ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...

By NiranjanaNepol

149K 6.6K 1K

எல்லாவற்றிலும் வித்தியாசத்தை விரும்பும் நாயகன்... உலகமே அறியாத நாயகி... அவர்கள் வாழ்வில் நடைபெறும் சுவாரசியங்... More

1 திருமண கோரிக்கை
2 அதிரடி அறிமுகம்
3 ரகசிய திட்டம்
4 சிங்கத்தின் குகையில்
5 தொலைபேசி அழைப்பு
6 திருமதி ஆதித்யா
7 காத்திருந்த முதலிரவு
8 ஆதித்யாவின் முடிவு
9 அம்மாவின் அறிவுரை
10 சென்னையில் கமலி
11 திருமதி ஆதித்யா
12 புத்திசாலி பெண் தான்
13 நீங்கள் நல்லவர் தான்
15 பொய்
16 ஆதித்யா யார்?
17 கமலியின் சொந்த விதி
18 கமலியின் சாகசம்
19 கமலியின் புரிதல்
20 ஆதித்யாவின் பார்வை
21 ஆதித்யாவின் நடவடிக்கை
22 நான் உன்னுடன் டேம் இட்
23 கமலியின் அன்பு
24 ஒன்றுபட்ட மனங்கள்
25 விசித்திர உணர்வு
26 என்னோட ஆதிஜி
27 நீங்கள் என்றுடையவர்
28 கமலியின் இன்ப அதிர்ச்சி
29 நம்பிக்கை
30 அலுவலகத்தில் கமலி
31 ஒன்றுபட்ட மனங்கள்
32 மிஸஸ் பாஸ்
33 குமரிப்பெண்
34 மலர்க்கணைகள்...
35 அவளை நானறிவேன்...!
36 வஞ்சக உலகம்...
37 சோமபானம்
38 தொலைந்த மகள்
39 ஆதித்யாவின் நம்பிக்கை
40 முதல் முத்தம்
41 புதிய பரிமாணம்
42 நேர்மை
43 விஷநாகத்தின் குறி
44 என்ன நடக்கிறது?
45 யார் அது?
46 அந்த கண்கள்
47 பணம் பத்தும் செய்யும்
48 வித்யாசம்
49 ஆதித்யா...
50 நிஜ முகம்
51 அது வேறு...
52 கமலின்னா சும்மாவா?
53 கோவம் தனிந்தது
54 ஆதித்யாவின் பரிசு
55 விதி வலியது
57 ஒரே காரணம்
57 தவறல்ல... துரோகம்
58 கமலி கொடுத்த அதிர்ச்சி
59 பிரபாகரனின் உறுதி
60 குழந்தையின் ஏக்கம்
61 ஒப்புதல்
62 குடும்பம்
இறுதி பாகம்

14 அதிர்ஷ்ட தேவதை

2.2K 108 21
By NiranjanaNepol

14 அதிர்ஷ்ட தேவதை

சமையலறையில் காய்கறி நறுக்கிக் கொண்டிருந்தாள் கமலி. கல்லூரிக்கு அவள் எடுத்துச் செல்ல வேண்டிய மதிய உணவை தயாரிக்க, முத்துவுக்கு உதவிக் கொண்டிருந்தாள். அப்பொழுது அவசரமாய் உள்ளே நுழைந்தாள் ரேணுகா.

"முத்து, பாயசம் செய்ய சொல்லியிருந்தேனே, செஞ்சீங்களா? பூஜைக்கு வேணும்"

"செஞ்சாச்சி கா. முந்திரியை மட்டும் வறுத்து கொட்டணும்..."

ஒரு சிறிய வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய்யை ஊற்றினாள் ரேணுகா. அங்கு ஏற்கனவே முத்து உடைத்து வைத்திருந்த முந்திரியையும் பாதாமையும் அதில் போட்டு வறுத்தாள். அதை பாயசத்தில் கொட்டிக் கலந்துவிட்டு, கமலியை பார்த்து,

"இன்னைக்கு ஆதி, ஒரு முக்கியமான ஃபாரின் காண்ட்ராக்டை முடிக்க போறான். அதனால தான் பாயாசம் வச்சி, அவனுக்காக நான் வேண்டிக்க போறேன்."

"ஓ..."

