நினைத்தாலே இனிக்கும்...

By makalakshmi

298 16 20

கல்லூரி வாழ்க்கை கதை More

நினைத்தாலே இனிக்கும்...
நினைத்தாலே இனிக்கும்...
நினைத்தாலே இனிக்கும்...
நினைத்தாலே இனிக்கும்...

நினைத்தாலே இனிக்கும்...

137 5 2
By makalakshmi

அழகான காலை வேளையில் கதிரவன் தன் கொடையான கதிர்களை உலகிற்கு பரப்பிக் கொண்டிருந்தான். இரை தேடும் பறவைகளாக மக்கள் தத்தமது பணிகளுக்கு சென்று கொண்டிருந்தனர். அந்த நகரத்தின் மையத்தில் அமைந்திருந்தது அந்த கல்லூரி.  புகழ்பெற்ற கலைக் கல்லூரி அந்த கல்லூரியில் சேர்வதற்காக தன் தந்தையுடன் வந்திருந்தாள் மகாலட்சுமி. அட்மிசன் கிடைத்து கல்லூரி விடுதியில் மகளை விட்டு விட்டு ஆயிரம் புத்திமதிகள் கூறி விட்டு சென்றார் அவளது தந்தை விஜயராகவன்.

கல்லூரி விடுதி அவளுக்கு புதிது. பிறந்ததில் இருந்து தாய், தந்தையரை விட்டு பிரிந்து ஒருநாளும் அவள் இருந்ததில்லை. அவளது உலகமே அவளது வீடு, அவளது கிராமம், அவள் தந்தையின் வயல்வெளிகள் என்று இயற்கையோடு விளையாடி சுற்றித் திரிந்த மங்கை அவளை சிட்டியில் இருக்கும் இந்த கல்லூரியில் சேர்த்து விட்டு அவர்  ஊருக்கு சென்று விட்டார்.

மகாலட்சுமிக்கு விடுதியில் தங்குவது புதிது அவளது அறைக்கு புதிதாக ஒரு பெண் வந்தாள். அவளது தந்தையும் அவளுக்கு ஆயிரம் புத்திமதிகள் சொல்லி விட்டுச் சென்றார்.

மகாலட்சுமியைப் பார்த்து சினேகமாக புன்னகைத்தவள் தன் பெயர் அர்ச்சனா என்றிட அவளிடம் சினேகமாக புன்னகைத்து விட்டு மகாலட்சுமி என்றாள்.

அர்ச்சனா அவளை மகா நீ எந்த டிபார்ட்மென்ட் என்றிட கம்யூட்டர்சயின்ஸ் என்றாள் மகா. வாவ் சூப்பர்டி நானும் அதே டிப்பார்ட்மென்ட் தான் என்ற அர்ச்சனா என்ன மகா எடுத்த எடுப்பிலே டி போட்டு பேசுறேனு பார்க்கிறியா. நான் அப்படித்தான் இனிமேல் நாம இரண்டு பேரும் ப்ரண்ட்ஸ் என்றாள்.

ஆமாம் உனக்கு இந்த ஹாஸ்டல் லைப் புதுசா என்ற அர்ச்சனாவிடம் எப்படி கண்டுபிடிச்சிங்க என்றாள் மகா. மகா திரும்பவும் சொல்றேன் நாம ப்ரண்ட்ஸ் அந்த போங்க வாங்கலாம் வேண்டாம் போடி, வாடினே பேசு என்றிட சரிடி என்றாள் மகாலட்சுமி. அது ஒன்றும் இல்லை பேபி உன்னை பார்த்தாலே தெரியுது நீ ஹாஸ்டலுக்கு பர்ஸ்ட் டைம்னு நான் பள்ளிக்கூடம் சேர்ந்த நாளில் இருந்து ஹாஸ்டல் தான். அப்பா, அம்மா இரண்டுபேரும் வேலைக்கு போறாங்க என்னை பாத்துக்க முடியாதுனு ஹாஸ்டல்ல சேர்த்து விட்டுட்டாங்க என்ற அர்ச்சனா எனக்கு பசிக்குது வா போயி சாப்புடலாம் என்று மகாலட்சுமியை உணவுமேஜைக்கு அழைத்துச் சென்றாள்.

