உயிரின் தாகம் காதல் தானே...

By SarafSaf

72.5K 1.3K 216

இது ஒரு ஆன்ட்டி ஹீரோ வகை கதை... More

உயிரின் தாகம் காதல் தானே..
உயிரின் தாகம் காதல் தானே...💔02
உயிரின் தாகம் காதல் தானே...💔03
உயிரின் தாகம் காதல் தானே...💔04
உயிரின் தாகம் காதல் தானே..💔05
உயிரின் தாகம் காதல் தானே..💔06
உயிரின் தாகம் காதல் தானே..💔07
உயிரின் தாகம் காதல் தானே...💔 08
உயிரின் தாகம் காதல் தானே..💔09
உயிரின் தாகம் காதல் தானே..💔10
உயிரின் தாகம் காதல் தானே..💔11
உயிரின் தாகம் காதல் தானே..💔12
உயிரின் தாகம் காதல் தானே. 💔13
உயிரின் தாகம் காதல் தானே..💔14
உயிரின் தாகம் காதல் தானே..💔15
உயிரின் தாகம் காதல் தானே..💔16
உயிரின் தாகம் காதல் தானே..💔17
உயிரின் தாகம் காதல் தானே..💔18
உயிரின் தாகம் காதல் தானே 💔 19
உயிரின் தாகம் காதல் தானே..💔20
உயிரின் தாகம் காதல் தானே 💔 21
உயிரின் தாகம் காதல் தானே 💔 22
உயிரின் தாகம் காதல் தானே 💔 23
உயிரின் தாகம் காதல் தானே 💔 24
உயிரின் தாகம் காதல் தானே 💔 25
உயிரின் தாகம் காதல் தானே. 💔26
உயிரின் தாகம் காதல் தானே..💔27
உயிரின் தாகம் காதல் தானே 💔 28
உயிரின் தாகம் காதல் தானே 💔 29
உயிரின் தாகம் காதல் தானே..💔30
உயிரின் தாகம் காதல் தானே 💔 31
உயிரின் தாகம் காதல் தானே 💔 32
உயிரின் தாகம் காதல் தானே..💔33
உயிரின் தாகம் காதல் தானே..💔34.
உயிரின் தாகம் காதல் தானே..💔35 ‌(இறுதி அத்தியாயம்)

உயிரின் தாகம் காதல் தானே..💔01

3.9K 40 3
By SarafSaf


அது பணக்காரர்கள் மட்டுமே வசிக்கும் பகுதி.. பெரிய பெரிய பங்களாக்களே அதிகம் உள்ளன அந்த தெருவில். அதில் உள்ள ஒரு வீட்டில் அழகிய காலை பொழுதில் வேலைக்காரர்கள் பம்பரமாக சுற்றிச் சுழன்று வேலை செய்து கொண்டு இருந்தனர் ..

"மதிமா.. நீங்க போய் ஒரு ஓரமா இருங்க. நான் இதையெல்லாம் பார்த்துக்கிறேன் .." என அங்கு இருந்த ஒரு வயதான பெண் கூற அதை எல்லாம் பொருட்படுத்தாமல் தனது வேலையை செய்து கொண்டு இருந்தாள் அவரால் மதிம்மா என அழைக்கப்பட்ட மதியழகி ...


அவரோ அவளது கையை பிடித்து தடுத்து
"ஏன்ம்மா இப்படி பண்றீங்க.. எனக்கு பார்க்கவே கஷ்டமா இருக்கு தெரியுமா ...இதை நாங்க பண்ண மாட்டோமா?"
என மன வருத்தத்துடன் அவளது முகம் பார்த்தபடி கேட்டார்..


அவர் தனக்காக வருந்துகிறார் என உணர்ந்து கொண்ட மதியழகி "நானும் இங்கே ஒரு வேலைக்காரி தானேம்மா... என் வேலையை நான் பார்க்கிறேன் விடுங்கம்மா..." எனக் கூறினாள்.. அவள் முகம் எப்போதும் போல அமைதியாக இருந்தது ..அதற்கு மேலும் அவரால் என்ன செய்திட முடியும் .

