தித்திக்கும் கன்னலோ எத்திக்கு...

By Vaishu1986

81.1K 3.8K 776

தனது நண்பனின் ஒரு முடிவால் நாயகியின் வாழ்க்கை பாதையுடன் சென்று இணையும் நாயகன், அவளுக்கு கன்னலாய் இனிக்கிறானா... More

🧡 கன்னல் 1
🧡 கன்னல் 2
🧡 கன்னல் 3
🧡 கன்னல் 4
🧡 கன்னல் 5
🧡 கன்னல் 6
🧡 கன்னல் 7
🧡 கன்னல் 8
🧡 கன்னல் 9
🧡 கன்னல் 10
🧡 கன்னல் 11
🧡 கன்னல் 12
🧡 கன்னல் 13
🧡 கன்னல் 14
🧡 கன்னல் 15
🧡 கன்னல் 16
🧡 கன்னல் 17
🧡 கன்னல் 18
🧡 கன்னல் 19
🧡 கன்னல் 20
🧡 கன்னல் 21
🧡 கன்னல் 22
🧡 கன்னல் 23
🧡 கன்னல் 24
🧡 கன்னல் 25
🧡 கன்னல் 26
🧡 கன்னல் 27
🧡 கன்னல் 28
🧡 கன்னல் 29
🧡 கன்னல் 30
🧡 கன்னல் 31
🧡 கன்னல் 32
🧡 கன்னல் 33
🧡 கன்னல் 34
🧡 கன்னல் 35
🧡 கன்னல் 36
🧡 கன்னல் 37
🧡 கன்னல் 38
🧡 கன்னல் 40
🧡 கன்னல் 41
🧡 கன்னல் 42
🧡 கன்னல் 43
🧡 கன்னல் 44
🧡 கன்னல் 45
🧡 கன்னல் 46
🧡 கன்னல் 47
🧡 கன்னல் 48
🧡 கன்னல் 49
🧡 கன்னல் 50
🧡 கன்னல் 51
🧡 கன்னல் 52
🧡 கன்னல் 53
🧡 கன்னல் 54
🧡 கன்னல் 55
🧡 கன்னல் 56
🧡 கன்னல் 57
🧡 கன்னல் 58
🧡 கன்னல் 59
🧡 கன்னல் 60
🧡 கன்னல் 61
🧡 கன்னல் 62
🧡 கன்னல் 63
🧡 கன்னல் 64
🧡 கன்னல் 65
🧡 கன்னல் 66
🧡 கன்னல் 67
🧡 கன்னல் 68
🧡 கன்னல் 69
🧡 கன்னல் 70
🧡 கன்னல் 71
🧡 கன்னல் 72
🧡 கன்னல் 73
🧡 கன்னல் 74
🧡 கன்னல் 75
🧡 கன்னல் 76
🧡 கன்னல் 77
🧡 கன்னல் 78
🧡 கன்னல் 79
🧡 கன்னல் 80
🧡 கன்னல் 81

🧡 கன்னல் 39

619 45 5
By Vaishu1986

அரை மணி நேரத்திற்கு பிறகு நந்தினியுடைய அறையில் ராமுவிடம் ஜேவி, "மிமோ.... ஐஸ் க்யூப்ஸ் வேணுமா? இல்ல வாஸ்லின், ரோஸ் வாட்டர் இதுல ஏதாவது?" என்று கேட்க அவனை கொலைவெறியுடன் முறைத்த ராமு,

"நந்தினிமா! இந்தப் பயல இங்கருந்து போய்த் தொலைய சொல்லுங்க! நொச நொசன்னு விடாம பேசி என் உசுர வாங்குறான்!" என்று நந்தினியிடம் புகார் படித்தாள்.

