சித்திரப்பாவை என் சிறுநகையோ ச...

By Vaishu1986

43.7K 2.9K 632

மிதமிஞ்சிய பணத்திமிரில் தன் வீட்டில் வேலை பார்க்கும் பணிப்பெண்ணின் மகனை பாடாய்படுத்தி எடுக்கும் நாயகி, பின்னா... More

❤ சிறுநகை 1
❤ சிறுநகை 2
❤ சிறுநகை 3
❤ சிறுநகை 4
❤ சிறுநகை 5
❤ சிறுநகை 6
❤ சிறுநகை 7
❤ சிறுநகை 8
❤ சிறுநகை 9
❤ சிறுநகை 10
❤ சிறுநகை 11
❤ சிறுநகை 12
❤ சிறுநகை 13
❤ சிறுநகை 14
❤ சிறுநகை 15
❤ சிறுநகை 16
❤ சிறுநகை 17
❤ சிறுநகை 18
❤ சிறுநகை 19
❤ சிறுநகை 20
❤ சிறுநகை 21
❤ சிறுநகை 22
❤ சிறுநகை 23
❤ சிறுநகை 24
❤ சிறுநகை 25
❤ சிறுநகை 26
❤ சிறுநகை 27
❤ சிறுநகை 28
❤ சிறுநகை 29
❤ சிறுநகை 30
❤ சிறுநகை 31
❤ சிறுநகை 32
❤ சிறுநகை 33
❤ சிறுநகை 34
❤ சிறுநகை 35
❤ சிறுநகை 36
❤ சிறுநகை 37
❤ சிறுநகை 38
❤ சிறுநகை 39
❤ சிறுநகை 40
❤ சிறுநகை 41
❤ சிறுநகை 42
❤ சிறுநகை 43
❤ சிறுநகை 44
❤ சிறுநகை 45
❤ சிறுநகை 46
❤ சிறுநகை 47
❤ சிறுநகை 48
❤ சிறுநகை 49
❤ சிறுநகை 50
❤ சிறுநகை 51
❤ சிறுநகை 52
❤ சிறுநகை 54
❤ சிறுநகை 55
❤ சிறுநகை 56
❤ சிறுநகை 57
❤ சிறுநகை 58
❤ சிறுநகை 59
❤ சிறுநகை 60
❤ சிறுநகை 61
❤ சிறுநகை 62
❤ சிறுநகை 63
❤ சிறுநகை 64
❤ சிறுநகை 65
❤ சிறுநகை 66
❤ சிறுநகை 67
❤ சிறுநகை 68
❤ சிறுநகை 69
❤ சிறுநகை 70
❤ சிறுநகை 71
❤ சிறுநகை 72
❤ சிறுநகை 73
❤ சிறுநகை 74
❤ சிறுநகை 75
❤ சிறுநகை 76
❤ சிறுநகை 77
❤ சிறுநகை 78
❤ சிறுநகை 79
❤ சிறுநகை 80
❤ சிறுநகை 81
❤ சிறுநகை 82
❤ சிறுநகை 83
❤ சிறுநகை 84
❤ சிறுநகை 85
❤ சிறுநகை 86
❤ சிறுநகை 87
❤ சிறுநகை 88
❤ சிறுநகை 89
❤ சிறுநகை 90
❤ சிறுநகை 91
❤ சிறுநகை 92
❤ சிறுநகை 93
❤ சிறுநகை 94
❤ சிறுநகை 95
❤ சிறுநகை 96
❤ சிறுநகை 97
❤ சிறுநகை 98
❤ சிறுநகை 99
❤ சிறுநகை 100

❤ சிறுநகை 53

388 32 5
By Vaishu1986

"சேகர்..... உங்க அக்கா பக்கத்துல இருந்து கொஞ்சமா தள்ளி நில்லுடா!" என்று சொன்ன கதிர் தன்னுடைய கையிலிருந்த தீப்பெட்டியில் இருந்து ஒரு தீக்குச்சை பற்ற வைத்திருந்தான்.

"வந்தாள் மை லஷ்மியே....
என் வீட்டில் என்றும்
அவள் ஆட்சியே....
அடியேனின் குடி வாழ
தனம் வாழ குடித்தனம் புக
வந்தாள் மை லஷ்மியே!"

