ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...

By NiranjanaNepol

150K 6.6K 1K

எல்லாவற்றிலும் வித்தியாசத்தை விரும்பும் நாயகன்... உலகமே அறியாத நாயகி... அவர்கள் வாழ்வில் நடைபெறும் சுவாரசியங்... More

1 திருமண கோரிக்கை
2 அதிரடி அறிமுகம்
3 ரகசிய திட்டம்
4 சிங்கத்தின் குகையில்
5 தொலைபேசி அழைப்பு
6 திருமதி ஆதித்யா
7 காத்திருந்த முதலிரவு
8 ஆதித்யாவின் முடிவு
9 அம்மாவின் அறிவுரை
10 சென்னையில் கமலி
11 திருமதி ஆதித்யா
12 புத்திசாலி பெண் தான்
13 நீங்கள் நல்லவர் தான்
14 அதிர்ஷ்ட தேவதை
15 பொய்
16 ஆதித்யா யார்?
17 கமலியின் சொந்த விதி
18 கமலியின் சாகசம்
19 கமலியின் புரிதல்
20 ஆதித்யாவின் பார்வை
21 ஆதித்யாவின் நடவடிக்கை
22 நான் உன்னுடன் டேம் இட்
23 கமலியின் அன்பு
24 ஒன்றுபட்ட மனங்கள்
25 விசித்திர உணர்வு
26 என்னோட ஆதிஜி
27 நீங்கள் என்றுடையவர்
28 கமலியின் இன்ப அதிர்ச்சி
29 நம்பிக்கை
30 அலுவலகத்தில் கமலி
31 ஒன்றுபட்ட மனங்கள்
32 மிஸஸ் பாஸ்
33 குமரிப்பெண்
34 மலர்க்கணைகள்...
35 அவளை நானறிவேன்...!
36 வஞ்சக உலகம்...
37 சோமபானம்
38 தொலைந்த மகள்
39 ஆதித்யாவின் நம்பிக்கை
40 முதல் முத்தம்
41 புதிய பரிமாணம்
42 நேர்மை
43 விஷநாகத்தின் குறி
45 யார் அது?
46 அந்த கண்கள்
47 பணம் பத்தும் செய்யும்
48 வித்யாசம்
49 ஆதித்யா...
50 நிஜ முகம்
51 அது வேறு...
52 கமலின்னா சும்மாவா?
53 கோவம் தனிந்தது
54 ஆதித்யாவின் பரிசு
55 விதி வலியது
57 ஒரே காரணம்
57 தவறல்ல... துரோகம்
58 கமலி கொடுத்த அதிர்ச்சி
59 பிரபாகரனின் உறுதி
60 குழந்தையின் ஏக்கம்
61 ஒப்புதல்
62 குடும்பம்
இறுதி பாகம்

44 என்ன நடக்கிறது?

2.2K 101 12
By NiranjanaNepol

44 என்ன நடக்கிறது?

யாருடனோ ஃபோனில் எரிச்சலுடன் பேசிக்கொண்டு இருந்தான் சரவணன்.

"இதெல்லாம் சரியா வரும்னு எனக்கு தோனல"

"......"

"இல்ல... நீ அவளை குறைச்சி எடை போடுற. அவ, நம்ம நினைச்சது மாதிரி இல்ல. ஆதித்யா முழுக்க முழுக்க அவளோட கண்ட்ரோல்ல இருக்கான். அவ அவனை அடிமையாக்கி வச்சிருக்கா. இது நமக்கு நல்லதில்ல. நான் சொல்றதை கேளு. எல்லாத்தையும் என்கிட்ட விடு. அவளை நான் பார்த்துக்கிறேன். அவளை எப்படி ஆதித்யாவோட வாழ்க்கையில இருந்து வெளியேத்தணும்னு எனக்கு தெரியும்"

"......."

"இல்ல, நான் அவசர பட மாட்டேன். ஒவ்வொரு அடியும் கவனமாத் தான் எடுத்து வைப்பேன்."

"...."

"சரி..."

