ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...

By NiranjanaNepol

150K 6.6K 1K

எல்லாவற்றிலும் வித்தியாசத்தை விரும்பும் நாயகன்... உலகமே அறியாத நாயகி... அவர்கள் வாழ்வில் நடைபெறும் சுவாரசியங்... More

1 திருமண கோரிக்கை
2 அதிரடி அறிமுகம்
3 ரகசிய திட்டம்
4 சிங்கத்தின் குகையில்
5 தொலைபேசி அழைப்பு
6 திருமதி ஆதித்யா
7 காத்திருந்த முதலிரவு
8 ஆதித்யாவின் முடிவு
9 அம்மாவின் அறிவுரை
10 சென்னையில் கமலி
11 திருமதி ஆதித்யா
12 புத்திசாலி பெண் தான்
13 நீங்கள் நல்லவர் தான்
14 அதிர்ஷ்ட தேவதை
15 பொய்
16 ஆதித்யா யார்?
17 கமலியின் சொந்த விதி
18 கமலியின் சாகசம்
19 கமலியின் புரிதல்
20 ஆதித்யாவின் பார்வை
21 ஆதித்யாவின் நடவடிக்கை
22 நான் உன்னுடன் டேம் இட்
23 கமலியின் அன்பு
25 விசித்திர உணர்வு
26 என்னோட ஆதிஜி
27 நீங்கள் என்றுடையவர்
28 கமலியின் இன்ப அதிர்ச்சி
29 நம்பிக்கை
30 அலுவலகத்தில் கமலி
31 ஒன்றுபட்ட மனங்கள்
32 மிஸஸ் பாஸ்
33 குமரிப்பெண்
34 மலர்க்கணைகள்...
35 அவளை நானறிவேன்...!
36 வஞ்சக உலகம்...
37 சோமபானம்
38 தொலைந்த மகள்
39 ஆதித்யாவின் நம்பிக்கை
40 முதல் முத்தம்
41 புதிய பரிமாணம்
42 நேர்மை
43 விஷநாகத்தின் குறி
44 என்ன நடக்கிறது?
45 யார் அது?
46 அந்த கண்கள்
47 பணம் பத்தும் செய்யும்
48 வித்யாசம்
49 ஆதித்யா...
50 நிஜ முகம்
51 அது வேறு...
52 கமலின்னா சும்மாவா?
53 கோவம் தனிந்தது
54 ஆதித்யாவின் பரிசு
55 விதி வலியது
57 ஒரே காரணம்
57 தவறல்ல... துரோகம்
58 கமலி கொடுத்த அதிர்ச்சி
59 பிரபாகரனின் உறுதி
60 குழந்தையின் ஏக்கம்
61 ஒப்புதல்
62 குடும்பம்
இறுதி பாகம்

24 ஒன்றுபட்ட மனங்கள்

2.2K 103 26
By NiranjanaNepol

24 ஒன்றுபட்ட மனங்கள்

சுமித்ராவின் திருமணம் முடிந்த பிறகு கமலியை அவளது அம்மா வீட்டுக்கு அனுப்புவது என்று ஆதித்யாவை தவிர அனைவரும் சேர்ந்து ஒருமனதாக முடிவெடுத்தார்கள். அவள் இங்கு இருக்கப் போகும் இரண்டு நாளாவது அவளுடன் இருக்கலாம் என்று, ஏதேதோ சாக்கு சொல்லி வீட்டிலேயே இருந்து விட்டான் ஆதித்யா. அது கமலியை பதட்டப்படுத்தியது. ஆதித்யாவுக்கும் அவளது நடவடிக்கை குழப்பத்தை தந்தது.

கமலி, வழக்கம் போல் அவர்களது அறையில் இருக்கவில்லை என்றாலும், ஏதாவது சாக்கு போக்கு சொல்லி அடிக்கடி தங்கள் அறைக்குச் சென்று வந்தாள். அவனை நேரடியாக பார்ப்பதை தவிர்த்தாள் கமலி. அவனது கண்களை பார்த்து பேசும் அவளது பழக்கம், அடியோடு மாறிப் போனது.

