சித்திரப்பாவை என் சிறுநகையோ ச...

Vaishu1986 által

44.4K 2.9K 634

மிதமிஞ்சிய பணத்திமிரில் தன் வீட்டில் வேலை பார்க்கும் பணிப்பெண்ணின் மகனை பாடாய்படுத்தி எடுக்கும் நாயகி, பின்னா... Több

❤ சிறுநகை 1
❤ சிறுநகை 2
❤ சிறுநகை 3
❤ சிறுநகை 5
❤ சிறுநகை 6
❤ சிறுநகை 7
❤ சிறுநகை 8
❤ சிறுநகை 9
❤ சிறுநகை 10
❤ சிறுநகை 11
❤ சிறுநகை 12
❤ சிறுநகை 13
❤ சிறுநகை 14
❤ சிறுநகை 15
❤ சிறுநகை 16
❤ சிறுநகை 17
❤ சிறுநகை 18
❤ சிறுநகை 19
❤ சிறுநகை 20
❤ சிறுநகை 21
❤ சிறுநகை 22
❤ சிறுநகை 23
❤ சிறுநகை 24
❤ சிறுநகை 25
❤ சிறுநகை 26
❤ சிறுநகை 27
❤ சிறுநகை 28
❤ சிறுநகை 29
❤ சிறுநகை 30
❤ சிறுநகை 31
❤ சிறுநகை 32
❤ சிறுநகை 33
❤ சிறுநகை 34
❤ சிறுநகை 35
❤ சிறுநகை 36
❤ சிறுநகை 37
❤ சிறுநகை 38
❤ சிறுநகை 39
❤ சிறுநகை 40
❤ சிறுநகை 41
❤ சிறுநகை 42
❤ சிறுநகை 43
❤ சிறுநகை 44
❤ சிறுநகை 45
❤ சிறுநகை 46
❤ சிறுநகை 47
❤ சிறுநகை 48
❤ சிறுநகை 49
❤ சிறுநகை 50
❤ சிறுநகை 51
❤ சிறுநகை 52
❤ சிறுநகை 53
❤ சிறுநகை 54
❤ சிறுநகை 55
❤ சிறுநகை 56
❤ சிறுநகை 57
❤ சிறுநகை 58
❤ சிறுநகை 59
❤ சிறுநகை 60
❤ சிறுநகை 61
❤ சிறுநகை 62
❤ சிறுநகை 63
❤ சிறுநகை 64
❤ சிறுநகை 65
❤ சிறுநகை 66
❤ சிறுநகை 67
❤ சிறுநகை 68
❤ சிறுநகை 69
❤ சிறுநகை 70
❤ சிறுநகை 71
❤ சிறுநகை 72
❤ சிறுநகை 73
❤ சிறுநகை 74
❤ சிறுநகை 75
❤ சிறுநகை 76
❤ சிறுநகை 77
❤ சிறுநகை 78
❤ சிறுநகை 79
❤ சிறுநகை 80
❤ சிறுநகை 81
❤ சிறுநகை 82
❤ சிறுநகை 83
❤ சிறுநகை 84
❤ சிறுநகை 85
❤ சிறுநகை 86
❤ சிறுநகை 87
❤ சிறுநகை 88
❤ சிறுநகை 89
❤ சிறுநகை 90
❤ சிறுநகை 91
❤ சிறுநகை 92
❤ சிறுநகை 93
❤ சிறுநகை 94
❤ சிறுநகை 95
❤ சிறுநகை 96
❤ சிறுநகை 97
❤ சிறுநகை 98
❤ சிறுநகை 99
❤ சிறுநகை 100

❤ சிறுநகை 4

958 41 4
Vaishu1986 által

"ஆலென்...... என்ன நீ? அம்மா என்ன செஞ்சாலும் அத ஒருவார்த்த கூட ஏன்னோ, எதுக்குன்னோ கேக்க மாட்டேங்குற! பத்தாயிரத்த குடுத்து இப்ப உம்பொண்டாட்டிய ஷாப்பிங் அனுப்பி வச்சுருக்க! பாரு அதுல ஒரு ரூபா கூட மிச்சமா திரும்பி வராது!"

"நான் என்ன பத்து லச்சமா கொண்டு போனேன்? ஆஃப்டர் ஆல் டென் தவுசண்ட் ரூப்பீஸ்...... அது ஜஸ்ட் இப்டி சொடுக்கு போடுறதுக்குள்ள செலவாகிடுச்சு ஆலென்னு உம்பொண்டாட்டி நம்ம கிட்ட வந்து சொல்லலையின்னா என்னைய என்னன்னு கேளு!"

"இந்த பத்தாயிரத்த அம்மா கையில குடுத்ததுக்கு பதிலா அத
பத்திரமா வச்சிருந்தன்னா அடுத்த மாசம் நம்ம மொபைல் பில்ஸையும், ஈபி பில்லையும் கட்டியிருக்கலாம்ல அப்பா? ஏம்ப்பா..... அம்மா ஷாப்பிங் கிளம்புனப்ப நீ ஏன் ஒருவார்த்த கூட வேண்டாம்னு சொல்லல ஆலென்?" என்று தன் தந்தையிடம் கேட்டு அவரைத் திட்டிக் கொண்டிருந்தான் ஜெபா.

