ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...

By NiranjanaNepol

150K 6.6K 1K

எல்லாவற்றிலும் வித்தியாசத்தை விரும்பும் நாயகன்... உலகமே அறியாத நாயகி... அவர்கள் வாழ்வில் நடைபெறும் சுவாரசியங்... More

1 திருமண கோரிக்கை
2 அதிரடி அறிமுகம்
3 ரகசிய திட்டம்
4 சிங்கத்தின் குகையில்
5 தொலைபேசி அழைப்பு
6 திருமதி ஆதித்யா
7 காத்திருந்த முதலிரவு
8 ஆதித்யாவின் முடிவு
10 சென்னையில் கமலி
11 திருமதி ஆதித்யா
12 புத்திசாலி பெண் தான்
13 நீங்கள் நல்லவர் தான்
14 அதிர்ஷ்ட தேவதை
15 பொய்
16 ஆதித்யா யார்?
17 கமலியின் சொந்த விதி
18 கமலியின் சாகசம்
19 கமலியின் புரிதல்
20 ஆதித்யாவின் பார்வை
21 ஆதித்யாவின் நடவடிக்கை
22 நான் உன்னுடன் டேம் இட்
23 கமலியின் அன்பு
24 ஒன்றுபட்ட மனங்கள்
25 விசித்திர உணர்வு
26 என்னோட ஆதிஜி
27 நீங்கள் என்றுடையவர்
28 கமலியின் இன்ப அதிர்ச்சி
29 நம்பிக்கை
30 அலுவலகத்தில் கமலி
31 ஒன்றுபட்ட மனங்கள்
32 மிஸஸ் பாஸ்
33 குமரிப்பெண்
34 மலர்க்கணைகள்...
35 அவளை நானறிவேன்...!
36 வஞ்சக உலகம்...
37 சோமபானம்
38 தொலைந்த மகள்
39 ஆதித்யாவின் நம்பிக்கை
40 முதல் முத்தம்
41 புதிய பரிமாணம்
42 நேர்மை
43 விஷநாகத்தின் குறி
44 என்ன நடக்கிறது?
45 யார் அது?
46 அந்த கண்கள்
47 பணம் பத்தும் செய்யும்
48 வித்யாசம்
49 ஆதித்யா...
50 நிஜ முகம்
51 அது வேறு...
52 கமலின்னா சும்மாவா?
53 கோவம் தனிந்தது
54 ஆதித்யாவின் பரிசு
55 விதி வலியது
57 ஒரே காரணம்
57 தவறல்ல... துரோகம்
58 கமலி கொடுத்த அதிர்ச்சி
59 பிரபாகரனின் உறுதி
60 குழந்தையின் ஏக்கம்
61 ஒப்புதல்
62 குடும்பம்
இறுதி பாகம்

9 அம்மாவின் அறிவுரை

2.6K 107 20
By NiranjanaNepol

9 அம்மாவின் அறிவுரை

மாலை

கமலியை அழைத்து செல்ல, சமயபுரத்தை அடுத்துள்ள  மாகாளியம்மன் குடியில் இருக்கும் அவளுடைய அம்மா வீட்டிற்கு வந்தான் ஆதித்யா. அவனை அமரச் செய்துவிட்டு, அவனுக்கு காபி கொண்டு வர உள்ளே சென்றார் செல்வி. அவளது அறையிலிருந்த கமலியை அழைத்தார் சுந்தரி. வெளியே வந்த கமலியை பார்த்து புன்னகை புரிந்தான் ஆதித்யா. தானும் அவனைப் பார்த்து புன்னகைத்து விட்டு,

"அம்மா எங்க அத்தை?" என்றாள் கமலி.

"தம்பிக்கு காபி போடுறாங்க"

அதைக் கேட்டு பதட்டமடைந்த கமலி, சமையலறையை நோக்கி ஓடினாள். அதைப் பார்த்து புரியாமல் விழித்தார் சுந்தரி. ஆதித்யாவுக்காக கலந்த காபியில், சர்க்கரை போட போன செல்வியின் கரத்தை பற்றினாள் கமலி.

