சித்திரப்பாவை என் சிறுநகையோ ச...

By Vaishu1986

43.7K 2.9K 632

மிதமிஞ்சிய பணத்திமிரில் தன் வீட்டில் வேலை பார்க்கும் பணிப்பெண்ணின் மகனை பாடாய்படுத்தி எடுக்கும் நாயகி, பின்னா... More

❤ சிறுநகை 1
❤ சிறுநகை 2
❤ சிறுநகை 3
❤ சிறுநகை 4
❤ சிறுநகை 5
❤ சிறுநகை 6
❤ சிறுநகை 7
❤ சிறுநகை 8
❤ சிறுநகை 9
❤ சிறுநகை 10
❤ சிறுநகை 11
❤ சிறுநகை 12
❤ சிறுநகை 13
❤ சிறுநகை 14
❤ சிறுநகை 15
❤ சிறுநகை 16
❤ சிறுநகை 17
❤ சிறுநகை 18
❤ சிறுநகை 19
❤ சிறுநகை 20
❤ சிறுநகை 21
❤ சிறுநகை 22
❤ சிறுநகை 23
❤ சிறுநகை 24
❤ சிறுநகை 25
❤ சிறுநகை 26
❤ சிறுநகை 27
❤ சிறுநகை 28
❤ சிறுநகை 29
❤ சிறுநகை 30
❤ சிறுநகை 31
❤ சிறுநகை 32
❤ சிறுநகை 33
❤ சிறுநகை 34
❤ சிறுநகை 35
❤ சிறுநகை 36
❤ சிறுநகை 37
❤ சிறுநகை 38
❤ சிறுநகை 39
❤ சிறுநகை 40
❤ சிறுநகை 41
❤ சிறுநகை 42
❤ சிறுநகை 43
❤ சிறுநகை 44
❤ சிறுநகை 45
❤ சிறுநகை 46
❤ சிறுநகை 47
❤ சிறுநகை 48
❤ சிறுநகை 49
❤ சிறுநகை 50
❤ சிறுநகை 51
❤ சிறுநகை 52
❤ சிறுநகை 53
❤ சிறுநகை 54
❤ சிறுநகை 56
❤ சிறுநகை 57
❤ சிறுநகை 58
❤ சிறுநகை 59
❤ சிறுநகை 60
❤ சிறுநகை 61
❤ சிறுநகை 62
❤ சிறுநகை 63
❤ சிறுநகை 64
❤ சிறுநகை 65
❤ சிறுநகை 66
❤ சிறுநகை 67
❤ சிறுநகை 68
❤ சிறுநகை 69
❤ சிறுநகை 70
❤ சிறுநகை 71
❤ சிறுநகை 72
❤ சிறுநகை 73
❤ சிறுநகை 74
❤ சிறுநகை 75
❤ சிறுநகை 76
❤ சிறுநகை 77
❤ சிறுநகை 78
❤ சிறுநகை 79
❤ சிறுநகை 80
❤ சிறுநகை 81
❤ சிறுநகை 82
❤ சிறுநகை 83
❤ சிறுநகை 84
❤ சிறுநகை 85
❤ சிறுநகை 86
❤ சிறுநகை 87
❤ சிறுநகை 88
❤ சிறுநகை 89
❤ சிறுநகை 90
❤ சிறுநகை 91
❤ சிறுநகை 92
❤ சிறுநகை 93
❤ சிறுநகை 94
❤ சிறுநகை 95
❤ சிறுநகை 96
❤ சிறுநகை 97
❤ சிறுநகை 98
❤ சிறுநகை 99
❤ சிறுநகை 100

❤ சிறுநகை 55

324 31 4
By Vaishu1986

"எங்கிட்ட இவ கேட்ட மாதிரி ஏஸி, பாத்ரூமோட ட்ரெஸ்ஸிங் ரூம் அட்டாச்டுனு எந்த ரூம்ல எல்லா வசதியையும் செஞ்சு வச்சனோ அந்த ரூம தேடிக் கண்டுபிடிச்சு கரெக்டா உள்ள போயிக்கிட்டு நம்மள நேக்கா கழட்டி உட்டுடுச்சு பாருய்யா இது..... அவ லிப்லாக் குடுக்குறேன்னு சொன்னா அத நம்பி அவள எறக்கி விட்ட ஒனக்கு எங்கடா போச்சு அறிவு? கீழ எறக்கி விட்ட நிமிசத்துல உள்ள போயி கதவ சாத்திக்கிட்டாளே?" என்று முணங்கியவன்,

"ஏய்! லஷ்மி.... நேத்து நைட் இந்த ரூமுக்குள்ள ஒரு சுண்டெலி ஓடுறதப் பாத்தேன்டீ! அது இன்னும் உள்ளுக்குள்ள தான் எங்கயாவது சுத்திட்டு இருக்கும்! பயமா இருந்ததுன்னா வெளிய வந்துடு!" என்று அறையின் கதவருகில் காதை வைத்து அவளிடம் பேசிக் கொண்டிருந்தான்.