"கடவுளே, இன்னைக்கு ஆதி பாக்குற எல்லாம் அவனுக்கு அதிர்ஷ்டத்தை தரணும்..." என்றபடி பாயாச  கிண்ணத்தை எடுத்து சென்றாள் ரேணுகா.

தன் கையைக் கூப்பி வேண்டினாள் கமலி.

"மகமாயி, அந்த காண்ட்ராக்ட் ஆதிஜிகே கிடைக்கணும். அக்கா சொன்ன மாதிரி, அவருக்கு அதிர்ஷ்டம் தராத எதையும் அவர் முன்னாடி கொண்டு போகாதீங்க..."

வேண்டிக் கொண்டதோடு மட்டும் நில்லாமல், தங்களது அறைக்கு செல்வதை தவிர்த்தாள் கமலி. ஒருவேளை, அவளது முகம் ஆதித்யாவுக்கு அதிர்ஷ்டத்தை தரவில்லை என்றால் என்ன செய்வது? இப்படி எல்லாம் ஏடாகூடமாக நினைத்தால் தானே அவள் கமலி? அவளுக்கு கல்லூரிக்கு நேரமாகி கொண்டிருந்ததால், அவளை அழைத்தான் ஆதித்யா.

"இப்ப நான் என்ன செய்யுறது, மகமாயி...?"

சட்டென்று அவளுக்கு ஒரு உபாயம் தோன்றியது... தனது துப்பட்டாவால் முக்காட்டிட்டு, முகத்தை மூடிக்கொண்டு வந்த அவளை பார்த்து, குழம்பிப் போனான் ஆதித்யா.

"என்ன ஆச்சு உனக்கு?" என்றான்.

"நான் நல்லா தான் இருக்கேன்" என்றாள் அவனுக்கு முதுகைக் காட்டிக் கொண்டு நின்றபடி.

"எதுக்காக இப்படி உன் முகத்தை மூடியிருக்க?"

"அக்கா சொன்னாங்க, இன்னைக்கு நீங்க ஒரு முக்கியமான காண்ட்ராக்ட் எடுக்க போறீங்களாம்"

"ஆமாம்... அதுக்கு?"

"ஒருவேளை என்னோட முகம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரலைனா என்ன செய்றது?"

"எனக்கு அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை இல்ல. நான் என்னை மட்டும் தான் நம்புவேன்"

"ஆனா, எனக்கு நம்பிக்கை இருக்கே..."

"அப்படின்னா, நீ எக்ஸாமுக்கு போறதுக்கு முன்னாடி, என் முகத்தை பார்க்க மாட்டியா?"

"அது வேற, இது வேற..."

"எப்படி?"

"நான் நல்லா படிச்சிட்டு போயி எழுதுவேன் இல்ல...?"

"அதே மாதிரி தான், நானும் ஒரு காண்ட்ராக்ட் எடுக்க தேவையான எல்லா வேலையையும் செஞ்சுட்டு தான் போவேன். முதல்ல அந்த துப்பட்டாவை எடு"

"வேண்டாம் ஆதிஜி. ஒருவேளை உங்களுக்கு இந்த காண்ட்ராக்ட் கிடைக்கலன்னா எனக்கு வருத்தமா இருக்கும்"

"இந்த காண்ட்ராக்ட் கிடைக்கலனாலும் நான் வருத்தப்பட மாட்டேன். ஏன்னா, இதுக்கு முன்னாடி நிறைய காண்ட்ராக்ட், எனக்கு கிடைக்காம போயிருக்கு (என்று பொய்யுரைத்தான்) எல்லாத்துக்கும் மேல, இந்த காண்ட்ராக்ட் நமக்கு கிடைக்காதுன்னு எனக்கு நல்லா தெரியும்"

"ஏன் ஆதிஜி?" என்றாள் கவலையாக.

"ஏன்னா, நம்ம கம்பெனி இரண்டாவது இடத்துல தான் இருக்கு. அதனால, நமக்கு இந்த காண்ட்ராக்ட் கிடைக்கிறதுக்கு வாய்ப்பே இல்ல" என்று மீண்டும் பொய்யுரைத்தான். எதிர்பாராத விதமாய், இந்த ஒப்பந்தம் அவனுக்கு கிடைக்காமல் போனால், கமலி தன்னை அதிர்ஷ்டம் இல்லாதவள் என்று எண்ணி விடக்கூடாது அல்லவா...!