"என்ன ஆச்சு கமலி?"

"ஆதிஜி ரத்தத்துல நிறைய சக்கரை இருக்காம். அதனால அவர் சர்க்கரை சாப்பிட கூடாது" என்றாள்.

சர்க்கரை கலக்காத காபியை செல்வியின் கையில் கொடுத்துவிட்டு, அவரை பின்தொடர்ந்து வந்தாள் கமலி. அந்தக் காபியை ஆதித்யாவிடம் கொடுத்தார் செல்வி. சர்க்கரையில்லாத காப்பியை குடித்த ஆதித்யாவின் கண்கள், அனிச்சையாய் கமலியின் பக்கம் திரும்பியது.

"நீங்க சர்க்கரை சாப்பிட கூடாதுன்னு கமலி சொன்னா. அதனால தான் தம்பி சக்கரை போடல" என்றார் செல்வி.

அவர் கூறுவதற்கு முன்பாகவே அதை புரிந்துகொண்ட ஆதித்யா, தலையசைத்து புன்னகை புரிந்தான்.

"நாங்க நாளைக்கு இங்கிருந்து கிளம்பறோம். உங்களுக்காக நாங்க காத்திருப்போம். வீடு ஷிஃப்ட் பண்ற வேலையை பத்தி நீங்க கவலைப்பட வேண்டாம். அதெல்லாம் நான் பாத்துக்குறேன். நீங்க சென்னைக்கு வந்தா போதும்"

"சரிங்க தம்பி"

"சீக்கிரம் சென்னைக்கு வர முயற்சி பண்ணுங்க"

"சரிங்க தம்பி" என்றார் சுந்தரி

காபி தம்ளரை கீழே வைத்துவிட்டு எழுந்து நின்றான் ஆதித்யா. தான் செய்து வைத்த பலகாரங்களை கமலியிடம் கொடுத்தார் செல்வி. கமலி அழ துவங்கும் முன், அவளை மெல்ல அணைத்துக்கொண்டு ரகசியம் உரைத்தார் செல்வி.

"அழாதே... நான் சொன்னது எதையும் மறந்துடக்கூடாது. எப்பவும் ஞாபகம் வச்சு நடந்துக்கணும்"

பொங்கி வந்த கண்ணீரை விழுங்கிவிட்டு, சரி என்று தலையசைத்தாள் கமலி. அந்த காட்சியை கண்ட ஆதித்யா,

"நீங்க கமலியைப் பத்தி கவலைப்படாதீங்க. அவளை நான் பாத்துக்கறேன்" என்றான்.

செல்வியும் சுந்தரியும் சரி என்று தலையசைக்க, அம்மா அத்தையிடம் விடைபெற்று, ஆதித்யாவை பின்தொடர்ந்து சென்றாள் கமலி.

காரில்

கமலி ஏதோ அவஸ்தையில் இருப்பதை போல் உணர்ந்தான் ஆதித்யா. அவனிடம் ஏதோ சொல்ல வேண்டுமென்று அவள் நினைப்பது போல் தோன்றியது அவனுக்கு. அவனை பார்ப்பதும், ஏதோ முணுமுணுப்பதுமாக இருந்தாள் அவள்.

"நீ ஏதாவது சொல்லணுமா?" என்று அவன் கேட்டது தான் தாமதம்,

"ஆமா ஆமா" என்று அவசரமாய் தலையசைத்தாள்.

"சொல்லு"

"உங்களுக்கு முதல்ல நான் தேங்க்ஸ் சொல்லணும்"

"எதுக்கு?"

"எங்க அம்மாவையும் அத்தையையும் சென்னைக்கு கூட்டிக்கிட்டு வர்றதுக்காக"

"சரி, அப்பறம்?"