"டேய் அறிவுகெட்டவனே..... நீ என்ன பார்பேரியனா? இப்டி ஓப்பனா தெரியற அளவுக்கு ராமு பேபிய பைட் பண்ணி வச்சிருக்க? ஆர் யூ க்ரேஸி?" என்று கேட்டு அவனது பரந்த முதுகில் சுளீரென ஒரு அடி வைத்த தன் அத்தையிடம் அதே அளவு கோபத்துடன் அவன்,

"நீ சும்மாயிரு புல்புல்! இவ ஒண்ணும்
லேசுப்பட்டவ இல்ல; மான்ஸ்டர் மாதிரி அட்டாக் பண்ணி இவ என்னை எங்க கடிச்சு வச்சா தெரியுமா? உங்கிட்ட சொல்ல முடியற இடந்தான்! இருந்தாலும் எங்க ரொமான்ஸ் சீன்ஸ் எல்லாம் உங்கிட்ட 20% சொன்னா போதும்னு நீ தான சொன்ன? அதுனால நான் உங்கிட்ட சொல்ல மாட்டேன் போ! நாளைக்கு ஷுட்ல இவளோட பைட் மார்க் இவளுக்கு ரொம்ப யூஸ் ஆகும்! அத என்ன இவ அபய் கிட்டயா வாங்க முடியும்? எங்கிட்ட தான் வாங்க முடியும்!" என்று சொல்லி எதற்காகவோ தனக்குள் புன்னகைத்துக் கொண்டான் ஜேவி.

அவன் பேசி முடித்த இரண்டு நொடிகளில் அவனது கழுத்தைப் பற்றியிருந்த ராமுத்தாயி, "இந்தாருடா நீயி இப்ப என்ன சொன்ன? முத்தம், கித்தம்னு கேட்டு ஒன்னைய தவிர வேற எவனாவது எம்பக்கத்துல வந்தான்...... அம்புட்டு பேரு மொகரையும் ஒடைச்சி விட்டுடுவேன் பார்த்துக்க! இன்னிக்கு அடிச்ச கூத்து பத்தாதுன்னு நாளைக்கு இதுக்கு மேல ஒரு பெரிய சம்பவத்த வச்சிருக்கீகளாடா?" என்று கேட்டவளிடம் மறுப்பாக தலையசைத்த ஜேவி,

"ரிலாக்ஸ் மிமோ..... நான் உன் மேல உள்ள லவ்லயும், ஆசையிலயும் தான்
கொஞ்ச நேரம் முன்னால உன்னை கிஸ் பண்ணினேன்! உன் மூவிக்காக இல்ல.....
சும்மா இப்டி சொன்னா உன்னோட ரியாக்ஷன் என்னவா இருக்கும்னு தெரிஞ்சுக்க ஆசையா இருந்தது! அவ்ளோதான்; உன்னை எம்பாரெஸ் பண்ற மாதிரி மூவியில சீன்ஸ் இருக்காது! அப்டியே இருந்தாலும் நீயும், அபயும் வேற வேற ஆங்கிள்ஸ்ல பக்கத்துல நின்னு பேசிட்டு தான் இருப்பீங்க சரியா?" என்று கேட்டவனை மேலும் கீழுமாக பார்த்து விட்டு நந்தினியிடம்,

"ஏன் நந்தினிமா! இந்தப் பையன் நான் நெனச்ச அளவுக்கு உத்தமபுத்திரன்லாம் இல்ல போலிருக்கே?" என்று கேட்டாள் ராமுத்தாயி.

"எக்ஸாட்லி ராமு! உத்தமபாளையம் போயிட்டு வந்ததுல இருந்து
நானும் இவனப் பத்தி
இதே மாதிரி தான் நினைச்சுட்டு இருக்கேன்! எங்கப்பா என்ன குடுத்தாலும், அத க்ராம்ஸ் கணக்கு குறையாம அவருக்கு திருப்பி தருவேன்னு எங்கிட்ட சொன்னவன் இவன்...... பாலாண்ணா கொஞ்சம் ரிசர்வ்டு பெர்ஸன் தான்; ஆனா மகனோட என்கேஜ்மெண்ட்டுக்காக எவ்ளோ சிம்பிளா ஊருக்கு வர முடியுமோ வந்து, இவனுக்காக கூட நின்னாருல்ல! ஊர்ல அவர் செஞ்ச மாவிளக்கு கரெக்டான ஷேப்ல வரலன்னு அவருக்கு எவ்ளோ வருத்தம் தெரியுமா ராமு? இதெல்லாம் இவன் கண்ணுக்கு பாசமா தெரியலயாமா? யாரோ ஒரு முத்தழகன் வீடு வரைக்கும் எங்கண்ணா வந்து பேசுனதும் மிஸ்டர் ஜேவிக்கு பத்தாதாமா? என்கேஜ்மெண்ட் முடிஞ்சதும் எங்கண்ணா, அண்ணிட்ட இவன் ஒரு ஆசிர்வாதம் வாங்கியிருக்கலாம்ல?
அவங்க ரொம்ப சந்தோஷப் பட்டுருப்பாங்களே? அத செஞ்சானா இவன்? இவன் நல்லவனெல்லாம் இல்ல ராமு பேபி! ரொம்ப திமிரு பிடிச்சவன், பொஸஸிவ் டைப், அடமெண்ட், ஷெல்ஃபிஷ்.......!" என்று சொன்ன நந்தினியின் கருத்தை ஆமோதித்த ராமுத்தாயி,