என்று பாடியவன் ஜெபாவின் சிரிப்பையும்,  சந்தனாவின் முறைப்பையும் பொருட்படுத்தாமல்
தீக்குச்சியை ஆரத்தி சுற்றுவது போல அவள் முகத்திற்கெதிராக மூன்று முறை சுற்றி ஊதி விட்டு,

"வெத்தலபாக்கெல்லாம் வெளியாளுங்களுக்கு தான்;
நீ மருமகளா இந்த வீட்டுக்குள்ள நுழையும் போது எங்கம்மா மொறயா உனக்கு ஆரத்தி எடுப்பாங்க. அதுவரைக்கும் இத உனக்கு எடுத்த டெம்பரவரி ஆரத்தியா நெனச்சுக்க; உள்ள வா லஷ்மி! சேகர் நீயுந்தான் உள்ள வாப்பா!" என்று சொல்லி அவளுடைய கைப்பற்றி அவளை வீட்டிற்குள் அழைத்துச் சென்றான்.

"எலேய் நில்றா! நான் இவள வீட்டுக்குள்ள வரவேணாம்; வெளிய போன்னு சொல்லிக்கிட்டு இருக்கேன். நீ பாட்டுல இவ கையப் புடிச்சு உள்ளார கூட்டிக்கிட்டு வந்தா என்ன அர்த்தம்?" என்று கேட்ட கிருஷ்ணராஜிடம்,

"அதுவா அங்கிள்? கதிர்ணா உங்க பேச்ச கொஞ்சங்கூட மதிக்கலன்னு அர்த்தம்! உங்க பேச்ச மட்டுந்தான் மதிக்க மாட்டேங்குறாரா இல்ல உங்களையும் மதிக்கலையான்னு நான் உங்க கிட்ட கேள்வி கூட
கேக்கலாம்..... ஆனா பயப்படாதீங்க; அப்டியெல்லாம் எந்தக் கேள்வியும் கேக்க மாட்டேன். உங்க கேள்விக்கு பதில் சொல்றது மட்டுந்தான் என்னோட வேல!" என்று மிகவும் பதவிசான குரலில் கிண்டலைக் கலந்து கிருஷ்ணராஜிடம் பேசிக் கொண்டிருந்தான் ஜெபசேகரன்.

"ஜெபா.... வாய மூடு! எதுவும் பேசாத!" என்று சந்தனா ஜெபாவிடம் கொண்டிருக்க அப்போது தான் மொட்டைமாடியில் துணிகளை துவைத்து காய வைத்து விட்டு படிகளில் கீழே இறங்கிக் கொண்டிருந்தார் பாகேஸ்வரி.

"வாங்க வாங்க...... தம்பியும், பாப்பாவும் வந்துருக்குறீங்களா? அதுனால தான் எங்கூட நின்னுகிட்டு துணிய காய வச்சுக்கிட்டு இருந்தவன், திடீர்னு காணாமப் போயிட்டானாக்கும்? ஒக்காருங்க ரெண்டு பேரும்..... என்ன சாப்புடுறீங்க? சில்லுன்னு ஜுஸ் போட்டு கொண்டாரவா?" என்று கேட்ட தன்னுடைய மனைவியிடம் அதிகாரமான குரலில்,

"ஏன்டீ.... இங்க என்ன நடந்துக்கிட்டு இருக்குன்னு தெரியாம அதுக ரெண்டையும் குசலம் வெசாரிச்சுட்டு இருக்க? மரியாத தெரியாத பக்கிங்க..... அதுங்கள
வெளிய பத்தி கதவ சாத்து மொதல்ல..... இல்லன்னா என்னைய மதிக்காதவிங்களுக்கு மரியாத குடுத்த ஒங்கன்னம் தான் பிஞ்சிரும் பாத்துக்க!" என்று சொல்லி தன் மனைவியை
அறைவதற்காக கையை ஓங்கிக் கொண்டு சென்றார் கிருஷ்ணராஜ்.

"எங்கம்மா மேல உன் சுண்டுவிரல வச்சன்னா கூட அப்புறம் போலீஸ் ஸ்டேஷன்ல போயி கம்பி எண்ணிட்டு வர வேண்டியதிருக்கும்! அதுக்கு ரெடியா இருந்தன்னா மேற்கொண்டு ஏதாவது செய்யி பாப்போம்!" என்று தன் தந்தையிடம் உரத்த குரலில் சொன்னான் கதிரேசன்.

