காதலை 💞 தேடி....#KM Stories

By swarnasenthil

6.4K 1.1K 303

காதலின் 💞தேடலில் நிகழும் தவிப்புகள்..... More

காதலை 💞தேடி....
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
16
17
18
19
20
21
22
23
km

15

205 47 14
By swarnasenthil

💚💜🧡 காதலை 💞தேடி...💚💜🧡

K💞M Part -15

ஆச்சரியத்தோடு....
முல்லை💞 கொடுத்த கடிதத்தை வாங்கியவன்...

ஒரே மாதிரியான கருத்துக்கள், ரசனைகள்.. இருவருக்கும் அமைந்திருப்பதை போல....

இன்றைக்கு எப்படியும் காதலை வெளிப்படுத்த வேண்டும் என்கிற எண்ண உந்துதல் இதே நாளில் இவளுக்குமா!??

மனதில் தோன்றிய எண்ண அலைகளை மறைத்து....
வெகு இயல்பாக என்ன..? இது
என்ற படி கடிதத்தை பார்த்தான்...

கவரின் ஓரம் கிழிக்க பட்டு இருந்தது.... முகவரி பகுதியில் முல்லை💞 அட்ரஸ் பார்த்ததும்...

இது தனக்கு இல்லை....
அவளுக்கு வந்த கடிதம் என புரிந்தது....

முதல் வரியில் என் டார்லிங்
முல்லை 💞என்றிருக்க சற்று ஏமாற்றம் அடைந்தான்....

என்ன முல்லை💞 உங்களுக்கு
வந்த லெட்டர என்னை படிக்க சொல்றிங்க....

பரவாயில்ல படிங்க  இந்த லெட்டர் சம்பந்தமா எனக்கு உங்க ஆலோசனை வேணும்...

கதிர் கடிதத்தை பிரித்த போது
விரல் நடுங்கியது...
அந்த டார்லிங் என்ற உரிமை அவனை வதைத்தது....

குடைந்தெடுக்கும் கேள்விகளுடன் அந்த கடிதத்தை வாசிக்க தொடங்கினான்..

இரண்டு கைகளை மேஜையில் ஊன்றி... தன் கன்னங்களை தாங்கி பதற்றமாக படிக்கும் கதிரின் முகபாவனையை ரசித்து கொண்டிருந்தாள் முல்லை💞...

ஜீவா சொன்னது நினைவிற்கு வந்தது....

முல்லை💞 தாசன்னு போட்டு ஒரு பொறுக்கி எழுதுனானே.. Handwriting கண்டுபிடிக்க என்கிட்ட கொடுத்தல்ல அந்த லெட்டர எடுத்துட்டு போ...
கதிர படிக்க சொல்லு....
Reaction -a கவனி...

உண்மையிலேயே கதிர் உன்ன நேசிச்சா... அந்த பொறுக்கி மேல பயங்கரமா கோவப்படுவான்...

முகவரி பகுதியில்....
டார்லிங் முல்லை💞 என்று பார்த்ததுமே அவன் முகம் சுருங்கியதை கவனித்தாள்..

மேற்கொண்டு ஒவ்வொரு வரியும் படிக்கும் போது ஓசை வராமல் பற்கள் நெறிப்படுவதை... தாடையின் அசைவுகள் காட்டி கொடுத்தது...

அவனுக்குள் பொங்கும் கோபம் இவளுக்குள் மகிழ்ச்சியை பாய்ச்சியது...

கடிதத்தை படித்து முடித்ததும்.. யாருங்க அந்த பொறுக்கி ராஸ்கல் என்று உஷ்ணமானான்...

சொந்த பெயரை கூட எழுத தைரியம் இல்லாதவன்....

போலீஸ் ல கம்பளைண்ட் கொடுத்தீங்களா???

இதெல்லாம் போய் கம்பளைண்ட் கொடுக்க முடியுமா???

