ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...

By NiranjanaNepol

149K 6.6K 1K

எல்லாவற்றிலும் வித்தியாசத்தை விரும்பும் நாயகன்... உலகமே அறியாத நாயகி... அவர்கள் வாழ்வில் நடைபெறும் சுவாரசியங்... More

1 திருமண கோரிக்கை
2 அதிரடி அறிமுகம்
3 ரகசிய திட்டம்
4 சிங்கத்தின் குகையில்
5 தொலைபேசி அழைப்பு
6 திருமதி ஆதித்யா
7 காத்திருந்த முதலிரவு
8 ஆதித்யாவின் முடிவு
9 அம்மாவின் அறிவுரை
10 சென்னையில் கமலி
11 திருமதி ஆதித்யா
12 புத்திசாலி பெண் தான்
13 நீங்கள் நல்லவர் தான்
14 அதிர்ஷ்ட தேவதை
16 ஆதித்யா யார்?
17 கமலியின் சொந்த விதி
18 கமலியின் சாகசம்
19 கமலியின் புரிதல்
20 ஆதித்யாவின் பார்வை
21 ஆதித்யாவின் நடவடிக்கை
22 நான் உன்னுடன் டேம் இட்
23 கமலியின் அன்பு
24 ஒன்றுபட்ட மனங்கள்
25 விசித்திர உணர்வு
26 என்னோட ஆதிஜி
27 நீங்கள் என்றுடையவர்
28 கமலியின் இன்ப அதிர்ச்சி
29 நம்பிக்கை
30 அலுவலகத்தில் கமலி
31 ஒன்றுபட்ட மனங்கள்
32 மிஸஸ் பாஸ்
33 குமரிப்பெண்
34 மலர்க்கணைகள்...
35 அவளை நானறிவேன்...!
36 வஞ்சக உலகம்...
37 சோமபானம்
38 தொலைந்த மகள்
39 ஆதித்யாவின் நம்பிக்கை
40 முதல் முத்தம்
41 புதிய பரிமாணம்
42 நேர்மை
43 விஷநாகத்தின் குறி
44 என்ன நடக்கிறது?
45 யார் அது?
46 அந்த கண்கள்
47 பணம் பத்தும் செய்யும்
48 வித்யாசம்
49 ஆதித்யா...
50 நிஜ முகம்
51 அது வேறு...
52 கமலின்னா சும்மாவா?
53 கோவம் தனிந்தது
54 ஆதித்யாவின் பரிசு
55 விதி வலியது
57 ஒரே காரணம்
57 தவறல்ல... துரோகம்
58 கமலி கொடுத்த அதிர்ச்சி
59 பிரபாகரனின் உறுதி
60 குழந்தையின் ஏக்கம்
61 ஒப்புதல்
62 குடும்பம்
இறுதி பாகம்

15 பொய்

2.1K 100 18
By NiranjanaNepol

15 பொய்

ஒரு மாதத்திற்கு பின்

முகேஷ் வில்லா

தன் அருகில் யாரோ நிற்பதை உணர்ந்து, தலையை உயர்த்தினார் முகேஷ். அவரது மகள் ஷில்பா, அவரை நோக்கி சில காகிதங்களை நீட்டியவாறு அவர் முன் நின்றிருந்தாள். 
நாம் ஏற்கனவே சுவிட்சர்லாந்தில் சந்தித்த பெண் தான் அவள்.

"என்ன இது?" என்றார் முகேஷ்.

"நான் பிஎச்டி சைக்காலஜி படிக்கலாம்னு இருக்கேன் பா. இது, அதுக்கான அப்ளிகேஷன். சைன் பண்ணுங்க."

அவளிடமிருந்து அதைப் பெற்று, கையொப்பமிட்டார் முகேஷ்.

"உன்னுடைய இந்த முடிவு, எனக்கு ரொம்ப சந்தோஷத்தை தருது. உனக்கும் மைண்ட் டைவர்ஷன் தேவை. நீ ஆதித்யாவை மறந்துட்டு பழையபடி சந்தோஷமா இருக்கணும்."

