உயிரின் தாகம் காதல் தானே 💔 28

2K 37 6
                                    

   தனது அலுவலக அறையில் வேலை செய்து கொண்டு இருந்த மதியழகியின் முன்னே வந்து நின்றான் ஷியாம் சுந்தர் .
"அவன் எப்படி இங்கே..?" என்ற கேள்வி தோன்ற எதுவும் பேசாமல் அவனை பார்த்திருந்தாள்  அவள். அவனுக்கு என்று எந்தவிதமான மரியாதையும் அவள் வழங்கவில்லை ..

அது அவனுக்கு கோபத்தை வரவழைத்த போதும் இன்று அவளுடன் பேசி முடிவெடுக்க வேண்டும் என்று நினைத்தவன் அவள் அமரும் படி சொல்லாவிடினும் தானே அமர்ந்து கொண்டான்.
" என்ன மிஸ்டர் ஷியாம் சுந்தர்.. இந்த ஏழை பொண்ணை தேடி இவ்வளவு தூரம் வந்து இருக்கீங்க..?"
என்றாள் நக்கலாகவே.

அவனுக்கு அவளது பேச்சைக் கேட்டு ஆச்சரியமே.
தினம் தினம் அவனது கண்களுக்கு புதிதாக தெரிந்தாள் அவள் .
முன்பென்றால் அவள் இப்படி பேசியிருக்கவும் மாட்டாள் ..அதனை கேட்டுக் கொண்டு அவன் அமைதியாக இருக்கவும் மாட்டான்.. ஆனால் இன்று நிலைமையோ மாறி போயிருந்தது.

அவளது கேள்விக்கு இளக்காரமாக ஒரு புன்னகையை வீசிவிட்டு
"மிஸிஸ்.. ஷியாம் சுந்தரை கொஞ்சம் சந்திச்சுட்டு போகலாம்னு  வந்தேன்.. இப்போ அவங்க கூட பேசலாமா.. ஃப்ரீயா இருக்காங்களா?"
என்றான் அவனும் நக்கலாக. அதில் பல்லை கடித்தவள்
"என்ன விஷயம் ?"
என்றாள் இப்போது நேரடியாகவே..

"ம்.. அதுவா..?"
என்று இழுத்துப் பேசியவன் மீண்டும் அவளை அழுத்தமாக பார்த்துவிட்டு
"நாம ஏன் பசங்க முன்னாடி கொஞ்சம் க்ளோசா இருக்க கூடாது..?" என்று கேள்வியாகவே நிறுத்தினான்.இப்போது  அவனது கேள்வியில் கேலி புன்னகையுடன் அவனை பார்த்து இருந்தாள் அவள். அவளுடைய அந்த புன்னகை அவனை கோபப்படுத்தி இருக்க வேண்டும்.

" என்னடி நல்லா பேசுறேன்னு இப்படி நடந்துக்கிறியா?"
என்றான் சற்றே குரலை உயர்த்தி, அவனுக்கு இன்றாவது சரியான பதில் கொடுக்க எண்ணியவள் இருக்கையை விட்டு எழுந்து அவன் முன்னால் வந்து நின்றாள்.

நிமிர்ந்து அவளைப் பார்த்தான் அவன்.
" என்னை ஒரு சராசரி பொண்ணா தான் உங்களுக்கு தெரியும். ஆனால் நான் பட்ட கஷ்டங்கள் எதுவுமே உங்களுக்கு தெரியாது.. பணம் பணம்னு அலையுற குடும்பத்தில ஒரு நல்லவருக்கு பிறந்தது தான் நான் செஞ்ச முதல் தப்பு..

உயிரின் தாகம் காதல் தானே...Where stories live. Discover now