தன்னுடைய மகனின் கேள்விக்கு ஆலென் பதில் சொல்ல வாயெடுத்த போது சந்தனா அவர்களுடைய உரையாடலில் குறுக்கே புகுந்து தந்தையிடம்,
"டாட்..... வெங்காயத்த கோல்டன் ப்ரவுனா வதக்க சொன்னியே? இந்த ப்ரவுன் போதுமா? இன்னும் கொஞ்சம் வதக்கணுமான்னு பாரேன்.....!" என்று கேட்டுக் கொண்டிருந்தாள்.

"இவ ஒருத்தி..... இங்க ஒருத்தன் சீரியஸா பேசிட்டு இருக்கும் போது வெங்காயத்த வந்து பாருன்னு கூப்ட்டுக்கிட்டு வெங்காயம்...... ஏன்டீ குழம்புல ஒரு கல்லு உப்பு கூடுனாலும் அத கரெக்டா கண்டுபிடிச்சு சொல்றல்ல....?"

"அப்ப இத்தன வருஷத்துல அந்த குழம்ப செய்யவும் தெரிஞ்சுருக்கணும்ல ஒனக்கு? ஆலென் பாவம்...... ஆஃபிஸ்லயும் வொர்க் பண்ணிட்டு வந்து, இங்கயும் எத்தன வேலைய பாக்குறாரு? கொஞ்சம் முன்னபின்ன இருந்தாலும் நீயே போய் குழம்ப செஞ்சு முடி போ!" என்று சொன்ன ஜெபாவிடம்,

"இருக்கட்டும் மோனே! சந்துக்கு இதெல்லாம் ரொம்ப தெரியாதுல்ல... விடு; சுமாவுக்கு குடுத்த பத்தாயிரம் நம்ம பட்ஜெட்ல இடிக்காம இருக்குறதயும், இப்ப இந்த நெத்திலி குழம்பு செமயா வர்றதையும் அப்பா ஒண்ணாவே கவனிச்சுக்குறேன்!" என்று சொல்லி விட்டு அடுப்பருகில் சென்றவரை ஆச்சரியமாக பார்த்தாள் சந்தனா.

"எப்டிப்பா எல்லா சிச்சுவேஷன்லயும் இப்டி ஸ்மைல் பண்ணிட்டே இருக்க? இது எப்டி முடியுது உன்னால? புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேருக்குள்ள யார் ரொம்ப பொறுத்துப் போறாங்களோ அவங்க தான் ஜெயிக்குறவங்கன்னு அர்த்தமா?" என்று கேட்டவளிடம்,

"அப்டி இல்லடா மோளே; யாரு கடைசி வர தன்னோட பார்டனர் கிட்ட குறையாத காதலோட இருக்காங்களோ அவங்க தான் ஜெயிக்குறாங்கன்னு அர்த்தம்டா சந்து! இன்னிக்கு காலைல உங்க அம்மாவோட அண்ணன் பையன் வெட்டிங் இன்விடேஷன் வந்துருந்தது. அத பார்த்தவுடனே இவ அப்செட்...... நான் மலையாளம் சம்சாரிக்குற க்ரிஸ்டியன்; சுமா தமிழ் பேசுற ஹிந்து.....!"

"நாங்க ரெண்டு பேரும் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டதால அவளோட கூடப்பொறந்த அண்ணன் வீட்டு பங்ஷனுக்கு கூட நமக்கு இப்டி கொரியர்ல இன்விடேஷன் வர்ற நிலைமை; நம்ம நல்லா இருந்தப்ப கூட இந்த ஒதுக்கம் அவள ரொம்ப பாதிக்கல; ஆனா இப்ப ரொம்ப வருத்தப்படுறாடா சந்து; அவ இப்டி வருத்தப்படாம இருக்குறதுக்கு நான் என்ன செய்ய முடியும்? ஷாப்பிங் வேணும்னா போயிட்டு வர்றியாம்மான்னு தான் கேக்க முடியுது..... அம்மா அவ இயல்ப மாத்திக்கலன்னாலும், நீங்க ரெண்டு பேரும் இப்ப எனக்கு ரொம்ப ஸப்போர்டிவா இருக்கீங்களே..... பணத்தோட அருமை என்னை விட இப்ப உங்களுக்கு நல்லாவே தெரியுது; நான் செஞ்சது தப்புன்னு நெஞ்ச நிமித்தி எங்கிட்ட கேள்வி கேக்குற நிமிர்வோட இருக்கீங்களே..... அதுவே எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா? இது போதும் மோளே!" என்று சந்தனாவிடம் புன்னகைத்த படி சொன்னார் ஆலென்.