"நல்லா சொன்னீக நந்தினிமா! இவன் பன்னீர் சித்தப்பு கிட்ட கூட அப்டித்தான பேசுனான்? சரியான காரியவாதி! இவன் வேலைக்காக ஏதோ ப்ளான் போட்டு வச்சிருக்கானாம்; அத மட்டும் பாலன் மாமா பார்த்து இவனுக்கு வேணும்ங்குறத செஞ்சு குடுக்கணுமாம்! ஆனா இவரு அவுக அப்பாருட்ட வாயில இருக்குற முத்த உதுத்து வுட மாட்டாராம்! என்னையவே ஏங்கி ஏங்கி அழ வச்சவன்தான இவன்...... நீங்க சொன்னாப்ல இவன் சுயநலம் பிடிச்சவன் தான் நந்தினிமா!" என்று சொன்ன ராமுவிடமும், நந்தினியிடமும் ஒன்றும் எதிர்த்துப் பேசாமல் அவர்களிருவரையும் கூர்பார்வை பார்த்துக் கொண்டிருந்தான் ஜேவிபி.

"என்ன மொறைக்கிற! நாங்க கரெக்டா தான பேசுறோம்?" என்று கேட்ட நந்தினியிடம்,

"ஆமாமா புல்புல்! இன்னும் ஹிட் லிஸ்ட்ல இருக்குற க்ரிமினெல், இன்டர்நேஷனலி வாண்டட் டெரரிஸ்ட் இதெல்லாம் தான் பாக்கி...... அதையும் சேர்த்து சொல்லிடுங்க! உங்க ரெண்டு பேரோட criticism ஒரு கம்ப்ளீட் ஷேப்புக்கு வந்துடும்!" என்றான் ஜேவி அடக்கப்பட்ட கோபத்துடன் அழுத்தமான குரலில்.

"ஜெ....ஜெகனு......! நாங்க உள்ளத தான சொன்னோம்? உங்கிட்ட கொஞ்சமா தப்பா இருக்குற கொணத்த நீயி மாத்திக்க முயற்சி பண்ணலாமில்லையா? நாங்க ரெண்டு பேரும் ஒன்னைய திட்டுனதுனால கோபமா இருக்கியா நீயி?" என்று சொன்ன ராமுத்தாயினுடைய குரல் மிகவும் மெலிந்திருந்தது. அவன் கோபப்பட்டாலும் அவளால் தாங்க முடியவில்லை; வருத்தப்பட்டாலும் அவளுக்குப் பிடிக்கவில்லை!

"ச்சே...ச்சே! கோபமா? எனக்கா? Arrogant, Adament, Possessive, Selfish, Activist, இதோட Aggressive Man ங்குற புது டைட்டிலும் சேருறதுக்கா? போதும்மா! உங்க ரெண்டு பேரோட ஸ்பீச்சுக்கும் ரொம்ப தேங்க்ஸ்! நான் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிக்கணும்....... என் ரூமுக்குப் போயிட்டு டென் மினிட்ஸ்ல வர்றேன்!" என்று இருவரிடமும் சொல்லி விட்டு சென்றவன் அறைக்கதவை தாண்டும் முன்னர் ராமுத்தாயின் கண்களிலிருந்து நீர் பெருக ஆரம்பித்து விட்டது.