"என்னை மன்னிச்சிடுங்க"

"இது எதுக்கு?"

"காலையில வீட்டுக்குள்ள வர சொல்லி உங்களை கூப்பிடாம நான் உள்ளே ஓடிப் போயிட்டேன். அம்மாகிட்ட நல்லா திட்டு வாங்கினேன்"

"பரவாயில்ல... நான் உன்னை மன்னிச்சிட்டேன். வேற என்ன?"

"இன்னைக்கு அம்மா எனக்கு ரொம்ப அட்வைஸ் பண்ணாங்க. எங்க அம்மா, அத்தை, ஃப்ரெண்ட் ஜானகி எல்லார் கூடவும் ஜாலியா இருந்தேன். எனக்கு பிடிச்ச சாப்பாடெல்லாம் அம்மா செஞ்சு கொடுத்தாங்க... ஸ்வீட் கூட கொடுத்து அனுப்பி இருக்காங்க"

எதற்காக இவள் எல்லாவற்றையும் ஒப்பித்து கொண்டிருக்கிறாள் என்று புரியவில்லை ஆதித்யாவிற்கு.

"எதுக்காக உங்க வீட்ல நீ என்ன செஞ்சங்குற விபரம் எல்லாத்தையும் என்கிட்ட நீ ஒப்பிச்சிகிட்டு இருக்கே?"

"ஏன்னா, அம்மா சொன்னாங்க, நான் உங்ககிட்ட எல்லாத்தையும் சொல்லிடணுமாம்... எதையுமே மறக்க கூடாதாம்..."

சிரித்தபடி கண்களை சுழற்றினான் ஆதித்யா.

"எதையும் மறைக்கக் கூடாதுன்னா, எல்லாத்தையும் சொல்லணும்னு அர்த்தமில்ல. முக்கியமான விஷயத்தை சொல்லணும்னு அர்த்தம்"

அதைக் கேட்டவுடன் கமலியின் முகம் தொங்கிப் போனது.

"நீ பேசுறதை கேட்க, எனக்கு விருப்பம் இல்லாம இதை நான் சொல்லல. நீ காலையில பத்து மணிக்கு உங்க வீட்டுக்கு போன... இப்போ மணி அஞ்சு ஆகுது. எல்லாத்தையும் சொல்லணும்னா ஏழு மணி நேரம் ஆகுமில்ல...? அதுக்காக சொன்னேன். நீ சாதாரண விஷயத்தை விட்டுட்டு, முக்கியமான விஷயத்தை மட்டும் சொல்லலாம். சரியா?"

"சரி"

"இப்ப சொல்லு கேக்கிறேன்"

சிறிது நேரம் எடுத்துக்கொண்டு, முக்கியமானவற்றை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு, அவற்றை ஆதித்யாவிடம் கூறத் துவங்கினாள் கமலி, அவள் அம்மா அறிவுரை வழங்கியது போல்.

"புருஷன் பொண்டாட்டிக்கு நடுவுல *பேட்டச்* ன்னு எதுவும் இல்லன்னு அவங்க அம்மா அட்வைஸ் பண்ணி இருக்கலாம்" என்று நினைத்த
ஆதித்யா, தன் மனதில் தோன்றிய எண்ணத்தை எண்ணி சிரித்துக் கொண்டே காரை செலுத்தினான், கமலி பேசுவதை கேட்டுக்கொண்டு.

......

ஆதித்யாவும் கமலியும் வீடு வந்து சேர்ந்தார்கள். கமலியை நோக்கி ஓடிச் சென்று அவளை கட்டிப்பிடித்துக்கொண்டு சந்தோஷமாக கத்தினாள் லாவண்யா.

"நம்ம ரெண்டு பேரும் ஒரே காலேஜில் சேர்ந்து படிக்க போறோம்"

காலேஜா? ஒன்றும் புரியாமல் குழப்பத்துடன் அவளை பார்த்தாள் கமலி.

