சூசைட் (Sucide)

By kadharasigai

221 35 56

தற்கொலைகள் பல விதம் அதில் ஒரு பகுதியையே இக்கதையின் கருவாக கற்பனையாக யூகித்து எழுதுகிரேன் ..... முதல் முதல்ல த... More

சூசைட் - 2
சூசைட் - 3
சூசைட் - 4
சூசைட் - 5
சூசைட் - 6

சூசைட் - 1

75 11 26
By kadharasigai

அடர்ந்த ஓங்கி உயர்ந்த மரங்கள் நிறைந்த காடு தரை முழுதும் பச்சை கொடிகள் கட்டுபாடின்றி தாறுமாறாக வளர்ந்து இருக்க மனித நடமாட்டமே இல்லாமல் நடைபாதை ஒன்று இல்லாத அக்காட்டின் நடுவில் தங்கள் கைகளை கோர்த்தவாறு உள்நுழைந்தனர் ஒரு ஜோடி.

இருவரின் முதுகு புறம் மட்டுமே தெரிய அப்பெண் சல்வார் அணிந்திருக்க அவன் நீல நிற சட்டையும் கருப்பு கால்சட்டையும் அணிந்திருந்தான்.

இருவரும் நின்று ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு மீண்டும் நடையை தொடர்ந்தனர். நீண்டு வளர்ந்திருந்த செடி கொடிகளை ஒரு கையால் புறம் தள்ளிக் கொண்டு மறு கையை தன் இணையோடு கோர்த்துக் கொண்டு நடந்தனர்.

இறுதியாக இருவரின் இலக்கும் வந்தடைந்து விட இருவரும் நின்ற இடம் பல்லத்தாக்கு.... காட்டின் முடிவில் ஒரு பெரிய பள்ளம் பள்ளத்தின் தொடக்கம் மீண்டும் காடு.

அந்த இடத்தை சுற்றி சுற்றி பார்த்த இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தவாறு திரும்பினர். இருவர் கண்களும் அழுது சிவந்து வீங்கி போய் இருந்ததோடு ஆயிரம் சோகங்களையும் பாரங்களையும் தேக்கி வைத்திருந்தது. இருவருக்கும் பேசவும் பகிர்ந்துக் கொள்ளவும் ஆயிரம் எண்ணங்கள் உண்டு ஆனால் இருவருமே அதை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை இருவரின் ஒரே இலக்கு தற்கொலை.....

"இந்த முடிவுல உனக்கு வருத்தம் இல்லை தான தீப்தி" என்று அவன் அவளை பார்த்து கேட்க

கலங்கிய கண்களுடன் அவனை நோக்கி திரும்பியவள் "நா காதலிக்க ஆரமிச்ச அப்போவே சொன்னது தான் தீனா நீ என்ன முடிவு எடுக்கிறியோ அது தான் என் முடிவும்" என்று கூறினாள்.

அவளின் பதிலில் தீனாவின் கண்களும் மனமும் கலங்கி போனது.

வருத்தம் இருக்க தானே செய்யும் வசதியான குடும்பத்தில் பசி அழுகை துக்கம் சோகம் என்று எதையும் அறிந்திராமல் வளர்ந்தவளை இன்று கதறி அழுக வைத்ததோடு அவளை அவள் குடும்பத்தை விட்டு இப்புவியை விட்டே அழைத்து செல்கிறான் தீப்தியின் காதலனான தீனா ....

தீனா தனக்கு மரணம் என்று கூட பயம் கொள்ளவில்லை ஆயுள் முழுதும் கண் கலங்காமல் பார்த்துக்கொள்வேன் என்று வாக்களித்து விட்டு இப்பொழுது தனது காதலை மரண படியில் நிற்க வைத்ததை எண்ணி தான் வெகுவாக கலங்கி போனது.

"தீனா அழுகாத... நம்ம இப்போ ஒன்னா தான இருக்கோம் அப்பறம் ஏன் அழுகற" என்று தீப்தி ஆறுதலாக கூறினாலும் அவள் கண்களும் அழுதுக் கொண்டு தான் இருந்தது.

"இல்ல தீப்தி நீ எவ்வளவு செல்லமா வளர்ந்தவ... சாப்பிட்ற தட்டை கூட உன்னை யாரும் தொட விட்டதில்லை... சின்ன கொசு கடிய கூட உங்க வீட்ல இருக்கவங்க உன்னை அனுபவிக்க விட்றுக்க மாட்டாங்க ஆனா நா உன்னை இப்படி உடம்பு செதறி சாகற இடத்துக்கு கூட்டிட்டு வந்து நிக்கிறனே அத நினைச்சா தான் மனசு ரொம்ப வலிக்குது" என்று தீனா தன் மனதை அழுத்தி பிசைந்துக் கொண்டிருந்த விஷயத்தை அதற்குறியவளிடமே கூறி விட்டான்.

