சித்திரப்பாவை என் சிறுநகையோ ச...

By Vaishu1986

43.9K 2.9K 634

மிதமிஞ்சிய பணத்திமிரில் தன் வீட்டில் வேலை பார்க்கும் பணிப்பெண்ணின் மகனை பாடாய்படுத்தி எடுக்கும் நாயகி, பின்னா... More

❤ சிறுநகை 1
❤ சிறுநகை 2
❤ சிறுநகை 3
❤ சிறுநகை 4
❤ சிறுநகை 5
❤ சிறுநகை 6
❤ சிறுநகை 7
❤ சிறுநகை 8
❤ சிறுநகை 9
❤ சிறுநகை 10
❤ சிறுநகை 11
❤ சிறுநகை 12
❤ சிறுநகை 13
❤ சிறுநகை 14
❤ சிறுநகை 15
❤ சிறுநகை 16
❤ சிறுநகை 17
❤ சிறுநகை 18
❤ சிறுநகை 20
❤ சிறுநகை 21
❤ சிறுநகை 22
❤ சிறுநகை 23
❤ சிறுநகை 24
❤ சிறுநகை 25
❤ சிறுநகை 26
❤ சிறுநகை 27
❤ சிறுநகை 28
❤ சிறுநகை 29
❤ சிறுநகை 30
❤ சிறுநகை 31
❤ சிறுநகை 32
❤ சிறுநகை 33
❤ சிறுநகை 34
❤ சிறுநகை 35
❤ சிறுநகை 36
❤ சிறுநகை 37
❤ சிறுநகை 38
❤ சிறுநகை 39
❤ சிறுநகை 40
❤ சிறுநகை 41
❤ சிறுநகை 42
❤ சிறுநகை 43
❤ சிறுநகை 44
❤ சிறுநகை 45
❤ சிறுநகை 46
❤ சிறுநகை 47
❤ சிறுநகை 48
❤ சிறுநகை 49
❤ சிறுநகை 50
❤ சிறுநகை 51
❤ சிறுநகை 52
❤ சிறுநகை 53
❤ சிறுநகை 54
❤ சிறுநகை 55
❤ சிறுநகை 56
❤ சிறுநகை 57
❤ சிறுநகை 58
❤ சிறுநகை 59
❤ சிறுநகை 60
❤ சிறுநகை 61
❤ சிறுநகை 62
❤ சிறுநகை 63
❤ சிறுநகை 64
❤ சிறுநகை 65
❤ சிறுநகை 66
❤ சிறுநகை 67
❤ சிறுநகை 68
❤ சிறுநகை 69
❤ சிறுநகை 70
❤ சிறுநகை 71
❤ சிறுநகை 72
❤ சிறுநகை 73
❤ சிறுநகை 74
❤ சிறுநகை 75
❤ சிறுநகை 76
❤ சிறுநகை 77
❤ சிறுநகை 78
❤ சிறுநகை 79
❤ சிறுநகை 80
❤ சிறுநகை 81
❤ சிறுநகை 82
❤ சிறுநகை 83
❤ சிறுநகை 84
❤ சிறுநகை 85
❤ சிறுநகை 86
❤ சிறுநகை 87
❤ சிறுநகை 88
❤ சிறுநகை 89
❤ சிறுநகை 90
❤ சிறுநகை 91
❤ சிறுநகை 92
❤ சிறுநகை 93
❤ சிறுநகை 94
❤ சிறுநகை 95
❤ சிறுநகை 96
❤ சிறுநகை 97
❤ சிறுநகை 98
❤ சிறுநகை 99
❤ சிறுநகை 100

❤ சிறுநகை 19

424 32 3
By Vaishu1986

பொள்ளாச்சியில் இருந்து திரும்பி வந்து உடனே செய்ய வேண்டிய முக்கியமான வேலையாக
அன்று மாலை ஆறரை மணியளவில் சந்தனா வேலை செய்யும் சூப்பர் மார்க்கெட்டின் வெளியே வந்து நின்று அவளை வேறு எதுவும் பேச விடாமல் தன்னுடன் அழைத்து வந்தவன் தான்!