"ஆமா..... இங்க மாசம் பொறந்தா நம்ம மூணு பேரோட சேலரியில வீட்டுச்செலவ ஒரு தடவைக்கு பத்து தடவ எழுதிப் பாத்து அத எப்டி மிச்சம் புடிச்சு எங்க அம்மாட்ட ஒரு போர்ஷன தூக்கி குடுத்து அவங்கள சந்தோஷமா வச்சுக்குறதுன்னு யோசிக்குறதுலயே நமக்கு மண்ட காஞ்சு போய்டுது; இதுல புதுசா ரிலிஜியஸ் க்ளாஷஸ் வேறயா.....

"எவன் வந்து நமக்கு மரியாத குடுத்து இப்ப என்ன ஆகப்போவுது? அவன் வரல, இவன் வரலன்னு நெனச்சு ஃபீல் பண்றதுக்கு பதிலா இந்த மாம் நம்மள கொஞ்சம் கேர் எடுத்துப் பாத்துக்கிட்டா எவ்ளோ நல்லாயிருக்கும்?"

"சந்து..... உனக்கு நான் ஒரு ஃப்ரீ அட்வைஸ் சொல்றேன் கேளு.... அதுவும் மீன் குழம்பு வைக்க ஹெல்ப் பண்ணுனங்குறதுக்காக தான் சொல்றேன்டீ!"

"ஆலென் மாதிரி நல்லவனா, கடைசி வரைக்கும் உன்னை யார்கிட்டயும் விட்டுக் குடுத்துடாதவனா பாத்து அவனுக்கு நீ ஓகே சொல்லிடு; நானும் அதே மாதிரி ஒரு பொண்ண பார்த்து கரெக்ட் பண்ணிக்குறேன். ஆலென் மாதிரி நம்ம ரெண்டு பேருக்கும் கூட லவ் மேரேஜ் தான்; மத்தபடி நம்ம மேரேஜ் நடக்க வாய்ப்பே இல்ல!" என்று சொன்ன ஜெபாவிடம் எரிச்சல் குரலில்,

"நீ கொஞ்ச நேரம் சும்மாயிருடா!" என்று சொன்ன சந்தனா தன் தந்தையிடம்,

"ஆலென்..... நான் ரேஷன்ட்ட பேசிட்டு அவனோட ஷாப் எதுலயாவது போய் வேலை பாக்கலாம்னு நினைக்கிறேன்; நீ என்ன சொல்ற டாடி?" என்று கேட்டாள்.

"அடிப்பாவி......! இப்பத்தான் சொல்லி முடிச்சேன். அதுக்குள்ள ப்ளானோடயே வந்துட்டியே? எப்டியோ எங்கண்ணையே நான் உங்க கிட்ட ஒப்படைக்கிறேன். அதுல ஆனந்த கண்ணீரத் தான் பாக்கணும்னு ரேஷன்ட்ட நான் டயலாக் பேசுறதுக்கு ஏற்பாடு பண்ணிடு சந்து!" என்று சொன்ன தன்னுடைய தம்பியின் மண்டையையும், சமையல் மேடையில் கிடந்த
ஒரு காப்பர் வாட்டர் பாட்டிலையும் ஒரேநேரத்தில் மாறி மாறி பார்த்தாள் சந்தனா.

"ஏய்.....ஏய், ஏய்! நோ நோ..... தம்பி பாவம்; எம் மண்ட தாங்காது!" என்று பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டவனிடம்,

"மரியாதயா வெளில போ! இனிமே நீ மீன்குழம்பு சாப்புடுற நேரந்தான் வாயத் தொறக்கணும் பாத்துக்க!" என்று சொல்லி தன்னுடைய தம்பியை அங்கிருந்து விரட்டினாள் சந்தனா.

"ஜெபா அப்டி பேசினது சரியில்லன்னாலும் அதுதான்டா சந்து நிஜம்! காதல் கல்யாணம்னாலே அதுல பிள்ளைங்களுக்கு ஆயிரம் பிரச்சனை வரும்; அதுலயும் என் கல்யாணத்தால உங்க ரெண்டு பேரோட வாழ்க்கைய ஆரம்பிக்குறப்போ என்னென்ன பிரச்சனை வரப்போகுதோ தெரியல......!"

"நம்ம வீட்ல ரெண்டு கல்யாணம் பண்றத பத்தி யோசிக்காம உங்கம்மா அவளோட அண்ணன் பையன் கல்யாணத்துக்கு போக முடியலன்னு நினைச்சு அழறா. நீ ஏன்டா திடீர்னு கதிர்ட்ட போய் வேல பாக்கலாம்னு யோசிக்குற? அவன் உங்கிட்ட அப்டி ஏதாவது கேட்டானா?" என்று கேட்டவரிடம் மறுப்பாக தலையசைத்த சந்தனா,

