டான். எதற்காக நனைந்து போனோம் என்று அன்னையிடம் சொல்ல அவன் செய்யும் மெனக்கெடலைப் பார்த்து புன்னகைத்த சந்தனா அவள் கையிலிருந்த டவலை கீழே வீட்டின் பக்கவாட்டில் கட்டியிருந்த
கொடியில் காய வைத்து விட்டு
அவனருகில் வந்தாள்.

"மிஸ்டர் ரேஷ்..... பாகேஸ் ஆன்ட்டி மார்க்கெட்டுக்குப் போயி
நாப்பது நிமிஷம் ஆகப் போகுது! போ மேன்..... போயி ஈர ட்ரெஸ்ஸ சேன்ஜ் பண்ணு. ஏதோ மொறப்பையன பாக்க வெக்கப்பட்டு அவனோட ஆளு ஓடுற மாதிரி, எம்முகத்த பாக்க வெக்கப்பட்டுட்டு இந்த ஓட்டம் ஓடுற? இப்ப எதுக்கு இந்த ஹோஸ குத்தி உடைச்ச? நான் நனைஞ்சதுக்கு காரணம் சொல்லணும்னா.....? நோ வே..... இட்ஸ் த ஸில்லி ரீசன்!"

"நான் இந்த செடிக்கெல்லாம் தண்ணி ஊத்துறதுக்காக இந்த ஹோஸ கையில எடுத்து தண்ணிய தெறந்து விட்டேன்னு சொன்னீன்னா நீ சொன்ன காரணத்த கேட்டு
ஜெபா வயித்த புடிச்சுக்கிட்டு சிரிக்க ஆரம்பிச்சுடுவான். எனக்கு இந்த மாதிரி வேலையெல்லாம் பார்த்து பழக்கமே இல்ல! செடியில பூக்குற பூவ பாத்து ஹேப்பியாகுறது மட்டுந்தான் நம்ம ஸ்டைல்; மத்தபடி இந்த மண்ணை நோண்டுறது, உரம் வைக்குறது, செடியில காஞ்சு போன இலைய பறிக்குறது.... இதெல்லாம் ம்ஹூம்; இம்பாஸிபிள்!" என்று சொன்னவளின் தோளில் கையைப் போட்டு அவளது முடிக்குள் கையை நுழைத்தவன்,

"யாரு யாரப் பாத்து ஓடுறாங்க மேடம்....? ரெண்டு பேர்ட்டயும்
பதில் ரெடியா இருக்கணும்னு சொன்னீங்களே? அதுக்குத் தான் நான் அரக்க பரக்க இங்க ஓடி வந்தேன். நீங்க எந்த வேலையும் செய்ய மாட்டீங்க! நான் வேல செய்யுறப்ப பேச்சு தொணைக்காவது கூட வந்து நிப்பீங்கல்ல? அப்டி நின்னப்போ இந்த தண்ணிக்குழால இருந்து பீச்சிட்டு வந்த தண்ணியால நீங்களும், நீங்க போட்ருந்த ட்ரெஸ்ஸூம் நனைஞ்சு போயிடுச்சு! மத்த படி நீங்க மண்ண நோண்டவும் இல்ல; பைப்ப கையால தொட்டுப் பாக்கவும் இல்ல
இப்ப இந்த காரணம் நம்புற மாதிரி இருக்குதா? இல்ல வேற ஏதாவது எக்ஸ்ட்ரா பிட்ட போடணுமா?" என்று புருவம் தூக்கி கேட்டவனிடம் போதும் என புன்னகையுடன் தலையாட்டியவள்,

"டேய் ரேஷன்ஷாப்! நீ அழகா இருக்கன்னு நான் எப்பவுமே நெனைச்சதில்லடா; என்னோட ட்ரீம்பாய் எப்டி இருக்கணும் அப்படிங்கற எக்ஸ்பெக்டேஷன்ல நீயெல்லாம் அந்த ஏரியா பக்கத்துல கூட வந்ததில்ல; பட் நீ இவ்ளோ மேன்லி பிகர்னு எனக்கு இத்தன நாளா தெரியவே தெரியாது! திமிங்கலம் மாதிரி பொந்தாம்பொதுக்குன்னு இருப்பன்னு நினைச்சு வச்சுருந்தா நீ என்னடா இப்டி இருக்க?" என்று அவனிடம் கேட்டு தரையைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.

"உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயத்த கேக்கணும்னு நெனச்சேன். நீ குளிக்கறப்ப
தண்ணி ஒண்ணும் அழுக்கா வரலயே லஷ்மி? ஓகே தான?" என்று கேட்டவனிடம் பல்லைக் கடித்தவள்,

"எவ்ளோ முக்கியமான விஷயத்த சந்தேகமா கேட்டுட்டான் பாரு! அதான் நீ டேங்க்க ஃபுல் பண்ணிட்டியேடா? ஒண்ணும் ப்ராப்ளமில்ல. நான் நல்லாத் தான் குளிச்சேன்!" என்றாள்.

"சரி சரி கோபப்படாத....! ஏன்டீ முக்கியமா எதையாச்சு பேசுறப்ப தான் நீ தரையில கண்ண வச்சுக்கிட்டு
என்னத்தயாவது தேடிட்டு இருப்பியா? வாழ்க்கையில மொத மொறையா என்னைய பாராட்டணும்னு என் நெஞ்சு பக்கத்துல வந்து உன் மூச்சு ஒரசுற மாதிரி நின்னுக்கிட்டு என்னடீ மொட்டகட்டையா இப்டி இருக்கன்னு சொல்ற? நா எப்டி இருக்கேன்னு கொஞ்சம் வெலாவாரியா சொல்லேன் கேப்போம்!" என்றவனிடம்,

"அது வந்து......!" என்று தயங்கி திணறியவளிடம்,

"பார்றா.....! என் பொம்மைக்கு கோபத்துல கன்னம் செவக்காம, வெக்கத்துல கன்னம் செவக்குது!" என்று சொல்லி சந்தோஷத்தில் அவள் கன்னத்தில் முத்தமிட்டான் கதிர்.

"நான்..... லூஸ் ஹேர்ல இருந்தா ஆன்ட்டிக்கு பிடிக்காது! உள்ள போயி என் ஹேட்ச் க்ளிப்ப தேடிப் பாக்கணும்...... என்னை விடு ரேஷன்!" என்று தவிப்புடன் அவனிடமிருந்து விடுபட நினைத்தவளைப் பார்த்து கதிருக்கு மிகவும் உல்லாசமாகவும், குதூகலமாகவும் இருந்தது.

"லஷ்மி! இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடின்னு ஒருபாட்டு இருக்கு தெரியுமா உனக்கு.....? உன் ஹேட்ச்க்ளிப் எங்கிட்ட இருக்கு. அதக் கழட்டுனவனும் நாந்தான், இப்ப வச்சிருக்குறவனும் நாந்தான்..... அத உள்ள போயி எங்க தேடப் போற? இந்தா.... நீ தேடணும்னு நினைச்ச பொருள்!" என்று அவள் கையைப்பற்றி அவனது ஷார்ட்ஸ்க்குள் இருந்த அவளது க்ளிப்பை திணித்தான் கதிர்.

"இத எப்ப.... நீ.....?" என்று அவனிடம் கேட்க ஆரம்பித்தவள் பேச்சை பாதியிலே நிறுத்திக் கொண்டாள். இதை அவன் எப்போது எடுத்திருப்பான் என்ற கேள்வி அவளுக்கு சற்றே முட்டாள்தனமான கேள்வியாகப் பட்டது.

"ஐயயோ.... என்னோட அழகு சூனியபொம்மைக்கு என்னமோ ஆகிடுச்சு! பேஸ்து அடிச்ச மாதிரியில்ல திருதிருன்னு முழிச்சுக்கிட்டு நிக்குறா? எப்டி இருந்த பொண்ண இப்டி நிக்க வச்சுட்டியேடா கதிரேசா...... லஷ்மி
எனக்கு நெஞ்சு வலிக்குதுடீ! இப்ப நான் இருக்குற சந்தோஷத்துல உன்னை அப்டியே கட்டிப் புடிச்சு......!" என்றவனிடம் முறைப்புடன்,

"டேய்.... இருக்குற கடுப்புல உன்னைய கடிச்சு வச்சுடுவேன் பாத்துக்க.... நீ என்னைக் கட்டிப்புடிச்சு செஞ்சதெல்லாம் போதும்; மேல கைய வைக்காதடா எருமமாடு!" என்று திட்டியவளின் திட்டல் அவனுக்கான கொஞ்சலாக கேட்டது கதிருக்கு.

"நீ கடிக்காம உன் ரேஷன வேற யாருடா கடிக்கப் போறா செல்லம்? நமக்கு வால்நட்சத்திரம் பொறக்குற வரைக்கும் ஹோல் ரைட்ஸ் உனக்குத்தான்!" என்றவன்
அவளது பேச்சை காதில் வாங்காமல் தொடையைப் பிடித்து தூக்கி அவளை ஒன்றிரண்டு முறை தட்டாமாலை சுற்றி இறக்கினான்.