"என்னது? எலியா.....? டேய் திமிங்கலமே எலிய எதுக்குடா இந்த ரூமுக்குள்ள வச்சு வளத்துக்கிட்டு இருக்க?" என்று அவனிடம் கேட்டபடி துள்ளிக் குதித்துக் கொண்டு அந்த அறையிலிருந்து வெளியே வந்துவிடுவாள் என்பது அவனுடைய எதிர்பார்ப்பு!

அவளோ சாதாரணமான குரலில் அவனிடம், "நோ ப்ராப்ளம்! ஒனக்கு குடுக்குறேன்னு சொன்ன லிப் கிஸ்ஸ நான் அதுக்கு குடுத்துக்குறேன். நீ உன் ரூமுக்குப் போ!" என்று உள்ளிருந்தே பதில் கொடுத்தாள்.

"அது சரி.... டேய் கதிரு! எலிக்கெல்லாம் பயந்து தவ்விக் குதிக்குறதுக்கு அவ என்ன இன்னும் பதினாலு வயசு பாப்பாவா? இருந்தாலும் என்ன தெனாவெட்டா அதக் கட்டிப் புடிச்சு முத்தம் குடுக்குறேன்னு சொல்லுது பாரு என் செல்ல சூபொ! இருடீ..... உன்னைய வெளிய வர வைக்குறதுக்கு வேற ஒரு வழிய கண்டுபிடிக்குறேன்!" என்று சொல்லி சிரித்துக் கொண்டிருந்த கதிர் சில நிமிடங்கள் யோசித்துக் கொண்டிருந்து விட்டு ஒரு மர்ம புன்னகையுடன் மாடியிலிருந்து கீழே வரை போடப்பட்டிருந்த staircase railing மீது சாய்ந்து நின்று கொண்டிருந்தான்.

மாடியில் அவனறைக்கு எதிர்புறத்தில் அமைந்திருந்த அவளது அறையின் உள்ளே கட்டில், ஸோஃபா எல்லாவற்றையும் வாங்கிப் போட்டது போதாது போலிருக்கிறதே....? இவள் கோபப்பட்டு தன்னை வெளியே தள்ளி கதவைச் சாற்றும் நேரங்களில் தான் நின்று கொண்டிருக்கும் இந்த இடத்திலும் ஒரு கம்பர்டபிளான ஸீட்டரையும் வாங்கிப் போட வேண்டுமே என்று யோசித்தவன் அதை அப்புறமாக யோசித்துக் கொள்ளலாம் என்று நினைத்து தன்னுடைய அலைபேசியில் ஒரு பாடலை சப்தம் அதிகமாக வைத்துக் கேட்டுக் கொண்டிருந்தான்.

"ஏ...அளவான உடம்புக்காரி...அளவில்லா கொழுப்புக்காரி...
இருக்குது இருக்குது வாடி
உனக்கு ராத்திரி கச்சேரி....!" என்ற பாடல் வரிகளை கேட்டுக் கொண்டிருந்தவன் பத்து, ஒம்போது, எட்டு என்று குறுஞ்சிரிப்புடன் எண்களை பின்னால் இருந்து எண்ண ஆரம்பித்திருந்தான்.

சந்தானலஷ்மிக்கு சிறுவயதில் இருந்து இந்த மாதிரியான பாடல்கள் மீது ஒரு கொலைவெறி.

"அதென்ன கேர்ள்ஸ்க்கு மட்டும் ஹாஃப் ந்யூடா டிரெஸ்ஸ போட்டு விட்டு அவங்கள தப்பா எக்ஸ்போஸ் பண்றது? ஏன் அந்த மாதிரி
அந்த படத்தோட ஹீரோஸ் ஆட வேண்டியதுதான? எது எப்டியோ..... இந்த வீட்ல இருக்குறவங்க யாராவது அந்த மாதிரியான பாட்ட எங்காதுல விழுற மாதிரி கேட்டுட்டு இருந்தீங்க? உங்களுக்கு ஒருமாசம் சம்பளம் கட்டு....!" என்று சிறுமியாக இருக்கும்போதே இந்த ஐயிட்டம் சாங்குங்களின் ஒவ்வாமையால் அனைவரையும் மிரட்டுவாள்!

