உன் விழிமொழி...நானடி!

Od bindusara

1K 72 26

காதல் காதல் மட்டுமே... Více

1
2
3
6
5
7
4
8
10
11

9

46 7 2
Od bindusara

விழிமொழி: 9

இமையாவை துள்ள துள்ள தூக்கிவந்தவன் அருகிலிருந்த சோபாவில் அமர வைத்தான்.

இமையா அமர்ந்ததும் கதிர் வளர்த்து வைத்திருந்த முடியை கொத்தாக பிடித்தவள், அவனது பல முடிகளை பிடித்து இழுத்து  பிச்சி, ஹீரோ போல இருந்தவனை காமெடி பீஸ் கணக்காக ஆக்கியிருந்தாள்.

ஒருவழியாக இமையா டையார்ட் ஆகி, அவனது முடியை விட்டவள் சோர்ந்து சோபாவில் அமர, அவளது சோர்வை கண்டு, காலையில் போட்டு வைத்த ஜூஸை கொண்டு வந்து இமையா கைகளில் திணித்தான்.

“மேடம் நல்லா குடிச்சிட்டு தெம்பா அடுத்த ரவுண்டு தாக்குதலுக்கு ரெடி ஆகுங்க” கதிர் உதிர்த்த வார்த்தையை கேட்ட இமையா அதிர்ச்சியில் கண்களை விரித்தாள்.

‘இவன் ஏன் இப்படி இருக்கான், நான் செய்வதற்கும் கத்தி போன்ற வார்த்தை உபயோகிப்பதற்கும் சரிதான் போடி என்று போய் இருக்கலாமே.. இவன் ஜூஸ் போட்டு அவன் தான் குடிக்கனும் நான் படுத்திய பாட்டிற்கு. எனக்கு கொடுத்தது மட்டுமில்லாமல், குடிச்சிட்டு அடுத்து அடிக்க தயாராகு என்று சொல்லும் இவன் மனிதனா? இல்லை மிருகமா? இல்லை அதற்கும் மேலா?’

“ஹலோ இமை குட்டி முதலில் குடி அதுக்கு அப்புறமா யோசிச்சிக்கலாம். குழந்தை முகம் வாடி போயிடுச்சி” சொன்னது மட்டுமில்லாமல்,  இமையாவின் முகத்தில் இருக்கும் வேர்வை துளிகளை துடைத்து விட்டு அருகில் அமர்ந்தான்.

“இமை மா, குடி டா”

“இல்லை கதிர் எனக்கு வேண்டாம். எனக்கு தலை வலிப்பது போலிருக்கு, தூங்கனும் பெட் கிட்ட கொண்டு போய்விடுங்க”

“இமை, என்னடா ஆச்சி! உடம்புக்கு எதாவது சரியில்லையா, டாக்டர் கிட்ட போகலாமா” இமையாவின் தலையை தொட்டுப்பார்க்க,  தலை மட்டும் சூடாக இருந்தது.

‘காய்ச்சல் வந்திருக்குமோ.. வெளி காத்து ஒத்துக்கலையோ?’ யோசனையில் கன்னத்தையும் கழுத்தையும் தொட்டு பார்த்தவனுக்கு, காய்ச்சலில்லை என்று தெரிந்ததும் தான் நிம்மதி  பிறந்தது.

“சரி வா..” கையை பிடித்து அழைத்து சென்றவன், அவளது இடத்தில் படுக்க வைத்துவிட்டு தைலம் எடுக்க எழுந்தவனின் கரங்களை பிடித்துக்கொண்டாள். “என்ன வேணும் என் தங்கத்துக்கு?” குரலில் அப்படி ஒரு பாசத்தை இமையா கண்டாள்.

அவனது பாசமான குரலில் திக்கு முக்காடி போனவளின்  செவ்விதழ்களிலிருந்து வார்த்தை வருவதற்கு பதிலாக, காத்து தான் வந்தது. அவளது இதயத்தின் பூட்டும், இழுத்து வைத்திருந்த பிடிவாதமும் இவனது பாசத்தால் சுக்கு நூறாக உடைந்தது.

கனவுலகிலிருக்கும் இமையாவை உசுப்பி விட்டவன் “என்னாச்சி என் கண்ணும்மாவுக்கு”

“அது.. அது ஜூஸ் வேணும்” அவளது தடுமாற்றத்தை குறைத்து வாய்க்கு வந்ததை கேட்க,

“அட மக்கு பாப்பா… இதுக்கா இவ்வளவு தயக்கம். இரு எடுத்து வரேன்” இமையாவின் பட்டு கன்னத்தை கிள்ளிவிட்டு எழ, அவனது நகம் பட்டு விட்டது.

