ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...

By NiranjanaNepol

150K 6.6K 1K

எல்லாவற்றிலும் வித்தியாசத்தை விரும்பும் நாயகன்... உலகமே அறியாத நாயகி... அவர்கள் வாழ்வில் நடைபெறும் சுவாரசியங்... More

1 திருமண கோரிக்கை
2 அதிரடி அறிமுகம்
3 ரகசிய திட்டம்
4 சிங்கத்தின் குகையில்
5 தொலைபேசி அழைப்பு
6 திருமதி ஆதித்யா
7 காத்திருந்த முதலிரவு
8 ஆதித்யாவின் முடிவு
9 அம்மாவின் அறிவுரை
10 சென்னையில் கமலி
11 திருமதி ஆதித்யா
12 புத்திசாலி பெண் தான்
13 நீங்கள் நல்லவர் தான்
14 அதிர்ஷ்ட தேவதை
15 பொய்
16 ஆதித்யா யார்?
17 கமலியின் சொந்த விதி
18 கமலியின் சாகசம்
19 கமலியின் புரிதல்
20 ஆதித்யாவின் பார்வை
21 ஆதித்யாவின் நடவடிக்கை
22 நான் உன்னுடன் டேம் இட்
23 கமலியின் அன்பு
24 ஒன்றுபட்ட மனங்கள்
25 விசித்திர உணர்வு
26 என்னோட ஆதிஜி
27 நீங்கள் என்றுடையவர்
28 கமலியின் இன்ப அதிர்ச்சி
29 நம்பிக்கை
30 அலுவலகத்தில் கமலி
31 ஒன்றுபட்ட மனங்கள்
32 மிஸஸ் பாஸ்
33 குமரிப்பெண்
34 மலர்க்கணைகள்...
35 அவளை நானறிவேன்...!
36 வஞ்சக உலகம்...
37 சோமபானம்
38 தொலைந்த மகள்
39 ஆதித்யாவின் நம்பிக்கை
40 முதல் முத்தம்
41 புதிய பரிமாணம்
42 நேர்மை
43 விஷநாகத்தின் குறி
44 என்ன நடக்கிறது?
45 யார் அது?
46 அந்த கண்கள்
47 பணம் பத்தும் செய்யும்
48 வித்யாசம்
49 ஆதித்யா...
50 நிஜ முகம்
51 அது வேறு...
52 கமலின்னா சும்மாவா?
53 கோவம் தனிந்தது
54 ஆதித்யாவின் பரிசு
55 விதி வலியது
57 தவறல்ல... துரோகம்
58 கமலி கொடுத்த அதிர்ச்சி
59 பிரபாகரனின் உறுதி
60 குழந்தையின் ஏக்கம்
61 ஒப்புதல்
62 குடும்பம்
இறுதி பாகம்

57 ஒரே காரணம்

2K 108 21
By NiranjanaNepol

57 ஒரே காரணம்

ஷாலினியை அனாதை இல்லத்தில் பார்த்த கமலி உறைந்து போனாள். என்ன ஆனது அவளுக்கு? அவள் எப்படி இங்கு வந்தாள்? சரவணனும் ரேணுகாவும் எங்கே போனார்கள்?
ஷாலினியின் பரிதாபமான நிலையை பார்த்து, கமலியின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. கண்ணீர் சிந்தியபடி அவள் கன்னத்தை தட்டினாள்.

"ஷாலு... ஷாலு கண்ணை திறந்து என்னை பாரு"

"உங்களுக்கு இவளைத் தெரியுமா அக்கா?" என்றாள் அவளை அழைத்து வந்த சின்ன பெண்.

"இவ எங்க வீட்டு பொண்ணு. இவ எப்படி இங்க வந்தா? யார் இவளை இங்க கூட்டிக்கிட்டு வந்தது?"

"இவ போன மாசம் தான் இங்க வந்தா. அவளோட அம்மாவும் இங்க தான் இருக்காங்க"

"என்னது..??? அவங்க அம்மாவும் இங்கே இருக்காங்களா? எங்க?"

"அவங்க சமையலறையில் இருப்பாங்க. அவங்க இங்க சமையல் வேலை செய்றாங்க."

அப்போது மெல்ல கண் திறந்தாள் ஷாலினி.

"ஷாலு..."

ஷாலினி, கமலியை அடையாளம் கண்டுகொண்டாள்.

