நினைத்தாலே இனிக்கும்...

Bởi makalakshmi

279 16 20

கல்லூரி வாழ்க்கை கதை Xem Thêm

நினைத்தாலே இனிக்கும்...
நினைத்தாலே இனிக்கும்...
நினைத்தாலே இனிக்கும்...
நினைத்தாலே இனிக்கும்...

நினைத்தாலே இனிக்கும்...

28 2 10
Bởi makalakshmi

என்னடி நீங்க இரண்டு பேரும் கிளம்பலையா என்ற அர்ச்சனாவிடம் அவசியம் போகனுமா அர்ச்சு என்றாள் மகா. என்னடி இப்படி கேட்கிற நாளைக்கு பங்க்சன் அப்போ நாம மூன்று பேரும் ஒரே மாதிரி காஸ்டியூம்ஸ் போட்டுக்கலாம்னு மூன்று பேரும் சேர்ந்து தானே முடிவு பண்ணினோம். அப்போ எல்லாம் சரினு சொல்லிட்டு இப்போ இப்படி சொல்றிங்க என்றாள் அர்ச்சனா.

அது இல்லப்பா இப்போ தான் ஹாஸ்டல் செட் ஆகிருக்கு அப்பா கொடுத்த பணம் இந்த மந்த் என்ட் வரைக்கும் வேண்டும். என் சித்தி காரி அடுத்த மாதம் பணம் எவ்வளவு தருவானு வேற தெரியலை அதான்பா என்று இழுத்தாள் ரம்யா. பணம் ஒரு விசயமாடி என்னோட பணமா இருந்தால் என்ன உன் பணமா இருந்தால் என்ன என்ற அர்ச்சனாவிடம் இல்லை அர்ச்சு அப்படி இல்லை என்ற ரம்யா ஏதோ கூற வர ஏன் ரம்யா நாம மூன்று பேரும் ப்ரண்ட்ஸ் மட்டும் இல்லை அதுக்கும் மேல எனக்கு சின்ன வயசுல இருந்து ஹாஸ்டல் பழகிருந்தால் கூட உங்க இரண்டு பேருகிட்ட இருக்கிற நெருக்கம் வேற எந்த ப்ரண்ட்ஸ் கிட்டையும் கிடைச்சது இல்லைடி என்றாள் அர்ச்சனா.

அர்ச்சு அது வந்து என்ற ரம்யாவிடம் ரம்யா ப்ளீஸ் நாம போகலாம். பணம் ஒன்றும் பெரிசா செலவாகாமல் ஒரு பட்ஜட் போட்டு பார்த்துக்குவோம் என்று மகா கூறிட சரி அர்ச்சு போகலாம் என்றாள் ரம்யா. மூவரும் ஒன்றாக கிளம்பினர்.

பர்ஸ்ட் எங்க வீட்டுக்கு போகலாம்டி போயி பைக் இல்லைனா கார் எடுத்துட்டு போகலாம் என்று அர்ச்சனா கூறவும் ரம்யா, மகா இருவரும் சரியென்று கூறினர். அது போல் மூவரும் அர்ச்சனாவின் வீட்டிற்கு சென்றனர். அவளது அம்மா, அப்பா இருவரும் ஏதோ ஒரு மீட்டிங்கிற்கு சென்று விட்டதாக வேலை பார்க்கும் பெண் கூறிட சரியென்ற அர்ச்சனா தனது காரை எடுத்துக் கொண்டு தோழிகளுடன் புறப்பட்டாள்.

உனக்கு டிரைவிங் தெரியுமா அர்ச்சு என்ற மகாவிடம் எல்லாம் தெரியும் லைசன்ஸ் இருக்கு என்றவள் வண்டியை ஓட்டினாள். என்ன ரம்யா இன்னும் என்னடி யோசனை என்றாள் அர்ச்சனா. எதாச்சும் பார்ட்டைம் வேலைக்கு ட்ரை பண்ணலாமானு யோசிக்கிறேன் என்றாள் ரம்யா. பார்ட்டைம் ஜாப் என்னடி நீ உளறிட்டு இருக்க நமக்கு காலேஜ் குளோஸிங் டைம் நான்கு மணி அப்பறம் நீ வேலைக்கு போயிட்டு ஆறரை மணிக்கு உள்ளே ஹாஸ்டலுக்கு வந்திர முடியுமா. எதாவது லாஜிக்கோட பேசுடி என்ற அர்ச்சனா அந்த மாலின் முன் வண்டியை நிறுத்தினாள்.

