ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...

By NiranjanaNepol

149K 6.6K 1K

எல்லாவற்றிலும் வித்தியாசத்தை விரும்பும் நாயகன்... உலகமே அறியாத நாயகி... அவர்கள் வாழ்வில் நடைபெறும் சுவாரசியங்... More

1 திருமண கோரிக்கை
2 அதிரடி அறிமுகம்
3 ரகசிய திட்டம்
4 சிங்கத்தின் குகையில்
5 தொலைபேசி அழைப்பு
6 திருமதி ஆதித்யா
7 காத்திருந்த முதலிரவு
8 ஆதித்யாவின் முடிவு
9 அம்மாவின் அறிவுரை
10 சென்னையில் கமலி
11 திருமதி ஆதித்யா
12 புத்திசாலி பெண் தான்
13 நீங்கள் நல்லவர் தான்
14 அதிர்ஷ்ட தேவதை
15 பொய்
16 ஆதித்யா யார்?
17 கமலியின் சொந்த விதி
18 கமலியின் சாகசம்
19 கமலியின் புரிதல்
20 ஆதித்யாவின் பார்வை
21 ஆதித்யாவின் நடவடிக்கை
23 கமலியின் அன்பு
24 ஒன்றுபட்ட மனங்கள்
25 விசித்திர உணர்வு
26 என்னோட ஆதிஜி
27 நீங்கள் என்றுடையவர்
28 கமலியின் இன்ப அதிர்ச்சி
29 நம்பிக்கை
30 அலுவலகத்தில் கமலி
31 ஒன்றுபட்ட மனங்கள்
32 மிஸஸ் பாஸ்
33 குமரிப்பெண்
34 மலர்க்கணைகள்...
35 அவளை நானறிவேன்...!
36 வஞ்சக உலகம்...
37 சோமபானம்
38 தொலைந்த மகள்
39 ஆதித்யாவின் நம்பிக்கை
40 முதல் முத்தம்
41 புதிய பரிமாணம்
42 நேர்மை
43 விஷநாகத்தின் குறி
44 என்ன நடக்கிறது?
45 யார் அது?
46 அந்த கண்கள்
47 பணம் பத்தும் செய்யும்
48 வித்யாசம்
49 ஆதித்யா...
50 நிஜ முகம்
51 அது வேறு...
52 கமலின்னா சும்மாவா?
53 கோவம் தனிந்தது
54 ஆதித்யாவின் பரிசு
55 விதி வலியது
57 ஒரே காரணம்
57 தவறல்ல... துரோகம்
58 கமலி கொடுத்த அதிர்ச்சி
59 பிரபாகரனின் உறுதி
60 குழந்தையின் ஏக்கம்
61 ஒப்புதல்
62 குடும்பம்
இறுதி பாகம்

22 நான் உன்னுடன் டேம் இட்

2.3K 108 29
By NiranjanaNepol

22 நான் உன்னுடன் டேம் இட்

அமைதிகம் திரும்பினான் ஆதித்யா. ஷில்பாவின் விஷயத்தில் அவன் கோபமாய் இருந்தாலும், அதில் அவனுக்கு சாதகமான விஷயங்களும் இருக்கத் தான் செய்கிறது. கமலியுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள இது ஒரு சிறந்த சந்தர்ப்பம். தன்னுடைய வாழ்க்கையில் அவளுடைய இடம் என்ன என்பதையும், அவள் தனக்கு எவ்வளவு முக்கியமானவள் என்பதையும் அவளுக்கு காட்ட முடியும்.

வரவேற்பறையில் கமலி இருக்கவில்லை. தனது அறைக்கு சென்றவன், அங்கு கமலி ஷாலினியுடன் சேர்ந்து வீட்டுப்பாடம் செய்து கொண்டிருந்ததை பார்த்தான். அவர்களுடைய புத்தகங்களும், நோட்டுப் புத்தகங்களும் அவர்களை சுற்றி இறைந்து கிடந்தன. அவனைப் பார்த்தவுடன் எழுந்து நின்றாள் கமலி.