முன்னாளில் பள்ளி நேரம் முடிந்து அவள் வீடு திரும்பும் போதோ அல்லது வீட்டில் அவளறையில் சாயங்கால நேரம் இலகுவாக தொலைக்காட்சியின் முன் அமர்ந்து இருக்கும்போதோ அவளுடைய நொறுக்குத்தீனி மற்றும் மில்க் ஷேக்கிற்கு எந்தவிதமான இடையூறும் வந்து விடாமல் கவனிப்பது போல் இன்றும் அவளது பணிநேரம் முடிந்ததும் அவளை
நாகர்கோவிலில் அவனுடைய ஒரு விருப்பமான உணவகத்திற்கு
அழைத்துச் சென்று மாலை நேர சிற்றுண்டியையும், ஒரு பெரிய ஜுஸ் டம்ளரில் ஆப்பிள் மில்க் ஷேக்கையும் அவளுக்காக வாங்கித் தந்திருந்தான் கதிர்.

அவன் வாங்கித் தந்த அவளுக்குப் பிடித்தமான மாலை சிற்றுண்டியை பார்த்த சந்தனாவுக்கு இவன் என்ன என்னை கேட்காமல் இதையெல்லாம் எனக்காக ஆர்டர் செய்வது என்ற எரிச்சல் வந்தது.

அவளது எரிச்சலுடன் பசியும் சேர்ந்து அவன் அவளுக்காக ஆர்டர் செய்த உணவை சாப்பிட தூண்டியதால் அவன் மேல் இன்னுங்கொஞ்சம் எரிச்சலடைந்தாள்.

"எதுக்காக இப்ப என்னை இங்க கூட்டிட்டு வந்த? ஐயா சாமி கொறிக்க கொஞ்சம் ஸ்நாக்ஸ் வாங்கிக்குடுன்னு உங்கிட்ட கேட்டனா நானு? என்னை பாக்கக்கூடாதுன்னு நான் உனக்கு ஆர்டர் போட்டா..... மானஸ்தனா இருந்தா, நீ என்னை பாத்துருக்கக் கூடாது! அத விட்டுட்டு என்னை வீட்டுக்கு போக விடாம இங்க கூட்டிட்டு வந்து குழிப்பணியாரமும், தேங்காய்பால் முறுக்கும்..... ஆப்பிள் ஷேக்கும்! இதெல்லாம் ஏன்?" என்று கேட்டவளின் எதிரில் அமர்ந்து உதட்டில் விரலை வைத்து பேசாதே என சைகை செய்தவன்,

"பசி கண்ணுல தெரியுது..... சீக்கிரத்துல எல்லாத்தையும் சாப்ட்டு முடி; அப்பத்தான் கியா, கியான்னு கத்தாம இருப்ப!" என்று அவளிடம் திமிராக சொல்ல,

டேபிளில் வைக்கப்பட்டிருந்த பலகாரங்களை பார்த்தவள் வீம்பாக அவற்றை தொடாமல் அவனிடம்,

"ம்ப்ச்! நீ என்ன இதெல்லாம் சாப்ட சொல்லி எனக்கு ஆர்டர் போடுறது? எனக்கு இதெல்லாம் வேண்டாம்! நான் இப்பவே வீட்டுக்கு.....!" என்று சொன்னவளிடம் இடக்கையை காட்டி அவள் பேச்சை நிறுத்தியவன்,

"உங்கம்மா நம்ம விஷயத்துல ஏதோ ப்ரச்சன பண்ணியிருக்காங்க. அதுனால தான் நீ என்னை அவாய்ட் பண்ணனும் நினைச்சு இப்டி காமெடியெல்லாம் பண்ணிட்டு இருக்க! நான் உன்னை இப்ப என் வீட்டுக்கு கூட்டிட்டுப் போயி நம்ம பேச்சுவார்த்தைய கொஞ்சம் தெளிவா பேசி முடிச்சுட்டு, அதுக்கப்புறம் உங்கம்மாவ பாக்கணும்னு நினைச்சேன். அதெல்லாம் முடியாது; இப்பவே நான் வீட்டுக்குத் தான் போவேன்னு நீ சொன்னாலும் எனக்கு ஒண்ணும் ப்ராப்ளம் இல்ல; உங்கிட்ட பேசாம நேரா உங்கம்மாட்டயே எல்லா பேச்சையும் பேசி முடிச்சுடுறேன்!" என்று தீர்மானமாக பேசியவனிடம் பயக்குரலில்,

"இல்ல.... நீ அதெல்லாம் செய்யக்கூடாது; ப்ளீஸ் எங்க வீட்டுக்கு வந்துடாத ரேஷன்!" என்றாள் சந்தனா.

