ஹாசினி

By prenica

62.2K 2.7K 649

5 நண்பர்களின் கதை என் ஐந்தாவது கதை!!! "ஹம்சினி பெரிய இடத்து பெண் நல்ல குணம் உடையவள்.'கொஞ்சம் பயம் உண்டு. "ஹரூ... More

விடுமுறை
மோதிரம்
வாழ்த்துக்கள்
திரைப்படம்
மாஷா அல்லா
புதிர்
மரண விறைப்பு
புகைப்படம்
அந்த கண்கள்
Authors note
காட்டு வழி
கரடி பொம்மை
உன்மை
கழுத்து சங்கிலி
முத்தம்
இருள் காடு
ஹாசினி
தீ
ஹாசினி -1
ஹாசினி

நீர் வீழ்ச்சி

3.7K 171 16
By prenica

ஹம்சினி கண் விழித்தாள்..."இந்த தண்ணீய குடி"...என்று சிவா அவளுக்கு தண்ணீர் கொடுத்தான்

அவள் வாங்கி தண்ணீரை குடித்தாள்...

"என்ன ஆச்சு ஹம்சினி???என்று ஹாரூஷ் கேட்டான்.

"ஹாரூஷ் இந்த வீட்ல நம்மல தவிர வேர யாரோ இருக்காங்க"...என்று அவள் பதில் கூறினால்.

"யாரு???என்று அனைவரும் குழப்பத்துடன் கேட்டார்கள்.

"எனக்கு தெரியல்ல...ஒரு கை மட்டும்தான் நான் பார்த்தேன்"...என்று பதட்டமாக அவள் சொன்னால்.

"மாலதி இவ நம்மகிட்ட விளையாடுராளோ??? என்று சிவா அவள் காதில் மெல்ல கேட்டான்.

"தெரியலயே...,சிவா"

"சரி வா சாப்பிட போகலாம்"...என்று அவள் கூறியதை சீரியஸ் ஆக எடுத்துகொள்ளாமல் ஹாரூஷ் கூறினான்.

"என்ன ஹாரூஷ் நான் சீரியஸ்யா சொல்லிட்டு இருக்கேன் நீ என்ன சாப்பிட கூப்பிடற???"என்று அவள் கோபமாக கேட்டால்

"இப்போதான் ஹாரூஷ் சரியா சொல்லி இருக்கான்"...என்று சிவா கூற

ஹாரூஷ் திரும்பி சிவாவை ஒரு பார்வை பார்த்தான். சிவா அமைதி ஆனான்...

"வா ஹம்சினி போகலாம்"...என்று மீண்டும் அவளை அழைத்தான் ஹாரூஷ்.

"நீங்க யாரும் என்ன நம்ப மாட்டிங்களா??? என்று பாவமாக திரும்பவும் அவள் கேட்டால்

"நாங்க எல்லோரும் உன்னை நம்புகிறோம்,இப்போ சாப்பிடலாம்...வா" என்று ஹாரூஷ் அழைத்தான்

அவள் தயக்கத்தோடு ஒத்துக்கொண்டாள்.
அனைவரும் சாப்பிட்டு முடித்தார்கள்.

"சிவா நீயும் ஹாரூஷ்வும் மேல இருக்க முதல் ரூம்ல தங்கிக்கோங்க"...என்று ஹம்சி கூற

"ஐய் ஐயோ முதல் ரூம் வேண்டாம் பா,நான் ரிஸ்க் எடுக்க தயாரா இல்ல"...என்று கூறி சிவா கண்களில் பயத்தை வெளிப்படுத்தினான்.

"சரி சிவா நீங்க பக்கத்து ரூம்ல தங்கிக்கோங்க...
பூஜா,மாலதி நீங்க என்கூட வாங்க"...என்று ஹம்சி அழைத்தால்.

"ஹம்சி உன் ரூம் எது???...என்று ஹாரூஷ் கேட்டான்.

