சித்திரப்பாவை என் சிறுநகையோ ச...

By Vaishu1986

44.6K 2.9K 634

மிதமிஞ்சிய பணத்திமிரில் தன் வீட்டில் வேலை பார்க்கும் பணிப்பெண்ணின் மகனை பாடாய்படுத்தி எடுக்கும் நாயகி, பின்னா... More

❤ சிறுநகை 1
❤ சிறுநகை 2
❤ சிறுநகை 3
❤ சிறுநகை 4
❤ சிறுநகை 5
❤ சிறுநகை 6
❤ சிறுநகை 7
❤ சிறுநகை 8
❤ சிறுநகை 9
❤ சிறுநகை 10
❤ சிறுநகை 11
❤ சிறுநகை 12
❤ சிறுநகை 13
❤ சிறுநகை 14
❤ சிறுநகை 15
❤ சிறுநகை 16
❤ சிறுநகை 17
❤ சிறுநகை 18
❤ சிறுநகை 19
❤ சிறுநகை 20
❤ சிறுநகை 21
❤ சிறுநகை 22
❤ சிறுநகை 23
❤ சிறுநகை 24
❤ சிறுநகை 26
❤ சிறுநகை 27
❤ சிறுநகை 28
❤ சிறுநகை 29
❤ சிறுநகை 30
❤ சிறுநகை 31
❤ சிறுநகை 32
❤ சிறுநகை 33
❤ சிறுநகை 34
❤ சிறுநகை 35
❤ சிறுநகை 36
❤ சிறுநகை 37
❤ சிறுநகை 38
❤ சிறுநகை 39
❤ சிறுநகை 40
❤ சிறுநகை 41
❤ சிறுநகை 42
❤ சிறுநகை 43
❤ சிறுநகை 44
❤ சிறுநகை 45
❤ சிறுநகை 46
❤ சிறுநகை 47
❤ சிறுநகை 48
❤ சிறுநகை 49
❤ சிறுநகை 50
❤ சிறுநகை 51
❤ சிறுநகை 52
❤ சிறுநகை 53
❤ சிறுநகை 54
❤ சிறுநகை 55
❤ சிறுநகை 56
❤ சிறுநகை 57
❤ சிறுநகை 58
❤ சிறுநகை 59
❤ சிறுநகை 60
❤ சிறுநகை 61
❤ சிறுநகை 62
❤ சிறுநகை 63
❤ சிறுநகை 64
❤ சிறுநகை 65
❤ சிறுநகை 66
❤ சிறுநகை 67
❤ சிறுநகை 68
❤ சிறுநகை 69
❤ சிறுநகை 70
❤ சிறுநகை 71
❤ சிறுநகை 72
❤ சிறுநகை 73
❤ சிறுநகை 74
❤ சிறுநகை 75
❤ சிறுநகை 76
❤ சிறுநகை 77
❤ சிறுநகை 78
❤ சிறுநகை 79
❤ சிறுநகை 80
❤ சிறுநகை 81
❤ சிறுநகை 82
❤ சிறுநகை 83
❤ சிறுநகை 84
❤ சிறுநகை 85
❤ சிறுநகை 86
❤ சிறுநகை 87
❤ சிறுநகை 88
❤ சிறுநகை 89
❤ சிறுநகை 90
❤ சிறுநகை 91
❤ சிறுநகை 92
❤ சிறுநகை 93
❤ சிறுநகை 94
❤ சிறுநகை 95
❤ சிறுநகை 96
❤ சிறுநகை 97
❤ சிறுநகை 98
❤ சிறுநகை 99
❤ சிறுநகை 100

❤ சிறுநகை 25

443 29 1
By Vaishu1986

"நீங்க ரெண்டு பேரும் பெரிய இவிங்களோ..... கடையோட மொதலாளி யாருன்னு தெரியாம இருக்குறது அங்க வேலை பார்க்குறவங்களோட தப்பா? எதுக்கு எல்லாரையும் அந்த ட்டூத் பேஸ்ட் ஷாஷே அப்டித் திட்டுனான்? என்னைய வேற இர்ரெஸ்பான்ஸிபிள்னு திட்டுனான்.....! என்னிக்காவது கையில மாட்டுனான்? அவனுக்கு மண்டையிலயே கொட்டு விழும்; சொல்லி வை அவங்கிட்ட!" என்று சொன்னவளை சாந்தப்படுத்தும் வகையில் இருவரின் ஸீட் பெல்ட்டையும் கழற்றி விட்டு
அவளை லேசாக அணைத்து இதமாக புன்னகைத்தவன்,