"தப்பெல்லாம் சரி பண்ணிக்கலாம்னு தோணுது டாட்; இத்தன வருஷம் ஆகியும் ரேஷனுக்கு நான் குடுத்த வலிய அவன் கொஞ்சங்கூட மறக்கல! அப்போ என்னால அவன் எவ்ளோ வருத்தப்பட்டுருப்பான்.....? அத நம்மளால முடிஞ்ச அளவுக்காவது சரி செய்யணும்ல?" என்று கேட்ட மகளின் தலையை வருடிய ஆலென்,

"வலிய மறக்கலன்னா எப்டி மோளே அவன் உன்னைய அவனோட பக்கத்துல வர விடுவான்? எனக்கென்னவோ நாம அவங்கிட்ட இருந்து ஒதுங்கி நம்ம வேலைய பாக்குறது தான் சரின்னு தோணுது. நானும் ஜெபா நெனச்ச மாதிரி நீ கதிர்ட்ட போறேன்னவுடனே அவங்கிட்ட உங்க ஃப்யூச்சர பத்தி பேசுறதுக்கு தான் போறியோன்னு நெனச்சேன். நீ என்னடான்னா அவங்கிட்ட வேலை கேட்டு வந்துருக்கேன்னு சொல்ற.....!"

"நீ இதுக்கப்புறமும் உன் முடிவுலயே உறுதியா இருந்தா,
கதிர்ட்ட பேசி அவன் ஒத்துக்கிட்டா வேணும்னா அங்க போய்ட்டு வா! உங்கூட நானும் வந்து ஒருதடவ அவன்ட்ட  பேசுறேன். சரியா?" என்று தன் மகளிடம் கேட்டு விட்டு அன்றைய மதிய சாப்பாட்டிற்கு தேவையான அனைத்து பதார்த்தங்களையும் டைனிங் டேபிளில் எடுத்து வைத்தார் ஆலென்.

"இந்த பெயிண்ட்டிங் எனக்குப் பிடிக்கல; மோர்ஓவர் இதோட தீம் நல்லாவேயில்ல பாஸ்!" என்று தான் வரைய ஆரம்பித்த நாளில் இருந்து முதன்முறையாக ஒருவனிடம், அதுவும் தன்னுடைய முதல் ரசிகனாக இருக்கும் சஞ்சீவிடமிருந்து ஒரு நெகட்டிவ் கமெண்ட்டை சற்றுமுன் வாங்கியிருந்தான் கதிரேசன்.

அன்று ஞாயிறு என்றாலும் நான் வேலைக்கு வருவேன் என்று ஆர்வமாக கதிரின் பெயிண்டிங்கை பார்க்க வந்திருந்த சஞ்சீவ் அந்த ஓவியம் தனக்குப் பிடிக்காததால் அதில் வேறு எந்த கருத்தும் சொல்லாமல் அமைதியாக கதிரின் முன்பாக அமர்ந்திருந்தான்.

நான்கைந்து நாட்களாக இருந்த கதிரின் குதூகல மனநிலை சஞ்சீவின் பேச்சால் சற்றே மட்டுப்பட்டாலும் முழுவதுமாக மறைந்து விடவில்லை.

"உனக்கு ஏன் இந்த பெயிண்டிங்க் பிடிக்கல சஞ்சீவ்? இதோட தீம்ல என்ன தப்பா இருக்குன்ற?" என்று கேட்ட கதிரிடம்,

"என்ன தப்பா இருக்கா? கருமம்...... என்ன கான்செப்ட் இது? ஒரு மினி excavator இப்பதான் கொஞ்சமா முளை விடுற திராட்சை விதைய மண்ணோட கொத்தா அள்ளி வச்சுருக்குற மாதிரியில்ல வரைஞ்சு வச்சுருக்கீங்க? இந்த பெயிண்டிங் மூலமா நீங்க சொல்ல வர்றது என்ன.....?"

"பலகீனமா இருக்குற ஒருத்தர, பலமா இருக்குறவங்க டார்ச்சர் பண்ணலாம்ங்குற சாடிஸம் தான? இது சுத்த பைத்தியக்காரத்தனம். பேத்தல்! நான் இந்த பெயிண்டிங்க்ல உங்க Resh சிக்னேச்சர போட்டு முடிக்க விட மாட்டேன். இது நம்ம ஷோ பீஸா இருக்க வேண்டாம். தூக்கிப் போட்டுட்டு வேற வரைங்க!" என்று உறுதியான குரலில் சொன்னவன் கதிரின் முன்னால் டேபிளில் இருந்த அந்த ஓவியத்தைக் கையில் எடுக்க வரவும் கதிரேசன் சற்றே பயந்து போய் அவனது பெயிண்டிங்கை டேபிளில் இருந்து சஞ்சீவிற்கு முன்னால் தன் கையில் எடுத்துக் கொண்டான்.