ஆதித்யாவிற்கு ஒன்றையும் புரிந்து கொள்ள முடியவில்லை. ஏனென்றால் கமலி, கமலியை போல் நடந்து கொள்ளவில்லை. அவள் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை நன்றாய் உணர்ந்தான் ஆதித்யா. ஆனால் அவன் பார்க்கும் பொழுது, அவனை பார்க்காதது போல, வேறு எங்கோ தன் பார்வையை திருப்பிக் கொண்டாள் கமலி. இந்தப் பெண்ணுக்கு என்ன ஆனது? அவள் மனதில் என்ன தான் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை புரிந்துகொள்ளவே முடிவதில்லை. அவளது பாவப்பட்ட மூளைக்கு ஏன் அவள் கொஞ்சம் கூட ஓய்வு கொடுப்பதில்லை? அவளுக்கு மட்டும் வித்தியாசமான பிரச்சனைகள் எங்கிருந்து தான் கிடைக்கிறதோ...! என்று எண்ணினான் ஆதித்யா.

வழக்கம் போல் அனைவரும், வரவேற்பரையில் அமர்ந்து தேனீர் அருந்திக் கொண்டு, தொலைக்காட்சியில் ஏதோ நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தார்கள். கமலியும் அவர்களுடன் தான் இருந்தாள். அவர்கள் யாரும் எதிர்பாராத வண்ணம், தனது மடிக்கணினியுடன் அங்கு வந்த ஆதித்யா, அவர்களுடன் அமர்ந்துகொண்டான்.

"உனக்கு ஏதாவது வேணுமா ஆதி?" என்றார் பாட்டி.

"இல்ல பாட்டி... ரூம்ல இருக்க போரடிச்சுது. அதான் இங்க வந்தேன்" என்றான், தேநீரை பருகியபடி அவனை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டிருந்த கமலியைப் பார்த்தபடி. அவனை பார்த்தவுடன் தன் பார்வையை தாழ்த்திக் கொண்டாள் கமலி. அதைப் பார்த்து உள்ளூர நகைத்துக் கொண்டான் ஆதித்யா. சரியான பைத்தியக்கார பெண் இவள்...  அவளைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினான் அவன்.

சுமித்ராவின் திருமண நாள்

கமலி கைபேசியில் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டு, நின்றான் ஆதித்யா. அவள் லாவண்யாவுடன் பேசிக்கொண்டிருந்தாள்.

"கல்யாணத்துக்கு போகும் போது,  இங்க வந்து என்னையும் கூட்டிகிட்டு போறியா?"

"...."

"இல்ல. நான் ஆதிஜிகிட்ட என்னை கூட்டிட்டுப் போகச் சொல்லி கேட்கல..."

"...."

"எல்லாத்துக்கும் அவரை தொல்லை படுத்த வேண்டாம்னு நினைக்கிறேன்"

"...."

"இந்த மாதிரி சாதாரண ஆளுங்களோட கல்யாணத்துக்கு அவர் வருவார்னு எனக்கு தோனல"

"...."

"ஆமாம், நான் கூப்பிட்டா வருவாரு தான்... ஆனா, அவரை கூப்பிட்டு சங்கடபடுத்த வேண்டாம்னு நினைக்கிறேன்"

"...."

"சரி. நான் கரெக்டா பத்து மணிக்கு ரெடியா இருப்பேன்..."

அவள் அழைப்பை துண்டித்தாள். அவள் பேசியதைக் கேட்காதது போல, சகஜமாய் அலமாரியை நோக்கி சென்று, அதிலிருந்து ஒரு டப்பாவை எடுத்து கமலியிடம் கொடுத்தான்.

"இது என்ன, ஆதிஜி?"

"திறந்து பாரு"

கமலி அதை திறந்து பார்க்க, அதில் ஒரு அழகிய லெஹங்கா இருந்தது.

"இது எனக்கா?" என்றாள் ஆர்வத்துடன்.

"இல்ல எனக்கு" என்றான் கிண்டலாக.

"இது ரொம்ப நல்லா இருக்கு... ஏன் திடீர்னு?"

"நீ உன்னோட ஃப்ரண்ட் கல்யாணத்துக்கு போற இல்ல? அதுக்கு தான்"

"தேங்க்யூ சோ மச்... இருங்க நான் எல்லார்கிட்டயும் காட்டிட்டு வரேன்..."

என்று வழக்கம் போல் ஓடிப்போனாள் கமலி. பெருமுச்சிவிட்ட அவன், அன்று, கமலி வீட்டில் இருக்கப் போவதில்லை என்பதால் அலுவலகம் கிளம்பி சென்றான்.

அனைவரிடமும் அந்த உடையை காட்டி, ஆதித்யா அவளுக்கு புதிய உடை வாங்கி கொடுத்த விஷயத்தை பரப்பிவிட்டாள் கமலி. அவளைவிடஅதிகமாய், மற்றவர்கள் அதை பார்த்து சந்தோஷப்பட்டார்கள்.