"அப்ப மரியாதயா ஒக்காந்து இதுல எவ்ளோ சாப்ட முடியுதோ அத சாப்ட்டு முடி!" என்று அவளுக்கு கட்டளையிட்டவனின் வார்த்தையை மீற முடியாமல் குழிப்பணியாரங்களை இரண்டு இரண்டாக கையில் எடுத்து, இரண்டில் ஒன்றை வலக்கை உள்ளங்கை மறைவில் ஒளித்துக் கொண்டு லேசாக ஊதி ஊதி அவற்றை சட்னியில் தொட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் சந்தனா.

அவள் சாப்பிடுவதையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு ஏனோ இப்போது திடீரென டிஸ்கவரி சேனலில் பார்க்கும் முயல், அணில் போன்ற சிறிய ரக விலங்குகளின் நியாபகம் வந்தது. கொலைப் பசியில் இருந்தாலும் அந்த உயிரினங்களைப் போலத்தான் உணவைக் கொறித்துக் கொண்டிருந்தாள் சந்தனா.

இவள் முன்பிருந்தே இப்படித்தான்...... அவளுக்கு மிகவும் பிடித்தமான மக்ரூன், முந்திரி ஸ்வீட் வகைகள் என்றாலும் இவள் ஒன்றை எடுத்து ரசித்து ருசித்து சாப்பிடுவதற்குள் சேகர் அரைடஜனை தன் வாய்க்குள் போட்டு மென்று முடித்திருப்பான்.

அதனால் தன் கோட்டாவாக தன்னுடைய தம்பியிடம் சண்டையிட்டு, மல்லுக்கட்டி இரண்டு, மூன்றை ஒரே வேளையில் கையில் எடுத்து வைத்துக் கொண்டு அவற்றை பொறுமையாக சாப்பிடுவாள். இன்று ஜெபா அவளுடைய பக்கத்தில் இல்லாத போதும் அப்படியே தான் செய்து கொண்டிருந்தாள்.

"ஃபெதரு.... அப்போலேர்ந்து நீ கொஞ்சங்கூட மாறவேயில்லடி! எங்க பக்கத்துல இருக்கிறவன் புடுங்கிடுவானோன்ற மாதிரியே  இன்னமும் கையில ஒளிச்சு வச்சிக்கிட்டு சாப்புடுறா பாரு.....!" என்று நினைத்த படி அந்த இருபத்தெட்டு வயது பெண்ணின் விநோத செய்கையை கன்னத்தில் கைவைத்து ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் கதிர்.

இந்த ஒரு பெண்ணிடம் மட்டும் தான் பார்த்த சில க்யூட்டான பக்கங்கள் எந்த காலத்திலும் தன் மூளையிலிருந்து அழிந்து போகாமல் அப்படியே தான் இருக்குமோ என்று நினைத்துக் கொண்டிருந்தவன் அவள் தனது பக்கம் வைக்கப்பட்ட பில்லை எடுத்ததும் தன் வாழ்வில் ஆயிரத்து ஐநூறாவது முறையாக அவள் மேல் புதிதாக கோபம் கொண்டான். அவன் தன்னை முறைப்பதை அலட்சியமாக பார்த்தவள் கதிரிடம்,

"என்ன கோபமா லுக்கு விடுற? நான் எனக்கான தேவைகள பார்த்துக்குற அளவுக்கு சம்பாதிக்க தான் செய்றேன். நான் சாப்ட்ட டிஃபனுக்கு உன்னை பில் கட்டச் சொல்வேன்னு நினைச்சியோ?" என்று கேட்க அவளிடம் சிறு சிரிப்புடன்,

"ச்சே.... ச்சே! அப்டியெல்லாம் நான் தப்பி தவறிக் கூட நினைப்பேனுங்களா சந்தானலஷ்மி? என்ன இவ்ளோ தூரம் ஹோட்டலுக்கு சாப்டன்னு வந்துருக்கோம். நீங்க இந்த ஸ்லேவுக்குன்னு ஒண்ணுமே வாங்கித் தரலையே? எனக்கும் பசிக்கும்ல? நானும் சாப்ட வேண்டாமா?" என்று பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு அவளிடம் கேட்டான் கதிர்.