"இல்லடா செல்லம்! அவன் ஏற்கனவே எங்கிட்ட எக்ஸ்பெக்ட் பண்ணுன க்வாலிட்டியில ஆளுங்கள வேலைக்கு சேர்க்க முடியலைன்னு சொல்லிட்டு இருந்தான்! இன்னிக்கு இந்த மாதிரி ஒரு விஷயம் நடந்ததால வச்சு எல்லார் மேலயும் ஏறிட்டான்! அவ்ளோதான்!"

"நீ என்ன மாதிரி கதை சொல்லியிருந்தாலும் அந்த மேனேஜர் திருப்பி உங்கிட்ட ஒரு கேள்வி கேட்டுருக்கணும் இல்லையா? சரி இதெல்லாம் ஒரு அனுபவத்துல சேர்த்தி தான? விடு பாத்துக்கலாம்! சஞ்சீவ் சார்பா நான் உங்கிட்ட ஸாரி கேட்டுக்குறேன். கோபத்த விட்டுடுங்க சார்ஜி!" என்று சொன்னவனிடம் முடியாதென தலையை ஆட்டி விட்டு முனைத்துக் கொண்டாள் சந்தனா.

"ஒனக்கு உம்மேல கூடத்தான் கோபம் ரேஷன்..... வேற உருப்படியான வேல எதுவும் பாக்காம, எப்போ பார்த்தாலும் ஒண்ணு நீ எம்பின்னாலயே சுத்திட்டு இருக்க; இல்ல என்னை உன் பின்னால சுத்த வச்சுட்டு இருக்க! யாரைக் கேட்டு அங்க ஜ்வல்லரியில என்னை உன் ஃபியான்ஸின்னு சொன்ன?" என்று அவனிடம் கேட்டபடி காரிலிருந்து இறங்க மாட்டேன் என்று சண்டித்தனம் செய்து பொரிந்து கொண்டிருந்தவளை காரின் ஸீட்டில் இருந்து இடையைப் பற்றி வெளியே இழுத்தவன்,

"ஃபியான்ஸின்னு சொன்னதெல்லாம் தப்புன்னு சொல்லி என்னால உங்காழுல விழ முடியாது லஷ்மி! நீ சும்மா எல்லாத்துக்கும் கோபப்பட்டா பட்டுக்கிட்டே இரு! ஆனா எங்கூட வீட்டுக்குள்ள வந்துரு தங்கம்!" என்று சொல்லிக் கொண்டே
அவனது வீட்டிற்குள் குண்டுகட்டாக அவளை தூக்கிச் சென்றான்.

"டேய்... என்னைய கீழ விடுறா!  உன்னை மேரேஜ் பண்ணிக்க எங்கம்மா ஓகே சொல்லிட்டதுனால என்னைத் தொட்டு தூக்கிட்டு வர்ற அளவுக்கு திமிராகிடுச்சா ஒனக்கு? உன்னைய உன்னோட கடைக்குள்ள இருக்குற ஆளுங்கள வச்சே சட்டைய புடிக்க ப்ளான் பண்ணதெல்லாம் பத்தாது. வேற ஏதாவது பெரிசா செய்யுறேன் வெயிட் பண்ணு!" என்று சொன்னவளை முதுகுப்புறமாக பிடித்துத் தள்ளி வராண்டாவில் இருந்து ஹாலுக்குள் நகர்த்திக் கொண்டு வந்தான் கதிர்.