"என்ன ஹாரூஷ் எல்லாரும் தூங்கனதும் அவள தனியா சந்திக்க போரியா???"

"வாய மூடு சிவா".....என்று அவன் காதில் முனுமுனுத்தான்.

"மேல மூனாவது ரூம்...ஹாரூஷ்"

எல்லாரும் அவங்க அவங்க ரூம் போனார்கள்...

"டேய் ஹாரூஷ், ஹம்சி சொல்லுவது உண்மையா???

"என்னதுடா???சிவா"

"யாரயோ பார்த்ததா சொன்னாலே அது".

"யாரையும் இல்லடா, ஒரு கை மட்டும்தான் பார்த்தாளாம்".

"அட போடா...,நம்ம அவள ஏமாற்றலாம்னு இருந்தா...அவ நம்ம எல்லாரையும் ஏமாற்றிட்டு போயிட்டா".

"அவ ஏமாத்துன மாதிரி எனக்கு தெரியல...சிவா"

"என்னடா சொல்லுர???...அப்போ அவ பார்த்தது உண்மைனு சொல்லுரியா???"

"எனக்கு உறுதியா சொல்ல தெரியல... ஆனா அவ கண்கலில் ஒரு பயத்த பார்த்தான்".

"ஏய் நீ பேசுரத பார்த்தா எனக்கு பயமா இருக்கு டா....
"ஒன்னும்மில்லை டா இப்போ தூங்கு அத நாளைக்கு பார்க்கலாம்...
********
"ஹம்சினி தூங்கு...

"எனக்கு தூக்கம் வரல பூஜா...

"என்ன ஹம்சி அதையே எண்ணி வருத்தப்படுறியா???என்று மாலதி கேட்டால்.

"இல்ல மாலதி நான் ஒரு கையை பார்த்து உண்மை ஆனா நீங்க அதை நம்ப மாட்டிங்கிறிங்க...

"ஹம்சினி ரொம்ப கலைப்பாக இருப்பதால நீ எதை எதையோ எண்ணி பயப்படுற. இப்போ தூங்கு நாளைக்கு எல்லாம் சரியா போகும்"என்று மாலதி கூறினால்.

அவள் சொல்வதை கேட்டு ஹம்சி தூங்க தயாரானாள் .படுக்கையில் படுத்த உடன் அவள் தோழிகள் உறங்கினார்கள். ஆனால் ஹம்சி மனதில் பல குழப்பங்கள் அவளை உறங்க விடாமல் துன்புறுத்தின. அவள் பல குழப்பத்திற்க்கு பின்னால் தூங்க கண்களை மூடினாள். தூங்கி சில வினாடிகளில் ஏதோ சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தாள். அவள் முன் யாரோ நிற்பது போல் தெரிய அவள் கைகளால் கண்களை வேகமாக துடைத்தாள். கண் விழித்து மீண்டும் பார்த்த போது அங்கு யாரும் இல்லை. எழுந்து ஜன்னலை நோக்கி நடந்தாள்.

ஜன்னலில் இருந்து கீழே எட்டிப் பார்த்தாள்.மண்ணில் ஏதோ தடம் தெரிய அதை உற்று கவனித்தாள். அது ஒரு, கால் தடம்.

"ஏய் ஹம்சி.....நீ தூங்கள???"

அவள் திடுக்கிட்டு யார் என்று திரும்பி பார்த்தாள்.

"மாலதி உன்னால நான் பயந்துட்டேன்".

"தூங்காம இங்க என்ன பண்ணிட்டு இருக்க???ஹம்சி".

"கீழ வித்தியாசமா ஒன்னு பார்த்தேன்".

"என்ன???

"ஒரு கால் தடம்".

"கால் தடமா??? அதுல என்ன வித்தியாசம்???

