உயிரின் தாகம் காதல் தானே...

بواسطة SarafSaf

73.8K 1.3K 216

இது ஒரு ஆன்ட்டி ஹீரோ வகை கதை... المزيد

உயிரின் தாகம் காதல் தானே..
உயிரின் தாகம் காதல் தானே..💔01
உயிரின் தாகம் காதல் தானே...💔02
உயிரின் தாகம் காதல் தானே...💔03
உயிரின் தாகம் காதல் தானே...💔04
உயிரின் தாகம் காதல் தானே..💔05
உயிரின் தாகம் காதல் தானே..💔06
உயிரின் தாகம் காதல் தானே..💔07
உயிரின் தாகம் காதல் தானே...💔 08
உயிரின் தாகம் காதல் தானே..💔09
உயிரின் தாகம் காதல் தானே..💔10
உயிரின் தாகம் காதல் தானே..💔11
உயிரின் தாகம் காதல் தானே..💔12
உயிரின் தாகம் காதல் தானே..💔14
உயிரின் தாகம் காதல் தானே..💔15
உயிரின் தாகம் காதல் தானே..💔16
உயிரின் தாகம் காதல் தானே..💔17
உயிரின் தாகம் காதல் தானே..💔18
உயிரின் தாகம் காதல் தானே 💔 19
உயிரின் தாகம் காதல் தானே..💔20
உயிரின் தாகம் காதல் தானே 💔 21
உயிரின் தாகம் காதல் தானே 💔 22
உயிரின் தாகம் காதல் தானே 💔 23
உயிரின் தாகம் காதல் தானே 💔 24
உயிரின் தாகம் காதல் தானே 💔 25
உயிரின் தாகம் காதல் தானே. 💔26
உயிரின் தாகம் காதல் தானே..💔27
உயிரின் தாகம் காதல் தானே 💔 28
உயிரின் தாகம் காதல் தானே 💔 29
உயிரின் தாகம் காதல் தானே..💔30
உயிரின் தாகம் காதல் தானே 💔 31
உயிரின் தாகம் காதல் தானே 💔 32
உயிரின் தாகம் காதல் தானே..💔33
உயிரின் தாகம் காதல் தானே..💔34.
உயிரின் தாகம் காதல் தானே..💔35 ‌(இறுதி அத்தியாயம்)

உயிரின் தாகம் காதல் தானே. 💔13

1.6K 37 2
بواسطة SarafSaf


அடுத்து சாத்விக் செய்தது தனது நண்பன் ஒருவனிடம் ஷியாம் சுந்தரை பற்றி விசாரிக்க சொன்னது தான்.
அவன் நினைத்ததற்கு மாறாக ஷியாம் சுந்தர் கடினமானவனாக இருந்தான். தனக்கு யாராவது தொழிலில் துரோகம் செய்து விட்டால் அவன் கொடுக்கும் தண்டனைகளை கேட்டு அறிந்தவனின் உடம்பு பயத்தில் உதறல் எடுத்தது.

அப்படி கடுமையாக இருப்பவனது வீட்டுக்குள்ளேயே சென்று இருக்கும் தனது தங்கையை நினைக்கையில் பயமாக இருந்தது அண்ணன் அவனுக்கு.
'அவன் என்ன செய்து இருப்பானோ தனது தங்கையை'
என்ற எண்ணமே மனதில் ஓடிக் கொண்டே இருந்தது ..

எப்படியாவது அவனிடமிருந்து மதியழகியை மீட்க வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டவன் ஷியாம் சுந்தரை கவனிக்க ஆரம்பிக்க வேண்டும் என நினைத்தான். ஆனால் அவன் தான் இப்போது சென்னையில் இல்லையே. அதை அறியாத சாத்விக் அவனது ஆஃபீஸ் மற்றும் வீடு உள்ள பக்கம் என்று அடிக்கடி சென்று பார்க்க ஆரம்பித்தான் தங்கையை பற்றிய ஏதாவது ஒரு தகவல் கிடைக்குமா என்று.

*******************

வெறும் இரண்டு நாள் மாத்திரம் தான் மதியழகியால் நிம்மதியாக இருக்க முடிந்தது அந்த வீட்டில். மூன்றாம் நாள் காலையிலேயே வந்து நின்றான் ஷியாம் சுந்தர். அவன் காலை நேரமே வருவான் என்பதை அறிந்திராத மதியழகி பயத்துடன் அவனது முன்னாள் வந்து நிற்க அவனோ அவளை கண்டு கொள்ளாமல் அறைக்குள் சென்று விட்டான்..

