சித்திரப்பாவை என் சிறுநகையோ ச...

By Vaishu1986

43.9K 2.9K 634

மிதமிஞ்சிய பணத்திமிரில் தன் வீட்டில் வேலை பார்க்கும் பணிப்பெண்ணின் மகனை பாடாய்படுத்தி எடுக்கும் நாயகி, பின்னா... More

❤ சிறுநகை 1
❤ சிறுநகை 2
❤ சிறுநகை 3
❤ சிறுநகை 4
❤ சிறுநகை 5
❤ சிறுநகை 6
❤ சிறுநகை 7
❤ சிறுநகை 8
❤ சிறுநகை 9
❤ சிறுநகை 10
❤ சிறுநகை 11
❤ சிறுநகை 12
❤ சிறுநகை 13
❤ சிறுநகை 14
❤ சிறுநகை 15
❤ சிறுநகை 16
❤ சிறுநகை 17
❤ சிறுநகை 18
❤ சிறுநகை 19
❤ சிறுநகை 20
❤ சிறுநகை 21
❤ சிறுநகை 22
❤ சிறுநகை 23
❤ சிறுநகை 24
❤ சிறுநகை 25
❤ சிறுநகை 26
❤ சிறுநகை 27
❤ சிறுநகை 28
❤ சிறுநகை 29
❤ சிறுநகை 31
❤ சிறுநகை 32
❤ சிறுநகை 33
❤ சிறுநகை 34
❤ சிறுநகை 35
❤ சிறுநகை 36
❤ சிறுநகை 37
❤ சிறுநகை 38
❤ சிறுநகை 39
❤ சிறுநகை 40
❤ சிறுநகை 41
❤ சிறுநகை 42
❤ சிறுநகை 43
❤ சிறுநகை 44
❤ சிறுநகை 45
❤ சிறுநகை 46
❤ சிறுநகை 47
❤ சிறுநகை 48
❤ சிறுநகை 49
❤ சிறுநகை 50
❤ சிறுநகை 51
❤ சிறுநகை 52
❤ சிறுநகை 53
❤ சிறுநகை 54
❤ சிறுநகை 55
❤ சிறுநகை 56
❤ சிறுநகை 57
❤ சிறுநகை 58
❤ சிறுநகை 59
❤ சிறுநகை 60
❤ சிறுநகை 61
❤ சிறுநகை 62
❤ சிறுநகை 63
❤ சிறுநகை 64
❤ சிறுநகை 65
❤ சிறுநகை 66
❤ சிறுநகை 67
❤ சிறுநகை 68
❤ சிறுநகை 69
❤ சிறுநகை 70
❤ சிறுநகை 71
❤ சிறுநகை 72
❤ சிறுநகை 73
❤ சிறுநகை 74
❤ சிறுநகை 75
❤ சிறுநகை 76
❤ சிறுநகை 77
❤ சிறுநகை 78
❤ சிறுநகை 79
❤ சிறுநகை 80
❤ சிறுநகை 81
❤ சிறுநகை 82
❤ சிறுநகை 83
❤ சிறுநகை 84
❤ சிறுநகை 85
❤ சிறுநகை 86
❤ சிறுநகை 87
❤ சிறுநகை 88
❤ சிறுநகை 89
❤ சிறுநகை 90
❤ சிறுநகை 91
❤ சிறுநகை 92
❤ சிறுநகை 93
❤ சிறுநகை 94
❤ சிறுநகை 95
❤ சிறுநகை 96
❤ சிறுநகை 97
❤ சிறுநகை 98
❤ சிறுநகை 99
❤ சிறுநகை 100

❤ சிறுநகை 30

353 25 2
By Vaishu1986

"சந்தோஷமா இருந்தா தான் நீ கேக்குறத செஞ்சு குடுப்பேன்னு இல்ல லஷ்மி! சும்மாவே கூட செய்வேன்! என்ன வேணுமோ கேளும்மா!" என்று மெதுவான குரலில் அவளிடம் சொன்னான் கதிர்.