"என்னடா..... நீ பாட்டுக்கு இந்த தீம் ஸாடிஸம், பைத்தியக்காரத்தனம், பேத்தல்னு சும்மா உளறிட்டு இருக்க? Excavator மெஷினோட வேலை என்ன? மண்ணை தோண்டுறது தான.....? அப்டி அது பாட்டுக்கு அதோட வேலையப் பார்த்துட்டு இருக்கும் போது அதான்...... மண்ணைத் தோண்டும் போது சம்பந்தமேயில்லாம ஒரு புது டிஸ்டர்பென்ஸ்..... அதான் இந்த திராட்சைக்கொடி அதுவா மண்ணுல முளைச்சு வந்துருந்தா மண்ணைத் தூக்குறப்ப, மண்ணுல இருக்குற செடியும் பிய்ஞ்சு மெஷினோட வரத்தான செய்யும்?"

"இங்க தப்பு அந்த மெஷின் மேலயா? இல்ல அந்த சின்ன செடி மேலயா? என்னோட இந்தக் குழப்பம் தான் இந்த பெயிண்டிங்கோட கான்செப்டே தவிர நீ சொன்ன ஸாடிஸம்,
காட்டுமிராண்டித்தனம், பைத்தியக்காரத்தனம் இதெல்லாம் இல்ல! இத நீ கேலரில ஷோ பீஸா வைக்கலன்னா விடு! நான் வீட்ல என்னோட பெர்சனல் கலெக்ஷன்ல பத்திரமா வச்சுக்குறேன். அத விட்டுட்டு தூக்கிப் போடல்லாம் சொல்லாத...... என்னைப் பொறுத்தவரையில இது ரொம்ப அழகா இருக்குற பெயிண்டிங்!" என்று சொன்ன கதிர் தன் முகத்தில் சிறு சிரிப்புடன் அந்த படைப்பை மறுபடியும் தன் கையில் வைத்துக் கொண்டு அதை உற்று நோக்கிக் கொண்டிருந்தான்.

"பாஸ்...... கேக்குறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க! உங்க லைஃப்ல புதுசா ஏதாவது குழப்பம் வந்துருக்கா? நான் உங்களுக்கு அசிஸ்டென்ட்டா சேர்ந்த நாள்ல இருந்து உங்கள எந்த ஒரு பொண்ணும் தேடி வந்தது கிடையாது. எனக்குத் தெரிஞ்சு உங்க அம்மாவ தவிர உங்க வாழ்க்கையில வேற எந்தப் பொண்ணும் கிடையாது. பட் பத்து நாளைக்கு முன்னால சந்தனாங்குற ஒரு பொண்ணு உங்கள தேடி தேடி வந்தா! அவளை அவாய்ட் பண்ணிட்டு நீங்க ஓட்டமா ஓடுனீங்க; இப்ப நாலு நாளா அவளக் காணும்; ஆனா நீங்க வழக்கத்த விட ரொம்ப ப்ரைட்டா இருக்கீங்க; ஸோ என்னோட மூளைக்கு எட்டுன வரையில
சம்பந்தமேயில்லாம வந்து சேர்ந்த புது டிஸ்டர்பென்ஸ்..... அதான் அந்த திராட்சைக்கொடி சந்தனா தான்னு நீங்க மீன் பண்றீங்களா பாஸ்?" என்று கேட்ட சஞ்சீவை வைத்த கண் வாங்காமல் பார்த்தான் கதிரேசன்.

"கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம இப்டி லுக் உட்டா என்ன அர்த்தம் பாஸ்? உங்க மனசுல இருக்குறத கிட்டத்தட்ட கெஸ் பண்ணிட்டேங்குற எரிச்சலா இல்ல பயமா? நீங்க எப்பவுமே உங்க மனசுல இருக்குறத எங்கிட்ட மறைச்சு வச்சதேயில்ல; பட் இந்த சந்தனா விஷயத்த இதுவரைக்கும் ஒரு அவுட்லைனா கூட எங்கிட்ட சொன்னதில்ல. அப்டி என்ன ரகசியம் அது? எனக்கு தெரிஞ்சு ஆகணும். என்னோட இந்த
ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்களேன்!" என்று கேட்ட சஞ்சீவிடம் எதுவும் பேசாமல் தலையைக் கோதிக் கொண்டு தன்னுடைய இருக்கையிலிருந்து எழுந்தான் கதிர்.

"பாஸ்..... அதுக்குள்ள வீட்டுக்கு கெளம்பப் போறீங்களா? இப்ப மணி அஞ்சு தான் ஆகுது! வீட்ல போயி தனியா உக்காந்துருந்தா உங்களுக்கு போர் அடிக்கும்!" என்று சொன்ன சஞ்சீவிடம்,

"வீட்ல சொல்லிட்டு ரெண்டு நாளுக்கு தேவையான ட்ரெஸ் பேக் பண்ணிட்டு வா! நாம சென்னைக்கு கிளம்புறோம்; எனக்கு அம்மாவப் பாக்கணும் போல இருக்கு; நாம
இங்கருந்து ட்ராவல் பண்ணி
சென்னைக்குப் போறதுக்குள்ள அந்த திராட்சைக்கொடி கதை முழுசையும் உனக்கு சொல்லிடுறேன்!" என்று மெதுவான குரலில் உரைத்தான் கதிர்.

