சித்திரப்பாவை என் சிறுநகையோ ச...

Oleh Vaishu1986

43.9K 2.9K 634

மிதமிஞ்சிய பணத்திமிரில் தன் வீட்டில் வேலை பார்க்கும் பணிப்பெண்ணின் மகனை பாடாய்படுத்தி எடுக்கும் நாயகி, பின்னா... Lebih Banyak

❤ சிறுநகை 1
❤ சிறுநகை 2
❤ சிறுநகை 3
❤ சிறுநகை 4
❤ சிறுநகை 5
❤ சிறுநகை 6
❤ சிறுநகை 7
❤ சிறுநகை 8
❤ சிறுநகை 10
❤ சிறுநகை 11
❤ சிறுநகை 12
❤ சிறுநகை 13
❤ சிறுநகை 14
❤ சிறுநகை 15
❤ சிறுநகை 16
❤ சிறுநகை 17
❤ சிறுநகை 18
❤ சிறுநகை 19
❤ சிறுநகை 20
❤ சிறுநகை 21
❤ சிறுநகை 22
❤ சிறுநகை 23
❤ சிறுநகை 24
❤ சிறுநகை 25
❤ சிறுநகை 26
❤ சிறுநகை 27
❤ சிறுநகை 28
❤ சிறுநகை 29
❤ சிறுநகை 30
❤ சிறுநகை 31
❤ சிறுநகை 32
❤ சிறுநகை 33
❤ சிறுநகை 34
❤ சிறுநகை 35
❤ சிறுநகை 36
❤ சிறுநகை 37
❤ சிறுநகை 38
❤ சிறுநகை 39
❤ சிறுநகை 40
❤ சிறுநகை 41
❤ சிறுநகை 42
❤ சிறுநகை 43
❤ சிறுநகை 44
❤ சிறுநகை 45
❤ சிறுநகை 46
❤ சிறுநகை 47
❤ சிறுநகை 48
❤ சிறுநகை 49
❤ சிறுநகை 50
❤ சிறுநகை 51
❤ சிறுநகை 52
❤ சிறுநகை 53
❤ சிறுநகை 54
❤ சிறுநகை 55
❤ சிறுநகை 56
❤ சிறுநகை 57
❤ சிறுநகை 58
❤ சிறுநகை 59
❤ சிறுநகை 60
❤ சிறுநகை 61
❤ சிறுநகை 62
❤ சிறுநகை 63
❤ சிறுநகை 64
❤ சிறுநகை 65
❤ சிறுநகை 66
❤ சிறுநகை 67
❤ சிறுநகை 68
❤ சிறுநகை 69
❤ சிறுநகை 70
❤ சிறுநகை 71
❤ சிறுநகை 72
❤ சிறுநகை 73
❤ சிறுநகை 74
❤ சிறுநகை 75
❤ சிறுநகை 76
❤ சிறுநகை 77
❤ சிறுநகை 78
❤ சிறுநகை 79
❤ சிறுநகை 80
❤ சிறுநகை 81
❤ சிறுநகை 82
❤ சிறுநகை 83
❤ சிறுநகை 84
❤ சிறுநகை 85
❤ சிறுநகை 86
❤ சிறுநகை 87
❤ சிறுநகை 88
❤ சிறுநகை 89
❤ சிறுநகை 90
❤ சிறுநகை 91
❤ சிறுநகை 92
❤ சிறுநகை 93
❤ சிறுநகை 94
❤ சிறுநகை 95
❤ சிறுநகை 96
❤ சிறுநகை 97
❤ சிறுநகை 98
❤ சிறுநகை 99
❤ சிறுநகை 100

❤ சிறுநகை 9

611 32 2
Oleh Vaishu1986

கதிரேசன், சஞ்சீவ், சேகர் மூவரும் இரவு எட்டு மணியளவில் ஒரு பெரிய ஹோட்டலின் பாரில் அமர்ந்திருந்தனர். சஞ்சீவினுடைய தாத்தா உடல்நலக் குறைவால் அன்று மரணமடைந்து இருந்தார்; அதனால் அவருக்குப் பிறகு இவன் தொழிலை கவனித்துக் கொள்ள அங்கே வேண்டும் என்று நினைத்த அவனது அன்னை அவன் சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு அவனை திருப்பி அழைத்திருக்கிறார்கள்; நான் இரண்டு நாட்களில் ஊருக்குக் கிளம்ப வேண்டும் என்று கதிரிடம் அலைபேசியில் சொல்லியிருந்தான் சஞ்சீவ்.

சஞ்சீவை பார்க்க கேலரிக்கு சென்று கொண்டிருந்த கதிர் "இன்னும் ரெண்டு நாள்ல நான் கிளம்பணும் பாஸ்!" என்று அவன் சொன்ன வார்த்தையில் மிகவும் சங்கடமாகி,

"நம்ம எப்பவும் போற ஹோட்டலுக்கு வந்துடு சஞ்சீவ்! நம்ம அங்க உக்காந்து பேசுவோம்!" என்று சஞ்சீவிடம் சொல்லி விட்டு ஹோட்டலுக்கு சென்று கொண்டிருந்தான்.