"என்கிட்டயும் நிறைய புது புடவை இருக்கு... அதை கட்ட சந்தர்ப்பம் தான் கிடைக்க மாட்டேங்குது" என்றார் இந்திராணி.

"அப்படின்னா அதுல ஒரு புடவையை கட்டிக்கிட்டு, என்னோட ஃபிரண்ட் கல்யாணத்துக்கு என் கூட  வாங்களேன்" என்ற கமலி சற்றே நிறுத்தி,

"எங்களை மாதிரி சாதாரணமானவங்க வீட்டு கல்யாணத்துக்கு எல்லாம் நீங்கவர மாட்டீங்க..." என்றாள் சோகமாக.

அவள் கூறியது உண்மை தான். இதுவரை அப்படிப்பட்ட எளிமையான திருமணங்களுக்கு சென்றதில்லை இந்திராணி. ஆனால் *எங்களைப் போன்ற சாதாரணமானவர்கள்* என்று கமலி தன்னையும் சேர்த்து கூறியபின், அவர் போகாமல் இருந்தால், அது கமலியை வருத்தப்படுத்தும் இல்லையா...?

"என்ன கமலி இப்படி சொல்லிட்ட...? நீ போற கல்யாணத்துக்கு நான் வர மாட்டேனா...?" என்றாரே பார்க்கலாம்...!

"நிஜமா நீங்க என்கூட வரப் போறீங்களா?" என்றாள் கமலி நம்பமுடியாமல்.

"ஏன் வரமாட்டேன்? ஆனா, நான் உன்கூட இருந்தா, உனக்கு டிஸ்டர்பன்ஸா இருக்காதா?"

"எல்லாரும் ஒண்ணா இருந்தா ஜாலியா தானே இருக்கும்? ஆதிஜியும் என் கூட வரணும்னு எனக்கு ரொம்ப ஆசை தெரியுமா...?"

"அப்படின்னா நானும் வரேன். ஆனா, நீ உன்னை சாதாரணமானவளா நினைக்காத... நம்ம ரெண்டு பேருமே இந்த குடும்பத்தோட மருமகள் தான். சரியா?" என்றார்.

சரி என்று சந்தோஷமாய் தலையசைத்தாள் கமலி. சின்ன மாமியாரும், மருமகளும் ஒன்றாய் திருமணத்திற்கு செல்வது என்று முடிவு செய்தார்கள்.

ஒன்பது மணிக்கே அமைதியகம் வந்துவிட்டாள் லாவண்யா. பாட்டியும், சுசித்ராவும் வரவேற்பறையில் அமர்ந்திருந்தார்கள். முழுவதும் தயாரான நிலையில் தரைதளம் வந்தான் ராகுல். லாவண்யாவை பார்த்து,

"ஹாய்... வெல்கம்" என்றான்.

"நீ ஒன்னும் என்னை வெல்கம் பண்ண வேண்டாம். எனக்கு தோணும் போதெல்லாம் நான் இங்க வருவேன்..." என்றாள்.

"உக்காரு லாவண்யா" என்றார் பாட்டி சிரித்தபடி.

"நீ எங்கயாவது போறியா?" என்றாள் லாவண்யா ராகுலிடம்.

"எனக்கும் தான் சுமித்ரா இன்விடேஷன் கொடுத்திருக்கா..."

"இது எப்ப நடந்தது?"

"போன வாரமே கொடுத்துட்டா..."

லாவண்யாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க வேண்டும் என்று, அவளுக்கு தெரியாமல் இதை சுமித்ரா செய்திருக்க வேண்டும்.

"கமலி எங்க?" என்றாள் லாவண்யா.

"அவ கிளம்பிகிட்டு இருக்கா. இப்ப வந்துடுவா" என்றார் பாட்டி.

கமலியின் அறைக்கு செல்லாமல், அங்கேயே அமர்ந்து கொண்டாள் லாவண்யா, ராகுலுடன். சிறிது நேரத்தில் ஆதி வாங்கிகொடுத்த புது லெஹங்காவில், அசத்தலாய் படியிறங்கி வந்தாள் கமலி.

"நீ அசத்துற கமலி. ஆதி இருந்திருந்தா மயங்கி விழுந்திருப்பாரு..." என்றாள் லாவண்யா. வெட்கப் புன்னகை பூத்தாள் கமலி.