"அப்படியா...?"

"ஆமாம். இப்போ அதை எடு..."

"உங்களுக்கு இந்த காண்ட்ராக்ட் கிடைக்க நான் கடவுளை வேண்டிக்கிறேன்..." என்றபடி முக்காட்டை நீக்கினாள்.

"தேங்க்யூ" என்று புன்னகைத்தான்

கல்லூரிக்கு கிளம்பினாள் கமலி. ஆதித்யா, அவள் கொண்டிருந்த மூடநம்பிக்கையை எண்ணி சிரித்துக் கொண்டான். இந்த முறை எப்பாடுபட்டாவது இந்த காண்ட்ராக்ட்டை அவன் அடைந்தே தீரவேண்டும் என்று நினைத்தான். அவளை சந்தோஷப் படுத்துவதற்காக...!

இன்ட்காம் அலுவலகம்

சந்தோஷத்தில் மின்னிக் கொண்டிருந்த ஆதித்யாவின் முகத்தை, குழப்பத்துடன் பார்த்தான் பிரபாகரன். புதிய ஒப்பந்தங்களை கைப்பற்றுவது என்பது ஒன்றும் ஆதித்யாவிற்கு குதிரைக் கொம்பல்ல. ஆனால் இன்று, முதல் முறையாக ஒரு ஒப்பந்தத்தை கைப்பற்றியது போல அவன் குதூகலித்தான்.

"என்ன ஆச்சி, ஆதி? இன்னைக்கு பயங்கர சந்தோஷமா இருக்க...?" என்றான் பிரபாகரன்.

"விஷயத்தை சொன்னா, நீ சிரிப்ப"

"அப்போ சொல்லேன், நானும் தான் சிரிக்கிறேன்..."

அன்று காலை, அவனுக்கும் கமலிக்கும் இடையில் நிகழ்ந்தவற்றை பிரபாகரனிடம் கூறினான் ஆதித்யா. பிரபாகரன் அவனைப் பார்த்து புன்னகைத்தான்.

"எனக்கு கமலியை பார்த்து எந்த ஆச்சரியமும் இல்ல. ஆனா, உன்னை பார்த்தா தான் ரொம்ப ஆச்சரியமா இருக்கு. ஒருநாள், நீ உன் பொண்டாட்டி மேல இவ்வளவு ஈடுபாட்டோட இருப்பேன்னு நான் கனவுல கூட நினைக்கல. உன்னை எது கமலிக்காக இப்படி விழவைச்சிதுன்னு எனக்கு புரியல."

"எனக்கும் தெரியல... அவளுடைய வெகுளித்தனம் காரணமா இருக்கலாம். தன்னுடைய சுயநலத்துக்காக, மனசு நிறைய வஞ்சம் வைக்கிறவங்களை ஏராளமா பார்த்திருக்கோம். ஆனா, அவளை மாதிரி ஒரு குழந்தைத்தனமான பெண்ணை நான் பார்த்ததே இல்ல."

"ஆனா, கமலியை நீ எப்படி எதார்த்தமான வாழ்க்கைக்கு கொண்டு வரப் போறேன்னு எனக்கு பயமா இருக்கு. அதுக்கு ரொம்ப பொறுமை வேணும், ஆதி."

"சத்தியமா சொல்றேன், இப்போதைக்கு என் மனசுல, கணவன், மனைவி உறவு பத்தின சிந்தனை சுத்தமா இல்ல"

"ஆனா, உன்னால ரொம்ப நாளைக்கு இப்படியே நீடிக்க முடியாது"

"நீடிக்க மாட்டேன்... கமலியோட கிராஜுவேஷன் முடியறதுக்கு முன்னாடி, அவ எல்லாத்தையும் புரிஞ்சுக்குவான்னு எனக்கு நம்பிக்கை இருக்கு"

"அப்படி நடந்தா ரொம்ப சந்தோஷம்"

தன் தலையை சாய்த்து, தனது மடிக்கணினியில் ஆதித்யா என்ன பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதை கவனித்தான் பிரபாகரன்.  கமலியுடைய பாடங்களையும், அதன் தமிழ் மொழிபெயர்ப்பையும் அவன் பதிவிறக்கம் செய்து கொண்டிருந்ததை பார்த்து, அவன் வியப்பில் ஆழ்ந்தான். அவளுக்கு தினமும் பாடம் சொல்லிக் தருவதாய் அவன் வாக்களித்திருந்தான் இல்லையா? அவளது சந்தோஷத்தை விட வேறு என்ன வேண்டும் அவனுக்கு? அதுவும், அவளுடன் நெருங்கி பழக, இதைவிட ஒரு நல்ல சந்தர்ப்பம் அவனுக்கு கிடைத்து விடுமா என்ன?