"டேய் ரேஷன் உனக்குள்ள வயலண்ட், சைலண்ட்னு ரெண்டு மோடு இருக்கா என்னடா? கழுத்து நரம்பு புடைக்குற அளவுக்கு கத்தவும் செய்ற! இப்டி காதுக்கே கேக்காத மாதிரி பேசவும் செய்ற! நம்மளால எல்லாம் இப்டி நேரத்துக்கு ஒருமாதிரி இருக்க முடியாதுப்பா!" என்று அவனிடம் சொன்ன படி தரையில் இல்லாமல்  அந்தரத்தில் இருந்த காலை ஆட்டிக் கொண்டிருந்தவளிடம்,

"அதிசயமான அதிசயமா எங்கிட்ட ஸாரியெல்லாம் கேட்டியே லஷ்மி? அதுக்கு நீ சொன்ன மாதிரி என்னோட சைலண்ட் மோடு ஸ்டைலுல நான் ஒரு சர்ப்ரைஸ் குடுக்கட்டுமா ஒனக்கு?" என்று கேட்டவன் அவளது அருகில் சிரிப்புடன் நெருங்கி அவளுடைய முதுகுப்புறத்தில் உடையை லேசாக விலக்கி இரண்டு ஐஸ் க்யூப்களை அவளது உள்ளாடைக்குள் போட்டு விட்டு குறுஞ்சிரிப்புடன் டேபிளில் அமர்ந்து கொண்டான்.

"ஏ.......ய்! இடியட்; வர வர ஒனக்கு ரொம்ப கொழுப்பாகிடுச்சு!" என்று சொன்னவள் உச்சுக்கொட்டியவாறு முதுகிற்குள் குளிர்ச்சியை உணர்ந்து கொண்டிருந்தாள்.

உடையை சற்று நெகிழ்த்தினால் தான் ஐஸ்கட்டிகள் கீழே விழும்..... ஆனால் இவன் முன்னால் எப்படி உடையை நெகிழ்த்துவது என்ற யோசனையுடன் அமர்ந்திருந்தவளின் பாதங்களை வருடியவன் அவளது உள்ளங்காலை தன்னுடைய தொடையில் வைத்துக் கொண்டான்.

"என்னோட ஸ்வீட் சூபொ இன்னிக்கு ரொம்ப ஜில்லுன்னு ஒரு மூட்ல இருந்த மாதிரி தெரிஞ்சது. அதான் அவங்கள இன்னுங்கொஞ்சம் ஜில்லுன்னு ஆக்குவோமேன்னு இப்டி செஞ்சேன்!"

"நான் என்ன நேரத்துக்கு ஒருமாதிரி இருக்குறேன்.....? மனுஷங்கன்னா மூடுக்கு ஏத்த மாதிரி மாறத்தான் செய்வாங்க..... ஆனா உனக்குத் தான் உன் மூடு லேசுக்குள்ள மாறவே செய்யாது! எப்போ பாத்தாலும் ஏன் வருது, எதுக்கு வருதுன்னே தெரியாம வர்ற அர்த்தமில்லாத கோபம் தான்
உனட்ட இருக்குற மோடு! உன்னை மாதிரியே என்னையும் கண்ண மூடிட்டு கத்த சொல்றியா? அதெல்லாம் என்னால முடியாது!
எப்பவும் ஒரே மாதிரி இருக்க நான் என்ன களிமண்ணுல செஞ்சுவச்ச பொம்மையா?" என்றான் கதிர்.

"ரேஷன் நான் இப்பல்லாம் அப்படியில்ல.... ரொம்ப மாறிட்டேன் தெரியுமா? கோபம் வந்தாலும், ரூமுக்குள்ள போயி அமைதியா பில்லோவ கட்டிப் புடிச்சுக்கிட்டு ஒக்காந்துக்குவேன். முன்ன மாதிரி கண்ண மூடிட்டு கத்துறதெல்லாம் இல்ல!" என்று ஒரு குற்றஉணர்வுடன் அவனிடம் பேசினாள் சந்தனா.

