உயிரை கொல்லுதே காதல்....

By SarafSaf

58.7K 1.4K 79

நாயகன்- சாய் கிருஷ்ணா நாயகி-நிரோஷினி More

காதல் ❤️
உயிரை கொல்லுதே காதல் ❤️ 1
உயிரை கொல்லுதே காதல்..❤️2
உயிரை கொல்லுதே காதல் ❤️3
உயிரை கொல்லுதே காதல்..❤️4
உயிரை கொல்லுதே காதல் ❤️ 5
உயிரை கொல்லுதே காதல் ❤️6
உயிரை கொல்லுதே காதல் ❤️ 7
உயிரை கொல்லுதே காதல் ❤️ 8
உயிரை கொல்லுதே காதல் ❤️ 9
உயிரை கொல்லுதே காதல் ❤️10
உயிரை கொல்லுதே காதல் ❤️11
உயிரை கொல்லுதே காதல் ❤️ 12
உயிரை கொல்லுதே காதல்❤️ 13
உயிரை கொல்லுதே காதல் ❤️ 14
உயிரை கொல்லுதே காதல் ❤️ 15
உயிரை கொல்லுதே காதல் ❤️ 16
உயிரை கொல்லுதே காதல் ❤️17
உயிரை கொல்லுதே காதல் ❤️ 18
உயிரை கொல்லுதே காதல்❤️ 19
உயிரை கொல்லுதே காதல் ❤️ 20
உயிரை கொல்லுதே காதல்❤️ 21
உயிரை கொல்லுதே காதல் ❤️22
உயிரை கொல்லுதே காதல் ❤️23
உயிரை கொல்லுதே காதல் ❤️ 24
உயிரை கொல்லுதே காதல் ❤️25
உயிரை கொல்லுதே காதல் ❤️ 26
உயிரை கொல்லுதே காதல் ❤️ 27
உயிரை கொல்லுதே காதல்❤️ 28
உயிரை கொல்லுதே காதல் ❤️ 29
உயிரை கொல்லுதே காதல் ❤️30
உயிரை கொல்லுதே காதல் ❤️ 31

உயிரை கொல்லுதே காதல் ❤️ எபிலாக்

2.4K 46 22
By SarafSaf

    

   முழு அலங்காரத்துடன் ஜொலிக்கும் தனது மனைவியை கண்டவனால்  தன் உணர்வுகளைக் கட்டுப் படுத்தவே முடியவில்லை.. எப்போதுதான் அவளைத் தனியே சந்திப்போம் என எதிர்பார்த்த வண்ணம் இருந்தான் சாய் கிருஷ்ணா.. இன்று நிரோஷினிக்கு வளைகாப்பு..  பெரிதாக ஏற்பாடு செய்து இருந்தான் அவன்..

       முன்பு அவள் இழந்ததை எல்லாம் அவளுக்காக அவன் கொடுக்க நினைத்தான்.. அதிக நேரம் அவளுடனேயே  செலவழித்தான். எந்த வேலையும் அவளை அவன் செய்ய விடுவதில்லை.. மொத்தத்தில் அவளை  பூ போல பார்த்துக் கொண்டான்.. இதனையெல்லாம் பார்த்திருந்த நிரோஷனியின் பெற்றோருக்கும், ஊர்மிளாவிற்கும் அத்தனை நிம்மதியாக இருந்தது..

       ஊர்மிளாவிற்கு இப்போதுதான் நான்கு மாதம் முடிந்த நிலை என்பதால் அவளை எந்த வேலையும் செய்ய விடாமல் அவள் அருகில் நின்று அவளைக் கவனித்துக் கொண்டே இருந்தான் ஹரி ...தர்ஷினி குட்டியோ தனக்கு தம்பி பாப்பா வரப் போகும் மகிழ்ச்சியில் அங்கும் இங்கும் சுற்றித் திரிந்தாள்..
அவள் பின்னாலேயே சுப்பிரமணியும் அலமுவும் சுற்றிக் கொண்டிருந்தனர்..

இன்று எல்லா பத்திரிகைகளின் முக்கிய செய்திகளில் ஒன்றாக
" பிசினஸ் மேக்னட் சாய் கிருஷ்ணாவின்  மனைவியின் வளைகாப்பு.. அதை பெரிதாக கொண்டாடுகிறார் அவர்.." என்ற செய்தியே இருக்கும் ..
அவ்வளவு ஆடம்பரமாக ஏற்பாடு செய்தான் அவன்.

மாலை நேரம் போல் ஒவ்வொருவராக அங்கிருந்து கலைந்து செல்ல மனைவியின் அருகில் சென்றவன்
" ஹனி கால் வலி ஏதாவது இருக்கா?" என்று அக்கறையாக கேட்க  புன்னகை முகமாகவே இல்லை என தலையை ஆட்டினாள் அவள்...