ஒருசமயத்தில் சுமலதா பெரிய நடிகையாக இருந்திருந்தாலும், அவரது மார்க்கெட் சற்று சரிந்த பிறகு அவரை சந்திக்க வந்த தயாரிப்பாளர்கள் அவரிடம் இப்படி ஒரு பாடலுக்காக வந்து ஆட்டம் போட்டு போகிறீர்களா என்று கேட்ட போது அன்னையை விட மகள் மிகவும் கொதித்தெழுந்து விட்டாள்.

அவளுக்கு இந்த மாதிரியான பாடல்கள் கேட்பது பிடிக்காதென்று கதிரும் முதலில் இருந்தே இவைகளை தவிர்த்து விடுவான்.... ஆனால் இப்போது உள்ளே குப்புறப் படுத்திருப்பவளை வெளியே வர வைக்க வேண்டும்.... இல்லை அவனாவது உள்ளே செல்ல வேண்டுமே? அதற்காக தான் இந்தப் பாடல் வைத்தியம் என்று நினைத்தவன் ஜீரோ எண்ணி முடித்த போது அவள் பூட்டியிருந்த கதவை திறந்திருந்தாள்.

"எனக்கு என்ன பிடிக்கும், பிடிக்காதுன்னு என்னை விட உனக்கு நல்லா தெரியும். ஆனாலும் இதெல்லாம் நீ வேணும்னே தான பண்ற?
மூடு சரியில்லன்னு உள்ள போய் சைலண்டா படுத்திருந்தா என்னை கொஞ்ச நேரம் அமைதியா இருக்க விடமாட்டியா நீ?" என்று ஓரளவிற்கு சமன்பட்ட குரலில் கேட்டவளிடம்,

"ஐயயோ.... உனக்கு இந்த மாதிரி பாட்டெல்லாம் பிடிக்காதுல்லடா லஷ்மி? தெரியாம இத போட்டு கேட்டுட்டு இருந்துட்டேன், என் சம்பளத்துல வேணும்னா பாதிய பிடிச்சுக்குறியான்னு கேப்பேன்னு நெனச்சுக்காத! இப்பத்தான் நீ எனக்கு சம்பளமே குடுக்குறதில்லயே......? உன்னைய கடுப்பேத்துறதுக்காக வேணும்னே தான் டாடி மம்மி வீட்டில் இல்ல பாட்ட போட்டேன்! அப்பத்தான நீ கதவத் தொறந்துட்டு வந்து என்னைத் திட்டுவ? நானும் முதல்ல ஏமாந்த மாதிரியில்லாம இப்ப உள்ள வந்துடலாம்?" என்றவன் அவள் அவனை முறைத்து விட்டு உள்ளே செல்லப் போகும் முன்னரே, அந்த அறைக்குள் நுழைந்து கட்டிலில் குதித்து சட்டவட்டமாக படுத்து கால் ஆட்டிக் கொண்டிருந்தான்.

"ரூம் எப்டியிருக்கு சூபொ? ஓகே தான? ஏஸிய எதுக்கு 18 ல வச்சிருக்க? ரொம்ப கோபமா இருக்கியா என்ன?" என்று கேட்டவனிடம் பதில் பேசாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தாள் சந்தனா.

"என் வீம்பம்மாவோட கோபம் போயிடுச்சா, போகலையான்னு தெரியலயே?" என்று கேட்டு அவளை தன்னருகில் இழுத்தவனின் மார்பில் சாய்ந்து கொண்டு அவன் முதுகைக் கட்டிக் கொண்டாள் சந்தனா.

"ம்ம்ம்! இது நல்ல பொண்ணுக்கு அழகு! இப்டி என்னை நீ கட்டிப் புடிச்சுக்கிட்டு நாள் பூரா கோபமா இரேன்; எவன் வேண்டாம்னு சொன்னான்? அத உட்டுட்டு பூட்டுன ரூமுக்குள்ள ஒத்தையில ஒக்காந்துக்கிட்டு தியானம் பண்ணிட்டு இருக்க!" என்று சொன்னவனின் மார்பு சிலிர்க்கும் படியாக பெருமூச்சு விட்டாள் சந்தானலஷ்மி.

