ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...

By NiranjanaNepol

149K 6.6K 1K

எல்லாவற்றிலும் வித்தியாசத்தை விரும்பும் நாயகன்... உலகமே அறியாத நாயகி... அவர்கள் வாழ்வில் நடைபெறும் சுவாரசியங்... More

1 திருமண கோரிக்கை
2 அதிரடி அறிமுகம்
3 ரகசிய திட்டம்
4 சிங்கத்தின் குகையில்
5 தொலைபேசி அழைப்பு
6 திருமதி ஆதித்யா
7 காத்திருந்த முதலிரவு
8 ஆதித்யாவின் முடிவு
9 அம்மாவின் அறிவுரை
10 சென்னையில் கமலி
11 திருமதி ஆதித்யா
12 புத்திசாலி பெண் தான்
13 நீங்கள் நல்லவர் தான்
14 அதிர்ஷ்ட தேவதை
15 பொய்
16 ஆதித்யா யார்?
17 கமலியின் சொந்த விதி
18 கமலியின் சாகசம்
19 கமலியின் புரிதல்
20 ஆதித்யாவின் பார்வை
22 நான் உன்னுடன் டேம் இட்
23 கமலியின் அன்பு
24 ஒன்றுபட்ட மனங்கள்
25 விசித்திர உணர்வு
26 என்னோட ஆதிஜி
27 நீங்கள் என்றுடையவர்
28 கமலியின் இன்ப அதிர்ச்சி
29 நம்பிக்கை
30 அலுவலகத்தில் கமலி
31 ஒன்றுபட்ட மனங்கள்
32 மிஸஸ் பாஸ்
33 குமரிப்பெண்
34 மலர்க்கணைகள்...
35 அவளை நானறிவேன்...!
36 வஞ்சக உலகம்...
37 சோமபானம்
38 தொலைந்த மகள்
39 ஆதித்யாவின் நம்பிக்கை
40 முதல் முத்தம்
41 புதிய பரிமாணம்
42 நேர்மை
43 விஷநாகத்தின் குறி
44 என்ன நடக்கிறது?
45 யார் அது?
46 அந்த கண்கள்
47 பணம் பத்தும் செய்யும்
48 வித்யாசம்
49 ஆதித்யா...
50 நிஜ முகம்
51 அது வேறு...
52 கமலின்னா சும்மாவா?
53 கோவம் தனிந்தது
54 ஆதித்யாவின் பரிசு
55 விதி வலியது
57 ஒரே காரணம்
57 தவறல்ல... துரோகம்
58 கமலி கொடுத்த அதிர்ச்சி
59 பிரபாகரனின் உறுதி
60 குழந்தையின் ஏக்கம்
61 ஒப்புதல்
62 குடும்பம்
இறுதி பாகம்

21 ஆதித்யாவின் நடவடிக்கை

2.1K 103 19
By NiranjanaNepol

21 ஆதித்யாவின் நடவடிக்கை

கல்லூரி

ராகுல் தனது நண்பர்களுடன் வருவதை கவனித்தாள் லாவண்யா. ஆனால், அவளை கண்டுகொள்ளாமல் கடந்து சென்றான் அவன். லாவண்யாவிற்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது.

"நில்லு ராகுல்..."

திரும்பிப் பார்த்து புன்னகை புரிந்தான் ராகுல்.

"அண்ணி எங்கே?" என்றான்.

"உங்க அண்ணியை தவிர வேற யாரும் உன் கண்ணுக்கு தெரிய மாட்டாங்களா?"

"அண்ணியை கவனமா பாத்துக்க சொல்லி ஆதி என்கிட்ட சொல்லி இருக்கான் தெரியுமா? அது சரி, வேற யாரை நான் கவனிக்கணும்னு நினைக்கிற?"

அவள் கூறியதை புரிந்து கொள்ளாதவனைப் போல தலையை சொறிந்தான் ராகுல்.