"ஆமாங்க அண்ணி. நீங்க எங்க காலேஜ்ல சேர போறீங்க" என்றான் ராகுல்.

"நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்கு ஒண்ணுமே புரியல"

"ஆதி, உன்னை காலேஜ்ல சேக்க போறான்" என்றார் பாட்டி.

மாடிப்படியேறி தனது அறையை நோக்கி, சிரித்தபடி சென்று கொண்டிருந்த ஆதித்யாவை பார்த்தாள் கமலி. குழப்பத்தில் இருந்த கமலியால் தன் கண்களை அவன் மீது இருந்து அகற்றவே முடியவில்லை.

இது அவள் கனவிலும் கூட நினைக்காத ஒன்று. திருமணத்திற்கு பிறகு கூட அவளுக்கு இப்படி ஒரு சந்தர்ப்பம் கைகூடி வரும் என்று அவள் நினைத்து பார்க்கவில்லை.

"லாவண்யா ஜி, நானும் உங்க கூட சேர்ந்து தான் படிக்க போறேனா?"

"நான் உனக்கு பதில் சொல்ல மாட்டேன்" என்றாள் லாவண்யா முகத்தை திருப்பிக்கொண்டு.

"ஏன் ஜி?"

"இந்த *ஜி* போட்டு மரியாதையா எல்லாம் என்னை கூப்பிட வேண்டாம். *லா* ன்னு கூப்பிடு"

"சரிங்க லாஜி"

கண்களை சுழற்றினாள் லாவண்யா.

"லாஜி இல்ல... லா..."

"சரி லா... " என்றாள் தயக்கத்துடன்.

"அது...! இப்ப உனக்கு என்ன கேட்கணுமோ கேளு"

"நீ நம்ம காலேஜை பார்த்திருக்கியா?"

"ஓ பார்த்திருக்கேனே"

"எப்படி இருக்கும்?" அவள் கண்களில் அப்படி ஒரு ஆர்வம் கொப்பளித்தது.

"நம்ம காலேஜ் தான் தமிழ்நாட்டிலேயே நம்பர் ஒன் காலேஜ். எல்லா பெரிய மனுஷங்களுடைய பசங்களும் அங்க தான் படிக்கிறாங்க. நம்ம காலேஜ்ல அட்மிஷன் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்"

"நான் டுவெல்த்ல டிஸ்டிங்ஷன் வாங்கி இருக்கேன்"

"அப்போ உனக்கு நிச்சயம் சீட்டு கிடைக்கும். ஆனா..." என்று ஏதோ கூற போனவளை, ஜாடை காட்டி தடுத்து நிறுத்தினான் பிரபாகரன்.

"உங்களுக்கு நிச்சயமாக சீட்டு கிடைச்சுடும் கமலி. நீங்க தான் நிறைய மார்க் எடுத்திருக்கீங்கல்ல, அதனால நீ கவலைப்பட வேண்டாம்" என்றான் பிரபாகரன்.

கமலி லாவண்யாவை பார்க்க, அவளும் ஆமாம் என்று தலையசைத்தாள். அவர்கள் பேசிக்கொண்டிருந்ததை கேட்டபடி அங்கு வந்தான் ராகுல்.

"ஆமாங்க அண்ணி உங்களுக்கு சீட்டு கிடைச்சுடும்"

"நீங்களும் அந்த காலேஜில் தான் படிக்கிறீங்களா?"

"ஆமாம். விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் பைனல் இயர்"

"அப்படின்னா?" என்றாள் வெள்ளந்தியாக.

"அது மீடியாவை பத்தி படிக்கிறது. பெஸ்ட் போட்டோகிராபர் ஆகணும்னு எனக்கு ஆசை. நான் ரொம்ப நல்லா ஃபோட்டோ எடுப்பேன் தெரியுமா?"

தெரியாது என்று தலையசைத்தாள்.