அவளை தன்னுடைய வார்த்தையால் காயப்படுத்தி விடக்கூடாது என்று எவ்வளவு முயன்றாலும், இப்படி ஒரு சில வேளைகளில் அவனையும் மீறி வன்மமாக ஏதாவது பேச்சு வெளிப்பட்டு விடுகிறது என்று நினைத்த கதிர் பெருமூச்சுடன் அவளிடம்,

"வயசு ஏற ஏற கொஞ்சம் மெச்சூரிட்டி வந்தா சரிதான்! ஒருதடவ ரூமுக்குள்ள போயிட்டு ஐஸ்கட்டிய வெளிய எடுத்துட்டு அப்புறம் வந்து எங்கிட்ட
என்னமோ கேக்கணும்னு சொன்னியே அதக் கேளு!" என்றான்.

சந்தனா அறைக்குள் செல்ல நினைத்த போது அவளிடம்,

"லஷ்மி..... அந்த ஐஸ்கட்டி ரெண்டையும் எங்கிட்ட தர்றியா? அதுக்கு முத்தம் குடுக்கணும்!" என்று ஒருமாதிரியான குரலில் சொன்னவனிடம்,

"ச்சீ.....ச்சீ! பொறுக்கி; இரு ஒன்னைய ஆன்ட்டி கிட்ட சொல்லிக் குடுக்குறேன்!" என்று திட்டி விட்டு உள்ளுக்குள் சென்று ஐந்து நிமிடத்தில் வெளியே வந்தாள் சந்தனா.

"எங்க லஷ்மி நான் கேட்டத?" என்று இன்னமும் அடங்காமல் அவளுடைய வெறுங்கையை பார்த்தவனிடம்,

"வாஷ்பேஷின்ல தூக்கிப் போட்டுட்டு வந்துட்டேன்! ஒனக்கெல்லாம் அது கிடைக்காது!" என்று சொன்னாள் சந்தனா.

"சரி போவுது விடு. ஏதோ சொல்லணும்னியே அத சொல்லு!" என்று கேட்டவனிடம் தயங்கியபடி,

"இல்ல கதிர்..... நம்ம தான் இன்னுங்கொஞ்ச நாள்ல மேரேஜ் பண்ணிக்க போறோமே? அதான் பாகேஸ்வரி ஆன்ட்டிய நீ இங்க கூட்டிட்டு வந்துட்டா நல்லாயிருக்குமேன்னு சொல்லலாம்னு நினைச்சேன். இங்க நீ இருக்குற வீடு கம்பர்டபிளா தானே இருக்கு? ஸோ அவங்கள இங்க கூட்டிட்டு வர்றதுல உனக்கு எதுவும் பிரச்சனை இருக்காதுல்ல?"

"உனக்கு அவங்க கூட இருக்குறது ரொம்ப பிடிக்கும் வேற..... அவங்க எனக்கு கதையெல்லாம் சொல்வாங்க. என் முடியெல்லாம் அவ்ளோ அழகா மெயின்டைன் பண்ணி குடுப்பாங்க; அதுவுமில்லாம ஒரு நல்ல என்விரோண்மெண்ட்ல இருந்தாலே உன்னோட கோபம், இறுக்கம் இதெல்லாம் பாதியா குறைஞ்சிடும்னு நான் நினைக்குறேன். அப்புறம் எதுக்கு நீ தனியா இருக்கணும்?  நீ என்ன நினைக்குற?" என்று அவனிடம் தனது கருத்தை சொல்லி அதற்கு அபிப்ராயமும் கேட்டாள் சந்தனா.