"ஏன் தீனா இப்படி எல்லாம் யோசிக்கிற ... என் மனசையே உன் கிட்ட கொடுத்துட்டன் .... அந்த மனசும் நீ என்ன சொன்னாலும் கேட்கும் .... அப்பறம் உடம்பு மட்டும் எப்படி செதறி போனா என்ன .... இப்பவும் சரி உடம்பு செதறி செத்த பின்னாடியும் சரி உன் கூடவே தான் இருப்பன்" என்று தீப்தி கூற தீனா தீப்தியின் ஆழ்காதலில் நெகிழ்ந்து போனான்.

இருவரும் கடைசியாக ஒருவரை ஒருவர் முழுதாக கண்களால் நிறப்பிக் கொண்டனர். கோர்த்த கையை இறுக்கி பிடித்துக் கொண்டு இருவரும் ஒரே நேரத்தில் பள்ளதாக்கில் குதித்தனர்.

மரம் செடி கற்கள் என்று அனைத்திலும் இருவரும் உருண்டு உடல் முழுக்க சீராய்ப்புகளுடன் பூவி ஈர்ப்பு விசையினால் கீழே அமைந்திருந்த காட்டின் தரையை நோக்கி இழுக்கப்பட்டனர். இவ்வளவு தடங்களுக்கும் இடையில் தீனாவும் தீப்தியும் கோர்த்த கைகளை விடவில்லை. பாதி பள்ளத்திலே இருவரும் மயங்கி போயினர்.

----------------------------------------------------------

மாநகரின் மத்தியில் அமைந்திருந்த அடுக்குமாடி குடியிருப்பில் பத்தாவது தளத்தில் அமைந்திருந்த அவ்வீட்டின் முன்னால் காவல் ஆய்வாளர்களும் மருத்துவ நிபுணர்களும் அதோடு தடயவியல் நிபுணர்கள் கையுறைகளோடு அந்த வீட்டில் வளம் வந்துக் கொண்டிருந்தனர்.

அவ்வீட்டின் பெரியவர்கள் ஹாலில் அமர்ந்து அழுதுக் கொண்டிருந்தனர். காவல் அதிகாரிகளும் மருத்துவ நிபுணர்களும் ஒரு அறைக்குள் பரபரப்பாக போவதும் வருவதுமாக இருந்தனர். பெரியவர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு நேரெதிரே ஒருவன் முழங்காலில் முகத்தை புதைத்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

ஒரு குறிபிட்ட அறைக்குள் தடயவியல் நிபுணர்கள் புகைப்படமாக எடுத்துக் கொண்டிருந்தனர். சிலர் எங்காவது தடயம் கிடைக்கிறதா என்று சிறிய துடைப்பானை வைத்து துடைத்தும் பொடியை தூவியும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

மருத்துவ நிபுணர்கள் அறைக்கு நடுவில் மின்விசிறியில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட பெண்ணின் உடலை இறக்கினர்.

காவல் அதிகாரிகள் நின்று மேர்பார்வை பார்த்துக் கொண்டும் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொண்டும் நின்றிருந்தனர்.

இறந்தவளின் உடலை இறக்கி வெளியில் எடுத்து வந்ததும் அவளின் பெற்றோரும் சொந்தமும் சூழ்ந்துக் கொண்டனர். இதுவரை அமைதியாக கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தவர்கள் அவளின் உயிரற்ற உடலை கண்டதும் கதறி அழுக தொடங்கினர்.

இவர்களின் அழுகையில் முழங்காலில் முகத்தை புதைத்துக் கொண்டிருந்தவன் சட்டென நிமிர்ந்து பார்த்தான். அழுது சிவந்து போய் இருந்த கண்களால் அவளின் உயிரற்ற உடலை வெறித்தவனின் கண்களில் கண்ணீருக்கு மட்டும் பஞ்சம் இல்லை ... தலையெல்லாம் கலைந்து போய் இருந்தது பித்து பிடித்தவன் போல் அமர்ந்திருந்தவன் தவழ்ந்தவாறே அவள் அருகில் சென்று அவள் கையை பற்றினான்.