ராகுலுடன் நின்றிருந்த நண்பர்களைப் பார்த்து,

"நான் ராகுல்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்" என்றாள் லாவண்யா

அவர்கள் ஒன்றும் கூறாமல் அங்கிருந்து சென்றார்கள்.

"என்கிட்ட நீ என்ன பேசணும்?" என்றான் ராகுல்.

"உனக்கு கொஞ்சம் கூட அறிவே கிடையாதா?"

"இருக்கே... ஆனா, தேவைப்படும் போது தான் நான் அதை யூஸ் பண்ணுவேன்"

"நீயும்... உன் அறிவும்... நான் இந்த காலேஜ்ல சேர்ந்து ஆறு மாசம் ஆச்சு. நான் இங்க எதுக்கு சேர்ந்தேன்னு உனக்கு தெரியுமா?"

"இது ரொம்ப நல்ல காலேஜ்..."

"கடவுளே... நான் உனக்காக தான் இங்க சேர்ந்தேன்"

"எதுக்கு? " என்றான் புரியாமல்.

"ஏன்னா, என்னோட முட்டாள் இதயம், என் காதலை புரிஞ்சிக்காத ஒரு முட்டாள் மேல காதல் வசப்பட்டுடுச்சி..."

"யார் அந்த அதிர்ஷ்டம் கெட்டவன்?" என்றான் சிரிப்பை அடக்கியபடி ராகுல்.

"என்னது அதிர்ஷ்டம் கெட்டவனா?"

"பின்ன என்ன? காதலிக்கிறேன்னு சொல்றதையே நீ இந்த அழகுல சொல்றியே... உன் கூட அவன் எப்படித் தான் வாழ போறானோ...!"

"நான் உன்னைத் தான் காதலிக்கிறேன்னு உனக்கு உண்மையிலேயே புரியலையா?"

"என்னய்யா? " என்றான் புருவத்தை உயர்த்தி அதிர்ச்சியாக.

"இல்ல... இந்த மரத்தை... இந்தக் கல்லை... இந்த பில்டிங்கை..." என்றாள் எரிச்சலுடன்

"நல்ல காலம், கடவுள் என்னைக் காப்பாத்திட்டார்" என்றான் கிண்டலாக.

"வாயை மூடு. நீ என்னை காதலிக்கிறியா இல்லையா?"

"உடனே கேட்டா எப்படி சொல்றது? ரெண்டு, மூணு மாசம் போடுற சட்டையையே நான் ரெண்டு மணி நேரம் செலக்ட் பண்ணுவேன். என் வாழ்க்கையையே ஒப்படைக்கப் போற, ஒய்ஃபை எப்படி சட்டுன்னு முடிவு பண்ண முடியும்? அவ என்னை கண் கலங்காம பாத்துக்குவாளான்னு தெரிஞ்சிக்க வேண்டாமா?"

"உன்னை நான் ஆமான்னு சொல்ல வைக்கிறேனா இல்லையான்னு பாரு"

"ஆதிகிட்டயோ, பிரபாகிட்டையோ போகாம, முடிஞ்சா செஞ்சு பாரு"

"சேலஞ்ச் பண்றியா?"

"அப்படித்தான் வச்சுக்கோ"

"கோ டு ஹெல்... "

"கரெக்டா சொல்லு, கம் டு ஹெல்... உன்னை காதலிச்சா அப்படித் தானே ஆகும்...?"

தன் கையில் இருந்த புத்தகத்தை அவன் மீது விட்டெறிந்தாள் லாவண்யா. அதை ஸ்டைலாய் பிடித்து, தரையில் வைத்துவிட்டு, சிரித்தபடி ஓடிப்போனான் ராகுல்.

"இவன் என்ன ஜென்மமோ தெரியல... பைத்தியக்காரன்" என்று முணுமுணுத்தாள் லாவண்யா.

அப்போது, சுமித்ரா சோகமாய் வருவதை பார்த்தாள்.

"என்ன ஆச்சு சுமி?"

"கமலி எங்க?" என்றாள் சுமித்ரா.