"வாவ்..... எழுநூறு கிலோ மீட்டர் போற வரைக்கும் கேக்குற கதையா? அப்ப ரொம்ப பெரிய கதையா இருக்கும் போலிருக்கே.....? எதுக்கு லேட் பண்ணிட்டு? இப்பவே கெளம்புங்க போலாம்!" என்றவனிடம் உச்சுக்கொட்டிய கதிர்,

"டேய்... ஆர்வக்கோளாறே! உன் வீட்ல ஒரு வார்த்த சொல்லிட்டாவது கெளம்புடா!" என்று சொல்ல சஞ்சீவ் தன்னுடைய அலைபேசியை எடுத்து வீட்டிற்கு கால் செய்து இரண்டு நிமிடங்களில் பேசி விட்டு கதிரின் அலுவலக அறையில் அவன் திடீர் ட்ரிப்புகளுக்காக உபயோகிக்கும்
ட்ராலி சூட்கேஸில் இரண்டு மூன்று செட் உடைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தான்.

"சஞ்சீவ்.... எனக்கு அங்க வீட்ல இருக்கிற ட்ரெஸ் கூட போதும்டா! உனக்கு என்ன செய்வ?" என்று கேட்ட கதிரிடம் எரிச்சலடைந்த குரலில்,

"ஒங்க கதைய கேக்க சென்னை வரைக்கும் வர்றேங்குறதுக்காக என்னை அப்டியே பனியன் ஜட்டியோடயா உட்ருவீங்க? ஒழுங்கா எனக்கு ரெண்டு செட் ட்ரெஸ் வாங்கிக் குடுங்க சொல்லிட்டேன்! ப்ராண்டட் ஷர்ட்ஸ் தான் வேணும்; அதுவும் ஒரு நாளைக்கு ஒரு செட்ங்குற கணக்குல? வாங்கித் தருவீங்க தான?" என்று கதிரிடம் சொல்லி விட்டு அவனுக்கு முன்னால் அந்த அறையிலிருந்து வெளியேறி சென்று கொண்டிருந்தான் சஞ்சீவ்.

"உனக்கு செய்யாம வேற யாருக்குடா செய்யப்போறேன்? இருக்குறதயெல்லாம் விட்டுட்டு இங்க வந்து வாங்கித் தருவீங்களான்னு வேற கேட்டுக்கிட்டு இருக்கான் லூசுப்பய!" என்று பேசியவன் திடீரென தனக்குள்ளாகவே

"ஏய் லஷ்மி..... நம்ம கதைய நா இதுவரைக்கும் யார்ட்டயுமே சொன்னதில்ல! ஆனா உன்னை மறுபடி பாத்ததுல இருந்து, உன்னை அன்னிக்கு அழ வச்சதுல இருந்து என்னால இத உள்ளுக்குள்ளயே வச்சுட்டு சுமக்க முடியலடீ.....!" 

"சஞ்சீவ் ரொம்ப வருஷமா எங்கூடவே இருக்குறவன் தான்; அவங்கிட்ட நான் உன்னைப் பத்தி எல்லாத்தையும் சொல்லட்டுமா? எல்லாத்தையும் சொன்னா அவன் உன்னைப்பத்தி தப்பா நினைப்பானே? நான் இப்ப என்ன பண்றது லஷ்மி?" என்று கண்கள் மூடி டேபிளில் கைகள் ஊன்றி நின்று மனதிற்குள்ளாக அவளுடன் பேசுவது போன்ற யோசனையில் நின்று கொண்டிருந்தான் கதிர்.

"உன்னைப் பார்க்குறப்போ எனக்கு அளவுக்கதிகமா கோபம் வருது; பாக்கலைன்னா அப்போ உம்மேல அளவுக்கதிகமா காதல் வருது.....! கோபத்துலயும், காதலையும் ரெண்டு தட்டுல போட்டு எது கம்மியா இருக்குன்னு உன்னோட ரேஷன்ஷாப் நிறுத்துப் பார்க்க தான் செய்யணுமா லஷ்மி?" என்று மனதிற்குள்ளாக அவளிடம் கொஞ்சிக் கொண்டிருந்தவனை சஞ்சீவின் அழைப்பு கூப்பிட்டது.

யாரிடமாவது சொன்னால் தன்னுடைய மனதிற்குள்ளாக குமைந்து கொண்டிருந்த கோபம் கொஞ்சம் கட்டுக்குள் வராதா என்ற சந்தர்ப்பத்திற்கு எதிர்பார்த்த கதிர்,  சந்தானலஷ்மி என்ற பெண்ணைப் பற்றி முழுமையாக தன்னுடைய நண்பன் சஞ்சீவிடம் சொல்லி முடித்திருந்தான்.

தன் பாஸின் கதையைக் கேட்டு முடித்த சஞ்சீவ் சிறிதுநேரம் அமைதியாக யோசனையிலேயே இருந்தான். நாலு மணி நேர கார்ப் பயணத்தில் இரவு உணவுக்காக போகும் வழியில் ஒரு ஹோட்டலில் காரை நிறுத்தியிருந்தனர்.