ஆர்வமாய் குறிப்பெடுத்துக் கொண்டிருந்த ஆதித்யாவை பார்த்து, களுக்கென்று சிரித்தான் பிரபாகரன்.

"எம்பிஏ முடிச்சதுக்குப் பிறகு, பிபிஏ படிக்கிற முதல் ஆளை நான் இப்ப தான் பார்க்குறேன்" என்று சிரித்தான்.

சிரித்தபடி தன் பணியைத் தொடர்ந்தான் ஆதித்யா.

"உன் வைஃப் கூட க்ளோசா இருக்க, ஒரு வழியை கண்டுபிடிச்சிட்ட போல இருக்கே..."

ஆமாம், என்று தலையசைத்த ஆதித்யா,

"கமலியுடைய காலேஜ் பக்கத்தில இருக்கிற, பெஸ்ட் ஸ்போக்கன் இங்கிலீஷ் கோச்சிங் சென்டரை தேடிப்பிடிச்சு சொல்லு... இன்னும் ஒரு மணி நேரத்தில..."

"சொல்லிடுறேன்..."

"அவங்களுடைய டீச்சிங் மெத்தட் சிம்பிளா இருக்கணும்"

"ஓகே"

"தனக்கு இங்கிலீஷ் மேல இருக்கிற பயத்துலயிருந்து, கமலி வெளியில வரணும்..."

"சரி, நான் தேடிப் பாத்து சொல்றேன்"

"மறக்காம சொல்லு"

மாலை

கல்லூரி முடிந்து வெளியே வந்த கமலி, அங்கு இளவரசனை எதிர்பார்த்தாள். ஆனால், அங்கு ஆதித்யா அவளுக்காக காத்திருந்தான்.

"ஆதிஜி நீங்க வந்திருக்கீங்க...? நான் இளவரசன் அண்ணா வருவாருன்னு நெனச்சேன்"

"உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும். அதுக்காகத் தான் நானே வந்தேன்"

"என்ன விஷயம்?"

"நமக்கு காண்ட்ராக்ட் கிடைச்சிடுச்சு"

அதைக் கேட்டு கமலியின் முகம் பிரகாசம் அடைந்தது.

"நெஜமாவா? ஆனா, நம்ம கம்பெனி  ரெண்டாவது இடத்துல இருந்ததா சொன்னீங்களே...?"

"ஆமாம்... என் அதிர்ஷ்ட தேவதையோட முகம் எனக்கு அதிர்ஷ்டத்தை கொடுத்திருக்குன்னு நினைக்கிறேன்"

"யாரது?"

"என்னோட வைஃப்"

"நானா?" என்றாள் நம்ப முடியாமல்.

"ஆமாம். காலையில எனக்கு சுத்தமா நம்பிக்கையே இல்ல. ஆனாலும், இந்த காண்ட்ராக்ட் நமக்கு கிடைச்சிடுச்சு. அது உன்னால தான்னு நான் நினைக்கிறேன்"

"உங்களுக்கு அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை இல்லைன்னு சொன்னீங்களே...?" என்றாள் தயக்கத்துடன்

"ஆமாம். ஆனா, இப்போ நான் எப்படி நம்பாம இருக்கிறது? எனக்கு கிடைக்க முடியாத காண்ட்ராக்ட் கிடைச்சிருக்கே. அப்போ நீ எனக்கு அதிர்ஷ்டமானவள்னு நான் நம்பி தானே ஆகணும்...!"