"ஏ.....ய் ராமு! கடிச்சு வச்சா ஒருத்தர ஒருத்தர் போட்டி போட்டு கடிச்சு வச்சுக்குறீங்க! இப்போ அவன் கொஞ்சம் டல் ஆனா உங்கண்ணுல இருந்து தண்ணி கொட்டுது! உங்களோட obsessed லவ்வ பார்த்து எனக்கு கொஞ்சம் பயமாயிருக்கும்மா!" என்று சொன்னவரிடம் ஒன்றும் பதில் பேசாமல்
தோளில் சாய்ந்து கொண்டாள் ராமுத்தாயி.

"நெஜமாவே ஜெகன் மேல உனக்கு கோபம் இருக்குதா ராமு?" என்று அவளை அணைத்த படி அவளது தாடையைப் பற்றி கேட்டவரிடம் இல்லையென வேகமாக தலையாட்டினாள் ராமுத்தாயி.

"எல்லாரும் ஹாப்பியா இருக்கணும்ங்குறதுக்காக தான் இப்டி ஒரு சின்ன ட்ரிக்! நம்ம ரெண்டு பேரும் அவன கார்னர் பண்ணினா, ஏன் பண்றோம், எதுக்காக பண்றோம்னு கொஞ்சம் யோசிக்கவாவது செய்வான்! நான் மட்டும் கத்துற விஷயம் எல்லாம் அவன் காதுக்குள்ள முழுசா கூட போகாது! அதுக்குதான்டா! லிப்ஸ் ரொம்ப வலிக்குதா ராமு?" என்று கேட்ட நந்தினியிடம்,

"இல்ல நந்தினிமா! ஜெகனுக்கும் அவனோட முதுகுல நான் கடிச்சு வச்சது வலிக்காதுல்ல..... பாவம் அந்த பாண்டி
முனியாண்டி என்னைய கட்டிக்கிட்டு ரொம்ப கஷ்டப்படப் போறான்!" என்று வருத்தக் குரலில் நந்தினியிடம் சொன்ன ராமுத்தாயை பார்த்து சிரித்த நந்தினி,

"ம்ஹூம்! உங்க ரெண்டு பேரையும் வச்சிக்கிட்டு நாங்க தான் ரொம்ப கஷ்டப்படப் போறோம் ராமு; Exactly Love is a dangerous thing; ஆள விடுங்கப்பா!" என்று அவளிடம் சொல்லி விட்டு சிரிப்புடனே சென்றார்.

அன்றைய இரவு உணவு நேரம் மிகவும் அமைதியான முறையில் நடந்து கொண்டிருக்க மாசிலா பாலன் தெய்வஜோதியின் முகத்தைப் பார்த்து விட்டு மற்ற மூவரின் முகங்களையும் ஆராய்ந்து கொண்டிருந்தார். ராமுத்தாயின் முகத்தை சற்று ஊன்றிப் பார்த்தவருக்கு இந்த டின்னரின் அமைதிக்கான பொருள் இப்போது விளங்கியது.

"ஓ....... நம்ம பையன் ரொம்ப அமைதியா இருக்குறதுக்கு காரணம் கில்ட்டினெஸா?" என்று நினைத்த படி உதட்டின் புன்னகையை உள்ளுக்குள்ளேயே அடக்கிக் கொண்டவர்,

"ராமு.... பட்டர் வேணும்னா எடுத்துக்கோடாம்மா!" என்றார் அவளைப் பார்த்து புன்னகைத்த படி.

"நான் ரச சாதந்தேன் சாப்டுறேன் பாலன் மாமா! எனக்கு எதுக்கு வெண்ணை?" என்று கேட்டு புரியாமல் விழித்தாள் ராமு.