"ஆதிஜி நீங்க வந்துட்டீங்களா? டூ மினிட்ஸ், நான் இதையெல்லாம் கிளியர் பண்ணிடுறேன்" என்றாள்.

"வேண்டாம்... உன்னுடைய வேலையை முதல்ல முடி..."

"உங்களுக்கு நான் காஃபி கொண்டு வரட்டுமா?"

"நான் முத்துவை கொண்டு வர சொல்றேன்"

"இல்ல ஆதிஜி, நான் என்னுடைய வேலையை முடிச்சிட்டேன்.  ஷாலினிக்கு ஹெல்ப் தான் பண்ணிக்கிட்டு இருந்தேன்"

"ஆமாம் மாமா. மாமி அவங்க ஹோம்வொர்க்கை முடிச்சுட்டாங்க." என்றாள் ஷாலினி

"இன்னைக்கு உன்னோட நாள் எப்படி இருந்தது?" என்று ஆதி கேட்க,

ஷில்பாவுடன் நடந்த உரையாடலை நினைத்துப் பார்த்துக் கொண்டாள் கமலி. அவளது முகம் மாறியதை கவனித்தான் ஆதித்யா.

"நல்லா போச்சு ஆதிஜி" என்றாள் சுரத்தே இல்லாமல்.

"அதை ஏன் இவ்வளவு சோகமா சொல்ற?" என்று புன்னகைத்தான் ஆதித்யா.

"என்னோட ஃபிரண்டுக்கு கல்யாணம் நிச்சயமாகி இருக்கு"

"அதுக்காக நீ சந்தோஷம் தானே படணும்?"

"இல்ல... அவ படிப்பை டிஸ்கன்டினியூ பண்ண போறா" என்றாள் சோகமாக.

"ஒ..."

"உங்களுக்கு தெரியுமா ஆதிஜி, அவ பாக்ஸிங்ல ஸ்டேட் கோல்டு மெடலிஸ்ட். நல்லாவும் படிப்பா. அதனால தான் எங்க காலேஜ்ல அவளுக்கு ஸ்காலர்ஷிப்ல அட்மிஷன் கிடைச்சது. ஆனா, துரதிஷ்டவசமா அவளால கிராஜுவேஷன் கம்ப்ளீட் பண்ண முடியல."

"அவங்க மேரேஜ் பண்ணிக்க போறவர்கிட்ட இதைப் பத்தி அவங்க பேசலாமே"

"அவ பேசினா... ஆனா, எந்த பிரயோஜனமும் இல்ல. அவர் உங்களை மாதிரி நல்லவர் இல்ல" என்றாள் சோகமாய்.

"என்னை மாதிரி நல்லவர் இல்லன்னா எப்படி?" என்றான் ரசிக்கத் தகுந்த புன்னகையுடன்.

"நீங்க என்னை காலேஜுக்கு போய் படிக்க விடுறீங்க... ஆனா, அவர் அப்படி செய்ய மாட்டேங்கிறார்"

"ஒ... உன்னை காலேஜுக்கு போக விட்டதால நான் நல்லவனா?"

"இல்லையா?" என்று எதிர்கேள்வி கேட்டாள்.

தெரியவில்லை என்பதைப் போல் தோள்களை குலுக்கினான் ஆதித்யா.

"நீங்க நல்லவர் தான்"

"நிஜமாவா?"

"நிஜமா தான்" என்று அழுத்தமாக கூறினாள்.

"தேங்க்யூ ஃபார் யுவர் கம்பிளிமெண்ட்"

"மென்ஷன் நாட்"

ஏதோ சொல்லப் போன ஆதித்யா, கதவைத் தட்டும் சத்தம் கேட்டு, தனது பார்வையை திருப்பினான். வேலைக்கார முத்து கதவருகில் நின்றிருந்தான்.