மூவரும் இறங்கி உள்ளே செல்ல அங்கே கார்த்திக், மதன் இருவரும் நின்றனர். ஏய் நீங்கள் எங்கே இங்கே என்ற மகாவிடம் உங்களுக்கு பாடிகார்ட் என்றான் மதன். அவனது தலையில் நங்கென்று கொட்டினாள் மகா. அவர்களின் பழக்கம் கார்த்திக்கிற்கு வித்தியாசமாக பட்டது. மதன் இதுநாள் வரை எந்த பெண்ணிடமும் பேசியது கூட கிடையாது.

பள்ளியில் கூட தோழிகள் யாராவது அவனிடம் பேசினாலும் பதில் கூறாமல் எழுந்து செல்பவன் மகாவிடம் மட்டும் எப்படி இவ்வளவு சகஜமாக பழகுகிறான் என்று யோசித்தான்.

என்ன கார்த்திக் யோசிக்கிற என்ற அர்ச்சனாவிடம் ஒன்றும் இல்லை வாங்க என்று ஐவரும் கடைக்கு சென்றனர். தோழிகள் மூவரும் ஒரே டிசைனல் மூன்று வண்ணங்களில் புடவை எடுத்தனர். ஏய் ஜாக்கெட் எப்படி தைக்கிறது என்ற மகாவிடம் அதெல்லாம் ஒன் ஹவர்ல தச்சு கொடுக்க ஆள் இருக்காங்கடி என்ற அர்ச்சனா அடுத்ததாக ஒரு காஸ்மெடிக் கடைக்குள் அழைத்துச் சென்றாள்.

மூவரும் தங்கள் உடைக்கு தகுந்த காஸ்மெடிக்ஸ் வாங்கிக் கொண்டு வெளியில் வந்து ஒரு ஐஸ்கிரீம் பார்லருக்குள் நுழைந்தனர். ஐவரும் அமர்ந்து பேசிக் கொண்டே ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். மகாவின் மொபைல் போன் ஒலிக்க அவள் அதை அட்டன் செய்து பேச ஆரம்பித்தாள். சிக்னல் கிடைக்காததால் வெளியில் சென்று அவள் பேச ஆரம்பித்தாள்.

எதார்த்தமாக அங்கு வந்த பிரேம் இவர்கள் நால்வரைக் கண்டதும் அந்த டேபிளில் அமர்ந்தான். மகா இரண்டு வாய் சாப்பிட்டு விட்டு சென்ற ஐஸ்கிரீம் அங்கு இருக்க என்ன இது ஐஸ்கிரீம் எனக்குத் தானே என்று அவன் எடுத்து உண்ண ஆரம்பித்தான். அண்ணா அது மகாவோடது என்றான் மதன். ஓஓ சாரி அவள் ச்சை இல்லை அவங்களும் வந்துருக்காங்களா என்றவனிடம் ஆமாம் சார் போன் சிக்னல் இல்லைனு அவள் வெளியே போயிருக்காள் என்றாள் அர்ச்சனா. இது அவள் சாப்பிடலையே வேற வாங்கி சாப்பிட்டடும் என்றவன் அந்த ஐஸ்கிரீமை சாப்பிட்டான்.

என்னடி இது அவளோடதுனு தெரிஞ்சும் இந்த வெறைச்ச மூஞ்சி சாப்பிடுது என்ற ரம்யாவிடம் வாயை மூடுடி என்றாள் அர்ச்சனா.

ஷாப்பிங் எல்லாம் முடிஞ்சதா என்ற பிரேமிடம் முடிஞ்சது அண்ணா என்றான் கார்த்திக். அப்போ எல்லோரும் வீட்டுக்கு வாங்க என்றான். இல்லை சார் என்ற ரம்யாவிடம் எல்லோரும் கண்டிப்பா வரணும் என்றவன் பிரேம் என்ற குரலில் திரும்பினான். பொண்ணொருத்தி நின்றிருக்க ஹாய் ஷ்வப்னா என்றவன் எழுந்து சென்றான். எல்லோரும் வந்துருங்க என்றவன் அவளுடன் கிளம்பினான்.

அவன் ஷ்வப்னாவுடன் கை கோர்த்து ஏதோ சிரித்து விட்டு பார்க்கிங்கில் நிறுத்தி இருந்த பைக்கை எடுத்திட அவளோ இரண்டு பக்கம் கால் போட்டபடி அவனைக் கட்டிக் கொண்டு அமர்ந்து சென்றாள்.

