உயிரை கொல்லுதே காதல் ❤️ எபிலாக்

2.3K 46 22
                                    

    

   முழு அலங்காரத்துடன் ஜொலிக்கும் தனது மனைவியை கண்டவனால்  தன் உணர்வுகளைக் கட்டுப் படுத்தவே முடியவில்லை.. எப்போதுதான் அவளைத் தனியே சந்திப்போம் என எதிர்பார்த்த வண்ணம் இருந்தான் சாய் கிருஷ்ணா.. இன்று நிரோஷினிக்கு வளைகாப்பு..  பெரிதாக ஏற்பாடு செய்து இருந்தான் அவன்..

       முன்பு அவள் இழந்ததை எல்லாம் அவளுக்காக அவன் கொடுக்க நினைத்தான்.. அதிக நேரம் அவளுடனேயே  செலவழித்தான். எந்த வேலையும் அவளை அவன் செய்ய விடுவதில்லை.. மொத்தத்தில் அவளை  பூ போல பார்த்துக் கொண்டான்.. இதனையெல்லாம் பார்த்திருந்த நிரோஷனியின் பெற்றோருக்கும், ஊர்மிளாவிற்கும் அத்தனை நிம்மதியாக இருந்தது..

       ஊர்மிளாவிற்கு இப்போதுதான் நான்கு மாதம் முடிந்த நிலை என்பதால் அவளை எந்த வேலையும் செய்ய விடாமல் அவள் அருகில் நின்று அவளைக் கவனித்துக் கொண்டே இருந்தான் ஹரி ...தர்ஷினி குட்டியோ தனக்கு தம்பி பாப்பா வரப் போகும் மகிழ்ச்சியில் அங்கும் இங்கும் சுற்றித் திரிந்தாள்..
அவள் பின்னாலேயே சுப்பிரமணியும் அலமுவும் சுற்றிக் கொண்டிருந்தனர்..

இன்று எல்லா பத்திரிகைகளின் முக்கிய செய்திகளில் ஒன்றாக
" பிசினஸ் மேக்னட் சாய் கிருஷ்ணாவின்  மனைவியின் வளைகாப்பு.. அதை பெரிதாக கொண்டாடுகிறார் அவர்.." என்ற செய்தியே இருக்கும் ..
அவ்வளவு ஆடம்பரமாக ஏற்பாடு செய்தான் அவன்.

மாலை நேரம் போல் ஒவ்வொருவராக அங்கிருந்து கலைந்து செல்ல மனைவியின் அருகில் சென்றவன்
" ஹனி கால் வலி ஏதாவது இருக்கா?" என்று அக்கறையாக கேட்க  புன்னகை முகமாகவே இல்லை என தலையை ஆட்டினாள் அவள்...

       அதன் பிறகு தான் நிம்மதியாக மூச்சு விட்டான் சாய் கிருஷ்ணா.. அவளை கைகளில் ஏந்தியபடி அறைக்குள் சென்றான் .  தங்களது அறையே கீழே  மாற்றி இருந்தான் அவன் நிரோஷினிக்கு கீழேயும் மேலேயும் நடப்பது கஷ்டம் என்பதால்.. அவளை கட்டிலில் அமரச் செய்து விட்டு அவன் கீழே உட்கார்ந்து அவளது பாதங்களை இதமாக பிடித்து விட்டான்.. அவள் வேண்டாம் என்று கூறவில்லை.. ஏனெனில் அவள் கர்ப்பம் ஆன நாளில் இருந்தே அவன் இவ்வாறு தான் செய்கின்றான்.. வேண்டாம் என்று சொன்னாலும் கேட்பதில்லை..

உயிரை கொல்லுதே காதல்....Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