"என்னடீ..... ஒம்மவன் என்ன போலீஸுல பிடிச்சுக் குடுத்துருவேன்னு சொல்லி பூச்சாண்டி காட்டுறானா? ஆத்தாளும், மவனும் சேந்துகிட்டு என்னைய இளிச்சவாயனாக்கணும்னு நெனச்சீங்களா? எனக்கு
எதுவும் தெரியாதுன்னு நெனைக்காத! இந்த வீட்ல போட்ருக்குற பேர மாதிரியே இந்த ஊருக்குள்ள அஞ்சாறு கடையில இவம்பேரு போட்ருக்கு! நமக்கு சொல்லாம ஒரு நகைக்கடயவே சொந்தமா வாங்கி வச்சுருக்கான்டீ ஒம்புள்ள...... இத்தன நாளா எனக்கு வேலன்னு நெனச்ச? இதெல்லாம் தேடி அலைஞ்சு கண்டுபிடிச்சதுதா; அதுக்கு மேல இவன் என்ன கோளாறு பண்ணி வச்சிருக்காங்குற? கட இவனுது தானாம்; ஆனா மொத்த வரவு செலவு, சம்பளப் பட்டுவாடா இதையெல்லாம் பாக்குறது இவங்கூடவே சுத்திக்கிட்டு திரிவானுல்ல சஞ்சீவுன்னு ஒருத்தன்..... அவந்தானாம்! இதெல்லாம் எத்தன பேர கவனிக்குற மாதிரி கவனிச்சு அவிங்கட்ட எம்புட்டு காச குடுத்து விசாரிச்ச விஷயங்குற......?"

"இவே வரையுறதுக்கும் காச அவந்தே போட்டு உடுவானாம்; எப்டியிருக்கு பாத்தியா? அதுனால தான் உம்புள்ள இத்தன நாளா நம்பகிட்ட வீடு என்னதில்ல, காரு என்னதில்லன்னு கதகதயா சொல்லியிருக்கான். அதக் கேட்டுக்கிட்டு நாமளும் ஆமா ஆமான்னு நம்பிக்கிட்டு ஒரு ஓட்ட வீட்டுக்குள்ள காலந்தள்ளிக்கிட்டு இருந்துருக்கோம்........!"

சரி.... அவேந்தான் ஒரு பிசாசு; இந்தப்பயல போட்டு ஆட்டி வைக்குறான்னு பாத்தா, இந்தா நிக்குதுக பாரு ரெண்டு..... இதுக அதுக்கு மேல; பேசி பேசி இவங்கிட்ட இருந்து ஒரு கடையவே அமுக்கி வச்சுக்கிட்டு இருக்குதுக..... குடும்பமா இதெல்லாம்? அது சரி....
அடுத்தவன் காசுல மஞ்சக் குளிக்கணும்னு நெனக்குற சென்மங்க எப்படி இருக்குமுங்க? இப்டித்தான் இருக்குமுங்க!"

"பெத்த தாயி, தகப்பன பாத்துக்காம, அவங்களுக்கு வேணுங்குற வசதி பண்ணிக் குடுக்காம இந்தப் பேமாளம் அது சம்பாதிக்குற காசப்பூரா அள்ளி அள்ளி அடுத்தவங்களுக்கு வாரிக் குடுத்துக்கிட்டு கெடக்கு! அதுக்குப் பதிலா எல்லாக்கடையையும் நம்ப பொறுப்புல குடுக்கலாம்ல?
ஒன்னைய மாதிரி என்னைய நானு மொதலாளியாவா ஆக்கச் சொல்லி கேட்டேன்? இல்லையே..... எல்லாத்தையும் பொறுப்பா பாத்துக்குறேன்னு தான கேக்குறேன்? இப்ப எனக்கு தார பீத்த காசு ஐயாயிரம் ஓவாய ஒரு ஒரு லச்சமா ஆக்கச் சொல்லு! அதுக்கப்புறம் எந்த சினிமாக்காரி மவளையும் கட்டிக்கிடச் சொல்லு..... இல்ல ........ வேணும்னாலும் சொல்லு!" என்று சொன்ன கிருஷ்ணராஜிடம்,