சரி என்று தலையை அசைத்தாள் ஷில்பா.

"நீ விருப்பப்பட்டா, லண்டனில் படிக்க நான் ஏற்பாடு செய்றேன்"

"இல்லப்பா, உங்களை தனியா விட்டுட்டு போக நான் விரும்பல"

தன் மகளின் வார்த்தையை கேட்டு நெகிழ்ந்தார் முகேஷ்.

"எனக்கு ரொம்ப சந்தோஷம். ஆனா, நீ ஆசைப்பட்டதை நிறைவேற்ற முடியலன்னு வருத்தமாவும் இருக்கு..."

"அதையெல்லாம் மறந்துடுங்கப்பா. நான் அதைப் பத்தி நினைக்க விரும்பல"

நிம்மதியுடன் தலையசைத்தார் முகேஷ். ஆசீர்வதிக்கும் வகையில், அவள் தலையை தொட்டு, வருத்தத்துடன் அங்கிருந்து சென்றார். தன் கையிலிருந்த விண்ணப்பப்படிவத்தை துஷ்ட புன்னகையுடன் பார்த்தாள் ஷில்பா.

"ஐ அம் சாரி பா. நான் உங்களை ஏமாத்திட்டேன்... ஏன்னா, நான் ஏமாற விரும்பல... நான் விருப்பப்பட்டதை, பரவாயில்லை போகட்டும்னு என்னால விட்டுட முடியாது. நான் ஒரு சைக்காலஜி ஸ்டூடன்ட். யாரை, எப்படி, எங்க அடிக்கணும்னு எனக்கு தெரியும்." என்று மனதில் எண்ணினாள் ஷில்பா.

அமைதியகம்

ஆதித்யா தினமும் வீட்டிற்கு சீக்கிரம் வருவதை வழக்கமாக்கி கொண்டுவிட்டதை பார்த்து, அமைதியகத்தில் இருந்தவர்கள் சந்தோஷமடைந்தார்கள். இந்த ஒரு மாத காலத்தில், கமலியிடம் படிப்படியான முன்னேற்றத்தை அனைவரும் கண்கூடாய் கண்டார்கள். அவளது நடவடிக்கைகளில் தன்னம்பிக்கை தெரிந்தது. தான் ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பில் கற்றுக் கொண்ட ஆங்கில வார்த்தைகளை, பேச்சுக்கு ஊடாக சரளமாய் பயன்படுத்த துவங்கினாள் கமலி. அவளுக்கு உதவுகிறேன் என்ற பெயரில், அவளிடம் தப்பும் தவறுமாய் ஆங்கிலத்தில் இந்திராணி பேசத் துவங்க, அது ஆதித்யாவிற்கு கவலையை அளித்தது. அது கமலியை குழப்பி விடலாம் அல்லவா...?  ஆனால் அவனுக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில், இந்திராணி பேசிய தவறான ஆங்கிலத்தை, சரி செய்து அவருக்கு சரியாய் சொல்லிக் கொடுத்தாள் கமலி.

தனது கல்லூரி, ஆங்கில வகுப்பு, மற்றும் ஆதித்யாவின் நட்புறவு அனைத்தையும் சந்தோஷமாய் அனுபவித்துக் கொண்டிருந்தாள் கமலி. கூடவே தனது மருமகளுக்கான கடமையையும் அவள் செய்ய தவறவில்லை.

கல்லூரி

தனது மதிய உணவுடன் கடைசி இருக்கையில் காத்திருந்தாள் கமலி. லாவண்யாவும், சுமித்ராவும் கேண்டீனுக்கு சென்றிருந்தார்கள். அப்பொழுது, அவளது வகுப்பில் படிக்கும் ஒரு மாணவன்  அவளிடம் வந்தான். அவனை இதற்கு முன்  பார்த்திருந்தாலும், அவனது பெயர் அவளுக்கு தெரியாது.

"ஹாய்" என்றான்.