அழைப்பைத் துண்டித்து நிம்மதிப் பெருமூச்சு விட்டான் சரவணன்.

அமைதியகம்

அனைவரும் வரவேற்பரையில் அமர்ந்து, கே.பாலச்சந்தர் இயக்கிய ஹிந்தி படமான *ஏக் துஜே கேலியே* வை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய ஆதித்யா, அவர்கள் அனைவரும் ஒரேடியாய் சினிமாவில் மூழ்கிவிட்டிருந்ததை கண்டான். அந்தப் படம் கிளைமாக்ஸை நெருங்கிக் கொண்டிருந்தது. நகத்தை கடித்தபடி கண்களை விரித்து பார்த்துக் கொண்டிருந்தாள் கமலி.

"கமலி, என்கூட வா" என்றான் ஆதித்யா.

"ஆதிஜி, ப்ளீஸ் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க" என்றாள் தொலைக்காட்சி பெட்டியில் இருந்து தன் கண்களை அகற்றாமல்.

"வந்து எனக்கு வருண் அண்ட் கோ ஃபைலை எடுத்து குடுத்துட்டு போ. ரொம்ப அர்ஜென்ட்"  என்றான்.

அவனைப் பார்த்து முகம் சுளித்தாள் கமலி. ஏனென்றால், அவனுடைய எந்த கோப்பையும் அவள் கையாள்வது இல்லை. அவளுக்காக காத்திராமல் அவர்களது அறையை நோக்கி சென்றான் ஆதித்யா. அவன் கேட்ட கோப்பை சீக்கிரம் எடுத்துக் கொடுத்து விட்டு மீண்டும் வந்து விடலாம் என்று அவன் பின்னால் ஓடினாள் கமலி.

"ஆதிஜி, எதுக்காக என்னை கூப்பிட்டீங்க? எனக்கு அந்த ஃபைலை பத்தி எதுவும் தெரியாது" என்றாள்.

"உனக்கு தெரியாதுன்னு எனக்கு தெரியும். உண்மையில அப்படி ஒரு ஃபைலே இல்ல..."

அதை கேட்டு வாயை பிளந்தாள் கமலி.

"ஆங்... அப்புறம் எதுக்கு என்னை கூப்பிட்டீங்க? அந்த படம் எவ்வளவு இன்டர்ஸ்ட்டா இருந்தது தெரியுமா? ஹிந்தி படத்தில் தமிழ் பேசினாங்க" என்றாள் சிணுங்கலுடன்.

"தெரியும்... அதோட, வேற ஒரு விஷயமும் எனக்கு தெரியும்..."

"என்ன விஷயம்?"

"அந்த படத்தோட கிளைமாக்ஸை பார்த்து நீ அழுவ. மூஞ்சிய சோகமா வச்சுக்கிட்டு, அதைப் பத்தியே நினைச்சுகிட்டு, இந்த நாளை பாழாக்குவ... அதனால தான் உன்னை கூப்பிட்டேன்"

"ஆனா, ஏன் ஆதிஜி?"

"ஏன்னா, ஹீரோவும், ஹீரோயினும்
கிளைமாக்ஸில் செத்துடுவாங்க"

"அய்யய்யோ நெஜமாவா?" என்றாள் அதிர்ச்சியாக.

ஆமாம் என்று தலையசைத்தான் ஆதித்யா.

"நல்ல காலம், என்னை நீங்க கூப்பிட்டீங்க" என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டாள் கமலி.

அவள் அவனிடம் ஏதோ கேட்க நினைக்க, அதற்கு முன், சிரித்தபடி குளியல் அறையை நோக்கி சென்றான் ஆதித்யா. அவன் திரும்பி வந்த பொழுது, அவனுக்கு காபி எடுத்துக் கொண்டு உள்ளே வந்தாள் கமலி. அவளிடமிருந்து காபி குவளையை பெற்றுக்கொண்டு சோபாவில் அமர்ந்தான் ஆதித்யா. அவனுக்கு முன்னாள், கமலி முழங்காலிட்டு அமர, முகத்தை சுருக்கினான் ஆதித்யா.