"இங்க இருக்குற வீடு, கடைங்க எல்லாம் என்னோடதுன்னு அம்மாவுக்கு தெரியாது லஷ்மி! சென்னையில அவங்க இருக்குறதும் நம்மளோட வீடு தான்; அதையுமே நான் அவங்க கிட்ட சொல்லல. எனக்கு அம்மாவ இங்க கூட்டிட்டு வந்து எங்கூட வச்சுக்கணும்னு ரொம்ப ஆசதான்!"

"அவங்க இங்க வந்தா, அந்தாளும் கூடவே வருவான்! என்ன வேல செய்யுற? எவ்ளோ சம்பாதிக்குற? எவ்ளோ சேத்து வச்சிருக்க? இப்ப எனக்கு அதுல எவ்ளோ தருவன்னு அவனோட பேச்சு பூராவுமே பணத்தப் பத்தினதா இருக்கும்! நம்ம கிட்ட இவ்ளோ இருக்குன்னு தெரிஞ்சா, முதல்ல எத வித்து எனக்குத் தர்றன்னு தான் கேப்பான்!"

"ஒரு ஆத்துல குளிச்சுட்டு வெளியேறுறோம்னு வையேன்.... சேறும், சகதியுமாக கெடக்குற கரையும் இருக்கும்! அத விட பெட்டரா நல்ல படித்துறையோட ஒரு கரையும் இருக்கும்; எங்க அம்மாவ பொறுத்தவரைக்கும் அவங்க கிட்ட இப்டி ரெண்டு ஆப்ஷன நீட்டுனோம்னா எங்கப்பன் தான் அவங்களுக்கு எப்பவுமே நல்ல படித்துறை! புருஷன் மேல இருக்குற அன்புல போறாங்களோ, இல்ல மறுபடியும் விட்டுட்டு ஓடிடுவானோங்குற பயத்துல போறாங்களோ தெரியாது.....!" 

"....ஆனா முதல்ல
அவம்பக்கந்தான் போவாங்க.
அவங்களோட பாசம் வேணும்னா நான் எப்பவும் ஒரு அப்ளிகேஷன போட்டு வெயிட் பண்ணத்தான் செய்யணும்! கெளம்பட்டா லஷ்மி? இப்டியே பேசிட்டு இருந்தா நான் கொஞ்ச நேரத்துல கடுப்பாகி  பாக்குற எல்லாரையும் கடிச்சிக்கிட்டே கெடப்பேன். என் தலையில ரெண்டு போட்டு, அதட்டி வைக்க நம்ம தம்பி வேற எம்பக்கத்துல இல்ல!" என்றான்.

"ஏய் இரு.....! இப்டி ஃபீல் பண்ணிட்டு இங்கருந்து கிளம்பாத! நான் ஆன்ட்டிட்ட பேசுறேன்!  நம்ம விஷயத்த நீ இன்னும் அவங்க கிட்ட சொல்லியிருக்க மாட்டல்ல? நம்ம கல்யாணம் பண்ணிக்க முடிவு பண்ணுனத பத்தி நான் அவங்க கிட்ட சொல்லிப் பாக்குறேன் ரேஷன்! ஆன்ட்டி நம்பர் சொல்லு!" என்று அவனிடம் கேட்டவள், பாகேஸ்வரியின் மொபைல் எண்ணை அவனிடமிருந்து வாங்கிக் கொண்டு, அப்படியே காஷுவலாக நடந்து செல்வது போல் அவனிடமிருந்து விலகி வீட்டின் முன்வாசல் பக்கத்தில் கிடந்த ஸோஃபாவில் அமர்ந்து பாகேஸ்வரியிடம் பேசினாள்.

"அலோ.... யாருங்க!" என்று அவன் குரலைப் போலவே மெதுவாகப் பேசிய பாகேஸ்வரியிடம்,

"ஹலோ ஆன்ட்டி! நாந்தான் சந்தானலஷ்மி பேசுறேன்! என்ன நியாபகம் வச்சுருக்கீங்களா? சுமலதா மேடம் அவங்க பொண்ணு!
நல்லா இருக்கீங்களா?" என்று பேச்சை ஆரம்பித்தாள் சந்தனா.