அந்த ஹோட்டலின் முன்னால் தன்னுடைய வாகனத்தை பார்க் செய்த போது அங்கே எதேச்சையாக சந்தனாவின் தம்பி சேகரையும் பார்த்த கதிர் அவனோடு பேசிக் கொண்டிருந்தான்.

"சேகர்..... நீ சேகர் தான? நல்லா வளந்து இப்ப ஒரு மேன் ஆகியாச்சு.... ஹூம்! நல்லாயிருக்கியாப்பா? நீ எங்கடா இங்க? அதுவும்..... நீ இந்த ட்ரெஸ்ல?" என்று ஒரு தர்மசங்கடமான கேள்வியை அவனிடம் கேட்டு விட்டோமோ என்ற மலைப்பில் நின்று கொண்டிருந்த கதிரிடம் ஆச்சரியமான பாவத்துடன்,

"நீங்க எம்மேல கோபமா இல்லையா கதிர்ணா? பாத்தவுடனே எம்பக்கத்துல வந்து ரெண்டு அறை அறையப் போறீங்கன்னு நினைச்சேன்; நீங்க என்னடான்னா எனக்காக ஃபீல் பண்ணிட்டு இருக்கீங்க!"

"நா இங்க பார்ட் டைமா டெலிவரி பாயா வொர்க் பண்றேன் கதிர்ணா; வீட்ல யாருக்கும் தெரியாது; அப்பா, சந்துவுக்கு எல்லாம் தெரிஞ்சா ரொம்ப வருத்தப்படுவாங்க. பட் பணமும் நிறைய தேவைப்படுதே..... என்ன பண்றது? அத விடுங்க! வாங்களேன், நாம பேசிட்டே ஏதாவது சாப்டலாம்! இன்னிக்கு என்னோட ட்ரீட்!" என்று சொல்லி புன்னகைத்தவனின் தலைமுடியை வாஞ்சையாக வருடிய கதிர் அவனிடம்,

"இத்தன வருஷத்துல நீ ரொம்ப மாறிட்டடா சேகர்; ஒம்பேச்சுல எனக்கு எவ்வளவு வித்தியாசம் தெரியுது தெரியுமா? நீ இவ்ளவு மாறிட்ட; ஆனா உங்கக்கா அந்த சூனியபொம்ம தான் ஒரு மில்லிகிராம் கூட மாறாம அப்டியே இருக்கா! உங்கிட்ட நிறைய பேசணும் சேகர்; நீ ட்ரெஸ்ஸ சேன்ஜ் பண்ணிட்டு உள்ள வா; நான் முதல்ல போறேன் சரியா?" என்று ஜெபாவிடம் சொல்லி விட்டு உள்ளே சென்றான் கதிர்.

ஐந்து வருடங்களுக்கு முன்பாக தன்னுடைய வாழ்வில் எல்லாம் இருக்கிறது; ஆனால் எனக்கு மகிழ்ச்சி மட்டும் எட்டாக்கனியாக இருக்கிறதே என்ற வருத்தத்தில் அந்த பாருக்கு வந்திருந்த கதிருக்கும், தனது தந்தை இறந்திருந்த சோகத்தில் ஊர் பிடிக்காமல், வீடு பிடிக்காமல் கால் போன போக்கில் இந்த ஊருக்கு வந்து சேர்ந்திருந்த சஞ்சீவிற்கும் ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் ஆகியது.

சஞ்சீவ் அங்கு நொந்து போய் ஒரு மூலையில் அமர்ந்திருந்த தன்னை அடிக்கடி உற்றுநோக்கி கீழே குனிந்த கதிருடைய நடவடிக்கைகளை பார்த்து ஏதோ வித்தியாசமாக இருக்கிறதென்று சந்தேகப்பட்டான். நேராக சென்று அவன் முன்பாக நின்றவன் அவனிடம்,

"டேய்..... அப்போலேர்ந்து நானும் உன்னை நோட் பண்ணிட்டே இருக்கேன்; நீ எதுக்குடா அப்பப்ப என்னை மொறச்சு மொறச்சு பார்த்துட்டு இருக்க?" என்று கேட்க சஞ்சீவிடம் ஒரு நோட்பேடில் தான் வரைந்திருந்த அவனுடைய ஓவியத்தை நீட்டிய கதிர்,

"நான் ஒண்ணும் உங்க பர்ஸ அடிக்கிறதுக்கெல்லாம் உங்கள பாக்கல. உங்க கண்ணுல இருந்த சோகம் என்னை ரொம்ப அழுத்தமா பாதிச்சது மிஸ்டர்! உங்கள வரையுறதுக்காக தான் பாத்தேன்; வேற எதுக்கும் இல்ல!" என்று சொல்லி விட்டு புன்னகைத்த போது இருவரும் கைகுலுக்கி அறிமுகம் ஆகி இருந்தனர்.