"எங்கிட்ட என்ன சொல்லணும்னு கரெக்டா யோசிச்சு வை. நான் போயி குளிச்சுட்டு வர்றேன்!" என்று சொல்லி அவளுடைய நெற்றி முட்டி தன் மூக்கால் அவள் மூக்கை உரசி விட்டுப் போனான்.

அவன் வீட்டின் படியேறியதும் தன்னுடைய ஒற்றைக்கையால் தன் நெஞ்சைப் பிடித்துக் கொண்ட சந்தனா,

"ஓ மை மேன்! இந்த லவ் என்ன இவ்ளோ பயங்கரமானதா இருக்கு? ஒடம்ப இவ்ளோ ஷிவர் ஆக்கி விட்டுடுது.....? இட்ஸ் எக்ஸ்ட்ரீம்லி டெரிபிள்!" என்று கூறி விட்டு தலையை உலுக்கிக் கொண்டாள் சந்தனா.

அவள் எதிர்பார்த்தது போல் வந்ததும் ஜெபாவும், பாகேஸ்வரியும் அவளது ஈரமான விரிந்த கூந்தலை தான் பார்த்து விட்டு என்ன நடந்தது என்று கேட்டனர்.

கதிர் சொன்ன கதையை கேட்ட ஜெபா அவனை குறுகுறுவென பார்த்துக் கொண்டிருக்க, பாகேஸ்வரி தன்னுடைய மகனிடம்,

"தண்ணி வர்ற டூப்பெல்லாம் நல்லாத்தானய்யா இருந்தது? எப்டி திடீர்னு ஓட்டையாப் போச்சு?
என்னய்யா.... நாந்தான்
காலையிலதா செடிங்க எல்லாத்துக்கும் குளுற குளுற தண்ணி ஊத்திட்டனே? நீ வேற இப்ப தண்ணிய தொறந்து உட்டு
பாப்பாவ இப்டி நனைய வச்சுட்ட?" என்று அவனை குற்றம் சாட்டினார்

"நான் என்ன பண்ணேன்? ஒங்க புருஷன் பண்ண வேலையால இவதான் ஒருமாதிரி உம்முன்னு ஒக்காந்துருந்தா! அதான் கொஞ்ச நேரம் வீட்டுக்கு வெளிய கூட்டிட்டு வருவமுன்னு நெனச்சேன். சரி வெளிய நிக்குறமே, செடிய கொஞ்சம் பாப்போம்னு ஹோஸ தெறந்து உட்டா அது ஓட்டையா இருக்கு! ஓட்டைய அடைக்குறதெல்லாம் அப்புறமா
நான் பாத்துக்குறேன். இப்ப  சீக்கிரத்துல எங்களுக்கு சோத்தப் போட போறீங்களா இல்லையா?" என்று சொன்னவனுடைய முன்னால் வந்து நின்ற ஜெபசேகரன் பாகேஸ்வரி சமையலறைக்குள் சென்று விட்டதை உறுதிசெய்து கொண்டு அவனிடம்,

"சந்து..... நனைஞ்சதுனால சேன்ஜ் பண்ணியிருக்கா ஓகே; நீங்களும் வேற ட்ரெஸ்ல இருக்கீங்க..... ஏன்? டெய்லி அரைமணி நேரத்துக்கு ஒருதடவ தான் சேன்ஜ் பண்ணிக்குவீங்களா?" என்று கேட்டான்.

"தம்பியாரே.... எங்கள நிறுத்தி வச்சு இப்டி சிபிஐ மாதிரி கேள்வி கேட்டு இன்வெஸ்டிகேட் பண்ற அளவுக்கெல்லாம் நீங்க இன்னும் வளரல. போங்க! உங்களுக்கு இப்ப சாப்பாடு வேணும்னா ஒழுங்கா கிச்சனுக்குள்ள போயி எங்கம்மா கிட்ட என்ன வேலை செய்யணும்னு கேட்டு செய்ங்க! இந்தா பின்னாடியே நானும் வர்றேன்!" என்றவனிடம்,

"நில்லுங்க..... உங்க அப்பாவுக்கு சந்துவ சுத்தமா புடிக்க மாட்டேங்குதே கதிர்ணா? நாளைக்கு நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டா அவரால எதுவும் ப்ராப்ளம் வராதா?" என்று கேட்டவனின் தோளில் கைவைத்த கதிர்,