"ஐஸ் க்யூப்ஸ், வாஸ்லின் எல்லாம் எதுக்கு யூஸ் ஆகுமோ பட்டர் கூட அதுக்கு தான் யூஸ் ஆகும்!" என்று குறுஞ்சிரிப்புடன் சொல்லி விட்டு ஜெகன் அவன் பாட்டில் உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்க அவன் பேசிய வார்த்தைகள் முடிந்த அடுத்த நொடியில் தன் வருங்கால மாமனார் எதற்காக தன்னிடம் இந்த கேள்வியை கேட்டார் என்று ராமுவுக்குப் புரிந்து விட தான் உண்ணும் தட்டுக்குள்ளே தானும் போய் விடுபவள் போல் குனிந்து கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள் அவள்.

"டைனிங் டேபிளுக்கு வந்தா வாய சாப்டுறதுக்கு மட்டும் யூஸ் பண்ண மாட்டீங்களா? இப்ப எதுக்கு நம்ம மருமகள எம்பாரெஸ் பண்ணிட்டு இருக்கீங்க? உங்களுக்கு மட்டுந்தான் கண்ணும், அவ மேல அக்கறையும் இருக்குற மாதிரி எதுக்கு இந்த தேவையில்லாத ட்ராமா?" என்று தன் கணவரிடம் முணுமுணுத்த தெய்வஜோதியிடம்,

"இல்ல ஜோதி.... நமக்கு முந்தின ஜெனரேஷன் ஆளுங்க எல்லாம் பிள்ளைங்க சந்தோஷத்தை கண்டும் காணாத மாதிரி ஒரு சைலண்ட் ஸ்மைலோட கடந்துடுவாங்க! பட் நான் கொஞ்சம் வித்தியாசமான பாதர் இன்லாவா உங்க ஹாப்பினெஸ்க்கு கிடைச்ச எவிடெண்ஸ நானும் பார்த்துட்டேன்னு இன்டேரக்டா ராமு பேபிட்ட இன்ஃபார்ம் பண்றேன்! இதுல என்னடீ தப்பு?" என்று அவரும் திரும்ப முணுமுணுக்க அவர்கள் இருவரையும் பார்த்த ஜேவி தன்னுடைய தொண்டையை கனைத்துக் கொண்டான்.

"அப்.......பா! ஏன் நீங்களும் அம்மாவும் இன்னிக்கு கொஞ்சம் வியர்டா பிஹேவ் பண்றீங்க? எங்க என்கேஜ்மெண்ட்ல
நாங்க ரெண்டு பேரும் உங்க ரெண்டு பேர் கிட்டயும் ப்ளெசிங்ஸ் வாங்கவே இல்லையே? டின்னர் முடிச்சவுடனே ரூமுக்குப் போயிடாதீங்க! வீ நீட் யுவர் ப்ளெசிங்ஸ்!" என்று சொல்லி விட்டு ஜேவி அவன் பாட்டில் சாப்பிட பாலனும், தெய்வாவும் ஆச்சரியத்தில் திகைத்து போய் நந்தினியுடைய முகத்தைப் பார்த்தனர்.

"இப்ப இங்க நடந்த மிராக்குளுக்கும், எனக்கும் சத்தியமா எந்த சம்பந்தமும் இல்ல பாலாண்ணா! நான் ஜஸ்ட் புதன்கிழமை ஈஸ்வர்ஸ்ல ட்யூட்டி ஜாய்ன் பண்ணப்போறேன்னு உங்க ரெண்டு பேர் கிட்டயும் இன்ஃபார்ம் பண்றதுக்கு வந்தேன்; அவ்ளோதான்!" என்று அவர்களிடம் சொன்னார் நந்தினி.

"ஏய் புல்புல்..... இப்ப இங்க என்ன மிராக்கிள் நடந்தது? இவர் என்னோட அப்பா தான? என் அப்பாவை நான் அப்பான்னு கூப்டுறதுல உங்களுக்கெல்லாம் என்ன இவ்ளோ ஆச்சரியம்?" என்று கேட்டவன் பாலனிடம் திரும்பி,

"நாளைக்கு மார்னிங் ஷட்டில் கேம்ல நான், புல்புல், அம்மா 3 பேர் இருக்கோம். நாலாவதா நீங்களும் ஜாய்ன் பண்ணிக்குறீங்களா?" என்று கேட்க அவர் உடனடியாக தலையாட்டிய படி தன் தொண்டையை கனைத்துக் கொண்டு, "ஷ்யூர் ஜெகன்......!" என்றார்.