அன்றிலிருந்து குதூகலமாக இருந்தாலும், சோகமாக இருந்தாலும் கதிரும், சஞ்சீவும் வருவது இந்த ஹோட்டலுக்கு தான்; இது தான் அவர்கள் இணைந்து குடிக்கும் கடைசி முறையாக இருக்கும்; இதற்கு பிறகு சஞ்சீவ் கிளம்பி விடுவான் என்ற நினைப்பே கதிருக்கு வருத்தமாக இருந்தது.

இந்த சந்திப்பில் சந்தனாவின் தம்பியும் திடீரென ஒட்டிக் கொண்டு சஞ்சீவின் உயிரை வாங்கிக் கொண்டிருந்தான்.

"டேய் லூசுப்பயலே..... இந்த பாட்டில்ல இருக்குற பீர் ரொம்ப கசக்குதுடா!" என்று அவனிடம் சொல்லி முகத்தை அஷ்டகோணலாக்கிக் கொண்டிருந்த சேகரின் கைகளில் இருந்த பீர் பாட்டிலை புடுங்கி டேபிளில் வைத்து விட்டு,

"பீருன்னா கசக்கத் தான் செய்யும் ட்யூட்! மொகத்த அப்டி சுழிச்சுக்கிட்டு கஷ்டப்பட்டு ஒண்ணும் நீ இதக் குடிக்க வேணாம்; வீட்டுக்குப் போயிட்டு அம்மா கையால ஒரு கப் பால் வாங்கி குடிச்சுட்டுப் போய் தூங்கு; அது இத மாதிரி கசக்காது!" என்று சொன்னவன் கதிரைப் பார்த்து முறைத்தான்.

"எல்லாம் உங்களால தான் பாஸ்! அஞ்சு வருஷத்துக்கு முன்னால நம்ம எந்த இடத்துல அறிமுகம் ஆனாமோ, அதே இடத்துல நம்ம பேர்வெலுக்காக வந்துருக்கோம்!"

"இதுல சம்பந்தமேயில்லாம நீங்க ஏன் மிஸ். சந்தனாவோட பிரதரையும் கூட்டிட்டு வந்தீங்க? இவன் இன்னும் சரக்கடிக்குறதுல கத்துக்குட்டி தான் போல.... பீர் கசக்குதுன்னு எங்கிட்ட கம்ப்ளைண்ட் பண்ணிட்டு இருக்கான்; அதுக்கு நான் என்ன பண்ண முடியும்? உங்க வீட்ல போயி இந்த பார்ட்டியெல்லாம் வச்சுத் தொலைவோம்னு சொன்னா அங்க என் கலெக்ஷன்ஸ் எல்லாம் இருக்கு; அது என் உயிருக்கு சமம்னு பெனாத்துவீங்க.....!"

"நான் இங்க வந்து, ஒரு அட்மாஸ்பியர் க்ரியேட் பண்றதுக்காக ரெண்டு பாட்டில் பீர வாங்கி வச்சுருந்தேன். அதுல ஒண்ண இந்த லூசுப்பய ஆர்வக்கோளாறுல ஒடச்சி பாதிய முடிச்சுட்டான். பீர் தான் குடிச்சிருக்கான்னாலும், இவன அப்டியே விட்டுட்டும் போக முடியாது போல...... இப்ப இந்தப் பையன யாரு கொண்டு போயி அவனோட வீட்ல உடுறது?" என்று கதிரிடம் கேட்டு அவனை திட்டிய சஞ்சீவ் இன்னும் அவனை எப்படி திட்டலாம் என்கிற மாதிரியாக கதிரை உக்கிரமாக பார்த்துக் கொண்டிருந்தான்.

"விடுறா சஞ்சீவ்! பாவம் சின்னப் பையன்; இன்னிக்கு ஒருநாளைக்கு தானே குடிக்கிறான்... பரவாயில்ல; நான் இவன அவனோட வீட்ல கொண்டு போய் விட்டுடுறேன். நீ டென்ஷன் ஆகாத!" என்று சஞ்சீவிடம் சொன்ன கதிர் ஜெபாவைப் பார்த்து,

"சேகர்... இந்த ஒரு பாட்டில் பீர் மட்டும் தான்! அதுவும் இன்னிக்கு மட்டுந்தான் இந்த ட்ரீட்...... புரிஞ்சதா?" என்று கேட்க அவன் கதிரிடம் சமர்த்தாக தலையாட்டி விட்டு சஞ்சீவை பார்த்து அவனிடம்,

"டேய் பிஏ..... கதிர்ணாவே எங்கிட்ட
பொலைட்டா பேசுறாரு; நீ என்னடா ரொம்ப சவுண்ட் உடுற..... உங்காசுலயா நா இந்த பீரக் குடிச்சேன்? இல்லல்ல? அப்புறம் உனக்கு எங்கடா வலிக்குது?
வாய மூடிட்டு சும்மா இருடா சொங்கிமங்கி; சந்து சொன்ன மாதிரி நீ ட்டூத்பேஸ்ட் சாஷேவே தான்டா; இத்தூணுன்டா இருந்துட்டு என்னா பேச்சு பேசுற?
நான் ஒரு க்ரீன் கலர் சேண்ட்! என்னைய பேமிலியில இருக்குற எல்லாரும் சேந்து அடிச்சா நா எங்க தான்டா போயி அழுறது? அதுனால தான் இங்க வந்து அழுவுறேன்......!"