"கிளாஸ்ல சமீருக்கு எதையோ சொல்லிக் கொடுத்துக்கிட்டு இருக்கா..."

"வா போகலாம்"

தன்னுடைய திருமண பத்திரிக்கையை, அவள் லாவண்யாவிடமும் கமலியிடமும் கொடுத்தாள். அவர்கள் அவசரமாய் அதை பிரித்துப் பார்க்க, அவர்களுடைய முதல் செமஸ்டர் தேர்வுகள் முடிந்தவுடனேயே அவளுக்கு திருமணம் முடிவு செய்யப்பட்டிருந்தது.

"என்னடி இது? உன் கல்யாணத்துக்கு இன்னும் பத்து நாள் தான் இருக்கு...!"

ஆமாம் என்று தலையசைத்தாள் சுமித்ரா.

"நீ காலேஜை கன்டினியூ பண்ண நம்ம ஏதாவது ஒரு வழியை தேடி கண்டுபிடிக்கலாம். நீ ஸ்டிரெஸ் பண்ணிக்காம எக்ஸாமுக்கு படி" என்றாள் கமலி.

"எனக்கு சுத்தமாக நம்பிக்கையே இல்ல, கமலி"

"நான் உங்க அப்பா அம்மாகிட்ட பேசட்டுமா?" என்றாள் லாவண்யா

"இனி அதையெல்லாம் பத்தி யோசிச்சி எந்த பிரயோஜனமும் இல்ல. அவங்க எல்லாருக்கும் இன்விடேஷன்ஸ் கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க"

"நம்பிக்கையை விடாதே சுமி. இன்னும் எதுவும் கைமீறிப் போகல. உனக்கு வாழ்க்கை முழுக்க டைம் இருக்கு. நம்பிக்கை மட்டும் தான் வேணும். அப்செட் ஆகாத. எப்ப வேணும்னாலும் அதிசயம் நடக்கலாம்" என்ற கமலியை லாவண்யாவும் சுமித்ராவும் வியப்புடன் பார்த்தார்கள்.

அப்போது அவர்கள் சட்டென்று கெட்ட அதிர்வலைகளை உணர்ந்தார்கள். அவர்கள் நினைத்தது சரி தான். கெட்ட சக்திகள் உலா வரும் இடம், கெட்ட அதிர்வலைகளை தானே பெரும்? ஷில்பா அவர்கள் முன் நின்றிருந்தாள்.

"ஏய், டொமேட்டோ சாஸ், எப்படி இருக்க?" என்றாள் நக்கலாக.

லாவண்யாவும் சுமித்ராவும் கோபத்தில் பல்லைக் கடித்தார்கள். ஆனால், கமலி பதட்டப்படாமல் அவளுக்கு பதில் கூறினாள்.

"ஆதிஜி என்னோட இருக்கிற வரைக்கும் நான் நல்லா தான் இருப்பேன்"

"உன்னோட நாளை எண்ண ஆரம்பிச்சிடு. ஆதி உன்னை தூக்கி எறியிற நாள் சீக்கிரம் வரும்"

அதைக்கேட்டு பதட்டம் அடைந்தாலும் கூட, அவள் முன் உறுதியாய் நின்றாள் கமலி.

"அப்படியா? " என்றாள் கிண்டலாக

"ஆமாம் டொமேட்டோ சாஸ், பான்கேக்குக்கு சாக்லேட் சாஸ் தான் பொருத்தமா இருக்கும் அதை மறந்துடாதே."

அவள் அங்கிருந்து செல்ல நினைத்த போது, கமலியின் சிரிப்பை கேட்டு நின்றாள்.