"குடிக்க ஜுஸ் கொண்டு வந்து குடுக்கல; சிக்கன டேஸ்டாவே செஞ்சு குடுக்கலன்னு இனிமே நீ சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் நீ தங்குபுங்குன்னு குதிக்க முடியாது! ஏன்னா நமக்கு இப்ப அதையெல்லாம் விட முக்கியமான பிரச்சன எத்தன வருது பாத்தியா....? ஆனா நீ இப்டி முகமெல்லாம் வெளிறிப் போயி ஒக்காந்துருக்குற அளவுக்கும் இது பெரிய விஷயம் கிடையாது. என்ன பிரச்சன வந்தாலும் தோளக் குலுக்கிட்டுப் போய்ட்டே இருக்க வேண்டியதுதான்!" என்று சொன்னவனிடம்,

"கதிர்.... நீயும் உங்கப்பா யோசிச்ச மாதிரி நான் உன் பணத்துக்காக தான் உங்கிட்ட வந்தேன்னு நினைக்கலியா?" என்று மெலிந்த குரலில் கேட்டாள்.

"அப்டியெல்லாம் நினைக்குறதுக்கு
நான் என்ன அவன மாதிரி லூசுப்பயலா? அவந்தான் துருப்பிடிச்ச இரும்புச்சட்டி...... என்னத்தயோ பைத்தியம் மாதிரி ஒளருறான்; அதுக்காக நீ ஏன்டா இவ்வளவு சீரியஸா முகத்த வச்சுக்கிட்டு ஒக்காந்துருக்குற?"

"சஞ்சீவ் என்கிட்ட பேசும் போது
ஒன்னைய அப்டி பாராட்டுனான் தெரியுமா? கடைங்கள வித்துட்டு, ட்ராயிங்க சொல்லித் தர்றதுக்கு ஒரு இன்ஸ்டிடியூஷன் ஆரம்பிக்கலாம்னு சொன்னியாமே நீ? எனக்கு என்ன வேணும்னு நான் கூட இவ்ளோ தெளிவா யோசிக்கல; எனக்கு எது பிடிக்கும்னு ஓரளவுக்கு தெரிஞ்ச சஞ்சீவ்க்கு கூட இந்த யோசன வரல; உனக்குத் தானடீ இப்டி ஒரு எண்ணம் மொதல்ல வந்துச்சு? அதுக்கே உனக்கு தலையில இருந்து கால் வரைக்கும் முத்தம் குடுக்கணும் தெரியுமா?" என்றவனை கவலை முழுதாய் அகலாத முகத்துடன் பார்த்தாள் சந்தனா.

"சரி.... எங்கப்பன் சொல்ற மாதிரியே வச்சுக்குவோம். நான் தான் உன் பொறுப்புல ப்யூட்டி பார்லர குடுத்துட்டேன்ல? நீ எங்கிட்ட சொன்ன மாதிரி ஐ'ம் டயர்டு ஆஃப் மேக்கிங் மணிங்குற வார்த்த இன்னும் உன் மனசுக்குள்ள இருந்துருந்தா நீ ஹாயா கால் மேல கால போட்டுக்கிட்டு வீட்ல உட்கார்ந்துருக்கலாமே? இல்ல அந்த கடைய வித்துக் கூட பணத்த கையில எடுத்துருக்கலாம்; கடை சரியா ஓடலையின்னாலும், இடம் பக்காவாவுல்ல இருக்கு? நீ ஏன் அதெல்லாம் செய்யாம அந்த கடையில லாபம் கொண்டு வர்றதுக்கு என்ன பண்ணனும்ங்குறத இப்டி மேல்மாடிய உருட்டி வழிய கண்டுபிடிச்சுக்கிட்டு இருக்க?" என்று கேட்டான் கதிர்.

"ம்ஹூம்.... எனக்குத் தெரியல; நான் உங்கிட்ட மொதல் நாளே என்னை கல்யாணம் பண்ணிக்குறியான்னு கேட்டேன் தான? அப்போ நான் தப்பு.....!" என்று ஏதோ இன்னும் சொல்ல வந்தவளின் இதழ்களை தன் இதழ்களால் மென்மையாக ஒற்றி எடுத்தவன் அவளிடம் இல்லை என தலையாட்டினான்.

"எதுக்கு இப்ப மண்டைய ஆட்டுற? பேச வேண்டாங்குறியா?" என்று கேட்டாள் சந்தனா.