"எங்கம்மா ஒத்த லேடி எங்க மூணு பேரையும் எவ்ளோ டார்ச்சர் பண்றாங்க தெரியுமா ஒனக்கு? எங்கம்மாவ கம்பர்டபிளா வச்சுக்க நான், எங்கப்பா, சந்து மூணு பேரும் என்ன ஓட்டம் ஓட வேண்டியதா இருக்கு தெரியுமா ஒனக்கு? எப்பவாச்சு இப்டி ஒரு பியர் கூட இல்லன்னா, அப்புறம் லைஃப்ல என்ஜாய்மெண்ட்னு என்ன இருக்கு சொல்லு பாப்பம்!" என்று அவன் சத்தத்தை சற்றே கூட்டிப் பேசிய ஜெபாவை கொலைவெறியுடன் பார்த்துக் கொண்டிருந்த சஞ்சீவ் கதிரிடம்,

"நான் என்ன ட்டூத்பேஸ்ட் சாஷேவா? என்னைய தேவையில்லாம பேச வைக்காதீங்க பாஸ்...... என்ன போறவன், வர்றவன்லாம் என்னைய திட்டிட்டு இருக்கான்? நீங்களும் பாத்துட்டு பேசாம உக்காந்துருக்கீங்க? நான் இன்னும் உங்களோட பிஏ தான்! உங்களுக்கு நான் முக்கியமா? இல்ல இங்க ஒக்காந்து அனத்திக்கிட்டு கெடக்கானே இந்த மாப் போடுற குச்சி முக்கியமா?" என்று கேட்க கதிர் இரண்டு லூசுகளில் எந்த லூசை சமாளிப்பது என்று தெரியாமல் தலையைச் சொறிந்து கொண்டிருந்தான்.

"டேய் யாரப் பாத்துடா மாப் போடுற குச்சின்னு சொன்ன? நான்லாம் ஹைதராபாத்லயோ, இல்ல சென்னைலயோ இருந்துருந்தா இப்ப ஒரு பெரிய்ய்ய்ய்ய ஹீரோ ஆகியிருப்பேன் தெரியுமா?" என்று தன்னிடம் காலரை தூக்கி விட்டுக் கொண்டு சொன்ன ஜெபாவை கேவலமாக பார்த்த சஞ்சீவ்,

"ஹீரோ ஆகுற மூஞ்சியப் பாரு! முழுசா சப்பிப் போட்ட மாங்கொட்ட மாதிரி சப்பையா இருக்க! இந்த லச்சணத்துல நீ ஹீரோவா? போடாங்கு.......!" என்று ஜெபாவை பார்த்து நாக்கை துருத்திய சஞ்சீவின் வயிற்றுப்புறம் இருந்த சட்டையை தன்னுடைய கையில் கொத்தாக பற்றியிருந்தான் ஜெபசேகரன்.

"டேய்... டேய்! எருமமாடுகளா; ரெண்டு குரங்குகள மடியில கட்டிக்கிட்டு ஒருத்தன் யாரு தொல்லையுமில்லாம நிம்மதியா வாழப்பழம் சாப்டணும்னு நினைச்ச மாதிரி உங்க ரெண்டு பேர கூட்டிக்கிட்டு நான் இங்க வந்து உக்காந்தேன் பாருங்க; என்னைய முதல்ல அடிச்சுக்கணும். ரெண்டு பேரும் சண்ட போட்டுக்காம அமைதியா இருந்து தொலைங்களேன்டா; ப்ளீஸ்!" என்று அவர்கள் இருவரிடமும் கதிர் வேண்டிக் கேட்டுக் கொண்ட பிறகே இருவரும் ஓரளவிற்கு அமைதியடைந்தனர்.

"என்னடா சஞ்சீவ்...... நம்மள பத்தி பேசலாம்னு வந்தா இப்டி ஒருத்தருக்கு ஒருத்தர் சண்ட போட்டுட்டு இருக்கீங்க? நீ இத்தன வருஷமா எங்கூடவே இருந்து
இப்ப உங்க அம்மா கிட்ட போகப்போற; இங்கருந்து நீ கிளம்பிப் போயிட்டா இனிமே நீ யாரோ நான் யாரோங்குற மாதிரி ஆகிடும்?"