திருபுவனம் பட்டு புடவையும், எளிமையான தங்க நகையும் அணிந்துகொண்டு வந்த இந்திராணியை பார்த்து, மற்றவர்கள் குழம்பினார்கள்.

"நீ எங்க போற இந்திரா?" என்றார் பாட்டி.

"நான் கமலி கூட போறேன்"

"என்னது....????" என்று அதிர்ந்தான் ராகுல்

"ஏன்டா?"

"நீங்க அண்ணி கூட வரிங்களா?"

"ஆமாம்"

அனைவரும் அவரை அதிசயமாய் பார்த்தார்கள். அவ்வளவு எளிதில் யாருடனும் ஒட்டிக்கொண்டு விடுபவர் இல்லை இந்திராணி.

"எனக்கு போர் அடிச்சுது. அதனால நானும் கமலியோட ஃபிரெண்ட் கல்யாணத்துக்கு  போறேன்"

"என்ன அத்தை இப்படி பண்ணிட்டீங்க...? என்கிட்ட சொல்லியிருந்தா நானும் உங்க கூட வந்திருப்பேன் இல்ல...? தீபக்கும் அவங்க ஃப்ரெண்ட் கல்யாணத்துக்கு போயிருக்காரு. முன்னாடியே தெரிஞ்சிருந்தா நானும் வந்திருப்பேன்" என்றாள் சுசித்ரா சிணுங்களுடன்.

"அதனால என்ன? நிறைய டைம் இருக்கு. பதினஞ்சு நிமிஷத்துல ரெடியாக முடியும்னா, நீங்களும் வாங்க" என்றாள் லாவண்யா.

"பதினஞ்சு நிமிஷம் போதும்" என்று சந்தோஷமாய் கூறியபடி தன் அறையை நோக்கி ஓடினாள் சுசித்ரா.

"எல்லாரும் போயிட்டா, நான் மட்டும் தனியா வீட்டுல என்ன பண்ணுவேன்? ரேணுகாவும் வீட்ல இல்ல..." என்றார் பாட்டி.

"பேசாம நீங்களும் எங்ககூட வந்துடுங்களேன்" என்றார் இந்திராணி.

சற்றே யோசித்த பாட்டி,

"சரி இரு, நல்ல புடவையை கட்டிக்கிட்டு வரேன்" என்று தனது அறைக்குச் சென்றார்.

திகைத்துப் போய் நின்றாள் கமலி. இவர்கள் அனைவரும் உண்மையிலேயே அவளுடன் திருமணத்திற்கு வர போகிறார்களா? அவளை விட அதிகமாக ஆச்சரியப்பட்டது லாவண்யா தான். அவள் தான் இந்த குடும்பத்தை பல வருடமாய் பார்த்துக் கொண்டிருக்கிறாளே... அவர்களிடம் இப்படி ஒரு மாற்றத்தை அவள் எதிர்பார்க்கவில்லை. அவர்களது மனங்கள், கமலியுடன் ஒன்றுப்பட்டு போயிருந்தது தெள்ள தெளிவாய் தெரிந்தது.

திருமண மண்டபம்

சுமித்ராவும், அவளது குடும்பத்தினரும், கமலி தனது குடும்பத்துடன் வந்திருந்ததை பார்த்து மகிழ்ந்து போனார்கள். கமலி, அனைவரையும் சுமித்ராவின் குடும்பத்தினருக்கு அறிமுகம் செய்து வைத்தாள். பாட்டியிடமும், இந்திராணியிடமும் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டாள் சுமித்ரா. அவர்களுடன் நின்றிருந்த சுசித்திராவின் விழிகள், ஆச்சரியத்தில் விரிந்தது, அங்கு தீபக்கை பார்த்த போது.

"நீங்க இங்க என்ன செய்றீங்க? உங்க ஃபிரெண்ட் கல்யாணத்துக்கு போறேன்னு சொன்னீங்களே..." என்று கேள்வி எழுப்பினாள் சுசித்ரா.

"அதைத் தான் நான் செஞ்சுக்கிட்டு இருக்கேன். இந்த கல்யாணத்துக்கு தான் போறேன்னு சொல்லி இருந்தேன். நீங்க இங்க என்ன செய்றீங்க?" என்றான் தீபக்.

"நாங்க கமலிக்காக வந்தோம்" என்றார் இந்திராணி.

"அண்ணிக்காகவா?" என்றான் நம்பமுடியாமல். இப்படிப்பட்ட சாதாரண குடும்ப திருமணத்திற்கு வரமாட்டாள் என்று நினைத்து தான், அவன் சுசித்ராவை தன்னுடன் வர சொல்லி அழிக்கவில்லை. ஆனால் அவளோ, கமலிக்காக அங்கு வந்திருந்தது அவனுக்கு ஆச்சரியம் அளித்தது.