"நீங்க அந்த படத்துல இருக்கிற எல்லா பாட்டையும் பாத்திருக்கீங்களா?" என்றாள் ஆர்வமாக கமலி.

"ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி பார்த்தேன்..." என்று அவன் இழுக்க... கமலியின் முகத்தில் ஏமாற்றத்தை கண்டான்.

"இதுல அப்செட் ஆகுறதுக்கு என்ன இருக்கு?" என்றான்.

"நீங்க சொன்னப்போ நான் நம்பவேயில்லை..."

"நான் சொன்ன எதை நீ நம்பல?"

"நீங்க சொன்னீங்கல்ல, என்னை உங்க மடியில உட்கார வச்சு உங்களால பைக் ஓட்ட முடியும்னு?"

அதைக் கேட்டு ஆச்சரியம் அடைந்தான் ஆதித்யா. இன்னுமா அவள் அதை நினைவில் வைத்திருக்கிறாள்?ஆமாம் என்று தலையசைத்தான்.

"அந்த படத்துல, ஒரு பாட்டுல, ஹீரோயினை முன்னால உட்கார வச்சு ஹீரோ பைக் ஓட்டுவார்."

"மடியில உட்கார வச்சு ஓட்டலயா?" என்றான் சிரித்தபடி.

"இல்ல, ஆனா, நீங்க சொன்னது தான் எனக்கு ஞாபகம் வந்தது..."

"இப்போ உனக்கு நான் சொன்னதுல நம்பிக்கை வந்துதா?"

"கொஞ்சம் வந்தது... ஆனா, அது சினிமா"

"நீ சொல்றது சரி தான்"

அதைக் கேட்டு பெருமூச்சு விட்ட கமலியை பார்த்து சிரித்தான் ஆதித்யா. இந்தப் பெண் எப்போதும் ஏதோ ஒரு *குட்டையை* குழப்பிக் கொண்டே இருக்கிறாள். அவள் மனதுக்கு ஓய்வு என்பதே இல்லை.

அவள் அங்கிருந்து செல்ல நினைத்த பொழுது, அவளை இழுத்து தன் மடியில் அமர வைத்துக் கொண்டான் ஆதித்யா.

"ஆதிஜி, என்னை விடுங்க"

"உனக்கு என் மடியில உட்காரணும்னு தோணுச்சுன்னா, அதை இப்பவே செய்யேன்..."

"இல்ல... சும்மா தான்..."

"சும்மாவா?"

"நான் படிக்கணும். என்னை விடுங்க"

"என் மடியில உட்கார்ந்து படி"

"அது என்னால முடியாது"

"ஏன்?"

"படிக்கும் போது, கவனம் பாடத்து மேல இருந்தா தான் படிக்க முடியும்"

"ஓஹோ... "

"நீங்க இப்படி நெருக்கமா இருந்தா, என்னோட கவனம் எப்படி பாடத்து மேலே போகும்?" என்றாள் சோகமாக.

"உன்னால பாடத்துல கவனத்தை செலுத்த முடியாதா?"

முடியாது என்று தலையசைத்தாள்.

"அப்படின்னா என் மேலே உன் கவனத்தை செலுத்து"

"அப்படினா, நாளைக்கு என்னோட அப்சர்வேஷனை யாரு சப்மிட் பண்றது?"

தன் கண்களை சுழற்றி சிரித்தான் ஆதித்யா. இமை கொட்டாமல் அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள் கமலி.

"அப்படி என்ன என் மூஞ்சில பாக்குற?"

"நீங்க சிரிக்கும் போது ரொம்ப அழகா இருக்கீங்க"

"போற போக்கை பார்த்தா, நாளைக்கு நீ உன் அப்சர்வேஷனை சப்மிட் பண்ண மாட்டே போல இருக்கு" என்று சிரித்தான்.

"என்ன விடுங்க"

"நான் உன்னை விடனும்னா, எனக்கு ஏதாவது குடு" என்று அவனது கன்னத்தை காட்டினான்.