“ஆ… எரியுது” வலி பொறுக்காமல் இமையா கதிரின் கைகளை நறுக்கென்று கிள்ளி வைத்தாள்.

“ஆஆஆ..” இந்த முறை கதிரை கிள்ளி அலறவிட்டாள் இமையா.

“இமை.. உனக்கு மூக்குக்கு மேலே கோபம் வருது. தெரியாம செய்ததுக்கு எல்லாம் தண்டனை கொடுக்க கூடாது தங்கம்”

“எனக்கு எப்படி வலிக்குதுனு உனக்கும் தெரியனுமில்ல” இமையா முறைத்துக்கொண்டு சொல்ல,

“சரி சரி இப்படி இந்த முட்டை கண்ணை பிதுக்கி பயம் காட்டாதே. நான் போய் ஜூஸ் கொண்டு வரேன்” கிட்சனில் இருந்த ஜூஸை கிளாசில் ஊற்றியவனின் கைகளில் ஒரு துளி ரத்தம் எட்டிப்பார்த்தது.

“முதல்ல இவளுக்கு நகத்தை வெட்டி விடணும். ரத்தம் வர அளவுக்கு கிள்ளி வச்சிருக்கா ராட்சசி” செல்லமாக திட்டிக்கொண்டே இமையாவுக்கு ஜூஸுடன் சிறிது ஸ்னாக்ஸ் எடுத்து வந்தான்.

இமையா மனதில் கதிர் சொன்ன வாக்கியம் தான்  ஓடியது “முட்டை கண்ணு…” தனது கண்களை ஏக்கமாக தொட்டு பார்த்தாள்.

‘இனி சாகுற வரைக்கும் யாரோ ஒருவர் துணையதான் எதிர் பார்க்கனுமா? இரண்டு எட்டு கூட எடுத்து வைக்க முடியலையே தனியா... குறைந்த பட்சம் என் வேலையாவது நான் நிறைவா செஞ்சிக்கனுமே. சுற்றி இருக்கும் பொருள் எங்கு இருக்கு, பாத்ரூம் செல்லும் திசை கூட இன்னும் தெரியலை. நான் இந்த கதிருக்கு வேண்டாம். கொஞ்சம் கூட பொருத்தமில்லை. அடுத்த முறை கண் தெரியும் போது இங்கிருந்தும் கதிர் வாழ்க்கையிலருந்தும் வெளியே போயிடனும். அவன் நல்லா வாழனும் அவன் வாழ்க்கையில் என்னை போல ஒரு சுமை அவனுக்கு வேண்டாம்' சற்று முன் பூத்த காதல் செடியை வெட்டி சாய்த்தாள் இமையா. தன் கண்களை வருடிக் கொடுத்து, சுவற்றில் சாய்ந்திருந்தாள்.

கதிர் இமையாவை ஆராய்ச்சி பார்வை பார்த்துக்கொண்டே நடந்து வந்தான். மனதில் வெதும்பிய இமையாவை உழுக்கினான்.

“இமை… இமை குட்டி”

“ம்ம்…” ஜூஸை கையில் கொடுத்து குடிக்க வைத்தவன், மீண்டும் படுக்க போகும் இமையாவை தடுத்து,

“ஒரு ஐஞ்சு நிமிஷம் இப்படி உட்காரு சாப்பிட்டதும் படுக்க கூடாது. தலை வலி கூட சேர்ந்து, வயிறு வலி வந்திட போது” சுவற்றில் சாய்ந்து கண்களை மூடியவள் அப்படியே தூங்கி போனாள்.

“சொல்லும் பேச்சி கேட்கவே கூடாது என்று கங்கணம் கட்டிட்டு சுத்துறது. பிடிவாதம் பிடிச்சவ…” கதிர் அவளை செல்லமாக திட்டி படுக்க வைத்தான்.

தைலத்தை எடுத்து நெற்றியில் பூசிவிட்டு, அவள் அருகில் ஒட்டி படுத்துக் கொண்டான்.

“ஏய்.. இமை குட்டி என்மேலே உனக்கு விருப்பம் வந்திடுச்சி தானே எதுக்கு இப்படி ஒளிஞ்சி  விளையாடுற ம்ம்.. ஏதோ என்னிடம் மறைக்கற அது என்னன்னு கூடிய சீக்கிரம் நான் கண்டு பிடிக்கிறேன்” மெதுவாக பேசிக்கொண்டே கதிரும் தூங்கிவிட,

இரவு சீக்கிரமே படுத்ததால் இமையாவுக்கு நடு இரவில் முழிப்பு தட்டியது.