"இடியட்..... இத முதல்லயே கேட்டு தொலையுறதுக்கு என்னடா? என்னைய வீட்டுக்கு லேட்டா கூட்டிட்டுப் போகணும்னுட்டே இப்டியெல்லாம் பண்றியா நீ? உனக்கு என்ன வேணுமோ, அதப் போய் பார்ஸல் வாங்கித் தொல.... போ!" என்று பல்லைக் கடித்தபடி அவனிடம் சொன்னவளிடம்,

"பார்ஸல் தான! கட்டிட்டாப் போச்சு!
தேங்க்ஸ் சந்தானலஷ்மி!" என்று சொல்லி அவளுக்கு ஒரு சல்யூட் செய்து விட்டு சென்றான் கதிர்.

"பண்றதெல்லாம் திமிருத்தனம்..... ஆனா என்கிட்ட மட்டும் பணிவா இருக்குற மாதிரி என்ன நடிப்பு நடிக்குறான்! கடவுளே; வீட்டுக்கு வேற கூப்டுறான்; இவங்கிட்ட என்னத்த பேசி அம்மாவோட டெஸிஷன எப்டி இவங்கிட்ட சொல்லப்போறேன்னு தெரியலயே....?" என்று பயந்து கொண்டிருந்த சந்தனாவிடம் ஐந்து நிமிடங்களுக்கு பின்னர் ஒரு பணியாளர் வந்து ஒன்பதாயிரம் ரூபாய்க்கான பில்லை நீட்டினார்.

பில்லில் இருந்த தொகையைப் பார்த்து வாயடைத்துப் போனவள் அவனைப் பார்க்க அவன் குறுஞ்சிரிப்புடன் தன் தோளைக் குலுக்கினான்.

"அ.....ஸார்டட் ஸ்வீட்ஸா? எ.... என்ன பில் இது? எதுக்கு இவ்ளோ அமௌண்ட் வந்துருக்கு?" என்று அவரிடம் கேட்க அவர் சந்தனாவிடம் கதிர் ஸ்வீட்டுகள் அடங்கிய அரை கிலோ பேக்குகள் 25 வாங்கியிருப்பதாக சொல்லி விட்டு,

"கேஷா.... கார்டா மேடம்?" என்ற ஒரு கேள்வியை வேறு கேட்டு விட்டு அவளருகிலேயே காத்து நின்றார்.

அவனை என்ன திட்டுவது என்று கூட யோசிக்க முடியாமல் அருகில் காத்திருக்கும் நபருக்கு பில்லுக்கான பணம் செலுத்துவது இப்போது முக்கியமான விஷயமாக பட சந்தனா கதிரைப் பார்த்து அவனை தன்னருகில் வரும்படி கையசைத்து அழைத்தாள். அவள் எப்போது தன்னை இப்படி கூப்பிடுவாள் என்று தானே அவனும் காத்துக் கொண்டிருந்தான்?

"என்னம்மா..... கூப்டியா?" என்று அவளிடம் கேட்டபடி அவள் பக்கத்தில் வந்தவன், அவளது கையிலிருந்த இரண்டு பில்லையும் சாதுர்யமாக உருவிக் கொண்டு பில்லுக்கான தொகையை பணியாளரிடம் செலுத்தி விட்டு அவள் புறமாக திரும்பி,

"ஒரு நிமிஷத்துல முகம் எல்லாம் பயங்கரமா சூடாகிடுச்சு போலிருக்கு! தக்காளி மாதிரி செவப்பு கலரா தெரியுற.... தண்ணி குடிக்கிறியா?" என்று கண்சிமிட்டிக் கேட்டான்.

"டேய்..... வர்ற கோபத்துல இந்த ஃபோர்க்க எடுத்து உம்மூக்கு ஓட்டையில சொருவி உன்னை கொன்னுடுவேன் பாத்துக்க.......! ஏதாவது வாங்கிக்கோன்னா ஒரே டைம்ல ஒன்பதாயிரத்துக்கு ஸ்வீட் வாங்குற.....! இத்தன ஸ்வீட்ட
வீட்டுக்கு எடுத்துட்டுப் போயி, அத வச்சு புதுசா உன்னோட வீட்ல ஜன்னலு, சுவரு எதையும் கட்டப் போறியாடா டாமினேட்டிங் பேயே?
உன் முன்னால நான் பில் கட்ட பணம் இல்லாம பிச்சக்காரி மாதிரி நிக்கணும்; அப்ப நீ ஏதோ தர்மதாதா மாதிரி வந்து எனக்காக பில் கட்டுவ..... அதான? இதுக்குப் பேரு என்ன தெரியுமா? ஸாடிஸம்.....!" என்று சொன்னவளை ஒருமாதிரியாக பார்த்தவன்,