"அ.......டேய் GAP! அப்ப நானு?" என்று கேட்ட ராமுத்தாயிடம்,

"ம்ம்ம்.... நீயா மிமோ? நீ நம்ம கார்ட்ன்ல இருக்குற பூச்செடியெல்லாம் நல்லா பூக்கணும்னு நினைச்சுட்டு 100 டைம்ஸ் சூப்பர் ப்ரையின் யோகா பண்ணு!
பர்ஸ்ட் ஸெட் முடிச்சதுக்கப்புறம், நானும், நீயும் மட்டும் தனியா செகண்ட் ஸெட் விளையாடலாம்! இஸ் தட் ஓகே?" என்றான் ஜேவி அவளைப் பார்த்து சிரித்த படி!

"ஜெகன்..... நாங்க இனிமேல் உனக்கு நல்ல அப்பா, அம்மாவா இருக்க முயற்சி பண்றோம் கண்ணா!" என்று சொன்ன தெய்வஜோதியிடம்,

"என்னம்மா முயற்சி பண்றோம்ங்குறீங்க? ஏற்கனவே நீங்க ரெண்டு பேரும் எனக்கு நல்ல அப்பா, அம்மா தான்! எனக்காக கொஞ்சம் எக்ஸ்ட்ரா டைம் ஸ்பெண்ட் பண்றோம்னு வேணும்னா சொல்லுங்க; ஐ வில் பீ ஹாப்பி!" என்று சொன்ன மகனிடம்,

"தேங்க்யூ ஜெகன்...... தேங்க்யூ சோ மச்!" என்ற தெய்வா அவனை கட்டி அணைத்துக் கொண்டார்.

"மிமோ கம் ஹியர்!" என்றவன் அவளுடன் சேர்ந்து தன்னுடைய தந்தை, தாயிடம் ஆசிகள் பெற்றுக் கொண்டான். பாலன், ஜோதிக்கு அது நெகிழ்வான தருணமாக இருந்ததோ, இல்லையோ நந்தினிக்கு அவர் மிகவும் ஏங்கிய, நெகிழ்வான தருணமாக இருந்தது.

"தெய்வாத்தை, பாலன் மாமா என்னடா உங்க புள்ள திடீர்னு புனித ஆத்மாவா மாறி உங்கள அப்பா, அம்மான்னு கூப்ட்ருச்சேன்னு ஆச்சரியப் படுறீங்களா? அது ஒண்ணுமில்ல! இத்தன நாளு நான் தனியாவும், நந்தினிமா தனியாவும் அவங்கிட்ட கரடியா கத்திக்கிட்டு கெடந்தோமா? இன்னிக்கு ரெண்டு பேரும் சேர்ந்து கூட்டா ஒரு முயற்சி பண்ணி பாப்பமேன்னு நெனச்சோம். நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா சேந்ததும் தலைவரால எங்க ரெண்டு பேரையும் சமாளிக்க முடியல! அதான் இப்ப உங்கட்ட சரண்டராகிட்டான்! சரி, சரி புள்ள இனிமேட்டு நல்லா பேசுறாவுன்னுட்டு மருமவள ஒரு ஓரமா நவட்டி உட்டுடாதீக.... சரியா?" என்று சொன்ன ராமுத்தாயினுடைய இரு கன்னங்களிலும் நந்தினியும், தெய்வஜோதியும் முத்தமிட்டனர்.

"ஹலோ லேடீஸ்...... ஷீ இஸ் மைன்! லீவ் ஹெர்!" என்று உரக்க சப்தமிட்டவனை "ஜெகன்..... கம் வித் மீ!" என்று அழைத்த மாசிலாபாலன் அவனுடன் அவரது அலுவலக அறைக்கு வந்தார்.

"வாட் டாட்?" என்று கேட்டவனிடம், "ஹாவ் அ சீட்!" என்றவர் அவரது ஸெல்ஃபில் இருந்த ஒரு ஃபைலை கையில் எடுத்துக் கொண்டு வந்து அவரது ஸீட்டில் அமர்ந்து கொண்டார்.