"ஆதி அண்ணா, ஷில்பா மேடம் உங்களை பார்க்க வந்திருக்காங்க" என்றான்.

அதைக்கேட்ட கமலியின் முகம் வெளிறிப்போனது. அவளது கைகள் நடுங்கின. அவற்றையெல்லாம் கவனித்த ஆதித்யாவுக்கு மூக்கின் மீது கோபம் வந்தது. எதற்காக இந்த அளவிற்கு இவள் பயப்படுகிறாள்?

"அவளை வெயிட் பண்ண சொல்லு" என்றான் முத்துவிடம்.

"ஆதிஜிகிட்ட பேச தான் அவ இங்க வந்திருக்காளோ...? *இதுக்காக நீ வருத்தப்பட போறேன்னு* சொன்னாளே... மகமாயி என்னை காப்பாத்துங்க" என்று மனதிற்குள் வேண்டிக் கொண்டாள் கமலி.

சோபாவில் அமர்ந்து, அவசரம் காட்டாமல் தனது காலணிகளை கழட்டினான் ஆதித்யா, ஷில்பாவை சந்திப்பதில் தனக்கு ஆர்வம் இல்லை என்பதை வெளிப்படுத்தும் விதமாக. துண்டை எடுத்துக்கொண்டு குளியலறை நோக்கி சென்றான்.

"ஆதிஜி, ஷில்பா உங்களை பார்க்க காத்திருக்காங்க" என்றாள் கமலி.

"அதனால என்ன? அவ வெயிட் பண்ணட்டும்" என்று கூறிவிட்டு குளியலறை நோக்கி நடந்தவன், அதன் வாசலில் நின்று,

"கமலி..." என்று அழைத்தான்.

"ஆங்...?"

"உனக்கு ஏதாவது வேலை இருக்கா?" என்றான்.

இல்லை என்று தலையசைத்தாள் கமலி.

"சரி. இரு வரேன்..."

சரி என்று ஆதித்யா வரும் வரை காத்திருந்தாள் கமலி. முகம், கை, கால் கழுவிக் கொண்டு வந்தவன், தலை சீவிக்கொண்டு.

"வா போகலாம்" என்றான்.

*எங்கே?* என்று கேட்காமல் அவனை பின்தொடர்ந்தாள் கமலி. நின்று அவளைப் பார்த்தவன்,

"உன்னுடைய தோளை தொடுறது ஒன்னும் *பேட்டச்* இல்லையே?" என்றான்.

அதைக் கேட்டு திகைத்து நின்றாள் கமலி. தன்னுடைய முதிர்ச்சியற்ற பேச்சுக்காக முதல் முறையாய் வருத்தப்பட்டாள் அவள். இல்லை என்று தலையசைத்தாள்.

அவளது மேற்கையை பற்றி தன்னை நோக்கி இழுத்தவன், அவளது தோளை சுற்றி வளைத்துக் கொண்டு, கீழ் தளம் நோக்கி நடக்கத் துவங்கினான். அவனை திகைப்புடன் பார்த்தபடி அவனுடன் நடந்தாள் கமலி. இது தானே முதல் முறை, ஆதித்யா இவ்வாறு நடந்து கொள்வது...!

ஷில்பா, சித்தி இந்திராணியுடன் பேசிக்கொண்டிருந்ததை பார்த்தார்கள் அவர்கள். அவர்களுடைய நெருக்கம், ஷில்பாவின் முகத்தை சுருங்க செய்தது. தனது வெறுப்பை முகத்தில் காட்டிக்கொள்ளாமல் இருக்க முயன்றாள் ஷில்பா.

"என்ன விஷயமா நீ இங்க வந்திருக்க?" என்றான் ஆர்வமில்லாமல் ஆதித்யா.