"இனியா .... இனியா என்னை பாரு இனியா நா உன் கதிர் வந்திருக்கன் இனியா .... என்னை எப்பவும் வெய்ட் பன்ன வைக்க மாட்ட இல்லை என்னை பாரு டி" என்று கதிர் அழுக இனியா அசைவின்றி படுத்திருந்தாள்.

வீட்டு வாசலில் அக்கம் பக்கம் இருந்தவர்கள் உள்ளே என்ன நடக்கிறது என்று தெரிந்துக் கொள்ள அந்த சிறிய கதவு வழியே சலசலப்புடன் எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருந்தனர்.

"என்ன பிரச்சனையோ தெரியலையே நல்லா இருந்த பொண்ணு இப்படி திடீர்ன்னு தூக்கு மாட்டிகிச்சி" என்று ஒருவர் கூற

"அந்த பொண்ணு ராத்திரி பன்னன்டு மணிக்கு வந்துச்சி நா தண்ணி குடிக்க எழுந்த அப்போ பார்த்தன் அந்த நேரத்துல வீட்ல ஒருத்தரும் இல்லை தனியா தான் இருந்துச்சி காலையில தூக்கு மாட்டிகிச்சின்னு சொல்ராங்க" என்று இன்னொறுவர் கூற

"அது என்ன பொண்ணு மாதிரியா நடந்துகிச்சி பையனாட்டம் பேண்ட் சட்டைய மாட்டிகிட்டு பேய் பிசாசுன்னு இல்லை சுத்துச்சி அதுல ஒன்னு தான் இப்படி பன்னி இருக்கும்" என்று மற்றும் ஒருவர் பேய் நம்பிக்கை உள்ளவர் கூற

"பேயாவது பிசாசாவது அந்த பையன் எதாவது பன்னி இருப்பான்" என்று ஒருவன் என்று சும்மா நில்லாமல் ஒவ்வொறுவரும் ஒவ்வொன்று என்னவென்றே தெரியாமல் பேசிக் கொண்டிருந்தனர்.

இதெல்லாம் அங்கிருந்த காவல் ஆய்வாளர் கேட்டு கடுப்பாகி 'என்னன்னே தெரியாம பேசுதுங்க பாரு இதுங்களால தான் பாதி தற்கொலை நடக்குது' என்று முனுமுனுத்தவர் அவருக்கு கீழ் வேலை செய்யும் அதிகாரியிடம் "வீட்டு முன்னாடி இருக்கவங்கள க்ளியர் பன்னுங்க முதல்ல" என்று கூற அவரும் சரி என்று வீட்டின் முன் குவிந்திருந்தவர்களை லத்தியால் அடிப்பது போல் ஓங்கி விரட்டினார்.

உள்ளே அழுகையுடன் இனியா உடலை சுற்றி நின்றிருந்த குடும்பத்தினரை விலக்கி விட்டு இனியா உடலை தூக்கிக் கொண்டு சென்றனர்.

இனியாவின் குடும்பத்தினர் அவள் பின்னோடு மருத்துவமணைக்கு செல்ல கதிர் அங்கேயே அமர்ந்து அழ தொடங்கினான்.

அங்கிருந்த தடயவியல் நிபுணர்களும் காவலர்களும் அவர்களுக்குள்ளாகவே ஏதேதோ பேசிக் கொண்டு இனியா தற்கொலை செய்துக் கொண்ட அறையை மஞ்சள் நிற காகிதத்தால் அடைத்து விட்டு வெளியில் சென்றனர்.

இப்பொழுது கதிர் மட்டுமே அங்கு அமர்ந்து அழுதுக் கொண்டிருந்தான். வீடே அமைதியாக இருக்க கதிரின் விசும்பல் சத்தம் மட்டுமே அங்கு முழுதாக நிறைந்திருந்தது.

அழுது அழுது ஓய்ந்தவன் தனது காதலி தன்னை விட்டு அவளது உயிரை பிரித்து சென்ற அறையை பார்த்தான்.

காலையில் வீட்டிற்கு நன்றாக வந்து விட்டேன் என்று அழைத்து கூறியவள் முக்கியமான விஷயம் தான் சென்று வந்த விஷயத்தை கண்டறிந்து வந்து விட்டேன் என்று ஆனந்தமாக கூறியவள் தன்னை பார்க்க வருமாறு அழைத்தாள் ... ஒரு மாதம் கழித்து தனது காதலியை காண போகும் ஆவலிலும் ஆசையிலும் ஓடி வந்தவன் கண்ணில் மின்விசிறியில் உயிரற்ற ஜடமாய் தொங்கிக் கொண்டிருந்த இனியா தான் விழுந்தாள். அப்பொழுது முதல் பித்து பிடித்தவன் போல் அமர்ந்திருந்தான்.