உணவுகளை ஆர்டர் செய்து விட்டு, அதற்காக காத்திருந்த நேரத்தில் கதிர் சஞ்சீவிடம்,

"பதினேழு வயசுல நீ எங்க? நான் எங்க? எவ்ளோ பெரிய உயரத்துக்கு வந்தாலும், நீ என்னை எட்டிப்பிடிக்க முடியாதுடா; எப்பவுமே நீ எனக்கு கீழ தான்னு பேசுனவ மறுபடியும் இப்ப எதுக்குடா என்னைத் தேடி வந்தா? அவ கூட இருந்ததுல இருந்து அவள விட்டு கிளம்புன கடைசி நாள் வரைக்கும் அவ எனக்கு குடுத்தது அவமானத்த மட்டுந்தான்; ஒருவேள அவ அப்ப இருந்த ஸ்டேட்டஸ்லயே இப்பயும் இருந்துருந்தான்னு வையி; ஒரே ஊர்ல இருந்துருந்தாலும் கதிரேசன்னு ஒருத்தன் அவளோட நியாபகத்துலயே வந்துருக்க மாட்டான்! இத்தன வருஷம் கழிச்சு அவள பாத்ததும் எம்மானங்கெட்ட மனசு அவ காலடியில தான் விழப்போவுது; ஆனா அவ குடுத்த அவமானத்த எல்லாம் மூள விடாப்பிடியா எனக்கு நியாபகப்படுத்திக்கிட்டே இருக்கு. இப்டி அவ செஞ்சதுக்கெல்லாம் அவளுக்கு திருப்பிக் குடுக்கணும்னு நினைச்சுப் போராடிட்டே இருக்குறத விட்ருந்தா நான் வாழ்க்கையில இன்னுங்கொஞ்சம் முன்னேறி இருக்கலாம். ஆனா எங்க போனாலும் அவளத்தான சுத்துது மனசு? இதுக்கு என்னடா பண்றது?" என்று கேட்டான்.

"வேறென்ன பண்றது? மிஸ் சந்தனாவுக்கு கல்யாணம் பண்ணி வைக்க சொல்லி நீங்களே ஒரு பல்க் அமௌண்ட்ட அவங்க வீட்ல குடுத்துட வேண்டியதுதான..... எப்படியும் உங்க ஆர்ட் கேலரிக்கான இன்வெஸ்ட்மெண்ட்ட அவங்களோட அப்பா தான உங்களுக்கு குடுத்துருக்காரு......? இப்ப நீங்க செய்ற இந்த உதவி அதுக்கு நன்றிக்கடனா இருக்கட்டுமே?" என்று கதிரிடம் சொல்லி அவனது கேள்விக்குப் பதில் தந்தான் சஞ்சீவ்.

"நாலுமன்னேரமா நா கத்துனத எல்லாம் நீ தெளிவா காதுல வாங்குனியா..... இல்ல பாதியில தூங்கிட்டியாடா? அந்த திமிரு புடிச்சவளுக்கு நான் எதுக்குடா கல்யாணம் பண்ணி வக்கணும்? அந்த வீட்ல அஞ்சு வருஷமா நானும், அம்மாவும் இடிசோறு சாப்ட்ருக்கோம். எத்தன நாளு சோத்துல கைய வைக்குற நேரத்துல அந்த ஹீரோயினம்மா எங்களுக்கு ஏதாவது வேலய சொல்லி கூப்ட்டுருக்கு தெரியுமா? இந்த தப்பை சரிகட்டுறதுக்காக தான் ஆலென் ஸார் அந்த பணத்த எங்க கையில குடுத்தாங்க!" என்று சஞ்சீவிடம் சொல்லிக் கொண்டே சாப்பிட்டான் கதிர்.

"என்ன சொல்லுங்க பாஸ்..... எனக்கென்னமோ நீங்க மிஸ். சந்தனா கிட்ட பதினேழு வயசுல உங்க லவ்வ சொன்னது தப்புன்னு தான் தோணுது. பார்ன் வித் கோல்டன் ஸ்பூன் ஸ்டேட்டஸ்ல இருக்குற ஒரு பொண்ணுட்ட, அதுவும் ஒரு டீன்ஏஜ் கேர்ள்ட்ட நீங்க  முதல்ல ப்ரொப்போஸ் பண்ணுனதே ஒரு பெரிய தப்பு!"

"அவ நோங்குற பதிலத் தவிர வேற என்ன சொல்லுவான்னு எதிர்பாத்தீங்க நீங்க? எனக்காக கஷ்டப்பட்டு வேலையெல்லாம் பாக்குற நீ; ஸோ ஐ லவ் யூ ன்னு சொல்லுவான்னு நெனச்சீங்களோ?"

"உங்க லவ்வ அவ கிட்ட சொல்ற வரைக்கும் அந்த பெண்ணோட ஆட்டிடியூட் உங்களுக்குப் பிரச்சனையா இல்ல; உங்க லவ்வ ரிஜெக்ட் பண்ணினவுடனே அந்த பொண்ணு பேசுனதெல்லாம் உங்களுக்கு தப்பா தெரிஞ்சுருக்கு!" 