"எனக்கு யாருடா பெயிண்ட் பண்றதுக்கு ப்ரெஷ், கேன்வாஸ் எல்லாம் வாங்கித் தருவாங்க? நீ போயிட்டா எனக்கு வரையறதுக்கு மூடே வராதேடா? ஃபாரின்ல இருந்து நம்ம ப்ரெண்ட்ஸ் பேசுனா, அவங்க கிட்ட உன்னை மாதிரி எனக்குப் பேசக்கூட தெரியாதேடா? போச்சு. என் அசிஸ்டெண்ட் என்னைய விட்டுப் போகப்போறான்; எங்கிட்ட இருந்து நான் ரொம்ப லவ் பண்ற என் ஆர்ட் மொத்தமா ஒண்ணுமில்லாமப் போகப்போகுது! அம்......ம்மா!" என்று கத்திய படி சேகரின் தோளில் சாய்ந்தவனை தேற்றும் வகை தெரியாமல் சேகர் அரைபாகம் காலி செய்திருந்த பியர் பாட்டிலை எடுத்து பீரை ஒரு மிடறு விழுங்கினான் சஞ்சீவ்.

"டேய்; உனக்குத் தான் இந்தா இங்க தனியா ஒருபாட்டில் இருக்குல்ல? அப்புறம் ஏன் என்னோடத எடுத்து வாயில வச்ச? கதிர்ணா உன்னை மிஸ் பண்ணப்போறேன்னு சொல்லி தான் இப்டி ஃபீல் பண்றாங்க! அவங்களுக்கு ஏதாவது சமாதானம் சொல்லாம பாட்டில வாயில வச்சுட்டு இருக்க? நீயெல்லாம் என்னதான் பிஏவோ?" என்று கேட்ட ஜெபாவின் தோள்களில் இருந்து தன்னுடைய தலையை தூக்கிய கதிர் அவனிடம்,

"ஷ்ஷ்! சும்மாயிருடா சேகர்; சஞ்சீவ பத்தி எதுவும் தப்பா பேசாத! அவன்ட்ட இருக்குற சொத்துக்கெல்லாம் இப்டி அவன் எங்கிட்ட வந்து பிஏ வேல பாக்குறதுக்கு அவசியமே கிடையாது தெரியுமா? கொஞ்ச வருஷத்துக்கு ஊர மறக்கணும்; காலேஜ்ல இருந்து துள்ளலா வெளிய வந்த ரெண்டு மாசத்துல அவன விட்டுட்டுப் போன அவன் அப்பாவ மறக்கணும்னு நினைச்சு தான் இத்தன நாளா இவன் எனக்கு ரொம்ப உதவியா, இங்கயே இருந்தான்.......!"

"அவனோட தாத்தாவும், அம்மாவும் தான் இத்தன வருஷமா இவனோட முடிவுல தலையிடாம கொஞ்சம் தள்ளி இருந்தாங்க. இப்ப இவன் மறுபடியும் அவனோட இடத்துல போயி உக்கார்றதுக்கான நேரமும், அவசியமும் வந்துடுச்சு. ஸோ நான் இவனுக்கு பை சொல்லிட்டு என்னோட வேலையப் பாக்க வேண்டியதுதான்!" என்று ஜெபாவிடம் சொல்லிக் கொண்டிருந்த கதிர் சற்று உணர்ச்சிவயப்பட்டு கண்கலங்கினான்.

"பாஸ்..... உங்களுக்கு நான் நிறைய விஷயங்கள்ல ரொம்ப தேங்க் பண்ணனும்! உங்க விஷயத்துல நான் என்ன முடிவெடுத்தாலும் அது சரியாத் தான் இருக்கும்னு நம்புனதுக்கு; என்ன தான் நீங்க உங்க ஆர்ட்டால நிறைய சம்பாதிச்சாலும், ஒரு நிலையான சம்பாத்தியம் வர்ற மாதிரி நிறைய பிஸினஸ்ல இன்வெஸ்ட் பண்ணுவோம்னு நான் சொன்ன ஐடியாவே ஏத்துக்கிட்டதுக்கு இப்டி நிறைய சொல்லிட்டே போலாம். உங்களோட கம்பெனி எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது; நிறைய கத்துக் குடுத்தது; ஐ'ம் கோயிங் ட்டூ மிஸ் யூ!" என்று சொன்ன சஞ்சீவ் கதிரை சட்டென்று கட்டிக் கொண்டான்.