சில நிமிட நலம் விசாரிப்புகள், சம்பிரதாயமான உரையாடல்களுக்குப் பின்னர் தான் யார் என்று பாகேஸ்வரியிடம் சந்தனா சொன்னதும் பல ஆண்டுகளுக்குப் பிறகு தன்னுடைய முதலாளி அம்மாவின் வீட்டில் இருந்த சின்னப்பாப்பாவுடன் பேசிய மகிழ்ச்சி பாகேஸ்வரியின் குரலில் தெரிந்தது.

"ஒன்னைய, அம்மாவ, சேகர் தம்பிய,  ஆலென் ஸார எல்லாம் நா அப்பப்ப நினைச்சுக்குவேன் கண்ணு! என்னையும், கதிரையும் உங்க வீட்லயே தங்க வச்சு எப்டி பாத்துக்குட்டீங்க?" என்று நிஜமான ஆனந்தத்துடன் பேசிய பாகேஸ்வரியின் பேச்சில் குற்ற உணர்வுடன் உதட்டைக் கடித்துக் கொண்டு நின்றவளின் எதிரே வந்து கையை கட்டிக் கொண்டு நின்ற கதிர், அவளது உதட்டை மெதுவாக பற்களில் இருந்து விடுதலை செய்தான்.

"நம்ம நெம்பர் கதிருட்ட வாங்குனியா சாமி? அந்தப் புள்ளய  பாத்துக்க என்னால அவங்கூட வந்து இருக்க முடியல! கிடைச்சத சாப்ட்டு, கிடைச்ச வேலைய செஞ்சுக்கிட்டு எங்களுக்காக பாடாப்படுது பாவம்!" என்று வருத்தப்பட்ட பாகேஸ்வரியிடம்,

"ம்ஹூம்.......! அதெல்லாம் இல்ல பாகேஸ் ஆன்ட்டி! கதிர் இங்க நல்லாத்தான் சாப்டுறான்; இன்னிக்கு காலைல கூட எனக்கு இட்லி சாம்பார் கொண்டு வந்தான்! டேஸ்ட் சூப்பரா இருந்தது தெரியுமா? அவனுக்கு எந்த வேலையப் பிடிச்சிருக்கோ அந்த
வேலைய தான் செய்றான்; அம்மாவோட சென்னை வீடு இருந்ததுல....?"

"அந்த மாதிரி ஒரு வீட்ல தான் ஹாப்பியா இருக்கான்! என்ன நீங்கல்லாம் அவன் கூட இல்லைங்குறது தான் அவனுக்கு
கொஞ்சம் வருத்தம்! சரி உடுங்க.... இனிமே நாந்தான் அவன் கூடவே இருந்து அவன கவனிச்சுக்கப் போறேனே? என்னை அவனும், அவன நானும் பத்திரமா பார்த்துக்குறோம் ஆன்ட்டி! நாந்தான் உங்களுக்கு வரப்போற மருமகளா இருந்தேன்னா உங்களுக்கு ஓகேவா ஆன்ட்டி?" என்று கேட்ட சந்தனாவின் கேள்வியை ஏற்கனவே ஓரளவிற்கு எதிர்பார்த்து தான் இருந்தார் பாகேஸ்வரி.

அதனால் தானே அவனிடம் கல்யாணத்துக்குப் பெண்ணை மட்டும் நீ பார்த்துக்கொள் என்று தைரியமாக சொல்லவும் செய்தார்?

"ஏன்யா.... அந்தப்புள்ள ஒன்னைய விட்டுட்டு வேற எந்தப் பயலயாவது கல்யாணம் பண்ணிக்கிட்டதால தான் நீ இத்தன வருஷத்துல ஒருதடவ கூட கல்யாண பேச்சையே எடுக்கலயா?" என்று அவனை சற்றே துருவிக் கேட்ட போதும் அமுக்குணி போல் வாயைத் திறக்காமல் தானே இருந்தான்?