"பெரிசா செய்யப் போறியா? நல்லா செய்யி! நானும் அதுக்காக வெயிட் பண்றேன். அத விட எனக்கு என்ன முக்கியமான வேல? இப்ப என்ன கேட்ட.... வேற எதுவும் உருப்படியான வேலை இல்லையான்னு தான? இந்த ஒருவாரம் ஃபுல் அண்ட் ஃபுல்லா கடைங்கள ரவுண்ட்ஸ் அடிக்கத்தான் டைம் ஸ்லாட் போட்டு வச்சுருக்கேன்...!"

"கல்யாணத்துக்கு அப்புறம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடையிலயும் நைன் ட்டூ செவன் இருக்கலாம்னும் ப்ளான் பண்ணியிருக்கேன். இருபது நாள் பிஸினஸ்! அடுத்த பத்துநாள் பெயிண்டிங்க்! அப்பப்போ ஆர்ட் கேலரிக்கும் போயிட்டு வந்துக்க வேண்டியதுதான்! ஓகே தான?" என்று அவள் அபிப்ராயம் வேண்டியவனிடம்,

"என்ன ஓகே தான? இத எதுக்கு எங்கிட்ட கேக்குற?" என்று கேட்டாள் சந்தனா.

"உங்கிட்ட தான் கேக்கணும். உங்கிட்ட தான் சொல்லணும். நீ தான என் பொண்டாட்டி ஆகப் போற? உன் பேமிலியில இருந்து உன்னை பிரிச்சு கூட்டிட்டு வந்துட்டேன்னோ இல்ல காசு குடுத்து வாங்கிட்டேன்னோ நினைக்காத லஷ்மி! எங்கூட இருக்கப்போற வாழ்க்கைய சகிச்சுட்டு கடந்து போகணும்னு பாக்காத! அதுல சந்தோஷமா இருக்க முயற்சி பண்ணு ப்ளீஸ்!"

"நான் என்ன பண்ணப் போறேன்னு உங்கிட்ட சொல்லிட்டேன். கல்யாணத்துக்கு அப்புறம் நீ என்ன பண்ணப் போற? சூப்பர் மார்க்கெட்ல வேலை பாக்க மாட்ட! நம்ம பிஸினஸ்ல எதையும் பாத்துக்க மாட்ட! இவ்ளோ பெரிய ஹால்ல தனியாவே உக்காந்துட்டு, உங்கம்மா மாதிரி வறுத்த முந்திரிப்பருப்பு சாப்ட்டுக்கிட்டே சீரியல் பாத்துக்கிட்டு இருக்கப்போறியா? அந்த வேல சீக்கிரத்துல போர் அடிச்சுடுமேம்மா?" என்று அவளின் அருகில் அமர்ந்து கையைப் பற்றிக் கேட்டான் கதிர்.

அவனை நோக்கி திரும்பி அமர்ந்தவள் அவனுடைய கண்களைப் பார்த்து,

"இப்ப ஏன் இத எங்கிட்ட சொன்ன?" என்று கேட்டாள்.

"ஒரே விஷயத்த ஒருவாரம் திரும்ப திரும்ப செய்யுறது கூட உனக்குப் பிடிக்காது. சீரியல்ஸ்ல ஒரே விஷயத்த தான் மூவாயிரம் எபிசோடுக்கு சொல்றாங்கம்மா.... அதான் சொன்னேன்!" என்றான் மெலிதாய் புன்னகைத்த படி.

"ம்ப்ச்; நான் கேட்டது அதில்லடா! சந்தோஷமா இருக்க முயற்சி பண்ணுன்னு சொன்னியே? ஏன் அப்டி சொன்ன?" என்று கேட்டவளிடம் இலகுவான குரலில்,

"ஏன்னா இப்பதான் நீ சந்தோஷமா இல்லையேம்மா? பிடிக்காத வீடு, பிடிக்காத வேல, பிடிக்காத வாழ்க்கைன்னு உன்னை சுத்தி இருக்கற எல்லாமே நீ ரொம்ப கஷ்டப்பட்டு ஏத்துக்க கூடியதா இருக்கு. இதுல பிடிக்காத புருஷனா நான் வேற வந்து சேரப் போறேன். அதான் மத்ததாவது உனக்குப் பிடிச்ச மாதிரி இருக்கணும்னு ஆசைப்படுறேன்!"