"அதுல ஆறு விரல்களோட கால் தடம் இருந்தது அதுவும் வலது கால் எனக்கு ஏதோ மனசு கஸ்டமா இருக்கு. அதை நீ பாரு மாலதி".

அவள் கூறியது போல் மாலதி ஜன்னலில் இருந்து எட்டிப் பார்த்தாள். அவளுக்கும் அந்த கால் தடம் தெரிந்தது. "ஹம்சி ஏன் அதை எண்ணி வருத்தப்படுற???"

"அது ஒன்றும் இல்லை மாலதி வா தூங்கலாம்"என்று அழைத்தால் ஹம்சி .மாலதியும் அவளை புரிந்துக்கொண்டு அவளுடன் சென்றாள். அவர்கள் இருவரும் சென்று உறங்கினர்.

விடிந்ததும் ஹாரூஷ், சிவா இருவரும் வெளியே கிளம்பினார்கள்.

"சிவா ஹம்சி கிட்ட எதும் சொல்லிடாத அவளுக்கு தெரியாம நம்ம வெளிய போறோம்" என்று ஹாரூஷ் கூறினான்.

"கண்டிப்பா நான் சொல்ல மாட்டேன். ஆனால் மாலதி, பூஜா சொல்லிட்டா எனக்கு தெரியாது" என்று சிவா பதில் அளித்தான்.

"அவங்க சொல்லாம நான் பார்த்துக்கொள்கிறேன் சிவா".

அவர்கள் இருவரும் இறங்கி கீழே வந்தார்கள்.

"ஹாருஷ், சிவா காலைல சீக்கிரமா கிளம்பிட்டிங்க, எங்கேயாவது கிளம்பிட்டிங்களா???என்று ஹம்சி கேட்டால்

"ஆமாம் ஹம்சி எங்களுக்கு தேவையானதை வாங்கிட்டு வர வெளியே போறோம்." என்று ஹாரூஷ் கூறினான்.

"அதுக்கு நீங்க ஏன் போகனும் வேலை ஆட்கள் வந்தாச்சு நான் அவங்கள போக சொல்லுறேன்".

"இல்ல ஹம்சி ஆண்கள் விஷயம் நாங்கதான் போகனும்"...என்று சிவா பதில் தந்தான்.
அவன் பதிலை கேட்டதும் ஹாரூஷ் அவன் பின் தலையில் அடித்தான்.

சிவா பதில கேட்டதும் ஹம்சி குழப்பமாக அவர்களை பார்த்தால். ஹம்சி பின்னால் நின்று கொண்டிருந்த மாலதி, பூஜா இருவரும் தலையில் கைவைத்தனர். மாலதி ஹம்சி இடம் ஏதோ கூற அதற்குள் ஹாரூஷ். "ஹம்சி அது எல்லாம் ஒன்றும் இல்ல நாங்க தனியா போய் வாங்கிட்டு வரலாம் என்று எண்ணினோம்".

"இருக்கட்டும் ஹரூஷ் வழி தெரியாத இடத்துல நீங்க எங்க போவிங்க?

"ஆமாம் ஹாரூஷ், ஹம்சி சொல்லுவது சரி "என்று அவளுக்கு சாதகமாக பேசினான் சிவா.

"அதனால் நானும் வருகிறேன் "என்று கூறி புறப்பட தயாரானாள் ஹம்சி.

சிவா இவ்வாறு குட்டையை குழப்பியதர்க்கு அவனை கோபமாக ஒரு பார்வை பார்த்தான் ஹாரூஷ். சிவா எதுவும் தெரியாத குழந்தைப் போல் முகத்தை வைத்துக்கொண்டான்.

"ஹம்சி இதற்க்காக நீ வரவேண்டிய அவசியம் இல்ல. நாங்க வேலை ஆட்களில் ஒருவரை கூட்டிட்டு போறாம்".என்று ஹாரூஷ் கூறினான்.