"மாமி" என்று பலவீனமான குரலில் அழைத்து அவளை கட்டிக்கொண்டு அழுதாள் ஷாலினி.

"நீங்க வந்துட்டீங்களா மாமி... என்னை வீட்டுக்கு கூட்டிக்கிட்டு போக வந்தீங்களா?"

ஆமாம் என்று தலையசைத்த கமலி, அழுதபடி அவள் கண்ணத்தில் முத்தமிட்டாள். அவளைத் தன் தோளில் தூக்கிக்கொண்டு வெளியே வந்தாள். மயூரியும் லாவண்யாவும் ஷாலினியை பார்த்து... அவளது மோசமான நிலையை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்கள். அவர்கள் இருவரும் கமலியை நோக்கி ஓடினார்கள், அவர்கள் பார்த்துக் கொண்டிருப்பது உண்மை தான் என்பதை ஊர்ஜிதம் செய்துகொள்ள.

"சமீர், டாக்டரை கூப்பிடு. இவளுக்கு ஜுரம் கொதிக்குது..."

"இதோ கூப்பிடுறேன்" என்று கூறிவிட்டு அலுவலகத்தை நோக்கி ஓடினான் சமீர்.

சில நிமிடத்தில் மருத்துவர் அங்கு வந்து சேர்ந்தார். ஷாலினியை பரிசோதித்துவிட்டு அவளுக்கு ஊசி போட்டார். அப்போது பயத்தில் கண்ணை மூடிக்கொண்டாள் கமலி. ஷாலினியோ அமைதியாய் இருந்தாள்.

"நான் எழுதிக் கொடுத்திருக்கிற மருந்தை மூன்று நாளைக்கு கொடுங்க. ஒருவேளை, ஜுரம் குறையலன்னா,  பிளட் டெஸ்ட் எடுத்து பார்க்கலாம்" என்றார் மருத்துவர்.

"சரிங்க டாக்டர்" என்றாள் கமலி.

"ஜுரம் லேசா குறைஞ்ச பிறகு ஹெல்தி டயட் கொடுங்க. தவறாம மாத்திரை சாப்பிட சொல்லுங்க "

"ஓகே டாக்டர்"

ஷாலினியை நாற்காலியில் அமர வைக்க கமலி முயன்ற பொழுது, அவளை இறுக்கமாய் கட்டிப்பிடித்து கொண்டாள் ஷாலினி.

"என்னை விட்டுட்டு போகாதீங்க மாமி. ப்ளீஸ் போகாதீங்க" என்று கெஞ்சினாள் பரிதாபமாக.

"நான் உன்னை விட்டு எங்கேயும் போக மாட்டேன் டா. "

"ப்ராமிஸ்? "

 "ப்ராமிஸ்" என்றபடி, கண்ணீருடன் நின்றிருந்த மயூரியையும் லாவண்யாவை பார்த்தாள் கமலி.

"என்னை நீங்க வீட்டுக்கு கூட்டிக்கிட்டு போறீங்களா மாமி?"

"நிச்சயமா கூட்டிகிட்டு போறேன்" என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டு,

"இங்க பாரு, மயூரி சித்தியும் இங்க தான் இருக்காங்க. அவங்க கூட இரு. நான் இப்ப வரேன்"

மயூரிக்கு சைகை செய்ய, ஷாலினியை அவளிடமிருந்து பெற்றுக் கொண்டாள் மயூரி. ரேணுகாவை தேடி சமையலறையை நோக்கி ஓடினாள் கமலி. மிகப் பெரிய பாத்திரத்தில் கொதித்துக் கொண்டிருந்த சாம்பாரை, மிகப்பெரிய கரண்டியால் துழாவிக் கொண்டிருந்த ரேணுகாவை பார்த்து அதிர்ச்சியில் வாயைப் பொத்தினாள் கமலி. அமைதியகத்தில், ஒய்யாரமாகவும், அலட்டலாகவும் வலம் வந்த அதே ரேணுகா தான்...!

"ரேணுகா அக்கா" என்றாள் தொண்டை அடைக்க கமலி.

கமலியின் குரலைக் கேட்ட ரேணுகா, திடுக்கிட்டாள். கமலி நின்றிருந்த திசையை நோக்கி, திரும்பிப் பார்த்தாள், நம்ப முடியாமல். எதைப் பற்றியும் யோசிக்காமல் அவளை நோக்கி ஓடிச் சென்ற கமலி, அவளை இறுக்கமாய் அணைத்துக் கொண்டு கண்ணிர் சிந்தினாள் கமலி. குத்துக் கல்லை போல் நின்றாள் ரேணுகா.