"இந்த ஃபைலை அப்பா உங்ககிட்ட பர்சனலா கொடுக்கணும்னு நினைச்சார். அவர் பிஸியா இருந்ததால, என்கிட்ட கொடுத்து அனுப்பினார்"

"சித்தி, அந்த ஃபைலை என்னோட ரூம்ல வைக்க சொல்லி, முத்துகிட்ட சொல்லுங்க. நான் கமலியை வெளியில கூட்டிகிட்டு போறேன். நாங்க டின்னருக்கு வர மாட்டோம்" என்றான் இந்திராணியிடம்.

"ஒ... அதுக்காகத் தான் இன்னிக்கு சீக்கிரம் வந்தியா ஆதி?" என்றார் அவனை கிண்டல் செய்யும் தொணியில்.

"ஆமாம் சித்தி. கமலி எல்லா வேலையையும் முடிச்சிட்டா. அதனால அவளை வெளியில கூட்டிட்டு போகலாம்னு ப்ளான் பண்ணேன்"

"நடக்கட்டும், நடக்கட்டும்..."

"போலாமா கமலி?" என்று கமலியின் மூக்கை செல்லமாய் தட்டினான். அவனது செயலால், தன் கண் இமைகளை படபடத்தாள் கமலி.

ஷில்பாவிற்கு வயிறு பற்றி எரிந்தது என்று கூற தேவையில்லை.

"ஆதி, என்னுடைய கார் டயர் பஞ்சர் ஆயிடுச்சு. நான் கேப்ல வந்தேன். என்னை கொஞ்சம் ட்ராப் பண்ண முடியுமா?"

"சித்தி, இளவரசன்கிட்ட சொல்லி டிராப் பண்ண சொல்லுங்க" என்றான் ஆதித்யா.

"நீங்க என்னை ட்ராப் பண்ண மாட்டீங்களா?"

"நான் சொன்னதை நீ கேட்கலையா? நானும் என் வைஃபும் வெளியே போறோம்" என்றான் கடுகடுவென்று.

"இல்ல... என்னை டேக்ஸி ஸ்டாண்ட்ல விட்டா போதும்..."

தனது துப்பட்டாவை பதட்டத்துடன் முடிச்சிட்டு கொண்டிருந்தாள் கமலி.

"சரி வா..." என்றவன் கமலியின் பக்கம் திரும்பி,

"போகலாமா கமலி?" என்றான் மென்மையான குரலில்.

தலையசைத்து அவனுடன் நடந்தாள் கமலி.

காரில்

ஆதித்யாவின் பக்கத்தில், ஒன்றும் பேசாமல் அமர்ந்திருந்தாள் கமலி.

"கமலி, நான் உன்னை எங்க கூட்டிகிட்டு போறேன்னு நீ கெஸ் பண்ணியா?" என்றான்.

இல்லை என்று தலையசைத்தாள் கமலி.

"சரி, அப்படின்னா அது சர்ப்ரைஸா இருக்கட்டும்" என்றான்.

அப்போது ஷில்பா,

"உங்களைப் பார்க்க எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. உங்க மேல வலுக்கட்டாயமா திணிக்கப்பட்ட கல்யாணத்தை நீங்க சந்தோஷமா ஏத்துக்கிட்டிங்க போலிருக்கு"

அடுத்த நொடி, ஆதித்யா பிரேக்கை அழுத்த, க்ரீச் என்ற ஓசையுடன் வண்டி நின்றது.

"திணிக்கப்பட்ட கல்யாணம்னா என்ன அர்த்தம்?" என்றான் கோபத்துடன்.

"நீங்க ஒரு மல்டி மில்லினர், பெரிய பிசினஸ் மேன், ஆக்ஸ்ஃபோர்ட் ரிட்டன், இந்தியாவோட பணக்கார பொண்ணுங்க எல்லாம் உங்களை கல்யாணம் பண்ணிக்க கியூவில் நின்னாங்க. உங்களை கட்டாயப்படுத்தி தான் இந்த கல்யாணத்தை செஞ்சு வச்சாங்கன்னு எனக்கு தெரியும். அப்படி இல்லன்னா, கொஞ்சம் கூட உங்களுக்கு பொருத்தமே இல்லாத ஒரு பெண்ணை நீங்க ஏன் கல்யாணம் பண்ணிக்க போறீங்க?"