"நான் டொமேட்டோ சாஸா இருக்கலாம். ஆனா, ஆதிஜி விரும்பப்பட்டா, பான்கேக்கை டொமேட்டோ சாஸ் கூட சேர்த்து சாப்பிடலாம். அவர் அதை செய்வாரு. அது அவர் இஷ்டம். ஆனா, ஆதிஜி சாக்லெட் சாஸை தொடக்கூட கூடாது. அவர் ஒரு டயாபட்டிக். அவருக்கு அது நல்லதில்ல. எதார்த்தத்தை புரிஞ்சிக்க பாரு. உன்னுடைய மூக்கை எங்க வாழ்க்கையில நுழைக்காதே. அப்படி செஞ்சா, லக்ஷ்மணன் செஞ்சா மாதிரி உன் மூக்கை அறுக்க நான் தயங்க மாட்டேன்."

ஒரு நொடி நின்றவள்,

"லட்சுமணன் யாருன்னு உனக்கு தெரியுமா? ஸ்ரீராமனுடைய தம்பி. அடுத்தவளோட புருஷனை பறிக்க நெனச்சதுக்காக சூர்ப்பனகையோட மூக்கை அறுத்தவர். போ... போய் படி... சூர்ப்பனகை..."

"என்ன சொன்ன...??? நான் சூர்ப்பனகையா?"

"ஆமாம்... அடுத்தவள் புருஷனை அபகரிக்க நினைக்கிற எல்லாருமே சூர்ப்பணகை தான்."

"இதுக்காக நீ ரொம்ப வருத்தப்பட போற. கொடுத்ததை திருப்பி வாங்க தயாரா இரு. நீ ரொம்ப நாளைக்கு ஆதியோட வாழ்க்கையில நீடிக்க மாட்ட"

கொந்தளிப்புடன் அங்கிருந்து சென்றாள்  ஷில்பா.

லாவண்யாவும் சுமித்ராவும் வாயை பிளந்து கொண்டு பார்த்துக் கொண்டு நின்றார்கள். தன் புருவத்தைப் உயர்த்தி என்ன? என்றாள் கமலி. இருவரும் ஓடிச்சென்று  கமலியை அனைத்து கொண்டார்கள்.

"இன்னைக்கு தான் நான் நிஜ மிஸஸ் ஆதித்யாவை பார்த்தேன். ஆதித்யாவை மாதிரி அதே கட்ஸ், அதே கான்ஃபிடன்ஸ்..."

"இல்ல லாவண்யா. எனக்கு சுத்தமா கான்பிடன்ஸ் இல்ல. நான் பயப்படலன்னு அவகிட்ட காட்டிக்கிட்டேன். அவ்வளவு தான்"

"ஏன் கமலி?" என்றாள் சுமித்ரா

"அவ ஆதிஜிகிட்ட பேசினா என்ன நடக்குமோன்னு எனக்கு பயமாயிருக்கு"

"நீ என்ன சொல்ற?" என்றாள் லாவண்யா

"அவ ஃபிரண்டு நான்சி கூட பேசிக்கிட்டிருந்ததை நான் கேட்டேன். ஆதிஜிகிட்ட பேசுற சந்தர்ப்பம் கிடைச்சா, என்னை அவர் வாழ்க்கையில் இருந்து கழுத்தைப் பிடிச்சி வெளியே தள்ள வச்சிடுவாளாம்"

அதைக்கேட்டு கொதித்துப் போனாள் லாவண்யா.

"ஆதிகிட்ட பேசுற சான்ஸ் அவளுக்கு கிடைக்கலன்னு நினைக்கிறாயா நீ? அவ நினைச்சா பத்து நிமிஷத்துல அதை அவளால செய்ய முடியும். இருந்தாலும் உன்னை பயமுறுத்திப் பார்க்கிறா. ஏன்னா, அவளுக்கு தெரியும் ஆதிகிட்ட பேசினா என்ன நடக்கும்னு"

"நெஜமாத் தான் சொல்றியா?"

"ஆமாம்... அதை நீயே பார்க்க போற"

"ம்ம்ம்"

அவர்களுடன் வகுப்பறையை நோக்கி சென்றாள் கமலி. அந்த நாள் முழுவதும், எதையோ பறிகொடுத்ததை போல கமலி இருந்ததை கவனித்தாள் சுமித்ரா. அவள் ஷில்பாவை தைரியமாய் எதிர்கொண்டு விட்டாலும் அவள் மனதை ஒருவித பயம் ஆட்கொண்டிருந்தது.