"ம்மா! அந்த ஈரோயின்னம்மா மவ என்ன நினைச்சுக்கிட்டு இருக்கா மனசுல? அவ என்ன பெரிய இவளா? என்னைய ரொம்ப ஒரசுறா! ஒருநாள் இல்ல ஒருநாள் எங்கோபம் எல்லைமீறி நா அவமேல கைய நீட்டிடப் போறேன்
சொல்லி வைங்க அவ கிட்ட......!" என்று விடலைப்பருவத்தில்
அவர்கள் இருவருக்குள் என்ன சம்பவம் நடந்தது என்றே சொல்லாமல் நிறைய தடவை குதிகுதியென்று குதித்திருக்கிறான் கதிரேசன்.

இப்படி குதிப்பவன் வருடத்தில் ஒரு முறை இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பிருந்து கடுமையாக உழைத்து பொன்னியம்மன் கோவிலின் முன்னால் அமர்ந்திருக்கும் இயலாதவர்களுக்கு எல்லாம் ஒருநாளின் மூன்று வேளையும் உணவுப்பொட்டலம் வாங்கித்தருவான். அந்த நாள் சந்தானலஷ்மியின் பிறந்தநாளாக இருக்கும்! பதினைந்து இருபது பேருக்கு மூன்று வேளை உணவு வாங்கித் தருபவன், அவளுக்கு ஒரு பிறந்த நாள் பரிசு வாங்கித் தரக்கூடாதா என்று பார்த்துக் கொண்டே இருந்தால் அவள் நிழல் படும் இடத்தில் கூட நிற்க மாட்டான்.

இது என்ன விதமான விளையாட்டு? இவர்கள் இருவருக்கும் நடுவில் பிடித்தம் இருக்கிறதா இல்லையா? அந்தப் பெண்ணுடைய அந்தஸ்துக்கு நம் மகன் எப்படி பொருந்துவான் என்று ஆயிரம் யோசிக்கும் பாகேஸ்வரியும் மகனின் நடவடிக்கைகளில் அதற்கு மேல் மூக்கை நுழைப்பது இல்லை என்றாலும் சந்தானலஷ்மியிடம் ஒரு தனிப்பட்ட உணர்வு மகனுக்கு இருக்கிறது என்று அவருக்கு முன்னரே தெரியும்!

திருமண வயது வந்தபிறகும் கூட அவன் சந்தானலஷ்மியை தவிர வேறு ஒரு பெண்ணைப் பற்றி இதுவரை தன்னிடம் பேசியதேயில்லை! பிழைப்புக்காக அவன் சென்ற ஊரும், சுமலதா தன் குடும்பத்தினருடன் தற்போது இருந்த ஊரும் ஒரே ஊராகத் தான் இருந்தது.

ஒன்றும் ஒன்றும் இரண்டு என்ற மாதிரியாக மகனது வாயில் இருந்து "சந்தானலஷ்மிய நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேம்மா" என்ற அறிவிப்பு வரும் என எதிர்பார்த்திருந்தார். இப்போது அந்த வேலையையும் அவன் தன்னுடைய வருங்கால மனைவியிடம் கொடுத்து விட்டான் போலும்!

"ஆன்ட்டி..... என்ன ஆன்ட்டி பதிலே சொல்ல மாட்டேங்குறீங்க? நானும் கதிரும் கல்யாணம் செஞ்சுக்குறதுல உங்களுக்கு சந்தோஷம் இல்லையா?" என்று சந்தனா சந்தேகக்குரலில் பாகேஸ்வரியிடம் கேட்க அவர் அவசரமாக,

"சந்தோஷம் இல்லையாவா? ச்சே.... ச்சே! உங்க கல்யாணத்துல எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம் தங்கம்.... ஆனா உங்க அப்பா, அம்மா, தம்பி எல்லாரும் உங்க முடிவுக்கு சரி சொல்லணுமே? உங்க அம்மாவும், அவனோட அப்பாவும் என்ன சொல்லுவாங்கன்னு நெனச்சுத்தா கதிரு இத்தன வருஷமா யோசிச்சுக்கிட்டே இருந்தானோ என்னவோ? அவங்களுக்கு உன் முடிவப் பத்தி தெரியுமாய்யா? கதிரு எம்புள்ள தாங்குறது தெரியுமா?" என்று கேட்டார் பாகேஸ்வரி.