"கல்யாணத்துக்கு முன்னாடி வரைக்கும் எல்லாருமே பொருத்தம் இல்லாதவங்க தான். கல்யாணத்துக்கு அப்புறம் தங்களுக்கு நடுவுல இருக்கிற வித்தியாசத்தை மறந்து, ஒருத்தர்கிட்ட இருக்கிற நல்லதை மற்றவர் புரிஞ்சு வாழுறது தான் வாழ்க்கை. அதிர்ஷ்டவசமா, எனக்கு கிடைச்ச பார்ட்னர்கிட்ட நல்லது மட்டும் தான் இருக்கு" என்றான் கமலியை பார்த்தபடி.

"நான் அத சொல்லல..."

"எங்களுக்கு லேட் ஆகுது. உனக்கு இங்கயிருந்து டாக்ஸி கிடைக்கும்." என்றான் அதற்கு மேல் அவளுக்கு பேசும் சந்தர்ப்பத்தை வழங்க விருப்பமில்லாமல்.

கதவை திறந்து கொண்டு இறங்க போனவள்,

"ஒன் மினிட்" என்ற ஆதித்யாவின் குரலைக் கேட்டு புன்னகையுடன் திரும்பினாள்.

"மேனர்ஸ்னா என்னன்னு கத்துக்கோ. என்னோட சொந்த விஷயத்தில் உன்னுடைய மூக்கை நுழைக்கிறதை நிறுத்து. எனக்கும் என்னோட வைஃபுக்கும் இருக்குற வித்தியாசத்தை பத்தி பேசினா, நான் மனுஷனா இருக்க மாட்டேன். உங்க அப்பாவை என்னோட கம்பெனியிலிருந்து தூக்கி எறியவும் தயங்க மாட்டேன். மைண்ட் இட்" என்றான் எச்சரிக்கை தொணியில்.

விழிபிதுங்கி நின்றாள் ஷில்பா. இந்த நேரடி தாக்குதலை அவள் ஆதித்யாவிடமிருந்து எதிர்பார்க்கவில்லை... அதுவும் கமலிக்கு முன்னால்... அவள் காரைவிட்டு கீழே இறங்கியதும், கியரை மாற்றி கொண்டு கிளம்பினான் ஆதித்யா.

எண்ணற்ற எண்ணங்களின் கலவையுடன் அவனையே பார்த்து கொண்டிருந்தாள் கமலி. தன் பக்கம் நின்றதன் வாயிலாக, ஷில்பாவிற்கு சரியான பதிலடி கொடுத்து விட்டான் ஆதித்யா. உண்மையிலேயே ஆதித்யா இதையெல்லாம் கூறினான் என்பதை அவளால் நம்ப முடியவில்லை.

"எதுக்காக என்னை இப்படி பார்த்துகிட்டு இருக்க?" என்றான் சாலையை பார்த்தபடி.

"நீங்க எனக்கு சப்போர்ட் பண்ணிட்டீங்க..."

"நான் உனக்கு தான் சப்போர்ட் பண்ணணும்... பண்ணுவேன்..."

"ஆனா, உங்களைக் கட்டாயப்படுத்தி தானே எனக்கு கல்யாணம் பண்ணி..." அவள் முழுதாய்க் கூறி முடிக்கும் முன், சாலை ஓரத்தில் வண்டியை நிறுத்தினான் ஆதித்யா.

"யார் சொன்னது? அந்த தலைக்கனம் பிடிச்ச பொண்ணு சொன்னாளா?"

"வந்து..."

"இல்ல, அப்படின்னு நான் சொன்னேனா?"