கடைசி மணி அடித்தவுடன், அவர்கள் தங்கள் உடமைகளை எடுத்து வைத்து கொண்டிருந்தார்கள். ஷில்பாவை நினைத்தபடி தங்கள் காரை நோக்கி சென்றாள் கமலி.

லாவண்யாவின் கையை பிடித்து நிறுத்தினாள் சுமித்ரா.

"நீ செய்யறது கொஞ்சம் கூட சரியில்ல லாவண்யா" என்றாள் சுமித்ரா.

"நான் என்ன செஞ்சேன்?"

"ஷில்பாவை பத்தி ஆதி அண்ணன்கிட்ட சொல்லாம மறைக்கலையா?"

"நான் மறைக்கலையே"

"சொல்லவும் இல்லையே... ஷில்பாவுக்கு சரியான பதிலடி கொடுத்துட்டாலும், கமலி எவ்வளவு ஸ்ட்ரெஸ்ஸா இருந்தா...? ஒருவேளை, ஷில்பா ஏதாவது ஏடாகூடமா செஞ்சா என்ன செய்வ? அதுக்கப்புறம் ஆதி அண்ணனை நீ ஏறெடுத்து பார்க்க முடியுமா?"

"நான் இதைப் பத்தி என் அண்ணன்கிட்ட ஒரு கோடா சொல்லி தான் வச்சிருக்கேன். இன்னைக்கு வீட்டுக்கு போயி எல்லாத்தையும் சொல்லலாம்னு நினைச்சேன்."

"இல்லை இப்பவே சொல்லு"

"சரி"

தனது கைப்பேசியை எடுத்து பிரபாகரனுக்கு ஃபோன் செய்து நடந்த அனைத்தையும் கூறி முடித்தாள் லாவண்யா. பிரபாகரனுக்கு கோபம் தலைக்கேறியது.

"அப்படியா சொன்னா அவ?"

"ஆமாண்ணா"

"விடு, நான் பாத்துக்குறேன்"

அழைப்பை துண்டித்தான் பிரபாகரன்.

இன்ட்காம்

கமலியின் விசித்திரமான செயலை எண்ணியபடி அமர்ந்திருந்தான் ஆதித்யா. எதற்காக தன்னை கல்லூரிக்கு வர விடாமல் அவள் தடுத்து கொண்டிருக்கிறாள்? எங்கே தவறு நடக்கிறது? எதையோ யோசித்தவன், பிரபாகரனுக்கு ஃபோன் செய்து தன் அறைக்கு வருமாறு கூறினான். சில நிமிடத்தில் அவனது அறைக்குள் நுழைந்தான் பிரபாகரன்.

"என்னை எதுக்கு வர சொன்ன ஆதி? "

"கமலியோட காலேஜ்ல என்ன நடக்குதுன்னு எனக்கு தெரியணும். லாவண்யா காலேஜ்லயிருந்து வந்த பிறகு எனக்கு ஃபோன் பண்ண சொல்லு"

அவனை பார்த்து பொருள் பொதிந்த புன்னகை பூத்தான் பிரபாகரன்.

"உனக்கு இதைப் பத்தி ஏற்கனவே ஏதோ தெரிஞ்சிருக்கு போலயிருக்கு?"

"என்ன செய்யறாங்க கமலி?"

"என்னை காலேஜுக்கு வர விடாம தடுக்கிறா. எப்பவும் டென்ஷனா இருக்கா."

"நீ அவங்களை எதுவும் கேட்கலையா?"