நிசப்தமான அந்த வீட்டில் "கதிர்" என்று மெல்லமாக இனியா அழைப்பது போல் கேட்டது. கதிர் முதலில் அதை கண்டுகொள்ளாமல் போனாலும் இரண்டாம் முறை இனியாவின் குரலை கண்டுக் கொண்டான்.

"இனியா .... இனியா .... நீயா கூப்ட்ர ... எங்க இருக்க" என்று கதிர் இனியாவின் குரலில் அவள் இறந்ததை கூட மறந்து கேட்டான்.

"கதிர்" என்று மீண்டும் இனியாவின் குரல் அவள் தற்கொலை செய்துக் கொண்ட அறையில் இருந்து.... அதை கண்டுக் கொண்ட கதிர் மெதுவாக எழுந்து அவ்வறையை நோக்கி நடக்க தொடங்கினான்.

"இனியா இனியா" என்று அழைத்துக் கொண்டே அவ்வறை வாசலில் மஞ்சள் தடுப்பிற்கு முன் நின்று அழைத்தான். "கதிர்" என்று இனியாவின் குரல் மீண்டும் அறையினுள் இருந்தே கேட்க கதிர் சிறிதும் யோசிக்காமல் மஞ்சள் தடுப்பை தாண்டி உள்ளே சென்றான்.

"இனியா ... இனியா .. எங்க இருக்க" என்று கதிர் அறையை சுற்றி சுற்றி பார்த்தான். ஆனால் அறைக்கும் யாருமே இல்லை .. கண்களுக்கு அறையில் யாரும் இல்லை என்று புலப்பட்டாலும் மனமோ உள்ளே யாரோ இருப்பதாக உணர்த்தியது.

கதிரின் இதயம் படபடக்க முகம் வேர்த்து போனது. அப்பொழுது கதவை திறந்துக் கொண்டு யாரோ உள்ளே வருவது போல் சத்தம் கேட்க கதிர் சட்டென திரும்பி பார்த்தவன் அதிர்ந்தான்.

ஏனென்றால் கதவை திறந்துக் கொண்டு பெட்டியுடன் உள் நுழைந்தது இனியா ... கதிர் உண்மை மறந்து சுற்றம் மறந்து இனியாவை கண்ட ஆனந்தத்தில் அவளை நோக்கி ஓடினான். இனியா கதிரை கண்டுகொள்ளாமல் பெட்டியை ஓரமாக தள்ளி வைத்து விட்டு கப்போர்ட் அருகில் சென்றாள்.

கதிர் இனியாவை அணைக்க போக கதிர் இனியாவை தாண்டி குப்புற விழுக சென்றவன் தடுமாறி நின்றான். இனியாவை கடந்து தாம் எப்படி வந்தோம் ஏன் இனியாவை தம்மால் தொட முடியவில்லை என்று குழம்பியவன் அதிர்ச்சியாகவும் குழப்பமாகவும் இனியாவை பார்க்க இனியா அங்கிருந்த கதிரை சுத்தமாக கவனிக்காமல் அவள் வேலையை பார்த்துக் கொண்டிருந்தாள்.

-----------------------------------------------------------

பள்ளத்தில் விழுந்த தீனாவும் தீப்தியும் ஒருவர் பின் ஒருவராக மயக்கம் தெளிந்து விழித்து எழுந்து நின்றனர்.

அந்த இடம் முழுக்க புகையால் நிறம்பி இருந்தது அருகில் இருப்பவர் கூட தெரியாதவாறு புகை மூட்டமாக இருந்தது.

தீனா பதட்டமாக தீப்தியை தேடினான். தீப்தியின் கை கால்கள் சீராய்ப்பால் எரிச்சல் எடுக்க தனது கையையும் காலையும் சீராய்ப்புகளை தொட்டு தொட்டு பார்த்தாள்.

இதுவரை சிறு கீரல்கள் கூட படாமல் வளர்ந்தவள் இப்பொழுது உடல் முழுக்க சீராய்ப்புகளும் உருண்டு புரண்டதால் ஏற்பட்ட வலிகளையும் சுருண்டு போய் அமர்ந்தவாரு முகத்தை சுருக்கி வலியில் முனங்கிக் கொண்டிருந்தாள்.