"ஒவ்வொரு வருஷமும் யுகாதி அன்னிக்கு அந்த ஈரோயின் அம்மா பரந்த மனசோட எங்க எல்லாருக்கும் புதுத்துணி எடுத்துக் குடுக்குமே..... காலையில எனக்கு தர வேண்டிய அந்த துணிய சாயந்தரம் வரைக்கும் அக்காவும், தம்பியுமா ஒளிச்சு வச்சுக்கிட்டு இந்தா தரேன், அந்தா தர்றேன்னு சொல்லி என்னைய ஒரு பிச்சக்காரன் மாதிரி
அங்கிட்டுக்கும், இங்கிட்டுக்குமா அலைக்கழிப்பீங்களே....?"

"கதிரும் எங்க கூடவே சேர்ந்து ட்ரெஸ் போடட்டும் ஆன்ட்டின்னு எங்கம்மா கிட்ட ஒரு நடிப்பு வேற! நீயெல்லாம் உங்கம்மாவ மாதிரியே ஒரு பெரிய நடிகையாகி இருக்கணும்டீ! இவகிட்ட இப்டி தொங்கிக்கிட்டு நின்னு புதுத்துணி கட்டுறதுக்கு பேசாம எட்டு கிழிசலோடயே சட்டைய மாட்டிக்கிட்டு இருக்கலாம்னு எனக்குத் தோணும்! நீங்க அப்போ பண்ணின அந்த வேலைக்குப் பேரு ஸாடிஸம் இல்லையா?" என்று அவளிடம் மெதுவான குரலில் கேட்டான்.

"அது......சின்ன வயசுல பணத்திமிர்ல ஏதோ தெரியாம.... அப்டியெல்லாம்!" என்று பேசத் தொடங்கியவளிடம்,

"அதே மாதிரி தான் நானும் இப்ப பெரிய வயசுல..... உன்னை விட நிறைய பணம் வச்சுருக்குற திமிர்ல... தெரிஞ்சே..... இப்டியெல்லாம்!" என்று சொல்லி வாக்கியத்தை நிறைவு செய்தான் கதிர்.

"ச்சூ! உங்கிட்ட இப்டி ஒவ்வொன்னுக்கும் போராடிட்டே இருக்க முடியாது என்னால..... நான் போறேன் போ!" என்று சொன்னவளின் கையைப் பற்றி தன்னுடைய பார்சல்களை மறுகையில் வைத்துக் கொண்டு,

"நாம இன்னிக்கு எவ்ளோ நேரம் ஆனாலும், நம்ம வீட்டுக்குப் போயி இருக்குற பிரச்சனையெல்லாம் பேசி முடிச்சுட்டுத் தான், உன் வீட்டுக்குப் போறோம். சீக்கிரத்துல பேசி முடிச்சுட்டா நீ சொன்ன மாதிரி நாம புதுசா ஜன்னல், சுவரு, கதவு, பால்கனி எல்லாம் கட்டி வெளையாடலாம். வா போலாம்!" என்று சொல்லி விட்டு அவளை அங்கிருந்து அழைத்துச் சென்றான் கதிர்.

"ப்ளீஸ் கதிர்..... டைமப் பாரு இப்பவே ஏழு இருபது! ஆறரை மணிக்கு நான் உங்கூட கிளம்பி வந்தேன். என் வொர்க்கிங் டைம் முடிஞ்சு ஒன் அவர் ஆகப்போகுது! இப்பல்லாம் அம்மா கரெக்டா நான் வர்ற டைம நோட் பண்றாங்க; என்னை எதிர்பார்த்து வீட்ல காத்துட்டு இருக்காங்க..... ஸோ தயவுசெஞ்சு நீ இதுல எந்த பிரச்சனையும் பண்ணாத! என்னை வீட்டுக்கு கிளம்ப அலவ் பண்ணு!"

"கார்ல எங்கிட்டாவது சுத்திட்டே இருந்தன்னாலும் பரவாயில்ல; என்னை அப்டியே எறக்கி மட்டும் விட்டுடு! நான் ஆட்டோவுல கூட ஏறி வீட்டுக்குப் போய்க்குறேன்டா ரேஷன்!" என்று அவள் வீட்டிற்கு செல்லும் வழியில்லாமல் காரில் வேறு ஏதோ ஒரு வழியில் போய்க் கொண்டிருந்த கதிரிடம் கெஞ்சலாக பேசிக் கொண்டிருந்தாள் சந்தனா.