நீங்க அப்படியெல்லாம் எந்த
action- ம் எடுக்க மாட்டீங்க..ன்ற தைரியத்துலதான் இப்படி திமிர் எடுத்து போய் எழுதியிருக்கான்....

இதெல்லாம்  ignore பண்ணக்
கூடாது முல்ல 💞...கண்டுபிடிச்சி Public ல நிக்க வச்சி உதைக்கணும்...

அரபு நாடுகள் இருக்குற மாதிரி கடுமையான தண்டனை இங்கேயும் இருந்தா..தான்... பொண்ணுங்க நிம்மதியா இருக்க முடியும்.

இவனே நேர்ல இத கொடுத்தா செருப்பை கழட்டி இருக்க மாட்டிங்களா???

கதிர் மேலும் மேலும் குரலை உயர்த்தி பேச... பக்கத்து மேஜையில் இருப்பவர்கள் திரும்பி பார்த்தனர்..

அவனுடைய அந்த கோபம் தன் மீது அவனுக்கு உள்ள காதலின் வெளிப்பாடு என்பதை உணர்ந்த முல்லை💞.... கதிர் ப்ளீஸ் Cool Down  எல்லாரும் பாக்குறாங்க...

அவள் சொன்ன பிறகு தான் அதிகமாக உணர்ச்சி வசப்பட்டு பேசிவிட்டோம் என்பதை உணர்ந்து அமைதியாகி தண்ணீர் எடுத்து குடித்தான்..

மீடியால இருக்குறதால இந்த மாதிரி பிரச்சனைகளை சமாளிச்சு தானே ஆகணும்.. இதே மாதிரி லெட்டர்ஸ் நிறைய வரும்..
இன்னும் கூட மோசமா இருக்கும் பாத்ததும் கிழிச்சி போட்டுடுவேன்...

இத மட்டும் ஏன்..? எடுத்து வச்சி இருக்கீங்க...

வழக்கமா என்னோட ஆபீஸ்
அட்ரஸ் க்கு தான் இந்த மாதிரி லெட்டர் வரும்...
இது என் வீட்டு அட்ரஸ் க்கு வந்து இருக்கு... எப்படினு தெரிஞ்சிக்க
தான் வச்சி இருக்கேன்...

கதிர் சீரியஸாக யோசித்தான்.
போலீஸ் போக பிடிக்கலையா..??

அப்புறம் பேப்பர்ல நியூஸ் வரும் அம்மா சங்கட படுவாங்க... அதான் இதே மாதிரி மறுபடியும் லெட்டர் வந்தா சீரியஸா யோசிக்கலாம்னு இருக்கேன்....

நீங்களே முடிவு பண்ணதுக்கு அப்புறம் எதுக்கு என்கிட்ட
யோசனை கேட்டிங்க...??

சட்டென்று உதட்டின் ஓரத்தில் நாக்கை கடித்து கொண்டாள்...

போலீஸ் க்கு போறத தவிர...
வேற ஏதாச்சும் யோசனை சொல்வீங்களான்னு பார்த்தேன்....

ஆர்டர் செய்த lunch வர இருவரும் அமைதியாக சாப்பிட தொடங்கினர்கள்...

ஒரு விஷயம் எனக்கு....
புரியலைங்க முல்ல💞என்றான்...

என்ன..?

அதெப்படி..? பார்க்காம, பழகாம..
டிவி யில மட்டும் உங்கள பாத்து உங்களபத்தி என்ன தெரிஞ்சிக்க முடியும்...

என்னமோ உயிர கொடுக்க தயார்.. அடிமை அப்டி இப்டி னு பேத்தியிருக்கானே.. இது காதலா..?? வரிக்கு வரி தூண்டில் ராஸ்கல்..

போச்சு மறுபடியும் டென்ஷன் ஆகிட்டீங்களே..

என்னமோ தெரியல அந்த லெட்டர் படிச்சதும் மூடு கன்னா பின்னானு அவுட்டாயிடுச்சு...

சரி விடுங்க கதிர்...
நான் என்ன சின்ன குழந்தையா.. புரிஞ்சிக்க முடியாதவளா??