"ஒளறுறதெல்லாம் ஒளறி முடிச்சுட்டியா? நான் சம்பாதிக்குற பணத்த யாரு கையில குடுத்தா அது பத்திரமா இருக்குமோ, அவங்க கையில தான் குடுப்பேன். எங்கம்மாவையும், நான் உசுரா நினைக்குறவளையும் மொதலாளியா ஆக்குறது என்னோட இஷ்டம்! உனக்குன்னு குடுக்குற காச வச்சுக்கிட்டு இந்த வீட்ல இருக்குறதுன்னா இரு! இல்ல இப்டித்தான் அடங்காம வாய்க்கொழுப்பா பேசிட்டு திரிவேன்னு சொன்னீன்னா
தப்பு தப்பா பேசுற உன் வாய ஒடைச்சு உட்டுட்டு தான் நான் மறுவேல பாக்கப் போறேம்பாரு!" என்று கையை முறுக்கிக் கொண்டு தன்னுடைய தந்தையிடம் எகிறிக் கொண்டு வந்தான் கதிரேசன்.

சும்மா சும்மா இந்த ஆளைப் பாவம் பார்த்து விடுவதற்குப் பதிலாக இன்று இவனுடைய சில்லுமூக்கை உடைத்து ஒரு முறை ஆஸ்பத்திரி படுக்கையில் கொண்டுபோய் போட்டால் என்ன என்ற நினைப்பு அவனுக்கு! அளவு கடந்த ஆத்திரத்தில் தன் தகப்பனின் மீதிருந்த வெறி தீராமல் நின்று கொண்டிருந்தான்.

பாகேஸ்வரியும், ஜெபசேகரும் ஆத்திரத்தில் கண்கள் சிவக்க நின்றவனின் இருபுஜங்களையும் பற்றியிருக்க, கிருஷ்ணராஜ் தன்னுடைய மகனின் உச்சபட்ச ஆத்திரத்தை கண்டு சற்றே பின்வாங்கினார்.

"கண்ணு.... வேண்டாமுய்யா! பெத்தவன் மேல கைய நீட்டிட்டங்குற பழி வந்துடாம சாமி! நான் உங்க அப்பாட்ட பேசுறேன். நீ கொஞ்சம்..... கொஞ்சம் நிதானமாயிருய்யா!" என்று தன் மகனிடம் கெஞ்சிய பாகேஸ்வரி தன்னுடைய கணவரின் முன்னே சென்று நிமிர்ந்த பார்வை பார்த்த படி நின்றார்.

"கதிரண்.....ணா! வாங்க நம்ம கொஞ்ச நேரம் வெளிய போயிட்டு வரலாம்!" என்று அவனிடம் சொன்னபடி அவனுடைய தந்தையிடமிருந்து கதிரை முடிந்த அளவு தள்ளி அழைத்துச் சென்றிருந்தான் ஜெபசேகரன்.

"விடுறா என்னைய...... என் லஷ்மி அந்த பொறம்போக்கு பேசுன பேச்சக் கேட்டு எப்டி ஆடிப்போய் நிக்குறா பாரு! என்ன மாதிரி ஒரு வாழ்க்க வாழ்ந்துருக்க வேண்டியவ..... பாவப்பட்ட என்னைய கட்டிக்க சம்மதிச்சதால இப்ப கண்ட பேச்செல்லாம் கேக்குற மாதிரி ஆகிடுச்சேடா சேகர்? அவள வருத்தப்பட வேண்டாம்னு அவகிட்ட போய் சொல்லுடா! சொல்லு!" என்று அவள் ஏதோ அவனுக்கு நூறு கிலோ மீட்டர் தூரத்தில் இருப்பது போல ஜெபாவை சந்தனாவிடம் சமாதான பேச்சுவார்த்தைக்கு போகச் சொல்லி அவனிடம் கேட்டுக் கொண்டிருந்தான் கதிர்.

சந்தனா நடக்கும் எல்லாவற்றையும் ஒரு பார்வையாளரின் மனநிலையில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். இன்று ஏனோ அவளிடம் கொதிக்கும் பிழம்பாக நிற்கும் கதிரைக் குளிர்விக்கும் தெம்பும் இல்லை; கிருஷ்ணராஜிடம் பதிலுக்குப் பதில் பேசி வாதாடும் தைரியமும் இல்லை.....