அங்கே அவர்களுக்கு இன்னும் சில தோழிகள் அறிமுகம் ஆனார்கள். அவர்கள் ரம்யா, சுபத்ரா, ராகவி, காயத்ரி அவர்களுடனும் அர்ச்சனா ஈஸியாக ஒட்டிக் கொண்டாள். மகாவும் கொஞ்சம் ஒட்டிக் கொள்ள முயன்றாள்.

இந்த காலேஜ் பத்தி உனக்கு எதாவது தெரியுமா மகா என்ற அர்ச்சனாவிடம் எனக்கு எதுவும் தெரியாதுப்பா என்றாள். இந்த காலேஜ்ல ஒரு ரூல் கட்டாயம் என்ன தெரியுமா ஸ்டூடண்ட்ஸ் எல்லோருமே ஹாஸ்டல்ல தங்கி தான் படிக்கனும் நினைச்சுபாரு இந்த ஹாஸ்டல்ல எவ்வளவு பேருனு அப்பா இப்பவே கண்ணை கட்டுதே என்றாள்.

மகா உங்க ஊர் வில்லேஜா என்ற அர்ச்சனாவிடம் ஆமாம்டி சூப்பரா இருக்கும். நிறைய வயல்வெளி, பம்புசெட்,  உரைச் சுத்தி கண்மாய், குளம் சூப்பரா இருக்கும். நீ மட்டும் ஒருமுறை அங்கே வந்து பாரு இந்த சிட்டி வாழ்க்கையே வேண்டாம்னு சொல்லிருவ என்றாள் மகா. ஓஓ அப்படியா அப்போ கண்டிப்பா பர்ஸ்ட் செமஸ்டர் லீவுக்கு உன் ஊருக்கு தான் வரணும் என்றாள். கண்டிப்பா அர்ச்சனா சந்தோசமா போகலாம் என்றாள்.

மகா மகா உனக்கு லவ்வர் இருக்கா என்ற அர்ச்சனாவிடம் ச்சீ அதெல்லாம் கிடையாது என்றாள் மகா. கிடையாதா அப்போ சரி இந்த காலேஜ்ல யாராச்சும் கிடைப்பாங்க என்ற அர்ச்சனாவிடம் சாரி தப்பா எடுத்துக்காதே நான் இங்கே படிக்க தான் வந்தேன் அதனால தேவையில்லாத பேச்சு வேண்டாமே என்றாள் மகா. சாரி என்றவளிடம் சாரி வேண்டாம் எனக்கு தூக்கம் வருது குட்நைட் என்று மகாலட்சுமி தூங்க ஆரம்பித்தாள்.

என்னடா மச்சான் ஹாஸ்டல் எல்லாம் செட் ஆகிருச்சா என்ற நண்பனிடம் பொறுக்கி உன் பேச்சைக் கேட்டு இந்த காலேஜ் ஜாயின்ட் பண்ணேன் பாரு என்னடா ஹாஸ்டல் சாப்பாடு இவ்வளவு கேவலமா இருக்கு என் அம்மா கையால சாப்பிட விடாமல் பண்ணிட்டியேடா என்று புலம்பினான் கார்த்திக். மச்சான் ஏன்டா நாம எப்பவுமே பிரியாமல் ஒன்னா இருக்கனும்னு தானே இந்த காலேஜ்ல சேர்ந்தோம் என்ற மதனிடம் சரி சரி ரொம்ப நெஞ்சை நக்காதே என்ற கார்த்திக் சிரித்து விட மதனும் சிரித்தான்.

கார்த்திக்கின் மொபைல் போன் ஒலிக்க சொல்லுங்க மம்மி என்றான். என்ன கார்த்திக் ஹாஸ்டல் செட் ஆகிருச்சா என்ற அவனது அம்மா சௌமியாவிடம் எல்லாம் செட் ஆகிருச்சு அம்மா என்றான். சந்தோசம் கார்த்திக் வார வாரம் மறக்காமல் வீட்டுக்கு வந்துரு என்றவரிடம் கண்டிப்பா அம்மா வெள்ளிக்கிழமை ஈவ்னிங்கே நம்ம வீட்டில் இருப்பேன் என்றான் கார்த்திக். சரிடா என்ற அவனது அம்மா சௌமியா போனை வைத்து விட அவனும் போனை வைத்து விட்டான்.