தீனா தட்டு தடுமாறி தீப்தியை கண்டு பிடித்தவன் அவள் அருகில் அமர்ந்து அவள் தோலை பற்றிக் கொண்டான்.

"ரொம்ப வலிக்குதா தீப்தி .... சாரி டி எல்லாம் என்னால தான" என்று தீனா மனம் வருந்தி கூறினான்.

"ம்ச் அதெல்லாம் ஒன்னும் இல்லை தீனா தேவையில்லாம யோசிக்காத ... ஆமா நம்ம இப்போ எங்க இருக்கோம் சொர்க்கத்திலையா" என்று தீப்தி முடிந்தவரை தனது வலியை தீனாவிடம் இருந்து மறைத்து இடத்தை சுற்றி பார்வையை சுழல விட்டவாறு கேட்டாள்.

"என்ன சொர்க்கமா.... உனக்கு யார் சொர்க்கம்ன்னு சொன்னா" என்று தீனா அதிர்ச்சியாக கேட்க

"நான் தான் நிறைய படத்துல பார்த்திருக்கனே சொர்க்கத்துல இப்படி தான புகை மூட்டமா இருக்கும்" என்று தீப்தி கூற தீனாவிற்கு இருந்த சோகம் எல்லாம் மறைந்து தீப்தி மேல் பொய் கோபம் ஒன்று எட்டி பார்த்தது.

"அடியேய் அதிகமா படம் பார்க்காத பார்க்காதன்னு சொன்னன் கேட்டியா .... இது ஒன்னும் சொர்க்கம் இல்லை ... நம்ம இன்னும் சாகவும் இல்லை இது வேற ஏதோ இடம் ... நம்ம எப்படி இங்க வந்தோம்ன்னு தான் தெரியல" என்று தீனா அந்த இடத்தை சுற்றி சுற்றி பார்த்தான்.

புகை சிறிது சிறிதாக குறைய தான் தெரிந்தது இருவரும் இருப்பது ஒரு மரவீடு என்று .... "இது ஏதோ வீடு மாதிரி இருக்கு பள்ளத்துல இருந்து விழுந்த நம்ம எப்படி இங்க வந்தோம்ன்னு தெரியலையே" என்று தீனா கூற

"சொர்க்கத்துல கூட வீடு இருக்கும் இல்லை தீனா" என்று தீப்தி கேட்க தீனா அவளை முறைத்து "அடியேய் லூசு நம்ம செத்துட்டா நமக்கு எப்படி டி அடி பட்டது வலிக்கும் ... சரியான அரைமென்ட்டல்ல லவ் பன்னிட்டோம் போல" என்று புலம்பினான்.

"போ தீனு நீ என்னை திட்ற" என்று தீப்தி முறுக்கிக் கொண்டு நிற்க தீனா தலையில் அடித்துக் கொண்டான்.

"நம்ம என்ன நிலமையில இருக்கோம் நீ இப்படி சின்னபுள்ளை மாதிரி கோச்சிகிட்டு விளையாட்றியே தீப்தி .... நம்ம எப்படி இங்க வந்தோம்ன்னு கொஞ்சம் யோசி" என்று தீனா கூற தீப்தி பதில் கூறும் முன் வீட்டின் கதவு திறக்கும் சத்தம் கேட்க தீனாவும் தீப்தியும் சத்தம் வந்த திசையை நோக்கி திரும்பினர்.

கதவை திறந்துக் கொண்டு உள்ளே நுழைந்த உருவத்தை பார்த்து இருவரும் அலறினர்.

Continue Reading

You'll Also Like

996 92 19
ஒரு ஆத்மாவுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையிலான தாய்மை போராட்டம்... இவர்களுக்குள் ஏற்படும் இந்த தொடர்பு எப்படி? என் வெண்ணிலா பெண்ணா...இல்லை ஆத்மாவா?? (இத...
1K 114 7
சூழ்ச்சிகளுக்கு நடுவே நான், குற்றம் என்னை கண்டு பயப்படும்... தடயம் அது என் புலன்கள் அறியும்.
2.9K 149 23
Real story படித்துப் பாருங்க கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும். இது ஒரு உண்மைக் காதலின் போராட்ட கதை.
152K 587 2
" ப்ளீஸ் நான் உன்னை ...பார்க்கணும் ...." என்றாள்.அந்த அறையின் ஒவ்வொரு மூலையிலும் விழிகளை சுழட்ட, "ஹ்ம்ம்.. சரி! கண்ணாடி முன்னே வந்து நில்லு" என்...