"எப்டியெல்லாம் வாழ்ந்துருக்க வேண்டியவ..... பாவப்பட்ட என்னைய கட்டிக்கிட சம்மதிச்சதால!" என்ற கதிரின் வார்த்தைகள் அவளை சற்றே சலிப்படைய செய்திருந்தன.

கதிரும் அவளைப் போல் அவனுடைய குடும்பத்தினருடன் சந்தோஷமாக ஒரு நிம்மதியான வாழ்வை வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டாள் தான்..... ஆனால் பாகேஸ்வரி, கிருஷ்ணராஜ் இருவரையும் இங்கு அவன் அழைத்து வரும் போது தான் அந்த வீட்டில் இப்படியான வசைமொழிகளை நிதமும் கிருஷ்ணராஜிடம் கேட்க நேரிடும் என்று அவள் நினைக்கவில்லை.

இந்த மனிதன் என்னென்னவெல்லாம் பேசி விட்டார்? முன்பு அவளால் ஏற்பட்ட அவனுடைய மனக்காயத்துக்கு மருந்திட நினைத்தால், இதனால் அவள் அல்லவா காயப்பட நேரிடும் போலிருக்கிறது? இன்று ஒரு நாளே அவரது உளறல்களை கேட்க முடியவில்லையே? இதையை
தினமும் எப்படி பொறுத்துக் கொள்வது? கதிரின் அப்பாவால் அவளுக்கு கிடைக்கும் அவமானங்களும், கதிர் யாரென்ற உண்மை தெரிந்தவுடன் தன்னுடைய அன்னையால் கதிருக்கு கிடைக்கப்போகும் அவமானங்களும் தான் இவர்கள் இருவருடைய மணவாழ்வுக்கு அஸ்திவாரம் என்றால் இந்த திருமணம் அவசியம் நடக்க வேண்டுமா என்ற எண்ணம் கனமாக சந்தனாவின் மனதில் தலைதூக்கியது.

கிருஷ்ணராஜின் முன்பு சென்று அவர் எதிரில் நின்றவள்,

"உங்களுக்கு என்ன அங்கிள் ப்ரச்சன? கதிர நான் கல்யாணம் பண்ணிக்க கூடாது அவ்ளோதான? சரி..... பண்ணிக்க மா....!" என்று சொல்லிக் கொண்டிருந்தவளை அவசரமாக தன் புறம் இழுத்த கதிர் அவளது மென்மையான இதழ்களை தன்னுடைய இதழ்களால் அடைத்திருந்தான்.

தன்னுடைய வாழ்நாளில் முதன்முறையாக ஒரு பெண்ணை அதுவும் தன்னுடைய உயிர் போல நேசிக்கும் ஒரு பெண்ணை அவளது பேச்சின் உஷ்ணத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் அவளது இதழ்களை தன் பற்களால் காயப்படுத்தியவன் இரண்டு நொடிகளில் அவளை விடுவித்தான்.

"சேகர்..... ஸாரிடா! சின்னப்பையன் உன்னைய இங்க வச்சிக்கிட்டு இப்ப நான் செஞ்ச காரியம் தப்புதான்; ஆனா இந்த சூபொ வாயை அடக்குறதுக்கு வேற வழி தெரியல எனக்கு!" என்று ஜெபாவிடம் சொன்னவன் அவன் தலையசைக்கவும் சந்தனாவிடம் திரும்பி,

"எங்கப்பன் எதோ ஒளறுறாங்குறதுக்காக என்னை விட்டுடுவியா நீ? செஞ்ச சத்தியமெல்லாம் எப்பவும் போல காத்துல போயிடுச்சு அப்டித்தான? எங்கப்பன் என்ன சொன்னாலும் சரி.... இல்ல உங்கம்மா என்ன சொன்னாலும் சரி; நம்ம ரெண்டு பேருக்கும் ஒருத்தர ஒருத்தர் விட்டுட்டுப் போயிடணும்ங்குற நெனப்பு எப்பவும் வரக்கூடாது; உனக்கு இது தெளிவா புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். நீ எத்தன தடவ இத மறந்தாலும், நான் ஒனக்கு இத திரும்ப திரும்ப நியாபகப்படுத்துவேன்!" என்று சொன்னவன் அவளை ஹாலில் இருந்த ஒரு இருக்கையில் அமர வைத்தான்.