முத்தம் கொடுப்பது போல் பாவனை செய்து விட்டு, அவன் கன்னத்தை கடித்தாள் கமலி.

"ஸ்ஸ்ஸ்..." என்றான் ஆதித்யா.

அவன் மடியிலிருந்து எழுந்து நின்று,

"*ஏதாவது* கொடுன்னு சொன்னிங்க. ஆனா, என்ன கொடுக்கணும்னு விளக்கமா சொல்லலையே..." என்று கைகொட்டி சிரித்தாள்.

அவள் தனது புத்தகத்தை எடுத்துக்கொண்டு கட்டிலின் மீது அமர, அவளருகில் சென்று அந்தப் புத்தகத்தை பிடுங்கி கட்டிலின் மீது வைத்துவிட்டு அவளை அணைத்துக் கொண்டான் ஆதித்யா.

"உனக்கு நான் விளக்கமா சொல்லனுமா?"

"என்னை விடுங்க ஆதிஜி"

"நீ தானே விளக்கமா சொல்லனும்னு சொன்னே... இரு உனக்கு விளக்கமா சொல்றேன்"

ஆதித்யா கூறியது சரி தான். கமலி நாளை அப்சர்வேஷனை சப்மிட் செய்யப் போவதில்லை போலிருக்கிறது. அவள் தான் அவளது கணவனை அப்சர்வ் செய்ய துவங்கி விட்டாளே...

மறுநாள் காலை

ஆதித்யாவின் மூடியிருந்த இமைகளை, விடிகாலை எரிந்த விளக்கு வெளிச்சம் தழுவ, தூக்கத்திலிருந்து கண் விழித்தான் ஆதித்யா. சோபாவில் அமர்ந்து தனது அப்சர்வேஷனை எழுதிக் கொண்டிருந்தாள் கமலி. கட்டிலில் எழுந்து அமர்ந்தான் ஆதித்யா.

"நான் உனக்கு ஹெல்ப் பண்ணட்டுமா?" என்றான்.

சரி என்று தலையசைத்தாள் கமலி.

"என்ன செய்யணும் சொல்லு"

"என் வேலையை முடிக்கிற வரைக்கும், தயவுசெய்து என்கிட்ட வந்துடாதீங்க" என்று கையெடுத்து கும்பிட்டாள் கமலி.

அதைக் கேட்டு வாய்விட்டு சிரித்தான் ஆதித்யா.

"ஐயோ பாவம்... என்னோட எஃபெக்ட் உன்னை இவ்வளவு பாடா படுத்துதா கமலி?"

முகத்தை பாவமாய் வைத்துக் கொண்டு *ஆமாம்* என்று தலையசைத்தாள் கமலி. தன் கண்களை மூடி சிரித்தான் ஆதித்யா. தன் மனதில் ஏற்படும் உண்மையான உணர்வுகளை வெளியில் சொல்ல அவள் தயங்குவதே இல்லை. அது தான் அவளது சிறப்பம்சம். தலைக்கணம், அகங்காரம், ஈகோ எதுவும் இல்லாத குழந்தை உள்ளம் அவளுடையது. அது தான் அவளை எப்பொழுதும் தனித்துக் காட்டுகிறது. எல்லாவற்றிலும் வித்தியாசத்தை விரும்பிய ஆதித்யாவே கூட, தனது திருமண வாழ்க்கை, கமலியால்  இவ்வளவு வித்தியாசமாய் அமையும் என்பதை எதிர்பார்த்திருக்கவில்லை. தினம் தினம் எதோவொரு விஷயம் அவளுக்கு கிடைத்துவிடுகிறது, அந்த நாளை ஸ்வரசியமாக்க. ஆதிஜி, ஆதிஜி, என்று அவனையே சுற்றி சுற்றி வரும் அவள் ஒரு பொக்கிஷம்.