"உன்னைப் பேச வேண்டாம்னு சொல்லல! நீ ஒண்ணும் தப்பு பண்ணலன்னு சொல்ல வந்தேன். ஒரு கடையில மேனேஜரா இருக்குறது தான் உனக்குப் பிடிக்கல. பணத்துக்கு பின்னால எப்பவும் ஓடிட்டு இருக்குறதும், அதக் கணக்குப் பாத்து செலவழிக்குறதும் தான் உனக்குப் பிடிக்கல. இப்ப பாரு.....
உங்கம்மா ஓரளவுக்கு குடுக்குற பணத்துக்குள்ள ஜாலியா இருக்க பழகிட்டாங்க. அதுனால உன்னால நிம்மதியா வேலை பாக்க முடியுது. அதுவும் மொதலாளியா இருந்தா, ரொம்ப செளகரியமா வேலை பாக்க முடியுது. இதத்தான் நீ எங்கிட்ட மொதல்நாளே கேட்டுருக்க.... ஆனா நாந்தான் ஒரு இத்துப்போனவனுக்கு பொறந்தவன் தான? அதுனால தான் நீ கேட்டது எனக்குப் புரியாம அப்ப உன் கழுத்தப் பிடிச்சு..... கொல்லப் போனேன். இப்பவும் அதேமாதிரியே உன் கழுத்தப் பிடிச்சு... ம்ம்ம்! ம்ப்ச்! ம்ப்ச்.....!" என்று முணங்கிக் கொண்டும் அவள் கழுத்து, தாடை, கன்னம் எங்கும் முத்தமிட்டுக் கொண்டும் இருந்தான் கதிரேசன்.

"அவ்ளோதானா? அவ்ளவே தானா?
அப்ப இது நான் யோசிச்ச அளவுக்கு ரொம்ப பெரிய விஷயம் இல்ல.... அப்டித்தான மிஸ்டர் ரேஷன்?" என்று கேட்டவளை முறைத்தவன்,

"யோசிக்குறதுக்கும், பேசுறதுக்கும் இன்னும் ஒரு பெரிய விஷயம் பாக்கியிருக்கு மிஸ். சந்தானலஷ்மி! எங்கப்பன் கிட்ட
நீங்க என்னமோ சொன்னீங்களே? அது என்னது.....? ஏதோ என்னை
விட்டுட்டுப் போயிடுறேங்குறது மாதிரி? அதைப் பத்தி நாம இன்னும் பேசி முடிக்கல! இப்போதைக்கு அது தான் நாம பேசி முடிக்க வேண்டிய ரொம்ப பெரிய விஷயம்!" என்றான் பற்களை நரநரத்தபடி.

"சரிடா; அதத்தான் அப்பவே நான் பேசியே முடிக்கலயே? அதுக்குள்ள நீதான் என் லிப்ஸ கடிச்சு வச்சுட்ட வேற! இதுக்கு மேல என்ன பேசணும்?" என்றவளிடம்,

"இப்டியே நீ பாக்குற நேரமெல்லாம்
எம்மேல சொகுசா படுத்துட்டு இருந்தா உன் ரேஷனுக்கு தாங்காது! ஒருநேரம் போல ஒரு நேரம் இருக்காது..... அதுனால உடனே நம்ம கல்யாணம் எப்பன்னு உங்க வீட்ல பேசணும்! உங்கம்மா கிட்ட நாங்க பேச வர்ற நேரம் எங்க சைடுக்கு டேமேஜ் கொஞ்சம் கம்மியா இருக்குமான்னு யோசிக்கணும்! நம்ம நிச்சயதார்த்த மோதிரம் ரெடியாகி வந்துடுச்சு; அதோட டிஸைன் உனக்குப் பிடிச்சிருக்கான்னு பாத்துட்டு, அது நல்லா இருந்தா அதையே புதன்கிழம எங்கையால உங்கையில போட விடணும்! அவ்வளவுதான் நாம ரெண்டு பேரும் பேசி முடிக்க வேண்டிய விஷயம்!" என்றான் கதிர்.

சிறுநகை மலரும்!

Continue Reading

You'll Also Like

23.4K 1.2K 76
நான் விரும்பிடாத இன்பம் நீ ... உனை விரும்பும் துன்பம் நான்...!
5.2K 337 10
இதயத்தை கொய்த கொலையாளி - பாகம் 2
78.1K 5K 54
வாழ்க்கை எப்படி எப்போது மாறும் என்று யாருக்கும் தெரியாது. அது போகும் போக்கில் செல்ல பழகிவிட்டால் பல ஆச்சரியங்களை அது நமக்கு பரிசளிக்கிறது. அப்படிப்பட...
422K 12.1K 55
ஹாய் ப்ரண்ஸ் இது என்னோட முதல் கதை... காதல், மோதல், சந்தோஷம், சீண்டல் எல்லாம் கலந்த கதையை என்னோட குட்டி மூளைய வைச்சு எழுதி கொடுக்கபோறேன் இதுக்கு உ...