தனது வாழ்க்கை வரலாற்றிலேயே முதல்முறையாக சங்கடப்பட்டாள் கமலி. இந்த புகழ்ச்சியுரை மிக மிக அதிகமாய் தோன்றியது அவளுக்கு. அவளுடைய அம்மா, அத்தை, மற்றும் தோழிகள் அனைவரும், அவளை பைத்தியக்காரி என்றும், மூளை இல்லாதவள் என்றும், சொல்லி அவளை கிண்டல் செய்திருக்கிறார்கள்... கடிந்து கொண்டிருக்கிறார்கள்... ஆனால், தன் திருமணத்திற்கு பிறகு, ஆதித்யாவிடமிருந்து அவள் வெறும் புகழாரங்கள் மட்டும் தான் சூடிக் கொண்டிருக்கிறாள்.

"போகலாமா...?" என்று ஆதித்யா கேட்க, சரி என்று தலையசைத்து கார் கதவை திறக்க சென்றவளை,

"நடந்து போகலாம்" என்றான் ஆதித்யா.

குழப்பத்துடன் அவனைப் பின்தொடர்ந்தாள் கமலி. அவளது குழப்பம் தெளிவானது, அவளது கல்லூரிக்கு அடுத்திருந்த ஒரு கட்டிடத்தினுள் ஆதித்யா நுழைந்த போது... *கான்டினென்டல் அக்கடமி ஃபார் ஸ்போக்கன் இங்கிலீஷ்* என்ற பெயர் பலகை அங்கு இருந்தது.

"நான் இங்க இங்கிலீஷ் கத்துக்க போறேனா?" என்றாள் குதூகலமாக.

ஆமாம் என்று தலையசைத்தான் ஆதித்யா.

"நீங்களும் இங்க தான் இங்கிலீஷ் கத்துக்கிட்டீங்களா?"

"ஆமாம். காலேஜ் முடிஞ்ச உடனே இங்க வந்துடு. ஆறு மணிக்கு, இளவரசன் இங்க வந்து உன்னை கூட்டிகிட்டு வருவாரு"

சரி என்று தலை அசைத்தாள் கமலி. ஐம்பது வயது மதிக்கத்தக்க தலைமை பயிற்சியாளரிடம் அவளை அறிமுகம் செய்து வைத்தான் ஆதித்யா. அங்கு சந்தோஷமாய் அமர்ந்துகொண்டாள் கமலி. அவளை அங்கு சேர்த்து விட்டு கிளம்பிச் சென்றான் ஆதித்யா. அந்நிய மொழி பயிற்சியை துவங்கினாள் கமலி. ஆம்... அவளது தலையின் மீது நடனமாடிக் கொண்டிருந்த ஆங்கில எழுத்துகளுடன் கைகோர்த்து, அவளும் நடனமாட தயாரானாள்.

அமைதியகம்

தனது ஆங்கில வகுப்பை முடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்த கமலி, கையில் புத்தகத்துடன் வரவேற்பறையில் அமர்ந்து கொண்டிருந்த ஷாலினியின் கண்களை பின்னாலிருந்து மூடினாள்.

"கமலி மாமி" என்றாள் ஷாலினி.

"நான் தான்னு எப்படி கண்டுபிடிச்ச?"

"இப்படி எல்லாம் உங்களைத் தவிர வேற யாரும் செய்ய மாட்டாங்க, மாமி" என்றாள் ஷாலினி.

"என்ன யோசிச்சுகிட்டு இருந்த?"

"இந்த மேத்ஸ் என் மண்டையை குடையுது" என்றாள்

"நான் உனக்கு சொல்லித் தரவா?"

"உங்களுக்கு தெரியுமா?"

"எல்லாம் தெரியும்னு சொல்ல முடியாது. ஆனா, தெரியும்"