எனவே அவர் வேலைகளை கவனிக்கலானார்.
ஆனால் மனம் என்னவோ மதியழகிக்காக  கவலை கொண்டது... அவருக்கு இருந்த கவலை மதியழகிக்கு இல்லை போலும் ..எந்த விதமாக முகச் சுழிப்பும் இல்லாமல் வேலை செய்தாள் அவள் ..


அந்த இடத்தில் வேலைகள் அமைதியாக நடந்து கொண்டு இருக்க அந்த அமைதியை கலைக்கவென்று வந்து சேர்ந்தார் அந்த வீட்டின் எஜமானி வடிவுக்கரசி.. பெயருக்கு ஏற்றவாறு ராணி போல்  அந்த வீட்டில் வளம் வந்தார்  அவர்... வயது அறுபதுக்கு  மேல் இருக்கும்... வயது தான் ஏறியதே தவிர எந்த விதமான நற்குணங்களும் இல்லை அவரிடம்..


சமையல் அறைக்குள் நுழையும் போதே 
"அடியே மதி.." என்று குரல் கொடுத்த படியே தான் உள்ளே வந்தார். அவரது குரல் கேட்டு காய்கறி வெட்டிக்  கொண்டு இருந்தவளது கை ஒரு நொடி தனது வேலையை நிறுத்தி மீண்டும் வேலைகளை செய்தது.

மீண்டும் அவரது குரல் கேட்கவே வேறு வழி இல்லாமல் செய்து கொண்டிருந்த வேலையை விட்டு விட்டு அவர் முன்னால் போய் நின்றாள் மதியழகி..

"என்னடி தைரியம் வந்துடிச்சா... ஒரு வாட்டி கூப்பிட்டா வரமாட்டியா என்ன ?"
என்று கர்ஜனையாக வெளி வந்தது அவரது குரல்.. உள்ளுக்குள் உதடு எடுத்தாலும் வெளியே அமைதியாக நின்றிருந்தாள் பெண்ணவள்..


"நான் எழுந்தது கூட தெரியாம என்னடி பண்ணிட்டு இருந்த..போ போய் எனக்கு காபி கொண்டு வா..."

என்று மேலும் சத்தம் போட அதே அமைதியுடன் சமையல் அறைக்குள் சென்று அவருக்காக காபி போட்டு எடுத்துக் கொண்டு வந்து அவரிடம் நீட்டினாள்.. அதை வாங்கி ஒரு வாய் குடித்தவர் அப்படியே அதை தரையில்  விசிரி அடித்தார் . அவரது செயலில் அதிர்ந்து போய் அவரை பார்த்தாள் மதியழகி.



"என்னடி இது மனுஷன் குடிப்பானா இதை..?
தண்டம் தண்டம் இவ ஆத்தாக்காரி என்னத்த சொல்லிக் கொடுத்தாளோ  ஒரு காபி கூட போடத் தெரியல.."


என அவளை மட்டுமல்ல  இன்று உயிருடன் இல்லாத அவளது அன்னையையும் சேர்த்து திட்டினார் வடிவுக்கரசி.. அவர் கூறிய அளவுக்கு எல்லாம் அந்த காபி அவ்வளவு  மோசம் இல்லை ..


மதியழகி நன்றாகவே சமைப்பாள். இந்த வடிவுக்கரசிக்கு ஒரு நாளில் மதியழகியை ஒரு தடவையாவது திட்டா விட்டால் அந்த நாளே முடியாததை போல ஒரு உணர்வு.. அதனால் ஏதாவது குறை கூறுவார் அவர் ..எப்போதும் பொறுத்து போகும் மதியழகிக்கு தாயை திட்டினால் மட்டும் கண்ணீர் வந்து விடும்..

உயிருடன் இல்லாத தாயையும் அல்லவா அவர் குறை கூறுவது.. ஆனாலும் எதுவும் பேச மாட்டாள். கண்ணீருடன் கடந்து விடுவாள் பெண்ணவள்.

மீண்டும் அமைதியாக வந்து வேலை செய்யும் அவளை பார்க்கவே பாவமாக இருந்தது அந்த வீட்டில் வேலை செய்பவர்களுக்கு.. எப்படி எல்லாம் வளர்ந்த பெண் அவள். இன்று அவளது நிலையைக் கண்டு கவலை கொள்ள மட்டுமே முடிந்தது அவர்களால்.. இந்த வடிவுக்கரசியுடன்  அன்றைய திட்டுக்கள் முடிந்தால் பரவாயில்லை...