"ஆன்ட்டி..... நாங்க ரெண்டு பேரும் சும்மா ஒங்கள பாத்துட்டுப் போகலாம்னு வந்தோம். ஆனா வந்த இடத்துல என்னன்னமோ நடந்து போச்சு; இங்க நடந்த விஷயத்துல நாங்க ஏதாவது தப்பு பண்ணியிருந்தா எங்கள மன்னிச்சுடுங்க ஆன்ட்டி!
நானும் சந்துவும் கெளம்புறோம்!" என்று சொன்னவனிடம்,

"இருங்க தம்பி போகலாம்!" என்று சொன்னார் பாகேஸ்வரி.

"என்னங்க?" என்று கூப்பிட்டவரிடம்,

"என்ன பாகேஸு?" என்று கேட்டார் கிருஷ்ணராஜ்.

"நம்ம புள்ளைக்கு எங்க எங்க கடை இருக்குதுங்கறத நீங்க எங்கிட்டயோ இல்ல அவங்கிட்டயோ கேட்டிருந்தா நாங்களே உங்களுக்கு சொல்லியிருப்போமே? இதுக்கு எதுக்கு இத்தன நாள் அலைஞ்சு யாரு யாருக்கோ பணமெல்லாம் குடுத்தீங்க? இந்தப் புள்ளைய எனக்குப் பிடிக்கலடா; இவள நீ கல்யாணம் பண்ணிக்கக் கூடாதுன்னு நான் நெனக்குறேன்னு சொல்லுங்க; அது ஒரு அப்பன் பேசுற பேச்சு! அத விட்டுட்டு லச்ச ரூபா குடுத்துட்டீன்னா இவள கட்டிக்க இல்லன்னா வேற மாதிரி கூட செஞ்சுக்கன்னீங்களே? கதிரு பொறந்ததுல இருந்து ஒருதடவ கூட நீங்க அவன எம்பையன்னு சொல்லி நான் கேட்டதில்லங்க!
நல்லவேள....... நீங்க சொல்ற மாதிரி எம்புள்ள எம்புள்ளயாவே நல்லபடியா வளந்துருக்கு! உங்கள மாதிரி பணப்பேயா தறிகெட்டு
அலையல!" என்று சொன்ன தன்னுடைய மனைவியிடம்,

"என்னடீ சொன்ன? நான் பணப்பேயா அலையுறனா?" என்று அதிர்ச்சியடைந்த குரலில் கேட்டார் கிருஷ்ணராஜ்.

"ஆமா! உங்கள தவிர மத்த எல்லாரும் தப்பானவங்கங்குற தப்பான எண்ணத்துலயும், என்னத்த வேணும்னாலும் பேசலாம் உங்கள யாரும் எதுவும் கேக்க முடியாதுங்குற மண்டக்கனத்துலயும் அலையுறீங்க!" என்று அமைதியான குரலில் நிதானமாக பேசிய பாகேஸ்வரியின் பேச்சைக் கேட்டு முதன்முறையாக தன் அன்னையை மனதிற்குள்ளாக மெச்சிக் கொண்டான் கதிர்.

சிறுநகை மலரும்!

Continue Reading

You'll Also Like

383K 12.8K 85
நாம நினைக்கிற மாறிலாம் நடந்துட்டா வாழ்க்கைல இருக்க சுவாரசியம் போயிரும்.. ஒரு தவறான முடிவு வாழ்க்கைய எப்படிலாம் புரட்டி போடும் அப்படிங்குறதுக்கு.. ஒ...
9.7K 301 31
இது முழுக்க முழுக்க காதல் கதை தான் நண்பர்களே படிச்சி பாருங்க உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்
167K 1.6K 13
அந்த ஒற்றை இரவில் மகிழ்ச்சியான தனது திருமண வாழ்க்கை தலைகீழாக மாறி, ஒரு கெட்ட சொப்பனமாக மாறக் கூடும் என்று அவள் ஒருபோதும் நினைத்திருக்கவில்லை. அவன் அவ...
364K 15.9K 85
என்னங்க கதை பேரு வித்யாசமா இருக்குதேன்னு பாக்குறிங்களா.....கதையும் வித்யாசமானதுதாங்க.... நம்ம கதையோட கதாநாயகி கூட கொஞ்சம் வித்யாசமானவங்கதான்...... நல...