அவளது கணக்குப் புத்தகத்தை வாங்கிப் பார்த்தவள், அது ஆங்கிலத்தில் இருந்ததால் சற்று தடுமாறினாள். ஆனால், அது அவளுக்குத் மிகத் தெளிவாய்  தெரிந்த பாடம் தான். ஆனால், அவள் ஷாலினிக்கு எப்படி தமிழில் கற்றுக் கொடுக்க முடியும்? கணிதம் சார்ந்த வாசகங்களை தமிழில் அவளுக்கு விளக்கி கூற முடியாது. என்ன செய்வது என்று சற்று யோசித்தாள். ஷாலினியின் கணக்கு நோட்டு புத்தகத்தை எடுத்து, அதில் அவள் எழுதி வைத்திருந்த, கணிதம் சார்ந்த வார்த்தைகள், எந்த இடத்தில் வருகிறது என்பதை புரிந்து, தமிழில் அது என்ன என்பதையும் ஒப்பிட்டு பார்த்துக் கொண்டாள். இப்பொழுது தமிழ் வார்த்தைகளுக்கான, ஆங்கிலப் பெயர் அவளுக்கு தெரிந்துவிட்டது. தன்னம்பிக்கையுடன் ஷாலினிக்கு கணிதம் கற்றுக் கொடுக்கத் தொடங்கினாள். அவள் கற்றுக்கொடுத்தது எளிமையாய் இருந்தது ஷாலினிக்கு. ஷாலினியை கையால் பிடிக்க முடியவில்லை. அவளுக்கு, கோபப்படாத ஒரு ஆள், கணக்கு சொல்லிக் கொடுக்க கிடைத்துவிட்டார் அல்லவா...? கமலிக்கும் சந்தோஷமாக இருந்தது. அவள் யாருடைய உதவியும் இன்றி, தானாகவே ஒரு விஷயத்தை கற்றுக் கொண்டுவிட்டாளே...!

"தேங்க்யூ சோ மச் மாமி... நம்ம ரெண்டு பேரும் தினமும் சேர்ந்து படிக்கலாமா?" என்றாள் ஷாலினி ஆர்வமாக.

"படிக்கலாமே" என்றாள் கமலி.

இருவரும் ஹை-ஃபை தட்டிக் கொண்டார்கள்.

"இப்போ நம்ம கண்ணாமூச்சி விளையாடலாமா?" என்றாள் ஷாலினி.

"ஆனா, எனக்கு இந்த வீட்டில இருக்கிற எல்லா இடமும் தெரியாதே... அப்போ நான் எப்படி உன்னை கண்டு பிடிக்கிறது?"

"அப்படின்னா, கண்ணைக்கட்டி இங்கேயே  விளையாடலாம்..."

"இது நல்ல ஐடியா. விளையாடலாம்" என்றாள் கமலி, ஆதி வரும் வரை, அவளுடன் விளையாடலாம் என்று எண்ணி.

தனது அறைக்கு சென்று, ஒரு துப்பட்டாவை கொண்டு வந்தாள் கமலி. அந்த  துப்பட்டாவால் அவள் கண்ணை கட்டினாள் ஷாலினி. அவர்கள் இருவரும் சந்தோஷமாய் விளையாடத் துவங்கினார்கள். அவர்களது சிரிப்பு சத்தம், அமைதியகத்தின் அமைதியை, சந்தோஷமாய் விரட்டி அடித்தது. அங்கு வந்த சுசித்ரா, தானும் அவர்களுடன் விளையாடுவதாக கூறி சேர்ந்து கொண்டாள். அவர்கள் சிரிப்பு சத்தத்தை கேட்டு அங்கு வந்த, இந்திராணியும், பாட்டியும் கூட, அவர்களுடன் சேர்ந்து விளையாட தொடங்கிவிட்டார்கள்.

இப்பொழுது மீண்டும் கமலியின் முறை. கண்ணைக் கட்டிக் கொண்டு கைகளை நீட்டியபடி தேடத் தொடங்கினாள் கமலி. அவள் யாரோ ஒருவர் மீது மோதிக்கொள்ள, அந்த நபரின் கையைப் பிடித்துக் கொண்டு குதித்தாள். அந்த நபரிடம் இருந்து எந்த அசைவும் இல்லாமல் போகவே குழப்பமடைந்து, மெல்ல தன் கையை அந்த நபரின் முகத்தை நோக்கி நகர்த்தினாள். அவள் கையில் லேசாய் வளர்ந்த தாடி குத்தியது. திடுக்கிட்டு  கண் கட்டை அவிழ்த்து பார்க்க புன்னகையுடன் நின்றிருந்தான் ஆதித்யா. அவன் சீக்கிரம் வந்து விட்டதை பார்த்து அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள். தன் குடும்பத்தார், கமலியுடன் சேர்ந்து கண்ணாமூச்சி விளையாடுவதை பார்த்து ஆதித்யாவும் ஆச்சரியப்பட்டான்.

"இங்க என்ன நடக்குது?" என்றான் புன்னகை மாறாமல்.