"என்னக்கா இதெல்லாம்? நீங்க ஏன் இங்க இருக்கீங்க? மாமா எங்க போனாரு?"

தான் செய்த கொடுமையை எல்லாம் மறந்து, தனக்காக வெள்ளந்தியாய் கண்ணீர் சிந்திய கமலியை உலக அதிசயம் போல் பார்த்தாள் ரேணுகா. *அப்படி என்ன உன்னிடம் ஆதித்யா கண்டு விட்டான்?* என்று, அன்று ரேணுகா கேட்ட கேள்விக்கு இன்று அவளுக்கு பதில் கிடைத்தது. அவள் மீது களங்கம் கற்பிக்க நினைத்த ஒருத்திக்காக, அவள் வாழ்வை நாசமாக்க நினைத்த ஒருத்திக்காக, அவளை அவள் கணவனிடமிருந்து பிரிக்க நினைத்த ஒருத்திக்காக, கமலியால் மனதார கண்ணீர் சிந்த முடிகிறதே... இந்த தெய்வீக குணம் தான் ஆதித்யாவை கமலியிடம் மண்டியிட செய்திருக்க வேண்டும். உண்மையிலேயே இந்தப் பெண் மிகவும் நல்லவள். அதனால் தான் ரேணுகாவுக்காக கூட அவளால் வருத்தப்பட முடிகிறது.

"அழாதீங்க கமலி. உங்களுடைய களங்கமில்லாத கண்ணீருக்கு நான் தகுதி இல்லாதவ" என்றாள் கல் போன்ற முகத்துடன்.

"என்னக்கா நடந்துச்சி? உண்மையை சொல்லுங்க. மாமா எங்க கா?"

"அவர் என்னை ஏமாத்திட்டாரு. எல்லா பணத்தையும் சுருட்டிக்கிட்டு என்னை நடுத்தெருவில் விட்டுட்டாரு"

"என்னால இதை நம்பவே முடியலையே"

"அவர் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டதே பணத்துக்காக தான்... பணத்துக்காக மட்டும் தான். என்மேல பிரியமா இருக்கிற மாதிரி அவர் காட்டியதெல்லாம் வெறும் நடிப்பு. ஆதிக்கு எதிரா என் மனசுல விஷத்தை விதைச்சாரு. அவன் என்னை நடுத்தெருவில் நிறுத்துவான்னு திரும்பத் திரும்ப சொல்லிக்கிட்டே இருந்தாரு. என் மனசுல பயத்தை ஏற்படுத்தினாரு. அவரால என்னுடைய தம்பியை நான் சந்தேகப் பட ஆரம்பிச்சேன். அவனையே ஏமாத்தினேன்... நான் ஒரு நம்பிக்கை துரோகி" என்று கதறினாள் ரேணுகா.

"அக்கா, ப்ளீஸ் அழாதீங்க. என்கூட வீட்டுக்கு வாங்க"

"முடியாது கமலி. நான் வரமாட்டேன்"

"அப்படி சொல்லாதிங்க கா"

"என்ன உரிமையில என்னை அங்க வர சொல்றீங்க?"

"ஆதிஜிகிட்ட நான் பேசுறேன் அவர் நிச்சயம் மறுக்க மாட்டார்"

"இருக்கலாம்... எந்த மூஞ்சியை வச்சுக்கிட்டு நான் என் குடும்பத்தை பார்ப்பேன்? நான் அவங்க முதுகில் குத்திட்டேன். அந்த குடும்பத்துல காலெடுத்து வைக்கிற தகுதி கூட எனக்கு இல்ல. என்னை, எங்க  அம்மாவுக்கு மேலா மதிச்ச  என் தம்பியை நான் ஏமாத்திட்டேன். நான் ஒரு துரோகி"

"மத்த எல்லாத்தையும் விடுங்க. ஷாலினிகாகவாவது வாங்க. இதுல அவளுடைய தப்பு என்ன இருக்கு?"

"எனக்கு பொண்ணா பிறந்தது தான் அவ செஞ்ச தப்பு"

"அவளுடைய உடம்பு எப்படி நெருப்பா  கொதிக்குதுன்னு உங்களுக்கு தெரியுமா?"