எழுந்து உட்கார நினைத்தவளால் நகர கூட முடியவில்லை. தன் மேல் பாரம் உணர்ந்தவள், தொட்டுப்பார்க்க கதிரின் முறுக்கேறிய கரங்கள் அவளது வயிற்றை சுற்றியிருந்தது.

தள்ளிவிட பார்த்தவளுக்கு தோல்வி தான் மிஞ்சியது.

அவனது புஜங்களை தொட்டு பார்க்க ‘என்ன இவன் காட்டெருமை போல உடம்ப வச்சி இருக்கான்?’ காற்றில் உலாவி, அவன் உடலை தொட்டு ஒரு வழியாக இலக்கை தொட்டாள். அவனது தோள்பட்டையை தொட்டு நீவிவிட்டவள், சரியான சதை பகுதி கிடைத்ததும் பிடித்து நன்றாக நறுக்கென்று கடித்து வைத்தாள்.

பதறி அடித்து எழுந்தான் கதிர்.

“ஏய்.. ரத்தம் வருது” அவள் கடித்த இடத்தை கதிர் ஆராய்ச்சி செய்ய,

“சரியான இரத்த காட்டேறி”

இமையா குழந்தை முகத்தை வைத்துக்கொண்டாள். “அச்சோ… என்னாச்சி ரத்தமா!” இமையா பதறி போனாள்.  இயற்கையாகவே மென்மையான குணம் படைத்தவள் அவள். இந்த ஒரு வருடத்தில் தான் இவ்வளவு ஆக்ரோசமாக நடந்து கொள்கிறாள், அந்த விபத்து நடந்ததிலிருந்து. லவ் பிரேக் அப்போது கூட, சரி பிடிக்காமல் பிரிந்தவர்களை தொந்தரவு செய்ய கூடாது என விலகியவள், தன்  உடைந்த மனதை ஒட்டவைக்கத்தான் முயற்சி செய்தாள். ஓரேடியாக உடைந்து விடவில்லை. தன்னை தேற்றிக்கொள்ளத்தான் நினைத்தாள்.

உடலில் உள்ள பிரச்சனைக்கும், மனதுக்கும் நிறைய சம்மந்தம் இருக்கும் போல, இரண்டில் ஒன்று பாதித்தாலும் மற்றொன்றும் பழுதாகிவிடுகிறது.

உடல் நலம், மன நலம் இரண்டும் சமமான நேர்க்கோட்டில் இருப்பதே நலம்.

இமையாவின் கலங்கிய முகத்தை பார்த்து “ஏய் இமை நான் சும்மா சொன்னேன். ரத்தம் வரலைடா.. உனக்கு தலைவலி பரவாயில்லையா?” இமையாவின் தலையை தொட்டு பார்த்தான். சூடு இன்னும் அதிகரித்திருந்தது.

“இல்லை, எனக்கு ஒன்னுமில்லை. பொய் சொல்லாத. எங்க ரத்தம் வருது” காற்றில் கைகளால் கதிரை பதற்றமாக தேடினாள்.

“இமை கண்ணு ஒன்னுமில்லை மா”

“இல்லை நீ பொய் சொல்லுற. எனக்கு கண்ணு தெரியாது. இவளுக்கு தெரியவா போதுனு நினைக்கிறியா?”

“ஐயோ, இமை மா… அப்படி எல்லாம் இல்லை தங்கம் கையை கொடு” கதிர் அவளது கையை தனது தோள்பட்டையில் வைக்க, இமையா வருடி பார்த்து பதறித்தான் போனாள். அவளது பல் தடம் நன்கு பதிந்திருந்தது.

“ரொம்ப வலிக்குதா கதிர்?”

“நீ இப்படி தொட்டுட்டே இருந்தா ஒரு வலியும் தெரியலை” அவனின் பதில் கேட்டவள்,  அவனது தோள் பட்டையிலிருந்து மேல் நோக்கி நகர்த்தி கன்னத்தை தொட்டவள் கன்னம் கிள்ளினாள்.

“எதுக்கு பொய் சொல்லுர?  இப்படி நாய் மாதிரி பல்லு பதிந்திருக்கு. வலிக்கலைன்னு சொல்லுற”

“நாய் தான். ஆனா குட்டி நாய்” இமையாவின் கொழுத்த கன்னங்களை ஆட்டி சொல்ல,  கதிரின் கைகளை தட்டிவிட்டாள்.