காலை உணவை தயாரித்து முடித்தவர்கள் உணவு மேசையில் ஒவ்வொன்றாக அடுக்கி வைத்தனர் ..அப்போது தான் வீட்டின் உறுப்பினர்கள் ஒவ்வொருவராக வெளியே வந்து உணவு மேசையில் அமர்ந்தனர்.. அங்கே மதியழகி இல்லாததை கண்ட ஜெயராணி


"அவ எங்க போனா.. தினமும் அவதான் சாப்பாடு பரிமாறணும்.. வர சொல்லு அவளை.."

என்று  திட்ட யாரை சொல்கிறார் என அனைவருக்கும் புரிந்து போனது... சமையலறையில் இருந்த மதியழகிக்கும் அது கேட்டு இருக்கும் போல். யாரும் சொல்லாமல் அவளே வெளியே வந்து உணவு பதார்த்தங்களை பரிமாற ஆரம்பித்தாள்.

அதை  கண்டு திருப்தியான புன்னகை உதட்டில் தோன்றியது ஜெயராணிக்கு ..
அதுமட்டுமா அதைத் தா... இதைத் தா... என கூறிக் கூறி வேலை வாங்கினாள் ஜெயராமனின் மகள் மயூரி... அதீத மேக்கப் உடன் தான் எப்போதும் வலம் வருவாள் அவள்...


பேத்தி ராணி போல் தோரணையாக அமர்ந்து கொண்டு வேலை வாங்குவதை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் வடிவுக்கரசி ...ஆனால் அதை எல்லாம் கண்டும் காணாதது போல் தனது உணவிலேயே கவனம் பதித்து இருந்தார் வடிவுக்கரசியின் மூத்த புதல்வன் அன்பு செல்வன்...



அவரோ வீட்டில் நடக்கும் பஞ்சாயத்தில் என்றுமே தலையிடுவது இல்லை ...அம்மா மனைவி இருவரும் ஏதாவது செய்து கொள்ளட்டும் என அவர் பாட்டுக்கு அவரது வேலையில் கவனமாக இருப்பார்.

அத்தையும் மருமகளும் எதில் அடித்துக் கொண்டாலும் மதி விஷயத்தில் மட்டும் அப்படி ஒரு ஒற்றுமை.. அவளை கஷ்டப்படுத்தி பார்ப்பதில் இருவருக்குமே அதீத  இன்பம்.. அதைப் போல தான் மயூரியும்.. பாட்டியும் தாயும் செய்வதை போலவே தானும் தன் பங்குக்கு மதியை துன்புறுத்துவாள்.

தனது வேலைகள் அனைத்தையும் அவள் தலையில் கட்டி விடுவாள். மதி தன்னைவிட அழகாக இருப்பதால் எந்த நல்ல ஆடைகளையும் அணிய விடுவதும் இல்லை.. மொத்தத்தில் அந்த வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் தீயவர்களே..

அதில் அன்புச்செல்வன் - ஜெயராணி தம்பதியின் மகன் அதாவது மயூரியின் அண்ணன் சாத்விக் மட்டுமே  விதிவிலக்கு.. அதனால் தான் அவன் இவர்களுடன் ஒட்டாமல் தனியாக வாழ்ந்து வருகிறான்.

காலை உணவை முடித்து விட்டு வடிவுக்கரசி தனது அறைக்குள் சென்று விட மயூரி காலேஜ் என்று சென்று விட்டாள்... அன்பு செல்வமும் , ஜெயராணியும் ஆபீஸ் என்று சென்ற  பிறகே வீடு அமைதியானது. மதி இப்போது தான் தனது காலேஜ் படிப்பை முடித்து இருந்தாள். அதனால் அங்கு உள்ள வேலைகள் அனைத்தும் அவளது தலையில் கட்டப்பட்டன..


வேலைகள் செய்வதற்கு அவள் என்றுமே கவலைப்பட்டதும் இல்லை... சோம்பல் பட்டதுமில்லை.. அப்படித் தான் அவளது அன்னை வசந்தி அவளை வளர்த்திருந்தார்.. அங்கு இருந்த அனைத்து வேலைகளையும் முடித்தவள் வேலை செய்பவர்களுடனே அமர்ந்து தனது காலை உணவை முடித்தாள்.