"இந்த வீட்ல எது எந்த மாதிரி இருக்கணும்னு நினைக்குறியோ அந்த மாதிரி மாத்திக்கோ. எந்த வேலை பிடிச்சிருக்கோ அத செய். உங்க அப்பா அம்மா சேகர இங்க கூட்டிட்டு வரணும்னு தோணுதா கூட்டிட்டு வா; இல்ல அவங்களோட மாசத்துல ரெண்டு தடவ அவங்க வீட்ல போய் இருந்துட்டு வா!"

"மொத்தத்துல நான் ஏற்கனவே கேட்ட மாதிரி பழைய சந்தானலஷ்மியாவே இரு!" என்று அவளிடம் சொன்னான் கதிர். அப்படிச் சொல்லுகையில் அவளுடைய கன்னங்கள் இரண்டையும் அவனுடைய இருகைகளால் பற்றியிருந்தான். மூன்றடி தூரத்தில் இருந்தவன் பேசிக் கொண்டே எப்போது தனக்கு இவ்வளவு அருகில் வந்தான் என்றே சந்தனாவுக்கு தெரியவில்லை.

"பழைய சந்தானலஷ்மிய தான் உனக்குப் பிடிக்காதுல்ல ரேஷன்? அப்புறம் ஏன் என்னை நீ அதே மாதிரி இப்பவும் இருக்கச் சொல்ற? ஆலென் அம்மாட்ட சொல்ற மாதிரியே நீயும் நான் என்ன செஞ்சாலும் பரவாயில்ல உன்னை லவ் பண்றேன் சந்தனான்னு சொல்லப் போறியா?" என்று கேட்டவளை கன்னத்தோடு கன்னம் உரசி, அவனுடைய உதட்டால்
அவள் கன்னத்தை தீண்டி அவளுக்கு வலிக்காதவாறு அவளை மிக மிக மிருதுவாக கடித்து வைத்தவன் அவளிடம்,

"பழைய சந்தானலஷ்மியோட ஸாடிஸம் மட்டுந்தான் எனக்குப் பிடிக்காது. அதுவும் சில நேரத்துல தான்! மத்தபடி அந்தப் பொண்ண தான் நான் இன்னமும் லவ் பண்றேன், அந்தப் பொண்ண தான் கல்யாணமும் பண்ணிக்கப் போறேன். அந்தப் பொண்ணு மாதிரியே தான் ஒரு குழந்தையும் பெத்துக்கப் போறேன்!" என்று அவள் காதுமடல்கள் சிவக்கும் படி உணர்வை தூண்டும்படியான மென்குரலில் பேசினான்.

"ரே...ஷன்! என்னடா நீ எப்பப்பாரு குழந்த, குழந்தன்னு பேசிட்டு இருக்க? இதெல்லாம் எனக்குப் பிடிக்கல!" என்று அவனிடம் சொல்ல நினைத்த சந்தனாவின் வாய் தான் அவ்வாறு அவனிடம் பேசுவதற்கு ஒத்துழைக்கவில்லை.

பெற்றோரிடமிருந்து தொலைந்து போன குழந்தை என்ன செய்வதென்று தெரியாமல் திருதிருவென விழித்துக் கொண்டு நிற்பது போல் அவன் கண்களைப் பார்த்த படி பேச்சிழந்து அமர்ந்திருந்தாள்.

ஆலெனின் மனைவி செய்யும் அபாயகரமான செலவுகளைப் போலெல்லாம் தன்னுடைய சூனியபொம்மையை ஒருநாளும் அவன் செலவு செய்ய அனுமதிக்கப் போவதில்லை. தன்னுடைய சுயகட்டுப்பாட்டிலேயே சந்தனா குடும்பத்தின் வரவு செலவுகளை சரியான முறையில் பார்த்துக் கொள்வாள். ஒருவேளை அவள் அந்தப் பொறுப்பை சரியாக செய்யவில்லை என்றால் அந்த இடத்தில் கதிரின் தலையீடு கண்டிப்பாக இருக்கும்.