"நீங்க, நம்ம ஏரியாகுள்ள வந்துட்டீங்கன்னா எல்லாத்தையும் தெரிஞ்சுக்குவீங்க"

சரி என்று உற்சாகமாய் தலையசைத்தாள் கமலி. படிக்க வேண்டும் என்ற அவளுடைய கனவு, உண்மையாக போவதை அவளால் நம்பவே முடியவில்லை. கைநிறைய புத்தகங்களோடு, *நான் காலேஜுக்கு போறேன்* என்று ஸ்லோ மோஷனில் அவள் ஓடி வருவது போன்ற காட்சி, மனதில் தோன்றியது அவளுக்கு. அவள் தானாக சிரிப்பதை பார்த்து, அவள் தோளை பிடித்து குலுக்கினாள் லாவண்யா. அசட்டுத்தனமாய் சிரித்தபடி அங்கிருந்து சென்றாள்  கமலி.

"எதுக்காக அண்ணா, நான் எங்க காலேஜ் பத்தி அவகிட்ட சொல்ல போனப்போ, என்னை தடுத்திங்க?" என்றாள் லாவண்யா பிரபாகரனிடம்.

"நீ டொனேஷன் பத்தி தானே சொல்லப்போன?"

"ஆமாம்"

"அதனால தான் உன்னை தடுத்தேன்"

"ஆனா ஏன்? எங்க காலேஜ்ல, சீட்டுக்காக சில லட்சங்களை கொடுத்து தான் ஆகணும். ஏன்னா எங்க காலேஜுக்குன்னு ஒரு *பேர்* இருக்கு"

"ஒருவேளை, நிறைய பணம் கொடுக்க வேண்டியிருந்தா  நான் அந்த காலேஜுக்கு போக மாட்டேன்னு கமலி சொல்லிட்டா என்ன செய்வ?"

"அவ அப்படி சொல்லுவான்னு நினைக்கிறீங்களா?"

"அவங்களை கவனிச்ச வரைக்கும் எனக்கு அப்படி தான் தோணுது"

"அவ ரொம்ப வெகுளியா இருக்கா. ஆதித்யா யாரு, அவருடைய பவர் என்னென்னு கூட அவளுக்கு தெரியல.  அவளுக்கு அதெல்லாம் தெரியணும், அண்ணா"

"நிச்சயமா அவங்களுக்கு அதை பத்தி தெரியணும். ஆனா, இப்படி இல்ல. அவங்களாவே அதை பத்தி தெரிஞ்சுக்கணும். அவங்களுக்கு சின்னதா ஒரு பொறி தட்ர வரைக்கும் தான் இப்படி இருப்பாங்க. அதுக்கப்புறம், அவங்களாவே அவனைப் பத்தி தேடித்தேடி தெரிஞ்சுக்குவாங்க. அந்த சுவாரஸ்யத்தை உடைச்சிடாதே"

"நல்லவேளை என்கிட்ட நீங்க இதை சொன்னீங்க"

"ஒரு விஷயத்தை மறந்துடாத. நீ கமலியை ஒரு கேடயம் மாதிரி நின்னு பாதுகாக்கணும். நான் உன்னைத் தான் நம்புறேன். நீ தான் கொஞ்சம் கொஞ்சமா அவங்களை நம்ம லைஃப் ஸ்டையிலுக்கு மாத்தி கொண்டுவரணும்... ஆனா அதை நீ சீரியஸா செய்யக்கூடாது... ரொம்ப இயல்பா செய்யணும்"

"கண்டிப்பா செய்றேன். என்னோட ஃப்ரெண்ட் சுமித்ராவும் எங்க காலேஜில தான் ஸ்காலர்ஷிப்ல சேந்திருக்கா. கமலியை நாங்க பாத்துக்குறோம்"

"ரொம்ப நல்லதா போச்சு. சுமித்ராகிட்டயும் கமலியைப் பத்தி சொல்லிடு"

சரி என்று தலையசைத்தாள் லாவண்யா.