என்னடா அம்மா என்ன சொன்னாங்க என்ற மதனிடம் வீக் என்ட் மறக்காமல் வீட்டுக்கு வரச் சொன்னாங்க என்றவன் எனக்கு தூக்கம் வருது குட்நைட் என்று தூங்கி விட்டான்.

மறுநாள் காலைப் பொழுது அழகாக விடிய மகா , அர்ச்சனா இருவரும் குளித்து முடித்து அழகாக தயாராகி கல்லூரிக்கு கிளம்பினர். மகா நீ ரொம்ப அழகா இருக்க இவ்ளோ லாங்ஹேர் ஏன் பின்னல் ப்ரீயா விடலாமே என்றாள் அர்ச்சனா. எனக்கு அது கொஞ்சம் சங்கோஜமா இருக்கும் அர்ச்சனா என்றவள் தலையில் பூ வைத்தாள். அர்ச்சனாவிடம் பூவை நீட்டிட இல்லடா நீயே வச்சுக்கோ என்ற அர்ச்சனா கிளம்பினாள். மகாவும் கல்லூரிக்கு கிளம்பினாள்.

கல்லூரி முதல் நாள் கொஞ்சம் பயமாக இருந்தது மகாவிற்கு. ராகிங் அது இது என்று யாரும் எதுவும் சொல்லி விட்டால் என்ன செய்வது என்ற பதட்டம் இருந்த போதிலும் அதை வெளிக்காட்டாமல் சென்றாள். அர்ச்சனாவோ தன்னை ராகிங் செய்ய நினைப்பவனை பதிலுக்கு வச்சு செய்ய வேண்டும் என்ற நினைப்போடு சென்றாள். ரம்யாவும் இவர்களுடன் சேர்ந்து கொண்டாள். ஹாய் அர்ச்சு, ஹாய் மகா என்று வந்தவளிடம் ஹாய் ரம்யா என்று அவளுடன் சேர்ந்து கல்லூரிக்கு சென்றனர்.

என்ன மச்சான் ரொம்ப டல்லா வர என்ற கார்த்திக்கிடம் ஒன்றும் இல்லைடா இந்த காலேஜ்ல ராகிங் என்று மதன் கூறிட  நம்மளை எவனாவது ராகிங் பண்ண முடியமா என்ன என்றவன் சிரித்துக் கொண்டே சென்றான். ஏன்டா இப்படி என்றவனிடம் சும்மா என்று கண்ணடித்தான்.

அவனது கண்ணில் அவள் பட்டாள். யாரோ ஒரு பெண் ஒரு கூட்டத்தில் மாட்டிக் கொண்டு  நின்றிருக்க அவன் அந்த இடத்தை நோக்கி சென்றான். ஒரு ஐந்து பெண்கள், ஐந்து ஆண்கள் என்று மொத்தமாக அவளை சூழ்ந்து நின்றிருக்க அவளிடம் உன் பெயர் என்ன என்றாள் ஒருத்தி. மகாலட்சுமி என்றவளிடம் ஓஓ காலண்டர்ல இருப்பாங்களே அந்த மகாலட்சுமியா என்றான் ஒருவன். டேய் ஏன்டா என்ற மற்றொருவனிடம் அதான் போல நல்லா தலை நிறைய பூ வச்சுட்டு , கை நிறைய வளையல் போட்டுட்டு என்ன புடவைக்கு பதிலா  சுடிதார். இங்கே என்ன உன்னை பொண்ணு பார்க்கவா வந்திருக்காங்க என்றான் ஒருவன். அவள் அமைதியாக நிற்க சரி சரி ஓவரா பண்ணாதிங்கடா என்ற ஒரு பெண் ஆமாம் எந்த ஊரு என்றிட பொன்வயல் என்றாள். ஓஓ பட்டிக்காடா நீ அப்போ நீ பாவாடை தாவணியில் தானே வந்திருக்கனும் என்றவள் நாளைக்கு பாவாடை தாவணியில் வந்து எங்க கேங்க்கு குட்மார்னிங் சீனியர்னு விஷ் பண்ணாமல் போக கூடாது என்றாள். அவள் அமைதியாக நிற்க பதில் சொல்லு என்ற அந்த பெண் சரி ஒரு டான்ஸ் ஆடு என்றிட அவள் அமைதியாகவே நின்றாள்.