"ஆம் அதுவும் சரியான முடிவு" என்று மாலதி கூறினால். அதற்க்கு பூஜா தலையை ஆட்டினாள். பின் ஹம்சி எதும் கூறாமல் அவர்களை பத்திரமாக சென்று வர சொல்லி அனுப்பினாள்.

அவர்கள் வெளியே வந்ததும் ஹாரூஷ் சிவாவை கோபமாக பார்த்தான்."ஏய் மச்சி ஏன்டா இன்னும் கோபமாக இறுக்க? "

"நீ பன்ன வேலைக்கு வேர என்ன பன்ன சொல்லுர? சரி வா போகலாம்". ஒரு வேலை ஆளும் அவர்களுடன் சென்றான்.

"ஹம்சி போரிங் வேர எங்கயாது போகலாமா? என்று பூஜா கேட்டால்.

"ஓ போலாமே பின்னாடி கொச்ச தூரத்துல ஒரு நீர் வீழ்ச்சி இருக்கு அங்கு போகலாம். ஒரு நிமிடம் நான் என் அம்மா கூட தொலைப்பேசில பேசிட்டு வருகிறேன்"என்று கூறிவிட்டு ஹம்சி அங்க இருந்து நகர்ந்தாள்.

ஹம்சி அவள் அம்மாவை தொலைப்பேசில் அழைத்தால்.

"ஹலோ அம்மா.....ஹம்சி எப்படி இருக்க??? உன் நண்பர்களுக்கு வீடு பிடித்தாதா? ......"பிடிச்சிருக்கு மா நான் நல்லா இருக்கேன் நீங்க? ......"நானும் நல்லா இருக்கேன். "ஹம்சி நாளைக்கு......

"அம்மா எனக்கு தெரியும் நீங்க எத எண்ணியும் கவலை படாதீங்க".சட்டென்று அவள் பக்கத்தில் இருந்த பூ ஜாடி கீழே விழுந்து உடைந்தது. பயந்து அவள் ரெண்டு அடி பின்னால் நடந்தால்.

"என்ன சத்தம் ஹம்சி? என்று அவள் அம்மா கேட்க அதற்க்குள் அவள் தோழிகள் பதறிகொண்டு அவள் அருகில் வந்தனர். "அம்மா அது ஒன்றும் இல்லை என் கை தவறி பூ ஜாடி கீழே விழுந்தது"என்று பொய் கூறினாள். "அம்மா நான் பிறகு பேசுகிறேன்" என்று தொலைப்பேசியை துண்டித்தாள்.

"என்ன நடந்தது ஹம்சி?

"மாலதி இந்த பூ ஜாடி தானாக கீழே விழுந்து உடைந்தது".

"தானாகவா "என்று இருவரும் வியப்புடன் கேட்டனர்.

"ஹம்சி ஒரு வேலை இத சரியா வைத்து இருக்க மாட்டார்கள் அதனால் விழுந்து இருக்கும்" என்று பூஜா கூறினால்.

"சரி வாங்க நம்ம நீர் வீழ்ச்சி செல்வோம். மூவறும் புறப்பட்டனர். அண்ணா நாங்க வறுவதர்க்குள் சமயலை முடித்து விடுங்கள்".

மூவறும் பின் வாசல் வழியாக சென்றனர். அது ஒரு அடர்ந்த காட்டுப்பகுதி மூவறும் ஓட ஆரம்பித்தனர், மாலதி, பூஜா இருவரும் வேகமாக முன்னேறி சென்றனர். ஹம்சி மெதுவாக ஓடி அவர்கள் பின்னால் சென்றாள். சட்டென்று அவள் கால் வழுக்கி தடுமாறி நின்றாள்.

மாலதியும், பூஜாவும் திரும்பி பார்த்து அவளிடம் வந்தார்கள்.

"ஹம்சி என்ன ஆச்சி???.