"ரொம்ப தீவிரமா ப்ளான் பண்ணிக்கிட்டு இருக்கீங்க போல இருக்கு..." என்றான் ராகுல்.

"சென்னை கல்ச்சர் பத்தி உனக்கு தெரியாதா?" என்றான் பிரபாகரன்.

"ஆமாம். எனக்கும் அதை நினைச்சா கொஞ்சம் கவலையா தான் இருக்கு. எப்படித் தான் கமலி அண்ணி இது எல்லாத்தையும் கடந்து வர போறாங்களோ தெரியல. இந்த மாதிரி அப்பாவியா இருக்குறவங்கள கிண்டல் கேலி செய்ய, பசங்க தயங்கவே மாட்டாங்க. அதை அவங்க எப்படி எடுத்துக்க போறாங்கன்னு புரியல"

"அதனால தான் அவங்க கூட லாவண்யா இருக்கணும்னு நான் நினைக்கிறேன்"

"ராகுலும் அண்ணிக்காக இருப்பான். அதை மறந்துடாதீங்க" என்றான் ராகுல்.

"நீ என்ன நெனச்சிட்டு இருக்க ராகுல்? கமலியை பாத்துக்க, உனக்கு என்ன வேலை கொடுக்கணும்னு இந்த நேரம் ஆதித்யா யோசிச்சு வச்சிருப்பான்" என்றான் பிரபாகரன்.

"மை பிளஷர்" என்றான் ராகுல்.

இதற்கிடையில்,

தங்கள் அறையின் உள்ளே நுழைந்த கமலியை பார்த்து புன்னகைத்தான் ஆதித்யா.

"நீங்க நிஜமா என்னை காலேஜுக்கு அனுப்ப போறீங்களா?" என்றாள் தயங்கியபடி.

ஆமாம் என்று தலையசைத்தான் ஆதித்யா.

"எனக்கு படிக்கணும்னு ஆசைன்னு உங்களுக்கு எப்படி தெரியும்?"

அப்பொழுது தான் ஆதித்யா தெரிந்து கொண்டான், அவளுக்கு படிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது என்று.

"நீ படிக்க ஆசைப்படுறது எனக்கு தெரியாது" என்றான்.

எங்கள் வாழ்க்கை முறையை கற்றுக் கொள்ளத் தான் உன்னை கல்லூரிக்கு அனுப்புகிறேன் என்று அவன் கூறவில்லை. அவள் மனதளவில் கூட தாழ்ந்து விடக்கூடாது என்று நினைத்தான் ஆதித்யா.

"ஆமாம். எனக்கு படிக்கணும்னு ரொம்ப ஆசை. அதனால தான்  கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னேன்"

இது என்ன புது கதை...! அவளுக்கு திருமணம் செய்து கொள்வதில் விருப்பம் இல்லையா...! அப்படியென்றால், அவளுடைய அம்மாவும், அத்தையும் தான் அவளை  வற்புறுத்தி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்திருக்க வேண்டும். அப்படி என்றால், அவளை கல்லூரிக்கு அனுப்ப வேண்டும் என்ற அவனுடைய முடிவு மிகவும் சரியானதே. அவள் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தை பார்த்து நிம்மதி அடைந்தான் ஆதித்யா.

"உனக்கு படிக்கணும்னு ஆசை இருந்தா, எதுக்காக கல்யாணம் பண்ணிக்க ஒத்துகிட்ட?"

"ஏன்னா, நல்ல வரனை விடக்கூடாதுன்னு அம்மா நினைச்சாங்க. அதே நேரம், என்னை படிக்க வைக்கவும் அம்மாவுக்கு வசதி இல்ல. அதனால என்னை காலேஜுக்கு அனுப்ப மாட்டேன்னு சொல்லிட்டாங்க"

"உனக்கு என்ன படிக்கணும்னு ஆசை? உனக்கு பிடிச்ச சப்ஜெக்ட் ஏதாவது இருக்கா?"