மகா போன் பேசி விட்டு வந்தவள் கிளம்பலாமா என்றாள். நீ ஐஸ்கிரீம் சாப்பிடலையே என்ற ரம்யாவிடம் ஹான் ஆமாம்ல எங்க என்னோட ஐஸ்கிரீம் என்றவளிடம் அது மெல்ட் ஆகிருச்சு மகா வேற கொண்டு வர சொல்லட்டா என்றான் மதன் . இல்லைடா பரவாயில்லை கிளம்பலாமா என்றாள் மகா.

மகா நாம மதன் வீட்டுக்கு போறோம் உனக்கு ஓகேவா என்ற கார்த்திக்கிடம் இல்லைடா என்றாள் மகா. ப்ளீஸ்டி போகலாம் என்று அர்ச்சனா அவளை வற்புறுத்த அவள் மதனின் முகத்தைப் பார்த்தாள். அவன் அமைதியாக அவளை பார்த்திட ரம்யா, மகா இருவரும் அவளை இழுத்துச் சென்றனர்.

எப்படி போகலாம் என்ற அர்ச்சனாவிடம் நான் உன்னோட காரை ஓட்டுறேன். உங்க மூன்று பேரில் யாரோ ஒருத்தர் மதன் கூட பைக்ல வாங்க என்றான் கார்த்திக். அர்ச்சனா ஏதோ கூற வர நான் மதன் கூட வரேன் என்றாள் மகா. சரிடி ஓகே என்ற தோழிகள் கார்த்திக் உடன் சென்றனர்.

சாரி மகா என்ற மதனிடம் எதற்கு என்றாள் மகா. எல்லாத்துக்குமே தான் எல்லாத்துக்குமே என்ற வார்த்தையை அவன் அழுத்தி சொல்ல அவளுக்கு புரிந்து போனது. அமைதியாக அவனுடன் பயணம் செய்தாள். உனக்கு பிடிக்கலைனா நான் உன்னை ஹாஸ்டல்ல விட்டுரட்டா என்றவனிடம் பரவாயில்லை மதன் அர்ச்சனா, ரம்யா கோவிச்சுப்பாங்க என்றாள் மகா. இல்லைப்பா உன்னோட மனநிலைமை என்றவனைப் பார்த்து சிரித்தவள் நான் எதையும் என் மூளையில் ஏத்திக்க மாட்டேன். முடிஞ்சு போன விசயங்களை பத்தி நான் யோசிக்க விரும்பவில்லை என்றாள் ஒற்றை வரியில். அதன் பிறகு மதனும் எதுவும் பேசவில்லை.

அர்ச்சனா, ரம்யா, கார்த்திக் மூவரும் வீட்டிற்கு வந்தனர். ஹாய் என்ன நீங்க இரண்டு பேரும் தான் வந்துருக்கிங்க உங்க தோழியைக் காணோம் என்றான் பிரேம். யாருடா என்ற ஷவப்னாவிடம் நம்ம மதன் ப்ரண்ட்டி என்றான்.

அவள் மதன் கூட வரா அண்ணா என்றான் கார்த்திக்.  ஓஓ ஓகே என்றவன் ஷ்வப்னா வா நம்ம வொர்க் பார்க்கலாம் என்று அவனறைக்கு சென்று விட்டான்.

என்னடா கார்த்திக் எங்கே உன் ப்ரண்ட் என்ற பிரேமலதாவிடம் அவன் மகாகூட வரான் அம்மா என்றான் கார்த்திக். ம்ம் சரிடா என்ற பிரேமலதா அர்ச்சனா,ரம்யா இருவரையும் வரவேற்று ஜூஸ் கொடுத்தார். தாங்க்ஸ் ஆண்ட்டி என்றனர்.

பிரேம் என்று அவர் அழைத்திட சொல்லுங்க ஆண்ட்டி என்று வந்தாள் ஷ்வப்னா. பிரேம் எங்கம்மா என்றவரிடம் அவன் குளிக்கிறான் ஆண்ட்டி என்றாள் ஷ்வப்னா. இந்தா ஜூஸ் எடுத்துக்கோ என்றவரிடம் தாங்க்ஸ் ஆண்ட்டி என்றவள் தன் லேப்டாப்புடன் அமர்ந்து கொண்டாள்.

மதன் வீட்டிற்கு வந்தான் மகா எங்கே என்றான் கார்த்திக். அவள் வரவில்லை என்றவன் அமைதியாக அமர்ந்தான். ஏன் வரவில்லை என்ற அர்ச்சனாவிடம் தெரியலை ஹாஸ்டல்ல விடச் சொல்லிட்டாள். அதான் என்றான் மதன்.