லாவண்யா கூறிய வார்த்தைகள் அவள் நினைவுக்கு வந்தது. யாரையும் அண்ணா என்றோ, அக்கா என்றோ அழைக்கக் கூடாது என்று அவள் கூறி இருந்தாள் அல்லவா...! அதனால் அவளும்,

"ஹாய்" என்றாள்.

"என் பேர் சமீர் கான்"

"என் பெயர் கமலி"

"எனக்கு தெரியும்"

"ஓ..."

"நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கலாமா?"

"கேளுங்க"

"நம்ம காலேஜ்க்கு வந்த முதல் நாள், நீங்க நம்ம ப்ரொஃபசர்கிட்ட, நீங்க தமிழ் மீடியத்தில் படிச்சதா சொன்னிங்க..."

"ஆமாம்..."

"நானும் தமிழ் மீடியத்தில் தான் படிச்சேன். நம்மளுடைய பாடத்தை புரிஞ்சிக்க எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. ஆனா, நீங்க ரொம்ப ஈசியா பிக்கப் பண்ணிட்டீங்க. அது உங்களால எப்படி முடிஞ்சது?"

"எனக்கு ஸ்டடீஸ்ல ஆதிஜி தான் ஹெல்ப் பண்றாரு..." என்றாள் புன்னகையுடன்.

"ஆதிஜியா...? அவர் உங்க டியூஷன் மாஸ்டரா?"

"இல்ல, இல்ல, அவர் என்னோட ஹஸ்பண்ட்..."

"நெஜமாவா? பரவாயில்லையே..."

"ஆமாம்... நான் ஆரம்பத்துல ரொம்ப பயந்தேன். என்னை ஸ்போக்கன் இங்கிலிஷ் கிளாஸ்ல சேத்துவிட்டதோட மட்டும் இல்லாம, எனக்கு தினமும் பாடமும் சொல்லிக் கொடுப்பார்"

"இப்படிபட்ட ஹஸ்பண்ட் கிடைக்க நீங்க ரொம்ப குடுத்து வச்சிருக்கணும்..."

ஆமாம் என்று தலையசைத்தாள் கமலி யோசனையுடன்.

"உங்களுக்கு ஏதாவது டவுட் இருந்தா, என்னை கேளுங்க. நான் ஹெல்ப் பண்றேன்" என்றாள்.

"தேங்க்யூ சோ மச், சிஸ்டர்" என்றான் சமீர்.

அவன் சிஸ்டர் என்று கூறியதைக் கேட்டு, சந்தோஷம் தாங்கவில்லை கமலிக்கு.

"யூ ஆர் வெல்கம்" என்றாள். ஆனால், அவனை அண்ணா என்று அவள் அழைக்கவில்லை.

லாவண்யா கூறியதை மீறி நடக்க அவளுக்கு விருப்பமில்லை. லாவண்யாவும், சுமித்ராவும் அங்கு வந்தவுடன், அங்கிருந்து சென்றான் சமீர்.

"நாளையிலயிருந்து உனக்கு நான் சாப்பாடு கொண்டு வரேன். கேண்டீன் சாப்பாடு சாப்பிடாதே" என்றாள் கமலி லாவண்யாவிடம்.

"நல்லா ரெண்டு அடி போட்டு சொல்லு. எப்ப பாத்தாலும் வெளியில தான் சாப்பிடுறா இவ" என்றாள் சுமித்ரா.

"அது ரொம்ப டேஸ்டியா இருக்கும் தெரியுமா?" என்றாள் லாவண்யா.

"ஆனா, அது உடம்புக்கு நல்லதில்ல" என்றாள் கமலி.

"மன்னிச்சிடு தாயே... இனிமே சாப்பிடல" என்றாள் லாவண்யா.

"ஆமாம்... என்ன விஷயம் கமலி? எல்லா டெஸ்ட்லயும் நீ நல்ல மார்க் எடுத்திருக்க...? லாவண்யா, கமலி நம்ம டைப் இல்லை போலருக்கே" என்றாள் சுமித்ரா.