"நீ இங்க எதுக்கு வந்த?" என்றார் இந்திராணி.

"மாப்பிள்ளை நம்ம ஆஃபீஸ்ல தான் வேலை செய்யறாரு. என்னோட ஃப்ரெண்டும் கூட. அதனால நான் வந்தேன்"

வந்திருப்பது தங்கள் முதலாளியின் குடும்பம் என்று தெரிந்த பின், அவர்களுக்கு அங்கு அமோக வரவேற்பு கிடைத்தது. அவர்கள் முன் வரிசையில் அமர வைக்கப்பட்டார்கள்.

மணப்பெண்ணும் மாப்பிள்ளையும் மணமேடைக்கு அழைக்கப்பட்டார்கள். லாவண்யாவுடன் மேடையின் அருகில் நின்று கொண்டாள் கமலி. திடீரென்று, மேடையிலிருந்து கீழே இறங்கி, தலை தெறிக்க ஓடத் துவங்கினான் கல்யாண மாப்பிள்ளை, அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி.

மண்டபத்துக்குள் ஆதித்யா நுழைவதை பார்த்தாள் கமலி. தனது முதலாளியை பார்த்தால்,   மாப்பிள்ளை அப்படி தானே ஓடுவான்? அவன் ஓடியது ஆதித்யாவை வரவேற்க. அனைவரது பார்வையும் தன் மேல் இருந்ததால் சங்கடப்பட்டான் ஆதித்யா. மாப்பிள்ளை, தன்னுடைய அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியன் என்பது அவனுக்கு தெரியாது. அவன் கமலிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கத் தான் அங்கு வந்திருந்தான்.

"என்னால நம்பவே முடியல சார்... நீங்க என்னோட கல்யாணத்துக்கு வந்திருக்கீங்க..."

"நான் என்னோட வைஃப்காக வந்தேன். அவங்களும் ப்ரைடும் ஃப்ரெண்ட்ஸ்" என்றான் ஆதித்யா.

"ப்ளீஸ் வாங்க, சார்..."

"நான் இருக்கேன். நீங்க போங்க..."

அவனைப் பார்த்துக்கொண்டு சிலை போல் நின்றிருந்த கமலியிடம் சென்றான் ஆதித்யா.

"ஹாய்..." என்றான்.

"நீங்க இங்க வரப் போறீங்கன்னு என்கிட்ட சொல்லவே இல்லையே..." என்றாள் கமிலி.

"நீ என்னை கூப்பிட்டியா?"

இல்லை என்று தலையசைத்தாள் உதடு சுழித்து.

"அதனால தான் சொல்லாமல் வந்தேன்" என்று சிரித்தான் ஆதித்யா.

அவனது பார்வை, முன்வரிசையில் அமர்ந்திருந்த அவனது குடும்பத்தாரின் மீது விழுந்தது. அவர்களைப் பார்த்து வாயைப் பிளந்தான் ஆதித்யா.

"வாட் த ஹெல்? நீங்க எல்லாரும் நீங்க இங்க என்ன செய்றீங்க?"

"நீ இங்க என்ன செய்ற ஆதி?" -பாட்டி.

"நான் கமலிக்காக வந்தேன்"

"நாங்களும் கமலிக்காக தான் வந்தோம்" என்றார் பாட்டி.

"அன்பிலிவபுல்..." என்று நம்ப முடியாமல் தலையசைத்தான் ஆதித்யா.

அவனும் அவர்களுடன் அமர்ந்து கொள்ள, லாவண்யாவிடம் சென்றாள் கமலி. அப்போது ஒருவன், அவர்களை நோக்கி செல்வதை கவனித்தான் ஆதித்யா. அவனைப் பார்த்தவுடன் கமலியின் முகத்தில் சந்தோஷம் தெரிந்தது. அது ஆதித்யாவின் முகத்தை சுருக்கியது.

யார் இவன்? அவன், நமது நண்பன் சமீர்கான் தான். ஆதித்யாவிற்கும், அவனை புகைப்படத்தில் பார்த்தது  நினைவுக்கு வந்தது. சமீர்கானிடம் ஆதித்யாவை காட்டினாள் கமலி. அவன் ஆதித்யாவை பார்த்து புன்னகைக்க, பதிலுக்கு ஆதித்யாவும் புன்னகைத்து வைத்தான்.