"கேட்டா ஒன்னும் இல்லைன்னு சொல்றா. ஆனா அது உண்மை இல்ல. அவளைப் பத்தி எனக்கு நல்லா தெரியும். அவ பட்டாம்பூச்சி மாதிரி சந்தோஷமா சுத்தி திறியறவ. இப்பல்லாம் அவ ரொம்ப விசித்திரமா நடந்துக்கிறா. விசித்திரமா நடந்துக்கிட்டா தான் கமலி... ஆனா, இப்ப எல்லாம் ரொம்ப விசித்திரமாய் இருக்கா" என்று சிரித்தான் ஆதித்யா.

"ஷில்பா... நம்ம ஏஜென்ட் முகேஷ் பொண்ணு"

"ஷில்பாவா?"

"ஷில்பாவுக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருந்ததுன்னு, முகேஷ் உன்னை அவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்க விருப்பப்பட்டது நமக்கு தெரியும். இப்போ அவ கமலியோட காலேஜ்ல பிஹெச்டி படிக்கிறா. அவ தான் கமலிகிட்ட விளையாடிக்கிட்டு இருக்கா"

"அவ என்ன செய்றா?" என்றான் கோபமாக.

"வேணுமின்னே எதையோ சொல்லி கமலியை பயமுறுத்துறாளாம்"

"அப்படி என்ன சொன்னா அவ?" என்றான் பல்லை கடித்தபடி.

"உன்கிட்ட பேச அவளுக்கு சந்தர்ப்பம் கிடைச்சா, கமலியை உன் வாழ்க்கையிலிருந்து கழுத்தைப் பிடிச்சி வெளியே தள்ள வைப்பாளாம்"

"அவளுக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்?" என்றான் முஷ்டியை மடக்கி.

"அவ என்ன வேணும்னா சொல்லட்டும் ஆதி. அவ சொல்றதை பத்தி கவலைப்படாம இருக்கிற அளவுக்கு கமலிக்கு ஒரு பாதுகாப்பு உணர்வை நீ தானே கொடுக்கணும்?"

அதைக் கேட்டு வாயடைத்துப் போனான் ஆதித்யா. பிரபாகரன் கூறுவது சரி தான். ஆனால், இந்தப் பெண் தான் அவனிடம் எதையுமே கூற மாட்டேன் என்கிறாளே. அப்படி இருக்கும் போது, அவளுக்கு பாதுகாப்பு உணர்வை அவன் எப்படி கொடுப்பது?

"நீங்க இரண்டு பேரும் வாழற வாழ்க்கை எப்படிப்பட்டதுன்னு எனக்கு தெரியும். ஆனா, அதுக்காக நீ அவங்ககிட்ட இருந்து விலகியே இருக்கிறது நல்லது இல்ல"

ஆமாம் என்று தலையசைத்தான் ஆதித்யா. அவன் கமலியிடம் இருந்து விலகி இருக்கக் கூடாது தான். தனது எல்லை என்ன என்பது அவனுக்கு தெரியாதா?

"இது தான் அவளை கஷ்டப் படுத்துற பிரச்சனையா? இதனால தான் அவ பதட்டமா இருக்காளா?"

"ஒரு நிமிஷம் இரு ஆதி. அவங்க ஏன் பதட்டமா இருக்காங்க?"

"என்ன கேள்வி கேட்கிறே நீ? எங்க தன்னுடைய வாழ்க்கையை இழுந்துடுவோமோன்னு அவ பயப்படுறா"

"வாழ்க்கை... அது நீ தான் ஆதி."

ஆதித்யா மென்று முழுங்கினான்.

"அவங்க பயந்திருக்காங்க. ஏன்னா, அவங்க உன்னை இழந்துடக் கூடாதுன்னு நினைக்கிறாங்க. ஏன்னா, அவங்களுக்கு நீ வேணும். உனக்கு அவங்க இதயத்துல, ஒரு இடத்தை கொடுத்துட்டாங்க... அவங்களுக்கே தெரியாம..."

"அப்படியா சொல்ற?" என்றான் உதட்டோர புன்னகையுடன்.