"எனக்கு தெரியும் "

"தெரிஞ்சுமா அவளை நீங்க தனியா விட்டீங்க?"

"நான் அவளை விடல. அவ தான் என்னை கிட்ட சேர்க்க மாட்டேங்கிறா"

"என்னக்கா சொல்றீங்க? "

"அவ என்கிட்ட பேசறது இல்ல"

"பேசுறது இல்லையா? ஏன்?"

"நான், உங்களுக்கும் ஆதிக்கும் செஞ்ச எல்லாத்தையும் அவ தெரிஞ்சுகிட்டா. அதிலிருந்து அவ என் மேல ரொம்ப கோவமா இருக்கா. நான் ஆதியை ஏமாத்தினதை அவளால தாங்க முடியல. அவ என்கிட்ட பேசுறதையே நிறுத்திட்டா. என் வாழ்க்கையில இருந்த முக்கியமான அத்தனை பேர்கிட்டயும் என்னுடைய மரியாதையை நான் இழந்துட்டேன்."

"இதெல்லாம் அவளுக்கு எப்படி தெரிஞ்சது?"

"அமைதியகத்துக்கு திரும்பி கூட்டிக்கிட்டு போக சொல்லி என்னை தொந்தரவு செஞ்சிக்கிட்டே இருந்தா. ஒரு நாள் நாங்க பேசினதை கேட்டுட்டா. அதோட என்னை வெறுத்து ஒதுக்கினவ தான்... என்கிட்ட பேசுறது இல்ல. சரவணன் என்னை ஏமாத்திட்டு போனதற்குப் பிறகு, எனக்கு வாழறதுல விருப்பமே இல்ல. ஷாலினியை இந்த உலகத்துல தனியா விட்டுட்டு சாக எனக்கு மனசு வரல. அதுக்காகத் தான் நான் உயிரோட இருக்கேன்"

அப்போது தான் ரேணுகாவின் நெற்றியில் இருந்த காயத்தை கவனித்தாள் கமலி.

"இது என்ன கா? உங்களுக்கு எப்படி அடிபட்டிச்சி?"

"ஷாலினி தான் கோவத்துல பூ ஜாடியால அடிச்சிட்டா"

அவளை பார்க்க பரிதாபமாக இருந்தது கமலிக்கு.

"அவ சின்ன குழந்தை. அவ புரிஞ்சுக்கவா"

"நான் எவ்வளவு கொடுமைக்காரின்னு அவ ஏற்கனவே புரிஞ்சுகிட்டா" என்று தன் முகத்தை மூடிக்கொண்டு அழுதாள் ரேணுகா.

"தயவுசெய்து அழாதீங்க அக்கா"

"இல்ல கமலி. என்னோட தம்பியை ஏமாத்தினதுக்கு எனக்கு கிடைச்சிருக்கிற சரியான தண்டனை இது. யாருக்காக என்னோட தம்பியை நான் ஏமாத்தினேனோ, அவரையே என்னை ஏமாத்த வச்சி, என் தம்பியோட வலியை எனக்கு புரிய வச்சிட்டார் கடவுள்"

"நீங்க எதை பத்தியும் யோசிக்காம தயவு செய்து என் கூட வீட்டுக்கு வாங்க"

"தயவுசெய்து என்னை விட்டுடுங்க கமலி. இவ்வளவு மோசமா நடந்த பிறகு நான் எப்படி அங்க வர முடியும்?"

"ஷாலினிக்காக நீங்க வந்து தான் ஆகணும். அவளுடைய எதிர்காலத்துக்காக நீங்க இதை செஞ்சு தான் ஆகணும். ஏற்கனவே அவ படக்கூடாத கஷ்டத்தை எல்லாம் பட்டுட்டா. இன்னும் அந்த குழந்தையை தண்டிக்காதீங்க. எல்லார்கிட்டயும் பேசி நான் அவங்களுக்கு புரிய வைக்கிறேன்"

மேற்கொண்டு காத்திராமல் ரேணுகாவின் கையை பிடித்து சமையலறையை விட்டு வெளியே  இழுத்துக் கொண்டு வந்தாள் கமலி. லாவண்யாவும், மயூரியும் ரேணுகாவுக்காக துளியும் வருத்தப்படாவிட்டாலும், அவர்கள் கமலியை தடுக்கவில்லை.