அதைக் கேட்டு சிரித்த லாவன்யா,

"சரியா சொன்ன... ரொம்ப நல்ல பொண்ணா இருக்காத கமலி..." என்றாள்.

"இல்ல லாவன்யா... நான் ஆதிஜிக்காக இதை செஞ்சு தான் ஆகணும். அவர் என்னை ரொம்ப நம்பறாரு"

"நிஜமாவா?" என்றாள் பொருள் பொதிந்த பார்வையோடு

"ஆமாம். அவர் தான் தினமும் எனக்கு தமிழ்ல இதையெல்லாம் சொல்லித் தராரு. அதனால தான் என்னால இதையெல்லாம் புரிஞ்சுக்க முடிஞ்சது"

"என்னது...? ஆதித்யா தமிழ்ல சொல்லித் தறாரா?" என்றாள் ஆச்சரியமாக.

"ஆமாம்... அவரும் தமிழ் மீடியத்தில் தானே படிச்சாரு...?"

"என்ன உளர்ற...? அவரு..." என்று ஏதோ சொல்லப் போன சுமித்ராவை, கண்ணை காட்டி தடுத்தாள் லாவண்யா. குழப்பத்துடன், பேசுவதை நிறுத்தினாள் சுமித்ரா.

"உனக்கு ஆதித்யா தான் படிக்க ஹெல்ப் பண்றாரா?" லாவண்யா.

"ஆமாம்... தினமும்..."

"நீ ரொம்ப லக்கி. உன்னை காலேஜுக்கும் அனுப்பி, சொல்லியும் கொடுக்குறாரு..." லாவண்யா.

"இது உண்மையிலேயே ரொம்ப பெரிய விஷயம். கல்யாணம் நிச்சயம் ஆன உடனேயே, நிறைய பொண்ணுங்க படிப்பை பாதியிலேயே விடுறதை நான் பார்த்திருக்கேன்... உண்மையிலேயே கமலி ரொம்ப அதிர்ஷ்டசாலி..." என்றாள் சுமித்ரா.

அதையெல்லாம் கேட்ட கமலியின் முகம் மாறியது. ஆம், அவள் உண்மையிலேயே ஆசிர்வதிக்கப்பட்ட பெண் தான்...! திருமணத்திற்கு பிறகு தனக்கு படிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும் என்று அவள் எதிர்பார்க்கவே இல்லை. அவளுடைய ஆதிஜி உண்மையிலேயே ஒரு ஜெண்டில்மேன் தான். அவனுக்கு மனதிற்குள் நன்றி கூறினாள் கமலி. ஆதித்யாவை நினைத்துக்கொண்டே, தன் மதியஉணவு கொண்டுவந்திருந்த டப்பாவை கழுவ எடுத்து சென்றாள் கமலி. அவள் திரும்பி வந்த போது, லாவண்யாவும், சுமித்ராவும் மிகவும் மும்முரமாய் பேசிக்கொண்டிருந்ததை கேட்டாள். 

"நான் ஆதித்யா அண்ணனை பத்தி உண்மையை சொல்ல போனப்போ எதுக்காக என்னை தடுத்த?" என்றாள் சுமித்ரா

*உண்மை* என்ற வார்த்தையை கேட்டு, திடுக்கிட்டாள் கமலி. அவர்கள் எந்த உண்மையை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்?

"அவர் படிச்சது ஆக்ஸ்ஃபோர்டு யூனிவர்சிட்டியில... ஆனா, எதுக்காக தமிழ் மீடியத்துல படிச்சதா அவர் கமலிகிட்ட பொய் சொல்லணும்?" சுமித்ரா.