"சந்தேகமே இல்ல. எனக்கு என்னமோ, இந்த விஷயம், உங்க ரெண்டு பேருக்கும் இடையில இருக்கிற இடைவெளியை குறைக்க போகுதுன்னு தோணுது"

உதடு கடித்து சிரித்தான் ஆதித்யா.

"வீட்டுக்கு போயி அவங்களை இம்ப்ரஸ் பண்ற மாதிரி ஏதாவது செய். அதை உனக்கு யாரும் சொல்லிக் கொடுக்க வேண்டாம்... ஏன்னா, ஏற்கனவே நீ அதைத் தான் செஞ்சுகிட்டு இருக்க..."

அதைக்கேட்டு சிரித்தான் ஆதித்யா.

"இம்ப்ரஸ் பண்ணது போதும். அவங்களுக்கு வேண்டிய அஷ்யூரன்ஸ்ஸை கொடு"

சரி என்று தலையசைத்துவிட்டு அங்கிருந்து செல்ல எத்தனித்தவன் நின்றான்.

"சமீர்கான் மேல ஒரு கண் வை." என்றான்.

"அந்தப் பையன்கிட்ட நெகட்டிவா எதுவும் தெரியல"

"அதுக்காக நம்ம அப்படியே விட்டுடக்கூடாது"

"அப்படி நான் விட்டுடுவேன்னு நினைக்கிறாயா?"

இல்லை என்று தலையசைத்து அங்கிருந்து கிளம்பிச் சென்றான் ஆதித்யா.

தனது கைப்பேசியை எடுத்து, ஷில்பாவின் அப்பா முகேஷ்க்கு ஃபோன் செய்தான் பிரபாகரன்.

"எப்படி இருக்கீங்க பிரபா?"

"நல்லா இருக்கேன். புது காண்ட்ராக்ட் ஃபைலை அனுப்பி வைக்கிறேன்னு சொல்லி இருந்தீங்களே... "

"சாரி பிரபா. அந்த ஃபைல் ரொம்ப கான்ஃபிடன்ஷியல். அதனால நானே கொண்டு வந்து கொடுக்க நெனச்சேன். கொஞ்சம் பிஸியா இருந்துட்டேன்"

"அப்போ உங்களுக்கு நம்பிக்கையான யார்கிட்டயாவது கொடுத்து அனுப்புங்க"

"என் டாட்டர்கிட்ட குடுத்து அனுப்புறேன்"

"ஆதி வீட்டுக்கு எடுத்துக்கிட்டுப் போய் கொடுக்க சொல்லுங்க. அந்த ஃபைலை ஆதித்யா தான் அப்ரூவ் பண்ணனும். அவன் இப்ப தான் வீட்டுக்கு கிளம்பிப் போனான்."

"ஒன்னும் பிரச்சனை இல்ல. நான் ஷில்பாவை ஆதி வீட்டுக்கே கொண்டு போய் கொடுக்க சொல்றேன்"

அழைப்பை துண்டித்துவிட்டு தனது கைபேசியை பார்த்து புன்னகைத்தான் பிரபாகரன்.

"போ மா, போ... ஆதித்யா வட்டியும் முதலுமா சேர்த்து கொடுப்பான் வாங்கிட்டு வா..." என்றான் புன்னகையுடன் பிரபாகரன்.

தொடரும்...

Continue Reading

You'll Also Like

202K 5.3K 131
காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வ...
61.6K 3.1K 55
இந்த 2020 ல வாழுற ஒரு பொண்ணு 1000 வருஷம் முன்னாடி போனா எப்படி இருக்கும். அங்க ஒருவேளை அவளுக்கு காதல் வந்தா. அந்த காதல் கை கூடுமா. இவ அங்க போறதால அங்...
22.8K 891 57
💞குடும்பத்திற்காக காதலை மறைக்கும் ஒருத்தி, அவளது அன்பு புரிந்தும், அவளது நிராகரிப்பின் காரணத்தை ஏற்க முடியாமல் தவிக்கிறான் ஒருவன். தந்தையின் வார்த்...