"கண்ணாமூச்சி விளையாடுறோம் மாமா" என்றாள் ஷாலினி.

"எல்லாரும் குழந்தையா மாறிட்டீங்களா?" என்றான்.

"நீ என்ன வேணா நெனச்சுக்கோ ஆதி. எனக்கு பத்து வயசு குறைஞ்ச மாதிரி இருக்கு" என்றார் பாட்டி.

"அத்தை சொல்றது ரொம்ப சரி. சின்ன வயசுல ஃபிரெண்டுங்க கூட சேந்து விளையாடினது ஞாபகம் வருது. நீ கூட ஒரு தடவை கமலி கூட விளையாடி பாரு, ஆதி. அப்போ உனக்கே தெரியும்" என்றார் இந்திராணி சிரித்தபடி.

"மாமா, நான் சொன்னேன்ல? மாமி ரொம்ப நல்லா விளையாடுவாங்கன்னு...?"

தன் விழிகளை விரித்து ஷாலினியை பார்த்த கமலி, ஆமாம் என்று ஆதித்யா தலையசைப்பதை பார்த்தாள். தன் அறையை நோக்கி அவன் நடக்க கமலி அவனை பின் தொடர்ந்து சென்றாள்.

"ஆதிஜி, ஆதிஜி, எனக்கு இங்கிலிஷ் கிளாஸ் ரொம்ப பிடிச்சிருக்கு." என்றாள் சந்தோஷமாக.

"புரியிற மாதிரி இருந்துதா?"

"ஆமாம். இங்கிலீஷ் மாஸ்டர்  ரொம்ப சிம்பிளா சொல்லித் தராரு. அங்க படிக்கிறவங்க எல்லாரையும், ஒருத்தர் கூட ஒருத்தர் பேச வைக்கிறார். நானும் சீக்கிரமா இங்கிலீஷ் பேசிடுவேன் போலிருக்கு..." என்றாள் கனவில் மிதப்பது போல.

"தட்ஸ் கிரேட். நான் ஃபிரஷ் ஆயிட்டு வரேன். அதுக்கப்புறம் இன்னைக்கு படத்தை படிக்கலாம்"

"சரி"

ஆதித்யா பாடம் நடத்தத் துவங்கினான். அதை கவனமாய் கேட்டுக் கொண்டாள் கமலி. ஆதித்யா பாடத்தை மட்டும் தான் நடத்தினான் என்று சொல்வதற்கில்லை. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம், பொது விஷயங்களையும், கமலியையும் பற்றியும் பேசியும், கேட்டும் தெரிந்து கொண்டான். அப்பொழுது அவர்கள் கதவை தட்டும் சத்தம் கேட்டார்கள். அங்கு ரேணுகா நின்றிருந்தாள்.

"நீ எப்ப வந்த ஆதி?" என்றாள்

"அரை மணி நேரம் ஆச்சி. நீங்க எங்க போயிருந்தீங்க?"

"கோவிலுக்கு போயிருந்தேன்" என்று கூறிவிட்டு, அவன் நெற்றியில் அவள் குங்குமம் வைக்க, ஆதித்யாவின் கண்கள் அனிச்சையாய் கமலியின் பக்கம் திரும்பியது.

ரேணுகா அவனுக்கு குங்குமம் வைக்கும் போதெல்லாம், ஏன் கமலி சங்கடப்படுகிறாள், என்று நினைத்தான் ஆதித்யா. அவனுக்கு பிரசாதத்தை ஊட்டிவிட்டு, கமலிக்கும் ஊட்டிவிட்டாள் ரேணுகா.

"காண்ட்ராக்ட் என்ன ஆச்சு?"

"நமக்கு கிடைச்சிடுச்சு கா"

"இன்னைக்கு சாயங்காலம் கான்ஃபரன்ஸ் இருக்குன்னு சொன்னியே"

"நாளைக்கு காலையில போஸ்ட்போண்ட் பண்ணிட்டேன்"

"ஆனா ஏன்? ஏதாவது பிரச்சனையா?"

"இல்லக்கா. வேலையை கொஞ்சம் சீக்கிரம் முடிச்சிட்டு வந்து, கமலிக்கு ஸ்டடிஸ்ல ஹெல்ப் பண்ணலாம்னு நெனச்சேன்"

"ஓ... நடக்கட்டும்..." என்று புன்னகையுடன் சென்றாள் ரேணுகா.