இவ்வளவு பெரிய வீட்டையோ, இத்தனை தொழில்களையோ வாங்கி வைத்தது பெரிதல்ல. சிக்கனமும், கட்டு செட்டாக குடும்பம் நடத்தும் தன்மையும் அவளிடம் இருந்தால் மட்டுமே அத்தனையையும் கட்டிக் காக்க முடியும். இத்தனை வருடங்களாக சஞ்சீவும், கதிரும் இப்படித்தான் அனைத்தையும் பத்திரமாக பாதுகாத்து வந்தனர்.

"ஆலென் மாதிரியே நீயும் நான் என்ன செஞ்சாலும் பரவாயில்லன்னு சொல்லப் போறியா?" என்ற அவளது கேள்விக்கு நிச்சயமாக இல்லை என்ற ஒருவரி பதிலை இப்போதே அளித்து விடலாம் அவளுக்கு.... ஆனால் அதை விட முக்கியமான ஒரு வேலை கதிருக்கு இப்போது இருந்தது. காலையில் அவனுக்கு தோன்றிய எண்ணம் நிஜமாய் மாறுவதற்கான தீவிர முயற்சியில் அவன் இருந்தான்.

கோவிலின் மூலஸ்தானம் வரை சென்றவன் கருவறையில் இருக்கும் சுவாமியின் தரிசனத்தைப் பார்க்கத் தானே விரும்புவான்? அதை விட்டு விட்டு அந்நேரமா மற்றவரிடம் கடவுளின் பெருமையைப் பற்றி கதாகாலஷேபம் செய்து கொண்டிருப்பான்?

இவளை இப்படி தன்னுடைய பக்கத்தில் அமர வைப்பதற்கு கதிரேசன் பதினான்கு ஆண்டுகள் கடினமாக உழைக்க வேண்டியிருந்தது; பதினான்கு ஆண்டுகள் வனவாசம் முடித்து விட்டு தன்னுடைய தேசத்திற்கு திரும்பிய ராமரது காத்திருப்புக்கு பலனாக அவருக்குப் பட்டாபிஷேகம் கிடைத்ததை போல
அவனது அத்தனை ஆண்டு காத்திருப்புக்கும் ஒரு பலன் வேண்டாமா என்று நினைத்தவன் அவளது கன்னத்தில் இருந்த
அவனது இதழ்களை அவளது கழுத்தை நோக்கி மிகப் பொறுமையாக நகர்த்தினான்.

சந்தனாவின் முத்தமும் கதிருக்கு வேண்டும் தான்! ஆனால் அதை விட முக்கியமாக அவனுக்கு இப்போது தேவைப்பட்டது அவளது மார்புகள்..... தன் தாயின் கையணைப்பில் இருந்து பின் பொதுவாக தன் பசியைப் போக்கிக் கொள்வதற்காய் ஒரு குழந்தை தாயிடம் ஸ்பரிசிக்கும் உடல் உறுப்பு! 

இப்போது அவனால்  பாகேஸ்வரியிடம் ஓடிச்சென்று அவருடைய மார்பில் சரணடைய முடியாது.... அந்த வயதையும் எப்போதோ கடந்து விட்டான்; அன்னைக்கும் தனக்குமாக இருந்த நெருக்கத்தையும் ஓரளவிற்கு தொலைத்தும் விட்டான்!

ஆனால் இவள் ஒருத்தியிடம் அந்த சுகத்தை முதுமை தொடும் வரை ஏன் மரணம் தொடும் வரையிலும் கூட திகட்ட திகட்ட அனுபவிக்க முடியும்! அவளது மேனியின் வாசத்தை, அவளது மார்பில் தலைசாய்ந்திருக்கும் நேரத்தில்
அவளது உடல் சூட்டை,  அவன் பின்தலையை கோதி விடும் அவளுடைய அணைப்பை இப்படி தான் நிறைய வருடங்களாக தேடிக் கொண்டிருந்த நிறைய சுகத்தை பெற நினைத்த கதிர் சந்தனாவை அணைத்து, தன் உயரத்தை குறுக்கி, அவள் மார்பில் கிடந்தான்.