இந்த மாதிரி லெட்டர்ஸ்ல..
காதல்ன்ற வார்த்தையை காந்தம் மாதிரி தான் கொச்சையா Use பன்றாங்க...

நிஜமான காதலுக்கு லெட்டரே தேவை இல்லைங்குறது தான் என் கருத்து என்றாள்....

சட்டென்று முதுகில் அடி வாங்கினவன் போல் நிமிர்ந்தான்... கையில் எடுத்த சாதம் ... சில நொடிகள் கழித்தே...வாய்க்கு சென்றது...

தன் Pant பாக்கெட்டில் இருக்கும் காதல் கடிதம் உறுத்தியது...

ஏன்..? அப்டி சொல்றிங்க..
என்றான் நசுங்கிய குரலில்...

காதலை நேர்ல சொல்ல முடியாதா..? எதுக்கு..?லெட்டர்..

அப்டி இல்ல... மனசோட உணர்வுகளை தயக்கம் இல்லாம லெட்டர்ல தானே சொல்ல முடியும்...

No... கிடையாது... லெட்டர்ல எழுதுறப்போ அலங்காரம் சேரும்... மிகை சேரும்... கற்பனை சேரும்... சாமர்த்தியம் சேரும்...

நேருக்கு நேர் பேசுறப்போ உடைஞ்சு போய் வார்த்தைகள் வந்தாலும்.. உள்ளத்துல இருந்து உண்மையா வரும்...

மீண்டும் அமைதி நிலவியது...

முல்லை💞 உள்ளுக்குள் தவித்து போனாள்...

ஐயோ.. என் இனிய கதிர் பையா!! இன்னும் உனக்கு எப்படித்தான் தைரியம் ஊட்டுவது சரியான கல்லுளிமங்கன்!

சொல்லிவிடேன் வெளிப்படையாக சொல்லிவிடேன்... கடிதம் பார்த்ததும் உனக்கு ஏற்பட்ட ஆத்திரம் உணர்த்தியதை உன் உதடுகள் நேரடியாக சொல்ல கூடாதா????

உள்ளே இன்னொரு முல்லை💞 கேட்டாள்...

ஏன்?? நீதான் சொல்வது... உங்க Reaction பாக்க தான் லெட்டர படிக்க சொன்னேன் என்று ஆரம்பியேன்....

அய்யயோ நானா!!???
மாட்டேன்...

அவர் காதல சொன்ன நிமிடம்.. தலையாட்ட ரெடியா இருக்கேன்..
அவரை மனம் திறந்து பேச வைப்பது தான் எப்படி???

நான் Handwash பண்ணிட்டு வந்துடறேன்...

கதிர் சென்று கை கழுவி கண்ணாடியில் தன் முகத்தை
பார்த்த படி Kerchief எடுத்து முகம் துடைத்தான்...

காதலை கடிதம் மூலம் தெரிவிப்பதில் நம்பிக்கை இல்லை என்று அவள் சொல்லிவிட்டபிறகு...

நான் ஆசையாக ஒவ்வொரு வார்த்தையும் யோசித்து எழுதிய லெட்டர்க்கு வேலை இல்லை...இனி

நேரடியாக சொல்லி விடலாமா...??

எப்படி..? எந்த வார்த்தைகளில்....
ஒரு வேளை நான் நேரடியாக பேச வேண்டும் என்பதற்காக இப்படி சொல்கிறாளா..??

அவள் சொன்னதிற்கு அதான் அர்த்தமா??

பல யோசனைகளுடன்....அவள் அமர்ந்திருக்கும் மேஜையை நோக்கி நடந்து வந்தான்.....

முல்லை 💞கை கழுவ எழுந்தாள்..

-----------------------------
----------------------------

செந்தில் ஆபீஸ் வாசலில்...
உதிர்ந்த சிவப்பு பூக்களில்
ஒன்றை எடுத்து முகர்ந்தபடி இருந்தான்... கதிர்.