இல்லை என்று தலையசைத்தாள் கமலி.

"நம்ம ரெண்டு பேருக்கும் இடையில இருக்கிற வித்தியாசத்தை நீ உணர மாதிரி நான் எப்பவாவது நடந்துக்கிட்டேனா?" என்றான் வருத்தத்துடன்.

இந்த முறை, இல்லை என்று குற்ற உணர்ச்சியுடன் தலையசைத்தாள் கமலி.

"அப்படி இருக்கும் போது, எதுக்காக மத்தவங்க சொல்றதை எல்லாம் நீ நம்புற? என்கிட்ட எதுவும் கேட்க மாட்டியா?"

"நீங்க உண்மையிலேயே இந்த கல்யாணத்தை சந்தோஷமா தான் செஞ்சுக்கிட்டிங்களா?"

"நீ என்ன நினைக்கிற?"

"நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி, எனக்கு உங்களைப் பத்தி எதுவுமே தெரியாது. ஆனா, உங்களுக்கு இந்த சொசைட்டியில இருக்கிற ஸ்டேட்டஸ் பத்தி தெரிஞ்சதுக்கு பிறகு, நான் உங்களுக்கு தகுதி இல்லன்னு எனக்கு தோணுது." மனதில் இருந்ததை உளறிக் கொட்டினாள் கமலி.

"ஒ... அப்படியா? சரி உன்னைப் பொறுத்தவரைக்கும் எனக்கு வைஃபா இருக்கணும்னா என்ன குவாலிஃபிகேஷன் தேவைன்னு நினைக்கிற?"

"அழகா, எஜுக்கேட்டடா, நல்லஃபேமிலி, அப்புறம் ஃபேஷன் ஓரியண்டட்..."

"அழகு, உன்னை மாதிரி அழகான பொண்ண நான் பார்த்ததே இல்லை... தெரியுமா?"

வெட்கத்தில் கன்னம் சிவந்தாள் கமலி. அது ஆதித்யாவின் முகத்தில் புன்னகையை வரவழைத்தது.

"எஜுக்கேட்டட்... நீயும் இப்போ டிகிரி படிச்சுக்கிட்டு தான் இருக்க. உங்களுடைய குடும்பமும், கௌரவமான குடும்பம் தான். ஃபேஷன் ஓரியன்டட்னா, ஒவ்வொன்னும் ஒவ்வொருத்தருடுடைய பார்வையில் ஃபேஷன் தான். உன்னை நீ குழப்பிக்காத. சரியா?"

சில நொடி நிறுத்தியவன்,

"என்னோட வைஃப் எப்படி எல்லாம் இருக்கணும்னு நீ நினைச்சது இருக்கட்டும்... என்னுடைய எதிர்பார்ப்பு என்னன்னு கேக்க மாட்டியா?"

"என்ன?" என்றாள் விழி விரிய.

"சொசைடியில் எனக்கு இருக்கிற ஸ்டேட்டஸை பத்தியெல்லாம் கவலை படாம, என்னை நேசிக்கிறவளா இருக்கணும். என்னுடைய குடும்பத்தை அவளோட குடும்பமா நினைக்கணும். அவங்களை மதிச்சி நடத்தணும். எல்லாத்துக்கும் மேல, ஷாலினியோட சேர்ந்து கண்ணாமூச்சி விளையாடணும்" என்று சிரித்தான்.

"இதெல்லாம் உண்மையா? இல்லன்னா என்னை சமாதானப்படுத்த இதையெல்லாம் சொல்றீங்களா?"

"நான் ஏன் உன்னை சமாதானப்படுத்தணும்?"

"என்னை சந்தோஷப்படுத்த..."

"நான் ஏன் உன்னை சந்தோஷபடுத்தணும்?"

"ஏன்னா, நான் உங்க வைஃப்..."