என்னடா இவள் எது பண்ண சொன்னாலும் இப்படி நிக்கிறாள் என்ற மற்றொரு பெண் விடு வெல்கம் பார்ட்டி அப்போ வச்சு செய்யலாம் மவளே அப்போ நீ எங்க கிட்ட சிக்கி தவிக்க போற என்ற அந்த பெண் கிளம்பு என்றிட மகா கிளம்பினாள்.

அவள் நடந்து வர எதிரே வந்தவனின் மீது மோதி கீழே விழப் போக அவளைத் தாங்கிப் பிடித்தான். வாவ் செம்ம சீன் என்று அந்த கூட்டத்தில் இருந்த ஒருவன் கூறிட மற்றவர்களும் சிரிக்க ஆரம்பித்தனர். மகாவிற்கு ஒரு மாதிரி ஆகி விட அவள் விறு விறு வென அவனைப் பிடித்து தள்ளி விட்டு சென்று விட்டாள்.

எங்கே போன மகா ரெஸ்ட்ரூம் போயிட்டு வர இவ்வளவு நேரமா  என்ற அர்ச்சனாவிடம் ரெஸ்ட்ரூம் போயிட்டு வரும் போது ஒரு சீனியர் கேங் கிட்ட மாட்டிகிட்டேன் என்று நடந்தவற்றைக் கூறிட அடிப்பாவி உன்னை விழாமல் தாங்கிப் பிடிச்சவனை கீழே தள்ளி விட்டு வந்திருக்க என்றாள் அர்ச்சனா. அவளை மகா முறைத்திட சரி சரி கோவிச்சுக்காதே என்ற அர்ச்சனா மகாவுடன் வகுப்பறைக்கு சென்றாள்.

அங்கு அவனைக் கண்டவள் தலையை குனிந்து கொள்ள ஓய் உன்னை கீழே விழாமல் நான் தாங்கிப் பிடிச்சா என்னை கீழே தள்ளி விடுவியா என்றான் கார்த்திக். சாரி என்றவளிடம் நல்ல சாரி என்று கூறி விட்டு அவன் அமைதியாக அமர்ந்து விட்டான்.

யாருடி அவன் என்றிட நான் கீழே தள்ளி விட்டு வந்தவன் என்று மகா கூறிட ஓஓ அவனா சரி சரி என்ற அர்ச்சனா ஹாய் ஐயம் அர்ச்சனா என்றிட கார்த்திக் என்றான் அவன் பதிலுக்கு.  மதன் அவளிடம் கை நீட்டிட அவனிடமும் தன்னை அறிமுகம் செய்து கொண்ட அர்ச்சனா இருவரிடமும் சகஜமாக பேச ஆரம்பித்தாள். மகா அமைதியாகவே இருந்தாள். என்னாச்சு உன் ப்ரண்ட் ரொம்ப டல்லா இருக்காங்க என்ற கார்த்திக்கிடம் ஒன்றும் இல்லை என்ற மகா மீண்டும் அமைதியானாள். தோளை குலுக்கி விட்டு கார்த்திக்  தன் வேலையை கவனிக்க ஆரம்பித்தான்.

வகுப்புகள் தொடங்க ஆரம்பித்தது. கல்லூரியில் மகா, அர்ச்சனா, ரம்யா மூவருக்கும் இன்னும் சில தோழிகள் கிடைத்தனர். அவர்கள் சந்தியா, மகிழா, ப்ரியா.

கார்த்திக், மதன் இருவருக்கும் கூட இன்னும் சில நண்பர்கள் கிடைத்தனர் விக்டர், ராஜு, கவின் , விஜய் .

முதல் வகுப்பிற்கு ப்ரபஸர் வரவும் அனைவரும் எழுந்து நின்றனர். ப்ரபஸர் திருமுருகன் தன்னை அறிமுகம் செய்து கொண்டு பிறகு ஒவ்வொருவராக அறிமுகம் செய்து கொள்ள சொல்லவும் ஒவ்வொருவரும் தங்களை அறிமுகம் செய்து கொண்டனர்.

அன்றைய தினம் ஒவ்வொரு ப்ரபஸரும் தங்களை அறிமுகம் செய்து கொண்டு மாணவர்களிடமும் அறிமுகம் செய்ய சொல்லியே கடந்தது.

....தொடரும்...

Continue Reading

You'll Also Like

3 1 1
some feeling's for my mom
46 3 1
story about the home alone adult tries to watch porn on his mobile and what are the problems facing after that...
31 6 3
Ez