அதுவும் ஒரு வகையில் நிம்மதி தான் என தோன்ற தனது வேலைகளை செய்ய தொடங்கி விட்டாள் அவள் .
அன்று ஏனோ அவளுடன் எதுவும் பேசாமல் அவள் சமைத்து வைத்திருந்த உணவை உண்டு விட்டு அலுவலகம் கிளம்பி சென்று விட்டான்.

தீபக்கிடம் இருந்து சாத்விக் அவனது வீட்டையும் ஆபீசையும் நோட்டமிடும் செய்தி அவன் காதுகளுக்கு வந்து சேர்ந்து இருந்தது ஏற்கனவே.
ஆனால் அவனுக்கு வருணிக்காவும் சாத்விக்கும்  காதலிக்கும் விடயம் தெரியாது. வருணிகா படிக்கும் பெண் என்பதால் சாத்விக் வெளியில் அவளை  சந்தித்து பேசுவது கிடையாது .
ஆகவே ஷியாம் சுந்தருக்கு அந்த காதல் விடயம் தெரியாமல் போனது ..


அவன் அருகில் வந்த தீபக் தயங்கி தயங்கி நிற்க
"என்ன சொல்லணுமோ சொல்லு தீபக் .."
என்றான்  ஷியாம் சுந்தர் .
அதில் தைரியம் வரப்பெற்றவனாக "சார் அது வந்து... அந்த மதியழகி பொண்ணே விட்டுடலாமே.. அவளையும் பாக்கப் பாவமா இருக்கு ..
அதுவும் இல்லாம அவ அண்ணன் வேற மூணு நாளா இங்கேயும் அங்கேயும் அலஞ்சிக்கிட்டே இருக்காரு..." என கூறி முடித்தது தான் தாமதம்

"என்ன தீபக் எனக்கே அட்வைஸ் சொல்ற அளவுக்கு வளர்ந்துட்டியா?" என்றான் ஷியாம் சுந்தர்  அவனை அழுத்தமாக பார்த்துக் கொண்டே .. அவனது பார்வையில் தீபக்கிற்கே  பயம் வந்து விட்டது..

அவனை பகைத்துக் கொள்ள முடியாது என்பதை அறிந்தவன் "சாரி சார்..'
என்று மன்னிப்பும் கேட்டுக் கொண்டான்..
மனதில் மதியழகியை நினைத்து வருந்தத் தான் செய்தான்..


அவனுக்கு தெரியாத பக்கமும் உண்டு அல்லவா.. அது தெரிந்தால் இதயமே வெடித்து விடும் தீபக்கிற்கு..
ஒரு பெண்ணை இந்த அளவு கஷ்டப் படுத்துவான் என்பதை அவன் எதிர்பார்த்து இருக்கவில்லை.

அன்று மாலை அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு சென்றவன் தூரத்தில் நின்ற சாத்விக்கின் பைக்கை கண்டு கொண்டான். ஆனால் எதையும் காட்டிக் கொள்ளாமல் வீட்டின் உள்ளே நுழைந்து விட்டான்... அவனை கண்டதும் நாய்கள் இரண்டும் அவனைச் சுற்றி குறைத்தபடி இருந்தன.. அதன் தலையை வருடி கொடுத்தவன் உள்ளே செல்ல நாய்களின் சத்தத்தில் வெளியே வந்த மதியழகி மீது மோதி நின்றான்.


அவனது வேகத்தில் சற்று தள்ளி விழப் போனவளை  தாங்கிப் பிடித்தவன் வேண்டும் என்றே அவளை இடையோடு சேர்த்து இறுக்கிக் கொண்டவன் அவளது காதருகே குனிந்து
" என்ன மதி ...அழகி இந்த மூணு நாளும் நான் இல்லாமல் ரொம்ப கஷ்டமாயிடுச்சு  போல.. இன்னைக்கு ராத்திரி அந்த ஏக்கத்தை தீர்த்து வச்சிடுறேன்.." என்று கூறியதும் அவனை தள்ளி விட்டு வேகமாக விலகி நின்றாள் மதியழகி.