       அதன் பிறகு தான் நிம்மதியாக மூச்சு விட்டான் சாய் கிருஷ்ணா.. அவளை கைகளில் ஏந்தியபடி அறைக்குள் சென்றான் .  தங்களது அறையே கீழே  மாற்றி இருந்தான் அவன் நிரோஷினிக்கு கீழேயும் மேலேயும் நடப்பது கஷ்டம் என்பதால்.. அவளை கட்டிலில் அமரச் செய்து விட்டு அவன் கீழே உட்கார்ந்து அவளது பாதங்களை இதமாக பிடித்து விட்டான்.. அவள் வேண்டாம் என்று கூறவில்லை.. ஏனெனில் அவள் கர்ப்பம் ஆன நாளில் இருந்தே அவன் இவ்வாறு தான் செய்கின்றான்.. வேண்டாம் என்று சொன்னாலும் கேட்பதில்லை..

      ஆகவே அவள் எதுவும் சொல்லாமல் அவன் தலைமுடியை கோதி அவனுடைய நெற்றியில் முத்தமிட்டு "ஐ லவ் யூ.." என்றாள். அவளை நிமிர்ந்து பார்த்து புன்னகைத்தானே தவிர அவன் பதில் கூறவில்லை.. ஆனால் அவனது கண்களில் அத்தனை காதல் இருந்தது.. அதை பெண் அவளும் கண்டு கொண்டாள்..

   "ஹனி இன்னைக்கு நீ ரொம்ப அழகா இருக்க டி.." என்று கூறியவன் அவளது பாதங்களை எடுத்து அதில் முத்தமிட்டான்..

      இப்படியே தாய் வீட்டிற்கு கூட அவன் அவளை அனுப்பவில்லை.. அவனது கவனிப்பில் தாயும் சேயும் நலமாக இருந்தனர்.. அவனே தான்  எல்லாவற்றையும் செய்தான். அடுத்த இரண்டு மாதங்களில் ஒரு காலை வேளையில் அவர்களது இளவரசன் பூமிக்கு வந்தான்.

      ஆனால் தாயை ஒரு வழியாக்கி விட்டுத் தான் அவன் பிறந்தான். அதில் பயந்து போனது என்னவோ சாய் கிருஷ்ணா தான் . அவள் பட்ட வேதனையை கண் கொண்டு பார்க்க முடியவில்லை அவனால்..

      அவன் அழுவதை பார்த்த ஹரிக்கு ஆச்சரியம் தான் ..சிறு வயதில் கூட கண்ணீர் சிந்தாத தனது அண்ணன் அவன் மனைவிக்காக கண்ணீர் வடிக்கிறானே என்று வியப்பாக அவனைப் பார்த்தான்...

      குழந்தையைக் கைகளில் ஏந்தியவனின் உணர்வுகளை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. அத்தனை மகிழ்ச்சி அவனது கண்களில்.. தர்ஷினி குட்டியை தான் அவன் அவனுடைய கைகளில் ஏந்தவில்லை.. அது அவனது மடத்தனத்தினால் ஆன செயல்....ஆனால் இப்போது இந்த தருணத்தை அணுவணுவாக அவன் அனுபவித்தான்..

    அவனைப் பார்த்த நிரோஷனி
"ஐ லவ் யூ கிருஷ்..உங்களுக்கு நீங்க கேட்ட மாதிரியே இன்னொரு குழந்தை பெற்று தந்துட்டேன்.. ஓகே தானே.. இன்னும் வேணும்னாலும் கூட பெற்று தருவேன்.." என்று கேட்க அவளது நெற்றியில் இதழ் பதித்துவன்


"ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு ..என்னோட வாழ்க்கையில இதெல்லாம் நடக்கவே நடக்காது என்று நினைச்சேன்.. ஆனா என்னை முழுசா மாத்திட்ட.
உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் டி.. அது உனக்கு தெரியும் தானே. ஆனா இந்த இரண்டு குழந்தைகளே நமக்குப் போதும்.
நீ கஷ்டப் படுத்திருந்தா என்னால பாக்க முடியல டி.."
என்று அவன் தவிப்பாக பேச ஆமாம் என்று தலையசைத்தாள் அவள்.

அவர்களது இளவரசனுக்கு அர்ஜுன் கிருஷ்ணா என்று ஒரு நன்னாளில் பெயர் சூட்டினர்.. நிரோஷினி எதிர்பார்த்தது போல அன்பான கணவன் ,அழகான வாழ்க்கை, ஆசைக்கென்று இரண்டு குழந்தைகள் என்று அவளது வாழ்க்கை மாறியது..

      ஆனால் சாய் கிருஷ்ணா எதிர்பார்க்காமலேயே அவனுடைய வாழ்க்கை இனிமையாக அழகாக மாற்றினாள் சாய் கிருஷ்ணாவின் ஹனி ..அவர்கள் என்றும் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்தி விடை பெறுவோம்..

********சுபம்********

Continue Reading

You'll Also Like

113K 4.4K 31
கயல் கிராமத்துப் பெண், கல்லூரி படிப்பிற்காக சென்னை வருகிறாள், கல்லூரியில் சிந்துவின் நட்பு கிடைக்கிறது, மஹி , சென்னை பையன், நல்லவன் என தன்னை காட்டிக்...
122K 3.1K 20
சில காரணங்களால் திருமணத்தில் நாட்டம் இல்லாத தியா. தியாவை வெறுக்கும் ஆதித்யா. இருவரும் திருமண பந்தத்தில் இணைந்தால் காதல் பெருகுமா... இல்லை வெறுப்பு...
49.6K 1.3K 32
அழகான காதலுடன் சேர்ந்த அடிதடி காதல் கதை🥰