"ஒன்றும் இல்ல கொஞ்சம் தடுமாறிடேன்".அவள் கீழே என்ன உள்ளது என்று கவனித்தாள். ஈரமான மண் சுற்றியும் எரிக்கப்பட்டிருந்த தடம் இருந்தது.

"இது என்ன ஹம்சி.???

"எனக்கு தெரியல மாலதி."

"சரி பதட்டப்படாத வா போகலாம்". அவள் வெகு தூரம் சென்றும் அந்த தடத்தை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே சென்றாள்.

கொஞ்ச தூரத்தில் நீர் வீழ்ச்சி சத்தம் கேட்டது...
"ஏய் நம்ம வந்துடோம்"...என்று கூறி மகிழ்ச்சியாக நீர் வீழ்ச்சியை நோக்கி ஓடினார்கள்.

*******************************
"அண்ணா வீட்ல யாரும் இல்ல எல்லாரும் எங்க???....வெளியே சென்றவர்கள் திரும்பி வந்ததும் அவர்களை தேடினார்கள்.

"அவங்க எல்லோரும் பின்னாடி இருக்க நீர் வீழ்ச்சிக்கு போய் இருக்காங்க...

"அது எங்க அண்ணா இருக்கு...?

"பின் வீட்டு வழியாக போனா கொச்ச தூரத்துல வந்துடும் பா...

"நன்றி அண்ணா வாடா சிவா போகலாம்".

அவர்களும் தோழிகள் இருக்கும் இடத்துக்கு சென்றடைந்தார்கள்

"ஏய் சிவா,நில்லு...என்று ஹாரூஷ் அவனை தடுத்தான்.

அவர்கள் மூவறும் இவர்களை கவனிக்காமல் தண்ணீர் பக்கத்தில் இருந்த பாறை மேல் அமர்ந்து தண்ணீரில் கால் விட்டு விளையாடி கொண்டிருந்தனர்.

"சிவா அவங்க நம்மை கவனிக்கவில்லை.

"ஆமாம் என்ன பன்ன போற???

"என் கையை பிடி என் கூட ஓட தயாராக இரு"..."புரிந்தது" என்று சிவா ஹாரூஷ்யை பார்த்து சிரித்தான்.

இருவரும் வேகமாக ஓடி சென்று தண்ணீரில் குதித்தார்கள். அவர்கள் குதித்த வேகத்தில் நீர் நான்கு திசைகளிலும் சிதறியது. தண்ணீரில் குதித்தது யார் என்று அறியாமல் மூவறும் அதிர்ந்தார்கள். பின் இருவரும் தண்ணீரில் இருந்து எழுந்து அவர்களைக் கண்டு சிரிக்க. மூன்று பெண்களும் அவர்களை முறைத்தார்கள்.

Hi unedited part😣 if any mistake, please forgive me. lack of time due to my job,so I couldn't able to correct completely. please do adjust. thank you for reading my story, give your votes.

Continue Reading

You'll Also Like

3.2K 690 40
ஓர் அநாதைப் பெண் தன் வாழ்க்கையில் அனுபவித்த துன்பங்களையெல்லாம் கடந்து ஓர் ஔியைத் தேடிப் பயணிக்கும் பாதை!
671 53 9
#குறுநாவல் நினைத்தது எல்லாமே எப்பொழுதும் நடந்துவிடுவதில்லை. ஆனாலும் சில நேரங்களில் நடந்துவிடுகின்றது, நினைக்காத வகைகளில்!
10.7K 548 27
நடக்கப்போவதை முன் கூட்டியே அறியும் வரமுள்ள ஹீரோ....விளைவுகளை அறிந்த பின் அதை எல்லாவற்றையும் அவனால் தடுக்க முடியுமா???
29.2K 1.8K 34
முறுக்கு மீசையும், கட்டு மஸ்தான் உடலும், கலையான முகமும் கொண்ட வாலிபன் ஒருவன், அவசர சிகிச்சை பிரிவு அறையின், கதவில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடி வழியாக...