என்னடா பதில் இது ஏன் அவள் வரலை என்று வந்தான் பிரேம். இல்லை அண்ணா என்றவன் அமைதியாகிட மகாவிடம் இருந்து அர்ச்சனாவிற்கு போன் வந்தது. என்னாச்சுடி ஏன் ஹாஸ்டல் போன என்றவள் அவள் ஏதோ சொல்ல ஓஓகேடி என்ற அர்ச்சனா போனை வைத்தாள்.

சரி மதன் நாங்களும் கிளம்புறோம் என்ற அர்ச்சனாவிடம் என்னம்மா சாப்பிடாமல் கிளம்புறிங்க மகா ஏன் வரவில்லை என்ற பிரேமலதாவிடம் ஆண்ட்டி அவளுக்கு மந்த்லி பீரியட்ஸ் என்றாள் அர்ச்சனா . சரிமா பரவாயில்லை நீங்களாவது சாப்பிட்டு போகலாமே என்ற பிரேமலதாவிடம் இல்லை ஆண்ட்டி அவளோட சேர்ந்து வந்தே சாப்பிடுறோமே ப்ளீஸ் என்றாள். சரி ஓகேமா நீங்க சேர்ந்தே சாப்பிடுங்க ஒரு பத்து நிமிசம் என்றவர் மூவருக்கும் பார்சல் செய்து கொடுத்தார். எதுக்கு ஆண்ட்டி என்ற அர்ச்சனாவிடம் அட என்னம்மா நம்ம வீட்டுக்கு வந்துட்டு சாப்பிடாமல் போகிறது சரியில்லை என்றார். அவர்களும் வாங்கிக் கொண்டு சென்றனர்.

அர்ச்சனா ,ரம்யா இருவரும் கிளம்பிச் சென்ற பிறகு ஷ்வப்னாவும் கிளம்பிச் சென்றாள். என்னடா உன் ப்ரண்ட் சரியான திமிர் பிடிச்சவ போல என்ற பிரேமை பிரேமலதா முறைத்தார் அவன் அமைதியாக சாப்பிட்டு விட்டு எழுந்து சென்றான்.

என்ன அம்மா என்ற பிரேமிடம் உட்காருடா என்றவர் அந்த மகா என்று ஏதோ கூற வர மதனோடட ப்ரண்ட்னா என்று கூறியவரிடம் அவள் மதனோட ப்ரண்ட் தான் என்றவன் ஏன் மா ஷ்வப்னாகிட்ட இப்படி பிகேவ் பண்ணுறிங்க என்றான். எனக்கு அவளை பிடிக்கலை என்ற பிரேமலதா எழுந்து சென்றார்.

ன்னடி இது பார்சல் என்ற மகாவிடம் நீ வரலைனு அந்த ஆண்ட்டி கொடுத்து விட்டாங்க என்று உணவு பார்சலைக் கொடுத்தாள் அர்ச்சனா. எனக்கு வேண்டாம் அர்ச்சு என்ற மகாவை வற்புறுத்தி இருவரும் சாப்பிட வைத்தனர். மூவரும் ஒருவருக்கொருவர் ஊட்டி விட்டு சாப்பிட்டனர்.

ஆமாம் மகா உனக்கும், மதனுக்கும் முன்னமே பழக்கம் இருக்கா என்ற அர்ச்சனாவிடம் இல்லைடி இந்த காலேஜ்ல தான் பழக்கம் என்றவள் எதையோ யோசித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். நாளைக்கு எங்கே போகலாம் என்று அர்ச்சனா, ரம்யா இருவரும் யோசித்துக் கொண்டு அமர்ந்தனர்.

....தொடரும்...

Đọc tiếp

Bạn Cũng Sẽ Thích

279 16 5
கல்லூரி வாழ்க்கை கதை
211 20 6
ஒரு சிறுமியின் கற்பனையில் உருவாகும் கதையில் மடப்பள்ளி சமையலுக்காக கொண்டு வரப்படும் நம் கதையின் நாயகர்கள் மற்றும் நாயகிகள் அவர்களுடைய வாழ்வை அந்த அறைய...
36.4K 3.8K 28
மூன்று குடும்ப பெண்மணிகளின் சீரியல்களுக்குள் தொலைந்த வாழ்க்கை, சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அசாத்திய, அட்வெஞ்சராக மாறுவதை நகைச்சுவை கலந்து தொடுத்துள்ளேன்...
41 4 1
funny adult content... 😜😜😜