இப்போது அவளது கால் நன்றாக இருந்தது. காய்ச்சலும் குணமாகி விட்டது.
எனவே உடலில் சற்று தெம்பு கூடி இருந்தது அவளுக்கு.
அவளை  கேளியாக பார்த்தவன்
" நீ ஆசைப்பட்டாலும் இல்லனாலும் இன்னைக்கு என் ரூமுக்கு வந்தே ஆகணும் புரிஞ்சுதா ..?
என்னால திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டு இருக்க முடியாது.."
என்று கூறியவன் இரண்டு அடி எடுத்து வைத்து விட்டு மீண்டும் அவளிடம் திரும்பி வந்து

" அப்புறம் ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன் பாரு... உன்னோட ஆசை அண்ணா.. அதான் சாத்விக் உன்னை தேடி இங்கேயே வந்துட்டான்...
அவ்ளோ பாசமோ சித்தப்பா பொண்ணு மேல.."
என இரு புருவங்களையும் ஏற்றி இறக்கி அவன் கேட்க கண்களில் ஆனந்த கண்ணீர் தோன்றியது மதிக்கு..


அவள் நினைத்ததை போல அவளது அண்ணன் அவளை தேடி வந்து விட்டான்.
'ஆனால் இந்த கோட்டையையும் இவனையும் தாண்டி எப்படி வந்து தன்னைக் கூட்டி செல்வான்' என்ற எண்ணம் தோன்ற முகம் கூம்பி விட்டது அவளுக்கு ..


அவளையே பார்த்துக் கொண்டு இருந்தவன் அவளது எண்ண ஓட்டத்தை புரிந்து கொண்டவன் போல்
"நீ நினைக்கிறது சரி.. என்னை தாண்டி இங்கே வந்து உன்னை கூட்டிட்டு போக அவனால முடியாது..  சோ வீணா  கற்பனை எதுவும் பண்ணாம இருக்கிற வேலையை பாரு..."
என அவளது கன்னத்தில் தட்டி விட்டு உள்ளே சென்று விட்டான்.

சோர்ந்து போனவளாக அப்படியே தொப்பென்று அமர்ந்து விட்டாள் மதியழகி .
அண்ணனும் கனகாவும் எத்தனை நாட்களாக இப்படி அலைகிறார்களோ என்று நினைக்கையிலே  கண்களில் கண்ணீரும் வந்தது.

ஒரு ஃபோன் போட்டாவது கூறலாம் என்றால் அந்த பெரிய வீட்டில் ஒரு ஃபோனும் இருக்கவில்லை.. அன்பு செல்வனின் பேச்சைக் கேட்டு இங்கு வந்த தனது மடத்தனத்தை எண்ணி இப்போதும் கண்ணீர் வந்தது அவளுக்கு.  அவளது வாழ்க்கை மொத்தமாக அழிந்து விட்டது இப்போது..

இதற்கு மேல் என்ன இருக்கிறது அவளது வாழ்க்கையில் ..
பெருமூச்சு விட்டுக் கொண்டவள் எழுந்து சமையலறை நோக்கி சென்றாள்.
அன்றைய இரவும் அவன் சொன்னது போல் தான் நடந்தது. இரண்டு மூன்று நாள் நிம்மதியாக இருந்தவள் மீண்டும் அதே நரக வேதனையை அனுபவித்தாள்.

காலை எப்போதும் போல் அவள் தலையணைக்கு பக்கத்தில் பணம் இருந்தது..  
அவளும் எப்போதும் போல அதை எடுக்காமல் சென்று விட்டாள் ‌. சிறிது நேரத்தில் அவளை தேடி வந்த ஷியாம் சுந்தர்
"மதி.. அழகி"
என்று அழுத்தமாக அழைக்க அவளோ திடுக்கட்டு திரும்பி  அவனைப் பார்த்தாள்.. இன்று அவளை அவன் தேடி வரவும் எதுவும் விபரீதமாக நடந்து விடுமோ என பயந்து தான் போனாள் அவள்.

"ஆமா நேத்து கேட்கவே மறந்துட்டேன் ..
உன்னோட அண்ணன் எப்படி கரெக்டா இங்கே தேடி வந்தான்..
நீ ஏதாவது தகவல் சொன்னியா?"
என்று அவன் அவளை கூர்ந்து பார்த்துக் கொண்டே கேட்க பதறி விட்டாள் அவள் ..

"ஐயோ இல்லை ..நான் எதுவுமே சொல்லல.. சொல்றதுக்கு இங்கே வழியும் இல்லை.." என்று பதறியபடி கூற தனது தாடையை தடவியவன்
" நம்புற மாதிரி இல்லையே.. பேசாமல் உன்னோட அண்ணனை தூக்கிடலாம்னு இருக்கேன்.. என்று சர்வ சாதாரணமாக கூறி விட்டு வில்லத்தனமாக சிரிக்க உயிரே நின்றது போல் ஒரு உணர்வு மதிக்கு..