"கமலி கம்ஃபர்டபிலா இருக்கணும்னு அப்படி சொல்லியிருப்பார்னு நினைக்கிறேன். அவளுக்கு தமிழ்ல  சொல்லிக் கொடுக்கிறதுகாக ஆதித்யா டைம் ஸ்பென்ட் பண்ணி, தமிழ்ல பிரிப்பேர் பண்றாருன்னு தெரிஞ்சா, அவர்கிட்ட கேட்க கமலி தயங்கலாம் இல்லையா...? அதுக்காகத் தான் தமிழ் மீடியத்தில் படிச்சதா பொய் சொல்லி இருப்பாரு"

அவர்கள் பேசிக்கொண்டிருந்தது கமலிக்கு புரியவில்லை. ஏன் என்றால் ஆக்ஸ்ஃபோர்டு யுனிவர்சிட்டி பற்றி அவளுக்கு ஒன்றும் தெரியாது. ஆனால், ஒரு விஷயம் அவளுக்கு தெளிவாய் புரிந்தது. அவளுக்காக ஆதித்யா நிறைய மெனக்கெடுகிறான் என்பது. கமலி வருவதைப் பார்த்து, அவர்கள் பேச்சை நிறுத்தினார்கள். அவர்கள் பேசியதை கேட்டுவிட்டதாய் கமலி காட்டிக்கொள்ளவில்லை. அவள் சாதாரணமாக இருப்பதாய் காட்டிக் கொண்டாலும், அவளது மனம் அவர்கள் கூறியதை பற்றியே எண்ணிக் கொண்டிருந்தது.

அதே எண்ண சுழற்சியுடன், அவள் ஆங்கில வகுப்புக்கு சென்றாள். அவளது மனதில் ஒரு கேள்வி உதித்தது. இங்கு தானே ஆங்கிலம் பயின்றதாய் ஆதித்யா அவளிடம் கூறினான்...? அது உண்மையாக இருக்குமா? பயிற்சியாளரிடம் கேட்டாள்.

"சார், ஆதிஜி இங்க எப்போ சேந்து படிச்சாரு?"

பயிற்சியாளரின் முகத்தில் ஏற்பட்ட பதற்றத்தை கவனித்தாள் கமலி. அவளுக்கு பதில் கூற திணறினார் அவர். அவள் கேள்விக்கு அவர் எப்படி பதில் கூற முடியும்? அந்த கேள்விக்கு தான் பதிலே இல்லையே... தன்னை சுதாகரித்துக் கொண்டு,

"அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி" என்றார்.

"ஓ..."

"அவரை நான் எப்படி மறக்க முடியும்? அவர் ரொம்ப பிரில்லியன்ட் ஸ்டூடண்ட்" என்று, இரண்டு பிட்டை சேர்த்து போட்டார் அவர்.

"ஆமாம், நீங்க சொன்னது சரி. அவர்கூட என்கிட்ட அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி படிச்சதா தான் சொன்னாரு. நான் தான் மறந்துட்டேன்."

நிம்மதிப் பெருமூச்சு விட்டார் பயிற்சியாளர். அவர் திறமையாய் தப்பித்துக் கொண்டார் அல்லவா...?

அன்று, கமலி எதிர்பாராத விதமாய், அவளை அழைத்துச் செல்ல ஆதித்யாவே வந்திருந்தான். அவளது ஆங்கில வகுப்புக்கு வெளியே காத்திருந்தான். அவளைப் பார்த்து ஆதித்யா சிரிக்க, கமலி அவனைப் பார்த்து சிரிக்காமல் வித்தியாசமாய் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"கமலி, உனக்கு என்ன ஆச்சு?"

"ஒன்னும் இல்லையே..."

"என்ன யோசிச்சுகிட்டு இருக்க?"

"என்னோட அடுத்த டாஸ்க்கை பத்தி யோசிக்கிறேன்"

"என்ன டாஸ்க்?"

தன்னை சுதாகரித்துக் கொண்டு,

"ஆக்டிவ் வாய்ஸ்" என்றாள்

"அது ரொம்ப சிம்பிள். ஆனா அது தான் லாங்குவேஜ்க்கு பேஸ்"

"இதையே தான் மாஸ்டரும் சொன்னாரு." என்று சற்று நிறுத்தியவள்,

"நீங்க எப்போ ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் படிச்சீங்க?" என்றாள்.