"நான் ரேணுகா அக்காவையும் ஷாலினியையும் வீட்டுக்கு கூட்டிகிட்டு போறேன்"

சரி என்று தலையசைத்தாள் லாவண்யா.

"சமீர், ப்ளீஸ் எல்லா ஃபார்மாலிட்டியயும் முடிச்சிடு"

"நான் பார்த்துகிறேன். நீ போ கமலி" என்றான் சமீர்.

ஷாலினியை தன் தோளில் தூக்கிக் கொண்டு, ரேணுகாவை கையை பிடித்து தன்னுடன் இழுத்துக் கொண்டு சென்றாள் கமலி. அவர்களை அமைதியாய் பின்தொடர்ந்தாள் மயூரி. இளவரசன் காரை அமைதியகம் நோக்கி செலுத்தினார்.

அமைதியகம்

மீண்டும் ஷாலினியை தன் தோளில் தூக்கிக் கொண்டு, சங்கடத்துடன் நின்ற ரேணுகாவை கையை பிடித்து அழைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தாள் கமலி.

வரவேற்பறையில் அமர்ந்து தேநீர் பருகிக் கொண்டிருந்த  அனைவரும், ரேணுகாவுடன் உள்ளே நுழைந்த கமலியை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்கள். தன் கண்களையே நம்ப முடியவில்லை ஆதித்யாவால். ரேணுகா இருக்கும் நிலை என்ன என்பதை புரிந்து கொள்ள அவர்களுக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. அவள் அணிந்திருந்த வெகு சாதாரணமான காட்டன் புடவை கூறியது அவள் நிலை பற்றி. ஆனால் என்ன நேர்ந்தது என்பதைப் பற்றி அவர்கள் யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.

தன் கையில் இருந்த தேனீர் குவளையை டீப்பாயின் மீது வைத்துவிட்டு எழுந்து நின்றான் ஆதித்யா, நம்ப முடியாத பார்வை பார்த்து. அவனது பார்வை கமலியின் மீது மட்டும் தான் இருந்தது.

"இவ இங்க என்ன செய்றா கமலி? எதுக்காக அவளை நீ இங்க அழைச்சுக்கிட்டு வந்த?" என்றார் பாட்டி திடமான குரலில்.

"ரேணுகா அக்காவை சரவணன் ஏமாத்திட்டாராம் பாட்டி. அவங்களை அவர் நடுத்தெருவில் விட்டுட்டாராம்"

ஆதித்யா மென்று முழுங்கினான்.

"இதைத் தவிர நம்ம வேற என்ன எதிர்பார்க்க முடியும் கமலி? நம்ம என்ன கொடுத்தமோ அது தானே நமக்கு திரும்ப கிடைக்கும்...? அவ நம்ம எல்லாரையும் ஏமாத்தினா. அது வேற ஒரு ரூபத்தில், அவ கிட்டயே திரும்பி வந்து சேர்ந்து இருக்கு. இதுக்கு பேர் தான் கர்மான்னு சொல்லுவாங்க" என்றார் பாட்டி வேதனை நிறைந்த குரலில்.

அவர் உதிர்த்த உண்மை வார்த்தைகள் ரேணுகாவை குத்திக் கிழித்தது. ஷாலினியை சோபாவில் படுக்க வைத்தாள் கமலி.

"இவளுக்கும் அதையே தான் சொல்லுவீங்களா பாட்டி? இவ செய்யாத தப்புக்காக வாழ்நாள் எல்லாம் இவளும் கஷ்டப்படணுமா? இவளை எப்படிப்பட்ட நிலையில் நான் அனாதை இல்லத்தில் பார்த்தேன்னு உங்களுக்கு தெரியுமா?"

"என்னது அனாதை இல்லத்திலயா?" என்றார் இந்திராணி அதிர்ச்சியுடன்.

"ஆமாம் அத்தை. இவங்களை நான் அனாதை இல்லத்தில் தான் பார்த்தேன்"

இந்திராணியும், பாட்டியும் கொதிக்கும் ஜுரத்துடன் இருந்த  ஷாலினியை நோக்கி விரைந்து சென்றார்கள்.

"இவளுக்கு ஜுரம் அடிக்குது" என்று பாதறினார் இந்திராணி.

"ஆமாம்... கூட இருந்து பாத்துக்க யாருமே இல்லாம, தரையில நிராதரவா படுத்திருந்தா. இவ நம்ம குழந்தை இல்லையா பாட்டி...? இவளை அனாதை இல்லத்தில் விடுறதுக்கு நமக்கு எப்படி துணிச்சல் வரும்?"