"இத்தன வருஷத்துல மொததடவயா நீ எங்கிட்ட பேசுன ஒருவார்த்த என்னை ரொம்ப குளுகுளுன்னு ஆக்கியிருக்கு லஷ்மி! என்னை அலவ் பண்ணுன்னு சொன்ன பாத்தியா! அதுதான்...... எனக்கு அந்த வார்த்தை ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு! நம்ம ரெண்டு பேரோட இடமும் ரிவர்ஸாகிட்டாப்ல தோணுது. உனக்கென்ன தோணுது?" என்று உல்லாசக் குரலில் கேட்டவனிடம்,

"இப்ப உங்காரு எங்கயாவது புளிய மரத்துல போயி முட்டி ஆக்ஸிடென்ட் ஆகி நிக்கணும்னு தோணுது! கார நிறுத்து சாத்தானே!" என்று கத்தினாள் சந்தனா.

"அடடா! ஹைவே ரோட்ல இருந்த  புளிய மரமெல்லாம் இப்ப பாதி இல்லவே இல்லையேம்மா! அதுனால நாம மோதுறதுக்கு வேற எதையாவது டார்க்கெட் பண்ணுவோம்; ஆனா ஒண்ணு லஷ்மி நான் கார எங்கயாவது கொண்டு போய் முட்டி சாகுற கண்டிஷன்ல கெடந்தா, நீ அப்ப அம்போன்னு உட்டுட்டு ஆட்டோ புடிச்சு வீட்டுக்குப் போயிடக் கூடாது, சரியா?" என்று தீவிரமான குரலில் அவளிடம் கேட்டுக் கொண்டிருந்தான் கதிர்.

"ஐயோ.... பேசிப் பேசியே சாவடிக்குறானே என்னைய! வண்டிய நிறுத்துத் தொலன்னு சொன்னா அத மட்டும் காதுல வாங்காம மத்த எல்லாத்தையும் நல்லா வக்கனையா பேசு! போடா எத்தன மணிக்கு வேணும்னாலும் என்னைய வீட்டுக்கு கூட்டிட்டுப் போ! இனிமே உங்கிட்ட நான் கெஞ்சுனன்னா என்பேரென்னன்னு கேளு!" என்று வீராப்பாக அவனிடம் சொல்லி விட்டு அமைதியாக உட்கார்ந்து இருப்பது போல் காட்டிக் கொண்டாலும் தனது தந்தைக்கும் தம்பிக்கும் தனித்தனியாக தான் கதிருடன் இருப்பதாகவும், வீட்டிற்கு வருவதற்கு சற்று தாமதாகும் எனவும் குறுஞ்செய்தி அனுப்பி விட்டுத்தான் சற்று நிம்மதியாக எங்கே போகிறோம் என்றே தெரியாமல் அவனுடன் சென்று கொண்டிருந்தாள் சந்தனா.

சிறுநகை மலரும்!

Continue Reading

You'll Also Like

203K 6.5K 40
முக்கோண காதல் கதை. எல்லோருக்கும் ஒரு கடந்த காலம் இருக்கும். பிரியாவிற்கும் ஒரு கடந்த காலம் இருந்தது.கடந்த காலங்கள் வேண்டுமானால் வரலாறாக இருக்கலாம். ...
19.2K 504 25
Higest Ranking #26 tamil #57 romance #79 காதல் #42 தமிழ் #35 குடும்பம் #11 உறவு #14 affection #14 நாவல் #4 புரிதல் உள்ளங்கள் இரண்டு இணைய காதலே அடித்த...
66.1K 839 25
வருன் என்ற பணக்கார திமிரும் யாரையும் தன்னிடம் நெருங்க விடாமலும் இருக்கும் ஒருவனின் வாழ்க்கையில் காதல் என்ற அமிர்தத்தை நுழைத்து அவனையும் சாதரணமான மனி...
79.3K 3.8K 81
தனது நண்பனின் ஒரு முடிவால் நாயகியின் வாழ்க்கை பாதையுடன் சென்று இணையும் நாயகன், அவளுக்கு கன்னலாய் இனிக்கிறானா, அவளது வாழ்வில் மின்னலாய் ஊடுருவுகிறானா...