' தன்னை தேடி வந்ததற்காக அண்ணனின் உயிர்  அநாவசயமாக போக வேண்டுமா ?'
தனது உயிரை கொடுத்தாவது அண்ணனை காப்பாற்ற எண்ணியவள் பட்டென்று அவன் காலில் விழுந்து விட்டாள்.

"ப்ளீஸ் சார் அவரை விட்டுடுங்க.. பாவம் சார் அவர் ..எனக்கு என்ன இருக்கிற ஒரே ஒரு உறவு அவர் மட்டும் தான்.. ப்ளீஸ் ..ப்ளீஸ்.. வேணும்னா  என்..என்னோட உயிரை எடுத்துக்கோங்க.. அவரை விட்டுடுங்க.." என்று அவனது காலை பிடித்த படி கண்ணீர் விட்டு கதறினாள் அந்த பேதை பெண்.

"வாவ் சூப்பரா கெஞ்சுற..
ஆனா பாரு எனக்கு உங்க அண்ணன் போடுற ஐடியாவே இல்லை ..
சும்மா நீ என்கிட்ட இப்படி கெஞ்சுறதை பாக்கணும்னு ரொம்ப ஆசையா இருந்துச்சு..
எனக்கும் ஒரு என்டர்டைன்மென்ட் வேணும்ல.. அதான்.. இப்ப ரொம்ப திருப்தியா இருக்கு.."
என்று சோம்பல் முறித்தபடி கூறியவன்

தனது காலை நனைத்து இருந்த அவளது கண்ணீர் துளிகளை பார்த்த படியே கண்கள் பளபளக்க நின்று இருந்தான்.
அவன் 'சாத்விக்கை எதுவும் செய்யமாட்டேன் '
என்று கூறியது மனதுக்கு இதம் அளிக்க அப்படியே தொப்பென்று தரையிலேயே அமர்ந்து கொண்டாள் அவள்.

அவனோ  திருப்தியாக புன்னகைத்துக் கொண்டவன் விசில் அடித்த படியே அங்கிருந்து அகன்றான்..
'அவளுக்கு எல்லாம் யாரோ ஒரு சிறு குழந்தை அழுதாலே மனது வலிக்கும்.. இவனோ வேண்டும் என்றே ஒருவரை அழ வைத்து அதை பார்த்து ரசிக்கிறானே.. எத்தனை அரக்க குணம் படைத்தவனாக இருக்க வேண்டும் இவன் '
என மனதில் தான் நினைத்துக் கொண்டாள். அதை வெளியில் கூறி அவனிடம் அதற்கும் யார் வாங்கி கட்டிக் கொள்வது..


அன்றைய நாள் இரவு தனது தேவையை முடித்துக் கொண்டு அவன் தூங்கிய பிறகு அவன் நன்றாக உறங்கி விட்டதை உறுதி செய்து கொண்டவள் மெல்ல சத்தம் வராமல் எழுந்து தனது ஆடைகளை சரி செய்து கொண்டு மீண்டும் ஒருமுறை அவனை பார்த்தாள். ஆனால் அவன் நன்றாக உறங்கிக் கொண்டு இருப்பது அவனது சீரான மூச்சிலேயே தெரிந்தது..

மெல்ல அறை கதவை திறந்தவள்
இன்று அண்ணனுக்காக  தப்பி சென்று விட முடிவெடுத்து வெளியே வந்தாள். முன் வாசலில் தானே நாய்கள் இருக்கும் என்பதால் சத்தம் வராமல் வீட்டின் பின் கதவை திறந்து வெளியேறினாள்.

முன்பு இப்படி தப்பிச் செல்ல அவளுக்கு பயம் .
தப்பித்து விட்டாலும் எங்கே செல்வது என்று கூட தெரியாத நிலை .
ஆனால் இன்று தனக்காக இந்த இடத்துக்கு அண்ணன் வந்து இருக்கிறான் என்று அறிந்ததிலிருந்து தப்பி சென்று விட்டால் போதும்.. அனைத்தையும்  அண்ணன் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையோடு வெளியே சென்று விட்டாள்.