"இல்ல. என்ன படிக்கிறதுன்னு எனக்கு தெரியல"

அவள் பேசியதைக் கேட்டு அவனுக்கு அதிசயமாக இருந்தது. தன் பிள்ளை என்னவாக வரவேண்டும் என்று பிறந்த உடனேயே முடிவு செய்துவிடும் நகர கலாச்சாரத்திலிருந்து அவள் வெகுதூரத்தில் இருக்கிறாள் அல்லவா...!

"நாட் பேட்" என்றான்.

"என்னை எப்போ காலேஜ்க்கு கூட்டிக்கிட்டுப் போவீங்க?"

"சென்னைக்கு போனதுக்கப்புறம்"

"நான் உங்ககிட்ட ஒரு விஷயம் கேக்கட்டுமா?" என்றாள் தயக்கத்துடன்.

"எது வேணாலும் கேட்கலாம்"

"என்னை காலேஜிக்கு அனுப்பணும்னு உங்களுக்கு எப்படி தோணுச்சி?" என்றவுடன் நமுட்டு சிரிப்பு சிரித்தான் ஆதித்யா.

"உன்கிட்ட கொட்டிக் கிடக்கிற பொது அறிவை வீணாக்க கூடாதுன்னு நினைச்சேன்"

"பொது அறிவா?" என்று முகத்தைச் சுருக்கினாள்.

"பின்ன...  இதுவரை எனக்கு யாருமே சொல்லிக் கொடுக்காத, குட்டச், பேட்டச் பத்தி எவ்வளவு அழகா எனக்கு சொல்லிக்கொடுத்த... அப்போ தெரிஞ்சுகிட்டேன், நீ எப்படிப்பட்ட பொது அறிவு களஞ்சியம்னு..." என்றான் முகத்தை சீரியசாக வைத்துக் கொண்டு, சிரித்துவிடவே கூடாது என்ற முடிவோடு.

ஆமாம் என்று தலையை அசைத்தபடி, புருவத்தை உயர்த்தி பெருமிதத்துடன் புன்னகைத்தாள் கமலி.

அவள் முகத்தை பார்த்து, தன் சிரிப்பை அடக்க படாத பாடு பட்டான் ஆதித்யா.

"இந்தப் பெண் உண்மையிலேயே பச்சை மண். நான் அவளை கிண்டல் பண்றேன்னு கூட தெரியாம, எவ்வளவு பெருமையா சிரிக்கிறா..." என்று மனதில் நினைத்து சிரித்தான் ஆதித்யா.

அவளது வெகுளி தனத்தை ரசித்த அதே நேரம், அவனுக்கு பதட்டமாகவும் இருந்தது. உயர் வகுப்பைச் சேர்ந்த, தலைக்கனம் பிடித்தவர்கள் பயிலும் அந்தக் கல்லூரியில் எப்படி இந்த அப்பாவி பெண் எதிர்நீச்சல் போட்டு கரையேற போகிறாள்...? புரியவில்லை அவனுக்கு...

தொடரும்...

Continue Reading

You'll Also Like

255K 9.7K 40
கனவில் வரும் ராஜகுமாரன் நிஜத்தில் வரப்போவதில்லை என உறுதியாக நம்புகிறாள் மித்ரா.. நிஜத்திலும் வரக்கூடுமோ..
28.7K 1.8K 34
முறுக்கு மீசையும், கட்டு மஸ்தான் உடலும், கலையான முகமும் கொண்ட வாலிபன் ஒருவன், அவசர சிகிச்சை பிரிவு அறையின், கதவில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடி வழியாக...
95.1K 4.2K 25
கடந்த காலத்தை மறந்து புது வாழ்க்கை தொடங்க போராடும் ஒரு பெண் முன் மீண்டும் கடந்த காலம் வந்தால் என்னாவாள்..