10

46 6 1
                                    

உன் விழியின் மொழி...நானடி!: 10

"இமையா இன்னும் தூங்கலையா?" என்று அவள் முகத்தை பார்த்து கேட்க,

"இல்லை... முழிப்பு வந்துடுச்சி"

"என்ன இந்த குட்டி தொப்பைக்கு பசிக்குதா?" கதிர் ஒரு வேகத்தில் இமையாவின் வயிரை தடவ,

இமையாவை கதிரின் இந்த தொடுகை நெளிய வைத்தது.

கதிர் வேகமாக தன் கையை எடுத்தவன், "சாரி இமையா ஏதோ ஒரு வேகத்தில் தொட்டுட்டேன்"

"ம்ம்..." இமையா வேறு புறம் முகத்தை திருப்பிக்கொண்டாள். அவளும் பெண் தானே. சிறுக சிறுக பிடிவாதம் பிடித்த மனதை மாற்றி, பெண்ணவளின் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்தருந்தவனின் கரங்கள் பட்ட இடம் ஒரு வித குறு குறுப்பை ஏற்படுத்தியது.

'கதிர் கொஞ்சம் ஓவராத்தான் போயிட்ட' மனதில் அவன் செய்த செயலுக்கு தன்னை திட்டி கொண்டவன்,

"நான் எதாவது சாப்பிட எடுத்துவறேன்" கதிர் அந்த இடத்தை விட்டு நழுவி செல்ல,

இமையாதான் குழம்பினாள்.

'கணவன் மீது மனம் சாய்கிறது என்றால், நான் உயிரிக்குயிராய் நேசித்த என் காதலன் மீது வைத்த காதல் பொய்யா. நான் பெண் தானா? எப்படி இது போல பச்சோந்தி வாழ்க்கை வாழ நினைக்கிறேன். நேற்று ஒருவனை காதல் செய்து இன்று ஒருவனை திருமணம் செய்து, சில தினங்களில் இந்த புதியவன் மீது மனம் சாயுமா!' தன்னை தானே தரம் தாழ்த்திக் கொண்டாள் இமையா.

சாதாரணமான நிலையில் இருந்திருந்தாள் இமையாவிற்கு வாழ்க்கையின் நிதர்சனம் புரிந்திருக்கும். அவளது பார்வையற்ற நிலை உடன் சேர்ந்து இமையா தன்னை தானே மனதால் இறக்கிக்கொண்டிருந்தாள்.

கதிரோ மனதில் தன்னைத் தானே திட்டிக்கொண்டிருந்தான்.

"கதிர் இனி ஒரு முறை கூட இது போல் செய்யக்கூடாது. இப்போது தான் மனம் வந்து ஏதோ பேசுகிறாள். அதையும் கெடுத்துக்கொள்ளாதோ" கதிர் தனக்கு சில அறிவுரை கொடுத்துக்கொண்டே, பழங்களை கழுவி, அரிந்து எடுத்து வந்தவன் நேரத்தை பார்க்க மணி இரவு ஒன்று.

உன் விழிமொழி...நானடி!Where stories live. Discover now