"என்னைய ரொம்ப மிஸ்ஸெல்லாம் பண்ணாத சஞ்சீவ்.... ஊருக்குப் போயி அம்மாவுக்கு உதவியா இரு; பிஸினஸ்ல உன்னோட பொறுப்ப நல்லபடியா ஏத்துக்கிட்டு செய்; சீக்கிரத்துல வீட்ல சொல்லி ஒரு பொண்ண பாக்கச் சொல்லு! எனக்கு சென்னைக்கு போற மாதிரி தான் பொள்ளாச்சிக்கு வர்றதும்.... நினைச்சா கெளம்பி வந்துடுவேன்!" என்று அவன் தோளைத் தட்டி சமாதானம் செய்து புன்னகைத்த கதிரிடம்,

"கண்டிப்பா அப்பப்ப வரணும் நீங்க!
உங்க ஃபைனல் டச் ரேஷ் சிக்னேச்சர எப்பவும் போல இனிமேயும் எங்கிட்ட டிஸ்கஸ் பண்ணிட்டு தான் போடணும் சரியா?" என்று கேட்ட சஞ்சீவை புரியாத பார்வை பார்த்துக் கொண்டிருந்த ஜெபா,

"டேய்.... சும்மா ரெண்டு பேரும் பார்ல வந்து ஒக்காந்துக்கிட்டு மாத்தி மாத்தி கட்டிப்பிடிச்சிக்கிட்டு டயலாக் பேசிட்டு இருக்கீங்க; வா கட்டிப்பிடி கெளம்புன்னு ஒரே கட்டிப்புடியிலயே கிளம்ப வேண்டியதுதானடா?"

"சரி...... உனக்கு தங்கச்சிப் பாப்பா யாராவது இருக்காளாடா? இருந்தா அவள எனக்கு கல்யாணம் பண்ணிக்குடேன். பட் ஒரே ஒரு பிரச்சன. நான் க்ராஸ் ப்ரீட் அது மட்டும் பரவாயில்லயா? மத்தபடி...... நான் ரொம்ப நல்ல பையன்டா தெரியுமா?" என்று சொன்ன சேகரின் வாயை உடைத்துவிடும் நோக்கில் தன் கை முஷ்டியை இறுக்கினான் சஞ்சீவ்.

"சஞ்சீவ்! சஞ்சீவ்........ ப்ளீஸ்டா! எனக்காக இன்னிக்கு ஒருநாள் மட்டும் இவன் பேசுறத பொறுத்துக்கோ! இனிமே உங்க ரெண்டு பேரோட சேந்து பாருக்கு வர்ற தப்ப நான் என் வாழ்நாள்ல செய்ய மாட்டேன். ப்ளீஸ்.... நீ வீட்டுக்கு கிளம்பு; நாம காலையில பேசலாம்!" என்று சொன்ன கதிரிடம்,

"இவன பத்திரமா வீட்டுக்கு கூட்டிட்டுப் போங்க!" என்று பதில் கூறி விட்டு அங்கிருந்து சென்றான் சஞ்சீவ்.

"டேய் சேகர்.... ஏன்டா நீங்க ரெண்டு பேரும் உங்க பேர மாத்தி வச்சுக்கிட்டீங்க? ஆலென் ஸார் தான் இந்த மாதிரி பேரு வச்சுக்குங்கன்னு சொன்னாரா?" என்று அவனிடம் கேட்டான் கதிர்.

"ம்ஹூம்! அம்மா தான் கதிர்ணா இந்த மாதிரி எங்க பேர மாத்திக்கச் சொன்னாங்க. காசு இல்லாத எங்கள அவங்க ரிலேட்டிவ்ஸ் யாரும் பக்கத்துல கூட சேத்துக்க மாட்டாங்க. அதான் டாட் சைடு ஆளுங்களாவது எங்களுக்கு ஸப்போர்ட் பண்றாங்களான்னு பாப்போம்னு நினைச்சு அம்மா இப்டி எங்க பேர மாத்துனாங்க.... வீட்டுக்குப் போலாமான்னா? என்னால இந்த சிக்கன இதுக்கு மேல சாப்ட முடியல. ஸாரிணா!" என்று கதிரிடம் மன்னிப்பு கேட்டவன், அவனது காரிலேயே ஏறிக் கொண்டு தன்னுடைய வீட்டிற்குப் புறப்பட்டான்.

ஜெபாவை அவனுடைய வீட்டின் காம்பவுண்ட் வரை கொண்டு வந்து விட்ட கதிர்,

"சேகர்..... இதுக்கு மேல பத்திரமா போய்டுவல்லடா? நான் இப்ப உள்ள வரல; அமைதியா போயி படுத்துடு என்ன?" என்று கேட்க ஜெபா அவனிடம்,

"பயப்படாதீங்க கதிர்ணா; அதெல்லாம் நான் கேட்ல இருந்து வீட்டுக்குள்ள வரைக்கும் பத்திரமா போயிடுவேன்! பை பை! நெக்ஸ்ட் மீட் பண்ணலாம்; என்ன?" என்று சொல்லி கதிருக்கு கையாட்டிக் கொண்டே வீட்டுக்குள் சென்றான்.

யார் கண்களில் இந்த காட்சி பட்டு விடக்கூடாது என்று கதிர் பயந்தானோ, அவளது கண்களில் இருந்து எதுவும் தப்பவில்லை.