"அவரா உன்னோட ஹஸ்பண்ட்?" என்றான் சமீர்.

"ம்ம்ம்"

"செமையா இருக்காரு... இவ்வளவு ஹேண்ட்சம்மான ஹஸ்பண்ட் பாடம் சொல்லிக் கொடுத்தா, நீ இவ்வளவு நல்லா படிக்கிற? எப்படி தான் உனக்கு பாடத்துல கவனம் போகுதோ..." என்று கிண்டல் அடித்தான் சமீர்.

ஆதித்யாவை கமலி பார்க்க, அவள் சமீர்கானுடன் பேசிக் கொண்டிருப்பது தன்னை பாதிக்கவே இல்லை என்பதை போல் காட்டிக்கொள்ள முயன்று கொண்டு அமர்ந்திருந்தான் ஆதித்யா. அவனைப் பார்த்த கமலியின் முகம் மாறிப் போனது.

ஆமாம்... ஆதித்யா ஹாண்ட்சமாக தான் இருக்கிறார். அவள் இதய துடிப்பு அதிகரித்தது. இந்த இதயத்திற்கு வேறு வேலையே இல்லை... ஆதித்யாவை பார்க்கும் போதெல்லாம் நெஞ்சாங் கூட்டில் இருந்து வெளியே வந்துவிட வேண்டும் என்பதை போல் குதிக்கிறது. போதாத குறைக்கு இந்த சமீர்கான் வேறு...  எரியும் தீயில் எண்ணெய் வார்க்கிறான்.

"கமலி, பாரு எல்லா பொண்ணுங்களும் உங்க வீட்டுக்காரரை தான் பார்த்துகிட்டு இருக்காங்க... அவர் இவ்வளவு அட்டகாசமாக இருந்தா, யார் தான் பார்க்கமாட்டா?" என்றான்.

கமலியின் கண்கள் அகல விரிந்தது. சுற்றும் முற்றும் பார்த்தவள், சமீர்கான் கூறுவது உண்மை என்று புரிந்து கொண்டாள். ஆமாம், எல்லோரும் அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவளுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. அவள் முகம் போன போக்கைப் பார்த்து, சிரிப்பை அடக்கிக் கொண்டான் சமீர்கான்.

"வெட்கம் இல்லாத பொண்ணுங்க... எவ்வளவு தைரியம் இருந்தா என்னோட ஆதிஜியை பாப்பாங்க...?" என்று பொருமினாள்.

"ஆமாம்... கொஞ்சம் கூட வெட்கமே இல்லை... ஆனா, அவரு ஸ்மார்ட்டா இருக்காரே...?" என்றான் சமீர்.

"ஆமாம்... ஸ்மார்ட்டா தான் இருக்காரு..." என்றாள் கவலையாக.

ஆதித்யாவின் மீது பெண்கள் கண் வைத்திருப்பதை பார்த்து கவலையுடன் இருந்தாள் கமலி. ஆனால் நமது ஆதித்யாவோ, அந்த பெண்களைப் பற்றி எல்லாம் சிறிதும் கவலைப்படாமல், சமீர்கானுடன் கமலி  வெகு சகஜமாய் பேசிக்கொண்டிருந்ததை பார்த்து புகைந்து கொண்டிருந்தான்...!

தொடரும்...

Continue Reading

You'll Also Like

28.7K 1.8K 34
முறுக்கு மீசையும், கட்டு மஸ்தான் உடலும், கலையான முகமும் கொண்ட வாலிபன் ஒருவன், அவசர சிகிச்சை பிரிவு அறையின், கதவில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடி வழியாக...
95.1K 4.2K 25
கடந்த காலத்தை மறந்து புது வாழ்க்கை தொடங்க போராடும் ஒரு பெண் முன் மீண்டும் கடந்த காலம் வந்தால் என்னாவாள்..
2.6K 327 10
இளம் பெண்களின் கனவு நாயகனாய் இருந்தவன் தான் இனியவன். அது முன்பிருந்த நிலைமை. ஆனால் இப்பொழுது, அவன் அருகில் செல்லவே எல்லோரும் அஞ்சுகிறார்கள். அவனுக்கு...
61.6K 3.1K 55
இந்த 2020 ல வாழுற ஒரு பொண்ணு 1000 வருஷம் முன்னாடி போனா எப்படி இருக்கும். அங்க ஒருவேளை அவளுக்கு காதல் வந்தா. அந்த காதல் கை கூடுமா. இவ அங்க போறதால அங்...