தன்னுடைய முதுகுப்புறத்தை பற்றியிருந்த அவனது அழுத்தமான அணைப்பு அவளுக்கு என்ன செய்தி சொன்னதோ தெரியவில்லை. சந்தனாவும் அவனது இந்த அணைப்பை வேண்டாமென்று சொல்லாமல் அமைதியாக அவனுடைய பின்னங்கழுத்தை வருடிய படி நின்று கொண்டிருந்தாள்.

நேரம் ஆக ஆக அவன் உடம்பின் சுமையை அவளால் தாங்க முடியவில்லை. தன் மொத்த எடையையும் அவள் மேல் சாய்த்து விட்டு எங்கோ வேறு கிரகத்திற்கு சென்று விட்டவன் போல நின்றவனை மெதுவாக உலுக்கினாள்.

"ரேஷ....ன்! என்ன மேன் பண்ற? முன்னைக்கு இப்ப ரொம்ப வெயிட்டா இருக்க நீ! உன்னை இப்டியே ரொம்ப நேரம் ஹக் பண்ணிட்டு இருக்க முடியல! 
செட்டில் ஆக ஒரு இடம் கிடைச்சிருச்சுன்னு நினைச்சு அப்டியே தூங்கிட்டியா என்ன?" என்று கேட்டவளின் பேச்சில் தான் எங்கிருக்கிறோம் என்ற உணர்வு வரப்பெற்றான் கதிர்.

"நான் தூங்கல்லாம் இல்லடா ஃபெதர்! ஸாரி! நீ எனக்கு இவ்ளோ பக்கத்துல நின்னவுடனே, உன் முகத்துல என் உதடு படுற நெருக்கம் கிடைச்சவுடனே, என்னோட இன்னொரு ஆசையையும் நிறைவேத்திக்கலாம்னு தோணிடுச்சு! அதான் கொஞ்ச நேரம் உன்னைக் கட்டிப்பிடிச்சுட்டு அப்டியே நின்னுட்டேன். தப்பா நினைச்சுக்காத லஷ்மி! உன்னை  ஒரு கிஸ் பண்ணிக்கட்டுமா? எனக்கு இன்னிக்கு காலைல இருந்து உன்னை கிஸ் பண்ணனும்னு ரொம்ப தோணிக்கிட்டே இருக்குது!" என்று கேட்டவனின் அணைப்பில் இருந்து விலகி நின்றாள் சந்தனா.

அறிவு பேசாமல் உணர்வுகள் பேசிய போது எல்லாம் சரியாகத் தெரிந்தது. இப்போது அவன் அவளிடம் அனுமதி கேட்டவுடன் சரியெல்லாம் காணாமல் போய் அவன் கேட்டதை மறுக்கும் மனநிலை வந்து விட்டது அவளுக்கு.

"நான் உன்னைய இன்னும் லவ் பண்ணவேயில்லயே கதிர்! அப்புறம் எப்டி நீ கேக்குறத குடுக்கறது?" என்று அவனிடம் கேட்டாள்.

சிறுநகை மலரும்!

Continue Reading

You'll Also Like

737 105 10
எங்கு கீறல் விழவே கூடாதென இத்தனை வருடங்களாக ஆசைப்பட்டாளோ, அங்கு ஆணி அறைந்தாற் போல வடுவொன்று!
16.2K 571 23
அக்கா தங்கையின் கதை... தாய் தந்தையை இழந்த சகோதரிகள் தங்கள் சொந்தங்களை தேடிச் செல்லும் கதை...
23.8K 1.1K 63
ஹாய் இதயங்களே.. இது என் ஏழாவது கதை (மூன்றாம் கதையின் அடுத்த பாகம்) எதிர்பாராமல் பிரிந்த காதல் ஜோடிகள் இணையவே இயலாத இறுதி கட்டத்திற்கு தள்ளப்பட இருந்த...
12.4K 678 52
காதல் என்ற சொல்லிற்கு அர்த்தம் தெரியாத போது மலர்ந்த காதலானது காலப்போக்கில் காதலை இரு மனமும் அர்த்தம் தெரிந்து கொண்டாலும் விதியின் விளையாட்டில் ஜெயிப்...