பாகேஸ்வரி பேசுவது அனைத்தும் அவனுக்கு கேட்டது போலும்! முகத்தில் ஒருவித இறுக்கத்துடன் நின்று கொண்டிருந்தவன் சட்டென சந்தனாவின் கையிலிருந்த மொபைலை புடுங்கி தன் காதில் வைத்து தன் அன்னையிடம் பேசினான்.

"ஏன் உங்க புள்ளயா இருந்தா, நான் அவள விரும்பக்கூடாதா இல்ல கல்யாணம் பண்ணிக்கக் கூடாதாம்மா? எவ்ளோ தூரத்துல இருந்தாலும் எம்மனச நீங்க சரியா புரிஞ்சு வச்சுருக்கீங்க! நான் எப்பவோ லச்சக்கணக்குல ரூபாய சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டேன். அப்பவே போயி இவ அம்மா முன்னால நின்னுருக்கலாம்! அப்டி நிக்காம யோசிச்சுக்கிட்டே இருந்தது உங்க புருஷன நினைச்சுத்தான்! உங்களோட புள்ளைங்குறது எனக்கு பெருமைய குடுக்குற விஷயம்! உங்க புருஷனோட புள்ளைங்குறது எனக்கு சங்கடத்த குடுக்குற விஷயம்!"

"வீடு, காரு, காசு அதெல்லாம் இப்ப நம்ம கிட்ட நிறைய இருக்கு! ஒரு குடும்பமா சந்தானலஷ்மியோட வீட்டுக்குள்ள வர்ற தகுதி தான் இல்லன்னு நினைக்கிறேன், நீங்க என்ன நினைக்கிறீங்க?" என்று தன்னுடைய அன்னையிடம் கேட்டவன்,

"இந்தா.... உம்மாமியார் இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்றாங்கன்னு அவங்கட்ட கேட்டு வை. நான் அப்புறமா அத உங்கிட்ட வந்து கேட்டுக்குறேன். கிளம்புறேன்! பை!" என்று சந்தனாவிடம் சொல்லி விட்டு அவள் கூப்பிட கூப்பிட நிற்காமல் அங்கிருந்து சென்று கொண்டிருந்தான்.

சிறுநகை மலரும்!

Continue Reading

You'll Also Like

11.1K 1.1K 31
காதல் என்ற வார்த்தையையே வெறுக்கும் நாயகன், தன் மனதிற்கு பிடித்தவளை சந்திக்கும்போது, காதலில் விழாமலா போய்விடுவான்? தனக்கு ஏற்பட்டிருந்த கசப்பான அனுபவத...
23.8K 1.2K 76
நான் விரும்பிடாத இன்பம் நீ ... உனை விரும்பும் துன்பம் நான்...!
54.1K 3.2K 53
உச்சி வெயில் மண்டையை பிளந்து கொண்டிருந்தது. லட்சணமான முகக் கலையுடன் இருந்த ஒருவன், குளிரூட்டப்பட்ட தன் காரில் அமர்ந்திருந்தான், அந்த வெயில் தன்னை ஒன்...
167K 1.6K 13
அந்த ஒற்றை இரவில் மகிழ்ச்சியான தனது திருமண வாழ்க்கை தலைகீழாக மாறி, ஒரு கெட்ட சொப்பனமாக மாறக் கூடும் என்று அவள் ஒருபோதும் நினைத்திருக்கவில்லை. அவன் அவ...