"மிஸ் சந்தனா...... அவங்க முதல்ல இருந்து கடைசி வரைக்கும் ஒரே மாதிரி தான் இருந்துருக்காங்க. இப்ப கூட அவங்க யோசிச்சது ப்ராக்டிக்கல் தான்; நீங்க ஒண்ணுமில்லாம இருக்குறப்போ நாம கல்யாணம் பண்ணிக்கலாமான்னு அவங்க கிட்ட கேட்டீங்க தான? அப்போ அவங்களும் அதே மாதிரி இப்ப உங்க கிட்ட அத கேட்டதுல என்ன தப்பு? இந்த விஷயத்துல டோட்டல் தப்பும் உங்க மேல தான்......!" 

"இப்ப அவங்க உங்க கிட்ட ஃபீல் பண்ணி ஸாரி சொன்னாங்கன்னா நீங்க பழசயெல்லாம் மறந்துட வேண்டியதுதான்! ஆனா அவங்கள மேரேஜ் பண்ணிக்குறத பத்தி எல்லாம் யோசிச்சுக் கூட பார்த்துடாதீங்க! ஏன்னா உங்களால அவங்கள அவ்ளோ ஈஸியா மன்னிக்கவே முடியாது;

"உங்க கேரக்டர் அப்டி..... ஸோ பெட்டர் இனிமேலும் அவங்கள நீங்க மீட் பண்ணவே பண்ணாதீங்க!" என்று சொன்ன சஞ்சீவை முறைத்துப் பார்த்து விட்டு தன் கையிலிருந்த டிஷ்யூவை கசக்கி தட்டில் போட்டவன்,

"உன்னோட இந்த ஐடியாவ நான் ஏத்துக்குறதா இல்லடா தம்பி; அவளுக்கு காசு குடுத்து அவ வாழ்க்கையில வெளக்கு ஏத்தி வைக்க நான் ஒண்ணும் ஆம்பள மதர்தெரசா இல்ல...... எனக்கு அவ கூட விளையாடுற இந்த விளையாட்டு ரொம்ப பிடிச்சிருக்கு!"

"நான் அவகிட்ட கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டது; அவ எங்கிட்ட அதயே திருப்பிக் கேட்டது..... அதையெல்லாம் கூட உடு போவுது; என்னைய அவமானப்படுத்துறதுக்கான உரிமைய அவளுக்கு யார் குடுத்தா? அது ரொம்ப பெரிய தப்பு தான? அந்த தப்புக்கு தான் இப்ப நான் அவகிட்ட விளையாடிக்கிட்டு இருக்கேன்......!"

"இப்ப நான் கேக்குற ஒரு கேள்விக்கு கூட அவளால பதிலே சொல்ல முடியல தெரியுமா? தலைய கவுந்துட்டு பாவமா முகமெல்லாம் வெளுத்துப் போயி ஒக்காந்துருக்கா...... ஸோ நீ சொன்ன மாதிரி நான் ஸாடிஸ்ட் மாதிரி, பைத்தியக்காரன் மாதிரி யோசிச்சாலும் அவள மீட் பண்ணாம இருக்கப் போறதில்ல......!"

"நீ இல்லாம ஏற்கனவே ஒருதடவ அவள மீட் பண்ணுனேன்! இனிமேலும் பண்ணுவேன்டா தம்பி!" என்று சஞ்சீவிடம் சொல்லி விட்டு விருட்டென அங்கிருந்து எழுந்து சென்றான் கதிர்.

சிறுநகை மலரும்!

 

Olvasás folytatása

You'll Also Like

56.3K 3.2K 53
உச்சி வெயில் மண்டையை பிளந்து கொண்டிருந்தது. லட்சணமான முகக் கலையுடன் இருந்த ஒருவன், குளிரூட்டப்பட்ட தன் காரில் அமர்ந்திருந்தான், அந்த வெயில் தன்னை ஒன்...
80.5K 3.8K 81
தனது நண்பனின் ஒரு முடிவால் நாயகியின் வாழ்க்கை பாதையுடன் சென்று இணையும் நாயகன், அவளுக்கு கன்னலாய் இனிக்கிறானா, அவளது வாழ்வில் மின்னலாய் ஊடுருவுகிறானா...
50.2K 2.9K 54
அவன் அந்த கல்லூரியின் *டான்* என்று பெயர் பெற்றவன். அந்த கல்லூரி பெண்களின் கனவு நாயகன். அவனது கடைக்கண் பார்வைக்காக பெண்கள் தவம் கிடந்தார்கள். அதே கல்...
33.3K 2.6K 64
இது என் ஐந்தாவது கதை.... பிழை புரியா பேதை அவள்... மனம் புரியா பாவை அவள்... விட்டால் போதுமென ஓடும் முயல் அவள்... காத்திருக்க தெரியாதவள்... பலரை ஆவலோடு...