"உன் என்கேஜ்மெண்ட்லயே இத உங்கிட்ட குடுக்கலாம்னு நினைச்சேன். பட் கொஞ்சம் யோசனையா இருந்தது! ஹாவ் அ லுக்!" என்று அவனிடம் அவர் அந்த பைலை நீட்ட ஜெகன் யோசனையுடன் அந்த ஃபைலில் தன் பார்வையை ஓட்டினான்.

மலைகளின் பாதுகாப்புக்கென அவன் அவரிடம் பேசியிருந்த விஷயங்களை சரியாக கணித்து நான்கு பாயிண்ட்களாக அந்த ஃபைலில் வரிசைப்படுத்தியிருந்தார் அவனது தந்தை. இந்த நான்கு பாயிண்ட்களும் அமெண்மெண்டாக வருவதற்கு தன்னால் முடிந்த முயற்சிகளை அந்தத் துறை அமைச்சரிடம் பேசி செய்து தருவதாக தன் மகனுக்கு வாக்களித்தார்.

1. இந்தியாவிலுள்ள அனைத்து மலைகளுக்கும் Mountain Identification Number எனப்படும் MIN Number வழங்கப்படும் என்றும், Mountain Protection Department என்ற ஒரு தனித்துறையே ஆரம்பிக்கப்பட்டு, ஒவ்வொரு தனி மலையின் தனிப்பட்ட விபரங்களும் அந்த துறையின் டேட்டாபேஸில் இருக்கும் என்று சொல்லப்பட்டிருந்தது.

2. புதிய துறையை உருவாக்குவதன் மூலம் அந்த துறைக்கான
தேவையான அளவு வேலைவாய்ப்பும் உருவாக்கப்படும் என்று பரிந்துரைக்கப்பட்டது.

3. இந்தியாவிலுள்ள அனைத்து மலைகளும், மலைகள் அமைந்திருக்கும் நிலங்களும் அரசாங்கத்திற்கே சொந்தம் என்றும், இயற்கை கொடைகளான மலைகளின் மீது தனிநபருக்கு எந்த வித அதிகாரமும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

4. குவாரிகள் போல் பாறைகள், கற்களை மூலப்பொருட்களாக கொண்டு வேலை செய்பவர்கள் அவர்களது தேவையில் 40% சதவீதம் மட்டுமே மலைகள், பாறைகளை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படும் எனவும், அதற்கான காரணங்களையும் தெளிவாக MPD யிடம் தெரிவிக்க வேண்டும் எனவும் சொல்லப்பட்டிருந்தது.

ஃபைலை பார்த்துக் கொண்டிருந்த ஜெகனுக்கு அவரிடம் என்ன பேசுவதென்றே புரியவில்லை. தனது தந்தை தனக்கான ஒவ்வொரு விஷயங்களிலும் அவரது முழு முயற்சியை கொடுக்கத் தான் செய்திருக்கிறார்; இதுவரை அதைப் புரிந்து கொள்ளாதது தன்னுடைய தவறு தான் என்று நினைத்து தலைகவிழ்ந்து அமர்ந்திருந்தான் ஜெகன்.

"தேங்க்யூ மிஸ்டர் பாலன்! யூ ஆர் அமேசிங்! பட் ஒன் திங்க் ஐ வாண்ட் ட்டூ நோ; இந்த ஃபைல் கொஞ்ச நேரம் முன்னால நான் உங்கள அப்பான்னு கூப்டதுக்கான கிஃப்டா?" என்று கேட்டவனிடம் சிரித்தவர்,

"எப்படா உங்கிட்ட இந்த ஃபைல குடுத்து, இதுக்கான அடுத்தடுத்த ப்ராஸஸ ஸ்டார்ட் பண்ணப் போறோம்னு நெனச்சு நான் காத்துட்டு இருந்த டைமுக்கான டெட்லைன்! மத்தபடி என்னை நீ அப்பான்னு கூப்டுறதுக்கெல்லாம் என்னால உனக்கு கிப்ட் குடுக்க முடியாது மிஸ்டர் ஜேவி!" என்றார்.