"இத சொல்றதுக்கு கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு.... ஆனா உங்கிட்ட சொல்லித் தான் ஆகணும். நம்ம அவன இத்தன கழுவி ஊத்துறமே? அதுக்கு  எம்பக்கத்துல இருக்குற நியாயம்னு எதாவது பேசுறானான்னு பாத்தியா அந்த ஆளு? ம்ஹூம்.... வாயவே தொறக்க மாட்டான்; எங்க அப்பன் சைடு படு வீக் சேகர்! நாம அவன நோண்ட ஆரம்பிச்சம்னோ, அது எங்க போயி முடியும்னு அவனுக்கும் தெரியும்; நமக்கும் தெரியும்!
ஒவ்வொரு மாசமும் அவனோட பணத்துக்காக சும்மா சவுண்ட் தான் உடுவான்; மத்தபடி இந்த அசிங்கப்படுத்துறது, பழிக்கு பழிவாங்குறது, வன்மம் வச்சுருந்து நம்மள எதுவும் பண்றது இதுக்கெல்லாம் வொர்த் இல்லாத ஆளு அவன்! நீ லஷ்மிய நினைச்சு எந்த கவலையும் பட வேண்டாம்டா; நான் அவள எங்கப்பன் வழியில போவாம பார்த்துக்குறேன்! அப்டியே ரெண்டு பேரும் முட்டிக்கிச்சுங்கன்னாலும் அதுங்க ரெண்டு பேருக்கும் பஞ்சாயத்து பண்ணி வச்சு ஆட்டைய கலைச்சு உட்டுடுறேன் போதுமா? வா போலாம்!" என்றவனிடம்,

"இப்ப தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு. சரி..... ஆர்வத்த கண்ட்ரோல் பண்ணிக்க முடியாம தான் கேக்குறேன். ஒத்தவரியில சொல்லுங்க கதிர்ணா? நாங்க இல்லாதப்ப உங்க ரெண்டு பேருக்குள்ள என்ன நடந்துச்சு?" என்று கேட்ட ஜெபாவிடம் குறுஞ்சிரிப்புடன்,

"ரொமான்ஸ்.....!" என்று சொன்ன கதிர் வாயைப் பிளந்து பார்த்த ஜெபாவின் தோளில் இரண்டு தட்டி தட்டி விட்டு அவனை சமையலறைக்குள் அழைத்துச் சென்றான்.

கதிர், ஜெபா, மற்றும் சந்தனாவுடைய உதவியால்
பாகேஸ்வரி அடுத்த ஒருமணி நேரத்திற்குள் ஐந்து சாத வகைகள், உருளைக்கிழங்கு ரோஸ்ட், வடை, பாயாசம் என ஒரு சிறிய அளவிலான விருந்தையே தயார் செய்துவிட்டார்.

"ம்மா.... பாருங்கம்மா; அவ தட்டுல இருக்குறத சாப்டாம, எந்தட்டுல இருக்குறத பூரா வாயில போட்டு அதக்கிக்குறா!" என்று தன்னுடைய உருளைக்கிழங்கு வறுவலுக்காக சிறுபிள்ளை போல தாயிடம் முறையிட்டவனை ஒருபுறம் சந்தனாவும், மறுபுறம் பாகேஸ்வரியும் ஆசையாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

சிறுநகை மலரும்!




Continue Reading

You'll Also Like

3.2K 214 31
என்றுமே இணையாகாத புள்ளிகள் கட்டாயத்தால் பிணைந்துக் கொண்டால் என்னாகும்..?.அழகா அல்லது அலங்கோலாமா..? Ebook link: https://www.amazon.in/dp/B0BLP4RTRZ Fu...
10.7K 1.1K 30
காதல் என்ற வார்த்தையையே வெறுக்கும் நாயகன், தன் மனதிற்கு பிடித்தவளை சந்திக்கும்போது, காதலில் விழாமலா போய்விடுவான்? தனக்கு ஏற்பட்டிருந்த கசப்பான அனுபவத...
6.3K 233 20
ஆயிரம் அறிவுரைகள், ஆதரவு கரங்கள் நீண்டாலும் காதலாய் அவன் பார்க்கும் அந்த ஒரு பார்வைக்காக ஏங்கி தவித்தவள் கண்ணீர் கன்னத்தை தொட, அவள் கணவன் கையை கொஞ்சம...
189K 5K 127
காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வ...