சிறிதேனும் சத்தம் கேட்டு விட்டால் நாய்கள் இரண்டும் வந்து விடும் என்பதை அறிந்தவள் மெல்ல நடந்து சென்று பின்பக்கம் மதில் சுவரை அடைந்தாள். ஆனால் அந்த உயரமான மதில் சுவரை எப்படி கடந்து மற்றைய பக்கம் செல்வது என்று தான் அவளுக்கு தெரியவில்லை..

உடலில் பலம் இல்லாத போதும் மனதில் உறுதியுடன் தான் இருந்தாள் இப்போது அவள்.
தனக்காக சாத்விக் வந்து இருக்கிறான் என்ற வசனமே அவளது இந்த உறுதிக்கு காரணம்.

அவளது கண்களுக்கு அங்கு இருந்த உடைந்து போன பழைய இருக்கை ஒன்று தென்பட வேகமாக அதன் அருகே சென்றவள் அதில் கைவைத்த நேரம்  'தட் ..தட்..'
என்று சத்தம் கேட்க தலை உயர்த்தி சத்தம் வந்த திசையை பார்த்தாள்.

அங்கே தனக்கே உரிய வேக நடையுடன் கம்பீரமாக அவளை நோக்கி வந்து கொண்டே இருந்தான்  ஷியாம் சுந்தர். அவனை கண்டதும்
'இப்போதே இந்த உலகம் அழிந்து விடக் கூடாதா?'
என்பது தான் அவளது மனம் நினைத்தது..

என்ன செய்வது என தெரியாமல் பயத்துடன் நடுங்கும் கைகளை இறுக்க பிடித்துக் கொண்டு நின்று இருந்தாள் அவள்.

"என்ன தப்பிச்சு போக பிளானா?
இத்தனை நாள் இல்லாம இன்னைக்கு தான் போக தோனிச்சோ.."
என்று நக்கலாக கேட்டபடி அவளை வந்தடைந்தான் ஷியாம் சுந்தர்.. அப்போதும் பேசாமல் இருந்தவள்  உடல் பயத்தில் நடுங்கியது..

"அண்ணன் வந்ததால தைரியம் வந்துடுச்சாக்கும்.."
கேள்வியை கேட்டவனே பதிலையும் சொன்னான். அது தானே உண்மையும் கூட. அப்போது தான் சுயநினைவு வந்தவளாக எப்படியாவது இன்றே  தப்பித்து சென்று விட வேண்டும் என நினைத்தவள் ஓட முற்பட இரண்டே எட்டில் அவளை பிடித்து தூக்கி தனது தோளில் போட்டுக் கொண்டு வீட்டை நோக்கி நடந்தான்..

" பிளீஸ் சார் என்னை விட்டுடுங்க.. இனிமே உங்க பக்கமே வரமாட்டேன்.."
என்று கை கூப்பிய படி கெஞ்சிக் கொண்டு இருந்தவளது கூற்றை சிறிதளவேனும் அவன் மதிக்கவில்லை .
இதற்கும் தண்டனை தருவானே என மனம் அடித்துக் கொண்டே இருந்தது மதியழகிக்கு.

"அம்மா காப்பாத்துமா.."
என சத்தமாகவே  அன்னையிடம்  வானத்தை பார்த்து கூறினாள் அவள். ஆனால் அந்த வானமோ  நிர்மலமாக இருந்தது. அவனது இதழ்கள் அவளது கூற்றில் கேலியாக வளைந்தாலும் கண்களில் கோபம் கொழுந்து விட்டு எரிந்தது .ஒரு பெண் தன்னையே ஏமாற்றி சென்ற கோபம் அது.

தொடரும்....

واصل القراءة

ستعجبك أيضاً

10.3K 339 22
ஆயிரம் அறிவுரைகள், ஆதரவு கரங்கள் நீண்டாலும் காதலாய் அவன் பார்க்கும் அந்த ஒரு பார்வைக்காக ஏங்கி தவித்தவள் கண்ணீர் கன்னத்தை தொட, அவள் கணவன் கையை கொஞ்சம...
14.4K 1.3K 36
காதல் என்ற வார்த்தையையே வெறுக்கும் நாயகன், தன் மனதிற்கு பிடித்தவளை சந்திக்கும்போது, காதலில் விழாமலா போய்விடுவான்? தனக்கு ஏற்பட்டிருந்த கசப்பான அனுபவத...
90.3K 7.6K 108
It's like a short story. There will not be any further parts. It's just a scenario based short story. Let me know your comments.