பாட்டியால் தனது கண்ணீரை நிறுத்த முடியவில்லை. தங்களது இல்லத்தில் இளவரசியாக வலம் வந்த குழந்தைக்கு நேர்ந்த கதியை பார்த்த போது யாரால் தான் தாங்கிக்கொள்ள முடியும்?

ஆதித்யாவை நோக்கி சென்றாள் கமலி. கண்ணீர் சிந்தும் அவள் முகத்தை பார்க்க முடியாமல் தலை தாழ்ந்தான் ஆதித்யா. அவன் கையைப் பற்றிக்கொண்டு,

"ஆதிஜி, நான் ஷாலினியை எப்பவும் விட்டுட மாட்டேன்னு  அவளுக்கு வாக்கு கொடுத்து இருக்கேன். இந்த குழந்தையை நீங்களும் விட மாட்டீங்கன்னு நம்பி தான் அதை நான் செஞ்சேன்"

தீர்க்கமாய் அவளை ஏறிட்டு, *சரி* என்று தலை அசைத்தான் ஆதித்யா. அவன் அங்கிருந்து செல்ல நினைத்து திரும்பிய போது, ரேணுகா அவனை அழைத்தாள்.

"ஆதி... "

அதை கேட்டு நின்ற ஆதித்யா, அடைத்த தன் தொண்டையை செருமிக் கொண்டு,

"பாட்டி... நான் அவங்களை ஒரே ஒரு காரணத்துக்காக தான் இங்கே இருக்க விடுறேன்" என்றான்.

அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அவளை ஷாலினிகாகத் தான் அவன் இருக்க விடுகிறான் என்று அவர்கள் எண்ணினார்கள். ஆனால் ஆதித்யாவின் மனதில் இருந்தது யாராலும் யூகிக்க முடியாத ஒன்று.

"தெரிஞ்சோ, தெரியாமலோ, அவங்களால தான் என்னோட கமலி என் வாழ்க்கையில வந்தா. அவங்க அதை எப்படிப்பட்ட எண்ணத்தோட செஞ்சிருந்தாலும் சரி, அதுக்காக நான் அவங்களுக்கு நன்றி கடன் பட்டிருக்கேன். ஆனா அவங்ககிட்ட பேச எனக்கு விருப்பமில்ல. அவங்க என்னைப் பேர் சொல்லிக் கூப்பிடுறதை கூட நான் விரும்பல. ( சேலைத் தலைப்பினால் தனது வாயை பொத்திக் கொண்டு அழுதாள் ரேணுகா) நீங்க எல்லாரும் அவங்ககிட்ட எப்படி வேணும்னாலும் நடந்துக்கங்க. அதை பத்தி எனக்கு கவலை இல்ல. ஆனா நான் அவங்ககிட்ட பேச மாட்டேன்" என்று கூறிவிட்டு தன் அறையை நோக்கி நடந்தான் ஆதித்யா.

கண்ணீருக்கு இடையில் புன்னகையுடன் நின்றாள் கமலி. ஆதித்யா உதிர்த்த வார்த்தைகள் அவளை விண்ணை தொட செய்தது. இது தான் ஆதித்யா அவள் மீது கொண்டுள்ள காதலின் ஆழம். ஆதித்யாவுக்கு நன்றாகவே தெரியும், தனக்கு பிரியமானவளை மற்றவர் முன் எப்படி கௌரவிப்பது என்று...

தொடரும்...

Continue Reading

You'll Also Like

255K 9.7K 40
கனவில் வரும் ராஜகுமாரன் நிஜத்தில் வரப்போவதில்லை என உறுதியாக நம்புகிறாள் மித்ரா.. நிஜத்திலும் வரக்கூடுமோ..
95.1K 4.2K 25
கடந்த காலத்தை மறந்து புது வாழ்க்கை தொடங்க போராடும் ஒரு பெண் முன் மீண்டும் கடந்த காலம் வந்தால் என்னாவாள்..
202K 4.9K 30
திருமணத்திற்கு பிறகு வரும் காதல்
28.7K 1.8K 34
முறுக்கு மீசையும், கட்டு மஸ்தான் உடலும், கலையான முகமும் கொண்ட வாலிபன் ஒருவன், அவசர சிகிச்சை பிரிவு அறையின், கதவில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடி வழியாக...