"நீ என்னோட வைஃபா இருந்தா, அதுக்காக ஏன் இதெல்லாம் செய்யணும் ...?"

"நீங்க என்ன காதலிக்கிறீங்கல்ல அதுக்காக..." என்று கூறிவிட்டு உதடு கடித்தாள்.

அவளைப் பார்த்துப் புன்னகை புரிந்தான் ஆதித்யா.

"அந்த விஷயம் உனக்கு தெரியுமா?" என்றான் புன்னகை மாறாமல்.

"எந்த விஷயம்?" என்று தடுமாறினாள் கமலி.

"நான் உன்னை ரொம்ப *டேம்இட்* அப்படின்னு?"

பொங்கி வந்த வெட்கத்தை மறைக்க அரும்பாடு பட்டாள் கமலி.

"கமலி நீ என்னோட வைஃப். மிஸஸ் ஆதித்யா...! அந்த உரிமையை எடுத்துக்க நீ தயங்க வேண்டிய அவசியமில்ல. உன்னுடைய பவர் என்னன்னு தெரிஞ்சுக்கோ. தைரியமா இரு. நீ எதுக்காகவும் பயப்படாத. நீ என்னோட வைஃப், உன்னை விட வேற எதுவும் எனக்கு முக்கியம் இல்ல. நான் உனக்காக, உன் பக்கத்துல தான் நிப்பேன்... எப்பவும். உன்கிட்ட யாராவது ஏதாவது சொன்னா, அதை தைரியமா என்கிட்ட சொல்லு. உன்னோட பாவப்பட்ட மூளையை போட்டு குழப்பிக்காம, உடனடியா அந்த விஷயத்தை முடிச்சிடு. பயப்படாம என் சட்டை காலரை பிடிச்சி என்னை கேள்வி கேளு."

அதை கேட்டு கமலியின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது.

"நீ என்னோட வைஃப் டா... உனக்கு எல்லா உரிமை இருக்கு... என் மேல..."

கமலிக்கு தொண்டை அடைத்தது. அவள் உணர்ச்சிவசப்படுவதை கவனித்தான் ஆதித்யா.

"உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்... ரொம்ப ரொம்ப பிடிக்கும்... புரிஞ்சுதா?"

கலங்கிய கண்களுடன் தலை அசைத்தாள் கமலி.

சிறிது தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, துணிந்து, மெல்ல அவள் கண்ணம் தொட்டான் ஆதித்யா. அது கமலிக்கு புது உலகை காட்டியது... அவனது பேச்சில் அவள் பெற்ற பாதுகாப்பு உணர்வை வழங்கியது. மெல்ல தன் தலையை சாய்த்து, அவனது கையில் தன் கன்னத்தை முழுமையாய் பதித்தாள் கமலி. அவளது செய்கை ஆதித்யாவை நிலைகுலையச் செய்தது. வலுக்கட்டாயமாய் புன்னகையை வரவழைத்துக் கொண்டு, அரை மனதாய், காரை ஸ்டார்ட் செய்துகொண்டு கிளம்பினான் ஆதித்யா.

தொடரும்....

Continue Reading

You'll Also Like

94.8K 2.9K 63
புவியில், அவள் பிறந்த அன்றே , தாய் தந்தையை அறிந்தது போல் கணவனையும் சேர்த்தே அறிந்துக் கொள்ள.. தன் சகோதரியின் கருவறையில் இருக்கும்போதே, அவளை மனைவியா...
58.7K 2.3K 36
காதலாகி, காதலாகி காத்திருந்தேன் நான். காலம் தந்த வேதனையை வென்று வந்தேன் உன் காதலால்,, நீயே என் உலகமென்று புரியவைத்தாய் கண்மணி உன் காதல் மொழியில். உ...
152K 6.4K 25
அவள் உள்ளங்கவரப் போகும் கள்வன் அவன்..
164K 6.2K 21
திருமணத்தில் இணைந்த இரு மனம்..❤❤