"தேங்க்யூ டாடி! தேங்க்ஸ் ஃபார் யுவர் வொர்க்ஸ் அண்ட் யுவர் வேர்ட்ஸ் ட்டூ!" என்றவன் வேகமாக அவரது அறையிலிருந்து வெளியேறி சென்று ஐந்து நிமிடங்களுக்கு பின் மறுபடியும் அவரிடம் திரும்பி வந்தான்.

அவரது கையில் உள்ளங்கை அளவுள்ள
ஒரு கல்லை தந்தவன் அவரிடம்,

"டாட்....ப்ளீஸ் அக்செப்ட் திஸ் கிப்ட்! இந்த ஸ்டோன் கிளிமஞ்சாரோவுல இருந்து என்னோட 22 இயர்ஸ்ல நான் எடுத்துட்டு வந்தது. அது ஒரு வல்கனோ டைப் மவுண்டன்! ஆப்ரிகன் காண்ட்டினெட்ல அது தான் உயரமான மலை! ஸீ லெவல்ல இருந்து அதோட ஹைட் 5895 மீட்டர் (19,340 அடி) கிளிமஞ்சாரோ மலையில கிபோ, மாவென்சி, இழ்சிரா ( Kibo, Mawensi, Shira) என மூன்று எரிமலை முகடுகள் இருக்கு. ஹிமாலயாஸோட கம்பேர் பண்ணும் போது கிளிமஞ்சாரோவின் உயரம் அதிகம் இல்ல. பட் கிளிமஞ்சாரோதான் உலகத்துல இருக்குற தனிமலைகள்ல உயரமான மலை...... உங்க கவர்மெண்டால இண்டியாவுல நிறைய மவுண்டைண்ஸ் காப்பாத்தப்பட போகுது..... ஸோ அஸ் அ டெக்கன் ஆஃப் தேங்க்ஸ்!" என்று சொன்ன போது பாலன் அவனைப் பார்த்து,

"இந்த ஸ்டோனை இப்ப நான் உங்கிட்ட இருந்து வாங்கிக்கிட்டா நான் செய்யப் போற வேலைக்கு அது Bribe மாதிரி ஆகிடும் ஜெகன்..... ஸோ இது உங்கிட்டயே இருக்கட்டும்! மோர்ஓவர் உன்னோட ரூம்ல தான் இந்த ஸ்டோன்ஸ் அதுங்களுக்கான pride டோட இருக்குது.
I wish to see your collections one more time too.... நீ குடுத்த டாஸ்க்க நான் கம்ப்ளீட் பண்ணினா எங்கூட நீ ஒரு மவுண்டேன் ட்ரெக்கிங் வா! நீயும், நானும் மட்டும் போற அந்த அவுட்டிங்காக நான் வெயிட்டிங்!" என்று சொன்ன தன் தந்தையிடம் இருகை உயர்த்தி "டீல் அக்செப்டட்!" என்று சொல்லி விட்டு விடைபெற்றான் ஜெகன்.

கன்னல் தித்திக்கும்!

Continue Reading

You'll Also Like

20.2K 686 28
ஒரு ஃபீல் good love ஸ்டோரி...படிச்சு பாருங்க..
424K 12.1K 55
ஹாய் ப்ரண்ஸ் இது என்னோட முதல் கதை... காதல், மோதல், சந்தோஷம், சீண்டல் எல்லாம் கலந்த கதையை என்னோட குட்டி மூளைய வைச்சு எழுதி கொடுக்கபோறேன் இதுக்கு உ...
44.7K 2.9K 100
மிதமிஞ்சிய பணத்திமிரில் தன் வீட்டில் வேலை பார்க்கும் பணிப்பெண்ணின் மகனை பாடாய்படுத்தி எடுக்கும் நாயகி, பின்னாளில் யாரை படாத பாடு படுத்தினாளோ, அவனால்...
384K 12.9K 85
நாம நினைக்கிற மாறிலாம் நடந்துட்டா வாழ்க்கைல இருக்க சுவாரசியம் போயிரும்.. ஒரு தவறான முடிவு வாழ்க்கைய எப்படிலாம் புரட்டி போடும் அப்படிங்குறதுக்கு.. ஒ...