ஜெபா குடித்து விட்டு வந்ததும், கதிர் அவனை வாசல் வரை ட்ராப் செய்து விட்டு போனதும் பார்த்து ஆத்திரமடைந்தவள் காலையில் முதல்வேலையாக அவன் வீட்டுக்குச் சென்று நின்றாள்.

"டேய் ரேஷன்..... நீ வேணும்னுட்டு தான நேத்து நைட் ஜெபாவ பாருக்கு கூட்டிட்டுப் போயி குடிக்க வச்ச? அவன் எந்த கோலத்துல வீட்டுக்கு வந்தான் தெரியுமா? நீ அவன வீட்டு வாசல்ல வந்து ட்ராப் பண்ணுனத யாரும் பாக்கலன்னு நெனச்சியா? நான் பாத்துட்டேன்டா ரேஷன்ஷாப்! நல்லவேள அம்மா மேரேஜ்க்கு போயிருக்குறதால அவங்களுக்கு நேத்து நைட் அந்த பிசாசு வாந்தியெடுத்துட்டு, தலையப் பிடிச்சுட்டு கெடந்ததெல்லாம் தெரியாது!" 

"இங்க பாருடா...... உன் ரிவென்ஜ் என்னோட தான்னா அத என்னோட நிறுத்திக்க! அநாவசியமா ஜெபா கூட எல்லாம் க்ளோஸ் ஆகி அவன ஏதாவது செய்யணும்னு நினைச்ச; நான் சும்மாயிருக்க மாட்டேன் பாத்துக்க!" என்று அவனிடம் கத்திக் கொண்டிருந்தவள் பேச்சை கழுத்தில் போட்டிருந்த டர்க்கி டவலை இருகைகளாலும் பிடித்தபடி நின்று கொண்டு கேட்டுக் கொண்டிருந்தான் கதிர்.

காலை வேளையிலேயே ஜீன்ஸ், டாப்ஸ் போட்ட பத்ரகாளி இங்கு வந்து விட்டாள். இவள் என்று பார்த்ததும் தான் கதிர் கதவையே திறந்தான்! சஞ்சீவின் முன் கூட இப்டி ஸ்லீவ்லெஸ் பனியன், ட்ராக்ஸோடு நிற்க விருப்பப்பட மாட்டான்.

மணி இன்னும் ஏழு கூட ஆகவில்லை. அவன் எழுந்து தன் காலை வேலைகளை முடித்து சிறிது நேரம் வொர்க் அவுட் செய்து விட்டு குளிப்பதற்காக துண்டை எடுத்த நேரத்தில் இவள் நேற்றிரவு பார்த்த விஷயத்தை வைத்து அவனுடன் சண்டை போடுவதற்கு அவன் வீட்டிற்குள் நுழைந்து விட்டாள் சந்தனா.

காரசாரமாக பொரிந்ததும் இல்லாமல் ஏதோ அவன் தான் அவளது தம்பியின் வாயைத் திறந்து ஊற்றி விட்டவன் போல் எல்லாப் பழியையும் தூக்கி அவள் தன் மீது போட்டது தான் கதிருக்கு சிரிப்பாக வந்தது.

இதில் என் அம்மா இங்கு இருந்திருந்தால் என் தம்பியின் நிலையைப் பார்த்து வருந்தியிருப்பாள் என்ற ரீதியில் அவள் பேசியது தான் அவனது சிரிப்புக்கான முக்கிய காரணமாக இருந்தது.

தன்னுடைய துண்டை தன் கழுத்தில் இருந்து எடுத்தவன், அவளது கழுத்தில் அதைப் போட்டு, அதன் நுனியை தன் கைகளால் இறுக்கினான்.

"உங்க மாமன் பையன் கல்யாணத்துக்கு கிளம்புன
உங்கம்மா ஒருவழியா சந்தோஷமா கிளம்புனாங்களா? கல்யாணம் எந்த ஊர்லம்மா? நீ ஏன் போகல? ஒரு லட்சத்துக்கு அப்டி என்ன கிப்ட் வாங்கிட்டுப் போனாங்க? சரி அத விடு.....! அதெல்லாம் நமக்கு தேவையில்லாத விஷயம்!"

"அந்தக் கல்யாணத்துக்கு நீ போயி ஒருவேள அவங்க உங்கள சரியா கவனிச்சுருக்கல்லன்னா உனக்கு பொத்துக்கிட்டு கோபம் வந்துருக்கும்; அதுனால நல்லவேளயா நீ போகலன்னு நினைச்சுக்கோ!" என்று அவளிடம் சொல்லி விட்டு சிரித்தவனிடம்,

"நான் உங்கிட்ட என்ன கேட்டுட்டு இருக்கேன்? நீ எங்கிட்ட என்ன சொல்லிட்டு இருக்க? நிறைய கேள்வி கேக்காத. உனக்கு பதில் சொல்றதெல்லாம் எனக்கு இன்னும் பழகவேயில்ல; பிடிக்கவும் இல்ல! கழுத்து வலிக்குது! என்னை விடு முதல்ல.....!" என்று சற்று முகத்தை சுளித்தபடி அவனிடமிருந்து விலக நினைத்தவளை மேலும் தன்னுடன் ஒட்டி நிறுத்தினான் கதிரேசன்.