மீண்டும் பாடத்தை தொடர்ந்தான் ஆதித்யா. முக்கியமானவற்றை எல்லாம் ஆர்வமாய் குறிப்பெடுத்துக் கொண்டாள் கமலி.

"இன்னைக்கு இது போதும்னு நினைக்கிறேன்" என்றான் ஆதித்யா.

"ஏன் ஆதிஜி?"

"காலையிலயிருந்து நீ பிஸியா இருக்க. காலேஜுக்கு போன, ஸ்போக்கன் இங்கிலிஷ் கிளாஸ் போன, ஷாலினியோட விளையாடின. நீ டயர்டா இருப்ப"

"கொஞ்சம் டயர்டா தான் இருக்கு. ஆனா, அதுக்காக நீங்க முடிக்க வேண்டாம். நீங்களும் ஆபீசுக்கு போனீங்க, திரும்ப என்னோட காலேஜுக்கு வந்தீங்க, மறுபடியும் ஆபிசுக்கு போனீங்க, இப்ப எனக்கு சொல்லிக் கொடுக்குறிங்க. உங்களுக்கு டயர்டா இருக்கா?"

"இன்னைக்கு நான் சீக்கிரம் வந்துட்டேன். வழக்கமா நான் வீட்டுக்கு வர ரொம்ப லேட் ஆகும். அதனால, நான் டயர்டா இல்ல"

கமலிக்கு சட்டென்று பொறி தட்டியது.

"நீங்க என்ன வேலை செய்றீங்க?" என்ற கமலியை பார்த்து புன்னகை புரிந்தான் ஆதித்யா.

"பரவாயில்லையே... இப்பவாவது மிஸஸ் ஆதித்யாவுக்கு, தன்னோட புருஷன் என்ன செய்றான்னு தெரிஞ்சுக்கணும்னு தோணுச்சே..." என்று சிரித்தான்.

அது கமலியை சங்கடப்படுத்தியது.

"அம்மா சொன்னாங்க, நான் உங்களை ரொம்ப கேள்வி கேட்டு தொல்லை செய்யக் கூடாதுன்னு. நான் தொணதொணன்னு ரொம்பப் பேசுவேன்... அதனால தான்..."

"நீ என்னோட வைஃப். நீ என்கிட்ட எது வேனாலும் பேசலாம்... கேட்கலாம். என்னை தொல்லை செய்யறதா நினைக்க கூடாது. சரியா?"

சரி என்று தலையசைத்தாள் கமலி.

"நான் கம்ப்யூட்டர் ஸ்பேர் பார்ட்ஸ் தயாரிக்கிற கம்பெனி வச்சிருக்கேன். நம்ம கம்பெனி  பெயர் இன்ட்காம்"

"ஓ..."

அவனுடைய சாம்ராஜ்யம் எவ்வளவு பெரியது என்று அவன் அவளிடம் கூறவில்லை. அவன் எவ்வளவு வல்லமை வாய்ந்தவன் என்பதை அவள் தெரிந்து கொள்வதற்கு முன், அவள் வல்லமை பெற வேண்டும் என்று நினைத்தான் ஆதித்யா. அவனது சாம்ராஜ்யத்தின் முடிசூடா ராணி அல்லவா அவள்...!

தொடரும்...

Continue Reading

You'll Also Like

202K 4.9K 30
திருமணத்திற்கு பிறகு வரும் காதல்
58.7K 2.3K 36
காதலாகி, காதலாகி காத்திருந்தேன் நான். காலம் தந்த வேதனையை வென்று வந்தேன் உன் காதலால்,, நீயே என் உலகமென்று புரியவைத்தாய் கண்மணி உன் காதல் மொழியில். உ...
255K 9.7K 40
கனவில் வரும் ராஜகுமாரன் நிஜத்தில் வரப்போவதில்லை என உறுதியாக நம்புகிறாள் மித்ரா.. நிஜத்திலும் வரக்கூடுமோ..
94.8K 2.9K 63
புவியில், அவள் பிறந்த அன்றே , தாய் தந்தையை அறிந்தது போல் கணவனையும் சேர்த்தே அறிந்துக் கொள்ள.. தன் சகோதரியின் கருவறையில் இருக்கும்போதே, அவளை மனைவியா...