ஒரு நொடி திகைத்தவன்,

"நான் காலேஜ்ல படிச்சப்போ"

"அப்படின்னா? "

"ஒன்பது வருஷத்துக்கு முன்னாடி" என்று கூறினான், தான் மாட்டிக் கொண்டு விட்டதை உணராமல்.

"ஓ... அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நீங்க என்ன செஞ்சுகிட்டு இருந்திங்க?"

"அப்போ, நான் பிசினஸ் பண்ண ஆரம்பிச்சுட்டேன்"

"உங்க ஆஃபீஸ் எங்க இருக்கு?"

"உனக்கு பாக்கணுமா?"

"உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லனா..."

"எனக்கு என்ன பிரச்சனை? உண்மைய சொல்லனும்னா, நீ அங்க தானே வரப்போற... இன்ட்காம் உனக்காக காத்திருக்கு"

"ஏன்?"

"ஏன்னா, நீ என்னோட வைஃப். அடுத்த செமஸ்டரில் உனக்கு *அக்கவுண்ட்ஸ் மேனேஜ்மென்ட்* இருக்கு. உனக்கு விருப்பம் இருந்தா, நீ ஆஃபீசுக்கு வந்து மாமாகிட்ட கத்துக்கலாம்"

"சரி"

அதன் பிறகு எதுவும் பேசவில்லை கமலி. அவள் மனதில் இருந்ததெல்லாம் ஒரே ஒரு விஷயம் தான். ஆதித்யா படித்த ஆக்ஸ்ஃபோர்டு யுனிவர்சிட்டி.

வழிநெடுக அவள் எதையோ தீவிரமாய் யோசித்துக் கொண்டிருந்ததை பார்த்த ஆதித்யா, குழப்பம் அடைந்தான். வீட்டிற்கு சென்று சேர்வதற்கு முன், அதை பற்றி யாரிடம் கேட்பது என்று முடிவு செய்துவிட்டாள் கமலி.

வீட்டிற்கு வந்தபின் வழக்கமாய் செய்யும் வேலைகளை செய்து முடித்துவிட்டு, ஷாலினியை தேடிக் கொண்டு வந்தாள் கமலி. அவள் டைனிங் அறையில் அமர்ந்து *சாக்லேட் மூசை* ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். அங்கு கமலியை பார்த்தவுடன், தன்னிடம் இருந்த மற்றொரு சாக்லேட் மூசை கமலியிடம் கொடுத்தாள். அதை அவளிடமிருந்து பெற்றுக்கொண்டு, அவள் பக்கத்தில் அமர்ந்து கொண்டு சாப்பிட துவங்கினாள் கமலி.

"எப்படி இருக்கு மாமி?"

"எக்ஸலண்ட்..."

"அப்பா வாங்கிட்டு வந்தாரு"

"லாவண்யா இதை சாப்பிடுறதை பார்த்திருக்கேன்"

"நீங்களும் சாப்பிட ஆரம்பிச்சிடுவீங்கனு நினைக்கிறேன்"

ஆமாம் என்று தலையசைத்தவள்,

"ஆதிஜி கூட, எங்க காலேஜ்ல படிக்கும் போது, இதை சாப்பிட்டு இருப்பார் இல்ல?"

"உங்க காலேஜா? இல்லை மாமி, அவர் படிச்சது ஆக்ஸ்ஃபோர்ட்ல..."

"அது எங்க இருக்கு?" என்றாள் ஆர்வத்தை காட்டிக்கொள்ளாமல்.

"அது இங்லண்ட்ல இருக்கு... "

தனது அதிர்ச்சியை மறைக்க படாதபாடுபட்டாள் கமலி.

"அப்போ, ஆதிஜி அங்க இங்கிலீஷ் தெரியாம ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பாரு இல்ல?"

"மாமாவாவது... கஷ்டப்படுறதாவது... இங்கிலீஷ் தான் அவர் வாயில மாட்டிகிட்டு கஷ்டப்படும்..." என்றாள் ஷாலினி.