இரண்டு நாட்களுக்கு பிறகு

ஒரு குடும்ப நண்பரின் பார்ட்டிக்கு செல்ல அனைவரும் தயாராகிக் கொண்டிருந்தார்கள். மயூரியும், சுரேஷூம், மயூரியின் வளர்த்த பெற்றோரைப் பார்க்க ஏற்கனவே கிளம்பிச் சென்று விட்டிருந்தார்கள்.

"நீ ஏன் கமலி எங்க கூட வரல?"என்றார் இந்திராணி.

"நீங்க தானே அத்தை சொன்னீங்க, நீங்க எல்லாரும் திரும்பி வர லேட் ஆகும்னு?"

"ஆமாம், அதனால என்ன?"

"வீட்ல யாருமே இல்ல. ஆதிஜி வந்தா தனியா இருப்பாரு"

"நீ சொல்றதும் சரி தான். ஆதி தனியா இருந்தா, அவனை காக்கா தூக்கிகிட்டு போயிடும்..." என்று அவள் காலை வாரினார் இந்திராணி.

"போங்க அத்தை"

"பின்ன என்ன? உன் புருஷன் என்ன குழந்தையா, அவனை பொத்தி பொத்தி வைக்கிறதுக்கு?"

"அவளை ரொம்ப கிண்டல் பண்ணாத இந்திராணி. அவளால தான் ஆதி வீட்டுக்கு சீக்கிரம் வர ஆரம்பிச்சான்" என்றார் பாட்டி.

"நீங்க சொல்றது சரி தான் அத்தை." என்று கமலியை பார்த்த இந்திராணி,

"உனக்கு தெரியுமா கமலி? ஒரு நாள் அவனை வீட்டுக்கு சீக்கிரம் வர வைக்க கூட நாங்க அவ்வளவு பாடுபட வேண்டியிருக்கும். சீக்கிரம் வீட்டுக்கு வான்னு சொன்னா, கண்ணை சுழட்டிட்டு, போய்கிட்டே இருப்பான். ஆனா இப்போ, கடிகாரம் ஆறை தோடுதோ இல்லையோ, ஆதி வீட்டுக்குள்ள கரெக்டா நுழைஞ்சிடுறான்"

அவர்கள் பேசியதைக் கேட்கவே சந்தோஷமாக இருந்தது கமலிக்கு. அப்படி என்றால், பார்ட்டிக்கு செல்ல வேண்டாம் என்று அவள் எடுத்த முடிவு சரி தான். அவள் ஆதிஜிகாக வீட்டில் இருப்பது தான் சரி.

தனது அறையில் அமர்ந்து வீட்டுப் பாடங்களை செய்து கொண்டிருந்தாள் கமலி. ஆதித்யா வருவதற்கு முன் தனது வீட்டு படங்களை முடித்து விடவேண்டும் என்று நினைத்தாள் அவள். அவன் வந்து விட்டால் அவள் அதை செய்வது சந்தேகம் தான். நேரம் ஆகிக் கொண்டே இருந்ததால் அவளுக்கு வெறுப்பானது. அவளுக்கு காபி குடிக்க வேண்டும் என்று தோன்றியதால் சமையல் அறைக்கு வந்தாள். அங்கு, முத்து அவர்கள் இருவருக்காக சமைத்துக் கொண்டு இருந்தான்.

"ஏதாவது வேணுமா அண்ணி?"

"காபி வேணும் முத்து அண்ணா"

"நான் போட்டு கொண்டு வரேன் அண்ணி"

"இல்ல, நானே போட்டுக்கறேன். நீங்க உங்க வேலைய முடிச்சிட்டீங்களா?"

"முடிக்க போறேன் அண்ணி"

" உங்களுக்கும் காபி வேணுமா?"

"வேண்டாம் அண்ணி. எல்லாரும் சாப்பிடும் போது, நானும் ஒன்னு சாப்பிட்டேன். அது போதும்."

காபி கலந்து கொண்டு வந்து வரவேற்பு அறையில் அமர்ந்து குடித்து முடித்தாள் கமலி. மணி எட்டு ஆகிவிட்டது.