அதன் பிறகு சற்று ஓய்வு எடுக்க விரும்பியவள் வெளியே தோட்டத்தின் பக்கம் சென்று அங்கு அன்று என்ன பூக்கள் புதிதாக பூத்து இருக்கின்றன என பார்க்க ஆரம்பித்து விட்டாள். அவளுக்கு பூக்கள் என்றால் கொள்ளை பிரியம் ..தாய் தந்தையுடன் இருந்த இனிமையான நினைவுகள் அவள் கண்முன்னே தோன்றி மறைந்தன..


அவள் ஆசைப் பட்டாள் என்பதற்காகவே அவளது தந்தை விதவிதமான ரோஜாக்கள், மல்லிகை, சாமந்தி என பல வகையான பூக்களை கொண்டு அந்த தோட்டத்தை வடிவமைத்து இருந்தார். அதனை பராமரிக்க வேண்டி ஒரு ஆளையும் நியமித்து இருந்தார் அவளது தந்தை அன்பரசன் ...

அவரை நினைக்கையில் கண்களில் இருந்து அவளது அனுமதி இல்லாமலே கண்ணீர் வெளி வந்தது.

அவளும் இதே வீட்டில் பிறந்தவள் தான்.. இந்த வீட்டின் வாரிசு தான்.. ஆனால் இன்றைய அவளது நிலை வேலைக்காரி என்பதே. அவள் வடிவுக்கரிசியின் இரண்டாம் புதல்வன் அன்பரசனின் மகள்.. அன்பரசன் வசந்தியை காதல் திருமணம் செய்து கொண்டார்...


அண்ணனின் திருமணம் முடிந்த அடுத்த வருடமே சாத்விக் பிறக்க அவனை தூக்கி வைத்துக் கொண்டே சுற்றுவார் அன்பரசன்.. அதனால் சாத்விக்கிற்க்கு அவருடன் அதிக நெருக்கம்  ஏற்பட்டது... எப்போதும் சித்தப்பா சித்தப்பா என்று சுற்றிக் கொண்டு இருப்பான் அவன் ...



ஜெயராணிக்கு மகனை விட பணத்தின் மீது தான் அதிக நாட்டம். எனவே கணவனுடன் சேர்ந்து அலுவலகம் செல்ல ஆரம்பித்து விட்டாள் .
அதனால் சாத்விக்கை கவனித்துக் கொள்ள வேண்டி நியமிக்கப் பட்டவர் தான் வசந்தி...


சாத்விக்கும் அவருடன் நன்கு ஒட்டிக் கொண்டான். இதனிடையே அன்பரசன்  வசந்தி இருவருக்கும் இடையில் ஒரு மெல்லிய  நட்பு தோன்றி அது காலப்போக்கில் காதலாக மாறியிருந்தது.. வசந்தி தாய் தந்தையற்றவர்... வசதி வாய்ப்பு இல்லாததால் அவர் தனது காதலை அன்பரசனிடம் இருந்து மறைக்க ஆனால் அவரோ விடாப்பிடியாக வசந்தியின் வாயில் இருந்து உண்மையை வர வைத்து பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டார்..


அன்பரசனின் தாயைப் போன்று அல்லாது தந்தை மிகவும் நல்லவர். எனவே மனைவியின் எதிர்ப்பையும்  மீறி மகனை வீட்டுக்குள் சேர்த்துக் கொண்டார். எப்போதும் போல் அன்புச் செல்வன் எதுவும் பேசாமல் இருக்க ஜெயராணிக்கும் வடிவுக்கரசிக்கும் தான் மிகுந்த கோபம்..

வடிவக்கரசிக்கு ஏழை பெண்ணை மகன் திருமணம் செய்து கொண்டது கோபம் என்றால் ஜெயராணிக்கு ஒரு சராசரி பெண் தனக்கு சமமாக இந்த வீட்டின் மருமகள் என்று வந்தது பெரும் கோபம் ...அவர்  தான் பணக்கார வீட்டுப் பெண் அல்லவா.