"உங்கிட்ட இனிமே ஒரு ஜென்டில்மேனா நடந்துக்குற எண்ணமெல்லாம் எனக்கு சுத்தமா இல்லன்னு ஏற்கனவே நான் உங்கிட்ட சொன்னேனா இல்லையா சந்தானலஷ்மி? அதுக்கப்புறமும் நீ தனியா என் வீட்டுக்கு இப்டி காலங்காத்தால என்னை தேடி வந்தா என்ன அர்த்தம்?" என்று கேட்டு அவள் கூரான மூக்கின் நுனியை தன் ஆள்காட்டி விரலால் வருடியவனின் பிடியிலிருந்து விடுபட முடியாமல் தலையை சிலுப்பிக் கொண்டு,

"நான் அன்னிக்கு நைட்டே உன்கிட்ட பேசுறதுக்கு இங்க வரத்தான செஞ்சேன்? ரெண்டு பேரு சண்ட போட்டுக்குறதுக்கு எந்த நேரத்துல வந்தா என்ன? காலங்காத்தால யார் கூடயும் சண்ட போட மாட்டேன்னு கண்டிஷன் ஏதாவது வச்சிருக்கியா நீ?" என்று கேட்டவளிடம் இல்லையென தலையசைத்தவன் சிரிப்பை அடக்கிக் கொண்டு நின்றான்.

"பேசுடா.... எதுக்கு ஜெபாவ பாருக்கு கூட்டிட்டுப் போன?" என்று கேட்டு அவன் டீஷர்ட்டை கசக்கிப் பற்றி உலுக்கியவளிடம்,

"நான் பேசிடுவேன் சந்தானலஷ்மி! ஆனா உனக்கு இன்னுங்கொஞ்சம் தான் கோபம் வரும் பரவாயில்லயா?" என்று கேட்டவனிடம் அடங்காத எரிச்சலுடன் பளாரென கன்னத்தில் அறைந்தாள் சந்தனா.

"ஏன்டீ..... ரெண்டு பேரும் பேசிட்டு தான இருக்கோம்? கொஞ்சங்கூட பொறுமையே இல்லையா உனக்கு? என்னடீ பொண்ணு நீ? எங்கம்மா  எங்க மூணு பேரையும் ரொம்ப டார்ச்சர் பண்றாங்க..... எங்கம்மாவ சந்தோஷமா வச்சுக்க அவன், உங்கப்பா, நீ மூணு பேரும் நிறைய ஓட்டம் ஓட வேண்டியதா இருக்குன்னு சொல்லிப் புலம்புனான்!"

"உந்தம்பி எப்பவாவது ஒருதடவன்னாலும் குடிச்சு பழக்கம் இருக்குறவன் மாதிரி தான் தெரியுறான் சந்தானலஷ்மி; நான் சஞ்சீவோட அங்க போன இடத்துல இவன அங்க பாத்தேன்; மத்தபடி மடியில அமுக்கிப் புடிச்சி அவன் வாயில சொட்டு மருந்த ஊத்துற மாதிரி எல்லாம் யாரும் எதையும் அவனுக்கு ஊத்தி விடல!" என்று சற்று உஷ்ணம் கூடிய குரலில் அவளிடம் சொன்னான் கதிர்.

அவன் அவள் கழுத்தில் போட்டிருந்த துண்டை எடுத்து ஒரு ஸோஃபாவின் கைப்பிடியில் போட்டவள், அந்த ஸோஃபாவில் அமர்ந்து அதன் கைப்பிடியில் தன் தலையை சரித்து இருந்தாள்.

சிறுநகை மலரும்!

Lanjutkan Membaca

Kamu Akan Menyukai Ini

78.4K 5K 54
வாழ்க்கை எப்படி எப்போது மாறும் என்று யாருக்கும் தெரியாது. அது போகும் போக்கில் செல்ல பழகிவிட்டால் பல ஆச்சரியங்களை அது நமக்கு பரிசளிக்கிறது. அப்படிப்பட...
423K 12.1K 55
ஹாய் ப்ரண்ஸ் இது என்னோட முதல் கதை... காதல், மோதல், சந்தோஷம், சீண்டல் எல்லாம் கலந்த கதையை என்னோட குட்டி மூளைய வைச்சு எழுதி கொடுக்கபோறேன் இதுக்கு உ...
494K 16.7K 62
எதிர்பாரா திருமண பந்தத்தில் இணையும் இருவரது காதல் கதை..
3.2K 214 31
என்றுமே இணையாகாத புள்ளிகள் கட்டாயத்தால் பிணைந்துக் கொண்டால் என்னாகும்..?.அழகா அல்லது அலங்கோலாமா..? Ebook link: https://www.amazon.in/dp/B0BLP4RTRZ Fu...