"ஏன் இன்னைக்கு ஆதிஜி வர இவ்வளவு நேரம் ஆகுது? எப்ப வர போறாரோ தெரியல" என்று அலுத்துக் கொண்டாள் கமலி.

அப்பொழுது அழைப்பு மணியின் ஓசை கேட்டு அவள் முகம் மலர்ந்தது. ஓடிச்சென்று கதவை திறந்தவளுக்கு ஏமாற்றமாகிப் போனது. ஆதித்யாவுக்கு பதிலாக வேறு யாரோ ஒருவன் நின்றிருந்தான்.

"நீங்க யாரு?" என்றாள் ஒன்றும் புரியாமல்.

"ஆதித்யா சார் உங்களை கூட்டிக்கிட்டு வரச் சொன்னாரு" என்றான் அந்த மனிதன்.

"எங்க?"

"எங்கன்னு உங்ககிட்ட சொல்ல வேண்டாம்னு சொல்லி இருக்காரு" என்று புன்னகைத்தான்.

"நீங்க யாரு? உங்களை நான் இதுக்கு முன்னாடி பார்த்ததே இல்லையே?"

"இன்ட்காம்ல ரெண்டு நாளைக்கு முன்னாடி தான், டிரைவரா வேலையில சேர்ந்தேன்."

"ஓ... வரேன் இருங்க"

தங்களின் அறைக்கு சென்று தன் கைப்பேசியை எடுத்து வந்தாள்.

"முத்து அண்ணா..." என்று உள்ளே பார்த்தபடி அழைத்தாள்.

"சொல்லுங்க அண்ணி"

"ஆதிஜி என்னை கூட்டிக்கிட்டு வரச் சொன்னாராம். பாட்டி வந்தாங்கன்னா அவங்ககிட்ட சொல்லிடுங்க"

"சரிங்க அண்ணி"

அந்த மனிதனுடன் கிளம்பி சென்றாள் கமலி. ஆதித்யாவிடமிருந்து இரண்டு மிஸ்டு கால்கள் வந்திருந்தது. அவள் அவனுக்கு போன் செய்த போது, அது *நாட் ரீச்சபிள்* ஆக இருந்தது.

சிறிது நேரத்திற்கு பிறகு, கிழக்கு கடற்கரை சாலையில் நுழைந்த கார் வேகம் எடுப்பதை கவனித்தாள் கமலி.

"அண்ணா, இது ஆபிஸுக்குப் போற வழி இல்லையே..." என்றாள் கமலி பதட்டத்துடன்.

"ஆமாம்"

"என்னை எங்க கூட்டிட்டு போறீங்க?"

"அதை சொல்ல எனக்கு உத்தரவு இல்ல"

"வேற எதை செய்ய உங்களுக்கு உத்தரவு?"

"என்னால உங்ககிட்ட எதையும் சொல்ல முடியாது"

"காரை நிறுத்துங்க"என்று சத்தமிட்டாள் கமலி.

அந்த கார் மேலும் வேகம் எடுத்தது கமலியை பீதிக்கு உள்ளாக்கி.

"காரை நிறுத்துங்கன்னு சொன்னேன்" என்று கூச்சலிட்டாள் கமலி.

ஆளரவமற்ற இடத்தில் வண்டியை நிறுத்தினான் அவன். காரை விட்டு கீழே இறங்கிய கமலி, இலக்கின்றி ஓடத் துவங்கினாள்.

தொடரும்...

Continue Reading

You'll Also Like

152K 6.4K 25
அவள் உள்ளங்கவரப் போகும் கள்வன் அவன்..
255K 9.7K 40
கனவில் வரும் ராஜகுமாரன் நிஜத்தில் வரப்போவதில்லை என உறுதியாக நம்புகிறாள் மித்ரா.. நிஜத்திலும் வரக்கூடுமோ..
58.9K 2.4K 36
காதலாகி, காதலாகி காத்திருந்தேன் நான். காலம் தந்த வேதனையை வென்று வந்தேன் உன் காதலால்,, நீயே என் உலகமென்று புரியவைத்தாய் கண்மணி உன் காதல் மொழியில். உ...