லெட்டர் கொடுத்தியா???

இல்லடா...

ஏன்..??

அதான் சொன்னனே அவளுக்கு நேரடியாக சொன்னதான் பிடிக்குமாம்... அதான் லெட்டர் விஷயத்தை கை விட்டுட்டேன்....

அப்ப வாய திறந்தாவது சொல்லி இருக்கணும்..

வார்த்தை தொண்டைகுழியில சிக்கிட்டு... வரலடா....

மனசுல இருந்து தொண்டைகுழி வரைக்கும் ஏதோ வலிக்குற மாதிரி உணர்வு....

சரி அடுத்து என்ன செய்ய போற...

தெரியல... டா இன்னொரு
சந்தர்ப்பம்  அமையறப்போ..

சந்தர்ப்பத்தை நீ தான் அமைச்சிக்கணும் ...

பார்க்கலாம் செந்தில்... ஆனாலும் இந்த தவிப்பு கூட ஒரு மாதிரி சுவாரசியமா.. தான் இருக்கு தெரியுமா???

செந்தில் கதிரின் தோளை தட்டிய படி சிரித்து...""அதான் காதல்!❤️"" என்றான்.

----------------------------
----------------------------

கட்டிலில் suitcase -ஐ திறந்து வைத்திருந்த கதிர் அவசர அவசரமாக பீரோவிலிருந்து...அவனின் துணிமணிகளை எடுத்து போட, காயத்ரி மடித்து அடுக்க தொடங்கினாள்..

இரு..ண்ணா..பதறாதே
Flight -ku இன்னும் 2 மணிநேரம் இருக்கு...

போற வழியில Traffic இருந்தா Late ஆகிடும் அதான்... Paste Brush எடுத்து வச்சிட்டியா..??

வச்சிட்டேன்... முன் கூட்டியே சொல்ல மாட்டாங்களா..?இப்டி தான் திடீர்னு பாம்பே போ..னு சொல்லுவாங்களா..? உங்க ஆபீஸ்ல...

Kerchief, Banian எடுத்து கொடுத்தபடி.. அவங்க என்ன செய்வாங்க..
பாம்பே ல install செஞ்ச சிஸ்டதுல மேஜர் problem..னு தகவல் சொன்னதும் ட்ராவல்ஸ் பிடிச்சி டிக்கெட் சொல்லி..
என்னை வீட்டுக்கு துரத்திட்டாங்க...

டிக்கெட் airport வாசல்ல தான் கொடுப்பாங்க... சீக்கிரம் Arrange பண்ணு முகம் கழுவிட்டு வரேன்.....

முகத்தை துடைத்தபடியே வந்தவனிடம் .. எத்தனை
நாளாகும்.. ண்ணா....என்றாள்..

குறைஞ்சுது 4 நாள் ஆகும்....

காயத்ரி...நீ ஒரு காரியம் பண்ணனும்...

என்ன..???

முல்லை💞க்கு phone போட்டு
டைம் fix பண்ணி அவங்க ஆபீஸ்ல போய் பாரு..

அவங்கள கூட்டிட்டு.. Post master வீட்டுக்கு போய் அந்த Portion -a காட்டி கிட்ட இருந்து பேசி முடிச்சு கொடு.... இந்த மாதிரி நான் திடீர்னு ஊருக்கு போக வேண்டியதாயிடுச்சுனு சொல்லு செய்றியா..???

கண்டிப்பா..ண்ணா...
சரி நீ..! ரெடி ஆகிட்டியா..?
ஆட்டோ கூட்டிட்டு வரவா..

சரி என்றான் சட்டை எடுத்து அணிந்தபடி.....

                                          தொடரும்💞...

💚💜🧡💚💜🧡💚💜🧡💚💜🧡💚💜🧡

Continue Reading

You'll Also Like

72.1K 4K 21
Thi story is all about the famous misunderstanding track of KM...
158K 8.6K 36
This FF is all about a pre marriage plot of Kathir and Mullai... A very simple one with all emotions dumped in...