"அப்படின்னா?"

"அவர் படிச்சது சிபிஎஸ்சி ஸ்கூல். அவர் வளர்ந்ததே இங்கிலீஷ் கூட தான்"

"இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்?"

"இதையெல்லாம் சொல்லி தானே என்னை எல்லாரும் வளத்தாங்க...! நான் மாமா மாதிரி ஆகணுமாம். அதனால அவரோட ஹிஸ்டரியை சொல்லிக்கிட்டே இருப்பாங்க... "

"அவரை மாதிரின்னா எப்படி?"

"இங்கிலீஷ் பேசுறது, பிசினஸ்ல ஸ்மார்ட்டா இருக்கிறது, பிராப்ளம்ஸ் ஹேண்டில் பண்றது, எல்லாத்துலயும் தான்..."

ஆதித்யாவை பற்றி தெரிந்து மலைத்துப் போனாள் கமலி. இவ்வளவு திறமைசாலியானவனா அவளுடைய கணவன்?

கமலியை தேடிக்கொண்டு வந்த ஆதித்யா, அவள் ஷாலினியுடன் அமர்ந்து மூசை சாப்பிட்டுக் கொண்டு இருந்ததை பார்த்து, அவளை தொந்தரவு செய்யாமல் புன்னகையுடன் சென்றான்.

இதையெல்லாம் ஏன் ஆதித்யா செய்கிறான் என்று தலையை பிய்த்துக்கொண்டாள் கமலி. அவளிடம் பொய் கூற வேண்டியதன் அவசியம் என்ன? அந்த வெகுளி பெண்ணுக்கு எப்படித் தெரியும், ஒரு மிகச்சிறந்த ஆண்மகன், தன்னுடைய வாழ்க்கைத் துணையை சங்கடப்படுத்தாமல் இருக்க மட்டும் தான் பொய் உரைப்பான் என்று? இதையெல்லாம் அவள் மீது கொண்டிருந்த காதலால் அவன் செய்கிறான் என்றும் அவளுக்கு புரிய வாய்ப்பில்லை அல்லவா?

அது புரியாததால் அவளது மனம் வேறு விதமாய் யோசித்தது. ஆதித்யாவை பற்றி அவளுக்கு தெரியாதவை இன்னும் என்னெல்லாம் இருக்கிறதோ... அவன் இன்னும் என்னவெல்லாம் பொய்யுரைத்து இருக்கிறானோ... 

அவன் பொய் கூறியதற்கான காரணத்தையும், வேறு ஏதும் பொய் கூறி இருக்கிறானா என்றும் கண்டுபிடிப்பது என்று தீர்மானித்தாள் கமலி. பொய்யை கண்டு பிடிக்க முயலும் அவள், ஆதித்யா அவளை எவ்வளவு ஆழமாய் காதலிக்கிறான் என்ற உண்மையை கண்டு பிடிப்பாளா? பார்ப்போம்...

தொடரும்...

Continue Reading

You'll Also Like

27.4K 2.6K 32
திருமணத்திற்கு இரு நாட்கள் முன்பு கடத்தப்படும் தங்கையை காப்பாற்ற நினைக்கும் அண்ணனின் தேடல்
94.5K 2.9K 63
புவியில், அவள் பிறந்த அன்றே , தாய் தந்தையை அறிந்தது போல் கணவனையும் சேர்த்தே அறிந்துக் கொள்ள.. தன் சகோதரியின் கருவறையில் இருக்கும்போதே, அவளை மனைவியா...
19.2K 907 25
முதல் திருமணம் தோற்று போக இனி வாழ்க்கையே இல்லை என்று நினைக்கும் நாயகியை கரம் பிடிக்க துடிக்கும் நாயகன்
58.4K 2.3K 36
காதலாகி, காதலாகி காத்திருந்தேன் நான். காலம் தந்த வேதனையை வென்று வந்தேன் உன் காதலால்,, நீயே என் உலகமென்று புரியவைத்தாய் கண்மணி உன் காதல் மொழியில். உ...