“நான் கோபமா இருக்கேன்”

“ஏனாம்.. இந்த திடீர் கோபம்”

“பொய் பொய்யா செல்லுர தானே? என்கிட்ட”

“இல்லை தங்கம். பொய் இல்லை. உண்மையா வலிக்கவே இல்லை”

இமையா தன் வலது கரங்களை அவன் முன் நீட்டி “அப்போ சத்தியம் பண்ணு நிஜமா வலிக்கலைன்னு”

கதிரும் அவள் கரம் கோர்த்து, கையை திருப்பி ஒரு முத்தம் பதித்தவன், “வலிச்சது. ஆனால் கம்மியா. ஒரு பெரிய சைஸ் எறும்பு கடித்தது போல”

“எல்லாம் பொய். இனி என்னிடம் பொய் சொல்லாத கதிர். வலிச்சா வலிச்சதுனு சொல்லனும் புரியுதா?”

“சரி… சரி இனி நோ பொய்” இமையாவின் வார்த்தைக்கு சரண்டர் ஆனான்.

“மருந்து போட்டு விட்டா,  இன்னும் நல்லா இருக்கும்” கதிர் குறும்பு குரலில் கேட்க,

“நான் எப்படி போட்டுவிட முடியும்?”

“உன்னால முடியும் இமை குட்டி. இரு வரேன்” என்று சென்றவன்,  சில வினாடிகள் கழித்து கையில் மருந்தோடு வந்தான்.  

இமையாவின் ஒரு விரலில் மருந்தை தடவி விட்டு, அவனது தோள்பட்டையில் வைத்தான்.

இமையாவின் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி. கதிருக்கு அழகாக மருந்து பூசிவிட்டவள்,

“கதிர்… சரியா பூசினேனா? எங்காவது மருந்து இல்லாம இருக்கா?”

“என் பட்டு தங்கம். சமத்தா பூசிடுச்சி” கதிர் இமையாவுக்கு இன்னும் உற்சாக படுத்த சொல்ல, இமையாவுக்கு ஒரு நம்பிக்கை பிறந்தது.

“இனி என்னால் முடியும். கொஞ்சம் கொஞ்சமா வேலை கத்துப்பேன்”

“கண்டிப்பா நாளையிலிருந்து ஒரு மணி நேரம் உனக்கு கிளாஸ் ஓகே வா?”

“சரி.. முதல்ல பாத்ரூம்க்கு வழி சொல்லி கொடு. ஒரு ஒரு முறையும் உன்னை கூப்பிடரது கஷ்டமா இருக்கு” இமையா குரலில் அப்படி ஒரு தயக்கம் தெரிந்தது.

“சரி இமை குட்டி”

அவளது ஃபோனை எடுத்து இமையா பூசிய மருந்து இடத்தை போட்டோ எடுத்து வைத்துக்கொண்டான்.

‘அவளுக்கு பார்வை வந்ததும்,  இது தான் முதல்ல பார்க்க வைக்கணும்’ மனதில் குறித்துக்கொண்டான்.

அவளுக்காக பார்த்து பார்த்து செய்ய துவங்கியவனின் மனதில் அப்படி ஒரு நிம்மதி.

இமையா அவளது வெளியேறும் திட்டத்தை மறந்தே போனாள், அவனின் பாசத்தால்.

இப்படியே இமையா இருப்பாளா? இல்லை பழைய படி வெளியேற திட்டம் போடுவாளா? அவளது மனதுக்கு தான் தெரியும்.

நடு ராத்திரியில் கதிருக்கு முழிப்பு தட்ட, எழுந்து இமையாவை பார்கக, தூங்காமல் ஏதோ யோசனையில் இருந்தவளை பார்த்தான்

Pokračovat ve čtení

Mohlo by se ti líbit

23.3K 668 61
ஒருவனின் வாழ்வில் காதல் செய்யும் மாய விளையாட்டை பற்றிய கதை
643K 17.1K 53
எதிர்பாரா சூழலில் கதாநாயகியின் மணாளனாகும் ஒருவன் அவளின் இதய திருடனாக மாறப் போகிறான். நான் எழுதும் முதல் கதை இது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்கள...
61.5K 4.1K 70
தனிமை... அவனுக்கு வேண்டியதெல்லாம் அது மட்டும் தான். அவனுடைய உலகம் வித்தியாசமானது. அந்த உலகத்தில் அவனுக்கு வேறு யாரும் தேவைப்படவில்லை. அவனும் அவனது தன...
92K 7.8K 108
It's like a short story. There will not be any further parts. It's just a scenario based short story. Let me know your comments.