யாருக்கு எப்படியோ சாத்விக் தான் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தான்.. நான்கே வயதான அவனுக்கு எது புரிந்ததோ இல்லையோ வசந்தி இனி அவனுடன் தான் இருப்பார் என்ற செய்தியே அவனது மகிழ்ச்சிக்கு காரணம்..

அன்பரசனும்  அவரது தந்தையும் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து தான் அத்தை மருமகள் இருவரும் வசந்தியை வேலை வாங்குவது. வசந்தியும் இதை யாரிடமும் சொல்வதும் இல்லை ...

இப்படியே அவர்கள் நாட்கள் செல்ல இருவரின் காதலுக்கும் சாட்சியாக வந்து பிறந்தாள் மதியழகி.. சாத்விக் தான் 'தங்கச்சி பாப்பா'
என அவளையே சுற்றி வருவான்.
சிறிது நாட்கள் கழித்து ஜெயராணியும் உண்டாக சாத்விக் தாயை விட்டு மேலும் தூரமானான்.


மயூரி பிறந்த பிறகும் அவளை விட்டு விட்டு மதியழகியை தான் தங்கை என்று அழைப்பான்.. அவளுடன் தன் விளையாடுவான்.. இதற்கு இடையில் அன்பரசனின் தந்தையும் இறந்து விட மெல்ல மெல்ல தன் சுய ரூபத்தை காட்டத் தொடங்கினார் வடிவுக்கரசி.. எதற்கெடுத்தாலும் வசந்தியை ஜாடை மாடையாக திட்ட ஆரம்பித்து இருந்தார்..



எனவே அன்னையின் போக்கு பிடிக்காமல் மனைவியை அழைத்துக் கொண்டு வெளியே செல்ல அன்பரசன்  முற்படும் போது வசந்தி முடியாது எனக் கூறி விட்டார்.
' நான் இந்த குடும்பத்தை பிரித்ததாக இருக்கக் கூடாது 'என அவர் கூறி விட அதற்கு மேல் அன்பரசன் பேசவில்லை.. மனைவி மீது  மேலும் காதல் தான் பெருகியது அவருக்கு ..


சாத்விக் பெரியவன் ஆனதும் படிப்புக்காக வேண்டி வெளியில் சென்ற போது மதியழகியின் 15 ஆவது வயதில் அன்பரசனுக்கு மூளையில் ஏற்பட்ட கட்டியால் அவர் நோய்வாய்ப் பட்டார் ...அடுத்து ஓரிரு தினங்களிலேயே அவர் இறைவனடி சேர்ந்தும் விட்டார்...


அன்றே உடைந்து போய்  விட்டனர் தாயும் , மகளும். காதல் கணவன் இன்றி மிகவும் தவித்துப் போனார் வசந்தி... இருந்தும் மகளை நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்பதற்காக தன்னை தானே தேற்றிக் கொண்டார் அவர் ..



ஆனால் அதற்கு மாறாக மகன் இறந்ததும் வேண்டாத மருமகளையும் பேத்தியையும் துரத்தி விட்டு அனைத்து சொத்துக்களையும் தனது மூத்த மகனுக்கே கொடுக்க எண்ணினார் வடிவுக்கரசி ..

'வெளியே போ'  என அவரது வாயால் சொல்லாமல் அவர்கள் இருவரையும் துரத்த எண்ணி கொடுமை செய்ய ஆரம்பித்தார் அவர்.
ஆனால் வசந்தி தான் பொறுமையின் சிகரம் ஆயிற்றே.. அனைத்தையும் பொறுத்துக் கொண்டு வாழ ஆரம்பித்தார் அவர் தனது ஒரே மகளுக்காக...

தொடரும்...

Continue Reading

You'll Also Like

193K 5.1K 127
காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வ...
39.6K 1.2K 45
காதல் கலந்த குடும்ப நாவல் - எழுதியது : 2005 - வெளியீடு : 2010 - பதிப்பகம் : அருணோதயம் https://youtu.be/QmqC78hLg00?si=qApZATBpfOha7v3r
51.2K 3.5K 54
மூடப்பட்ட கதவின் மீது சாய்ந்து கண்களை மூடி நின்றான் யாழினியன், தன் உள்ளம் வென்ற பாரதியை எண்ணியபடி. ஆரத்தி தான், யாழினியனுக்கு எல்லாமாய் இருந்தவள். ஆன...