திருடிவிட்டாய் என்னை

By ArunaSuryaprakash

141K 4.8K 170

திருடனாக இருந்த என்னை திருடிவிட்டாயே என்று மகிழ்ச்சியில் திளைக்கும் மனம் ஒன்று-ஆனந்த் தன் வாழ்க்கையை பாழா... More

1.
2.
3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
24.
25.
26.
28.
29.
30.
31.
32.
33.

27.

3.4K 150 19
By ArunaSuryaprakash

மறுநாள் மதியம் ஆர்த்தியும் பாட்டியும் பேசிக் கொண்டே துணி மடித்துக் கொண்டு இருந்தார்கள்.

"ஆர்த்தி நீ அர்ஜுன் பத்தி என்ன நினைக்குர",என்று கேட்டார் பாட்டி.

"அர்ஜுன் ரொம்ப நல்ல பையன் பாட்டி.என்னை நன்றாக புரிந்து வைத்து இருக்கிறான்.என்னுடைய நல்ல நண்பன் அவன்",என்றாள் ஆர்த்தி.

"அந்த தம்பி தான் ஆர்த்தி இந்த ஒரு மாசமும் உன்ன தேடி அலஞ்சது.நீ கண்டிப்பா கிடைப்ப நு எங்களுக்கும் ஆறுதல் சொல்லுச்சு.ரொம்ப நல்ல பையன்",என்றார் பாட்டி.
ஆர்த்தி பெரு மூச்சு விட்டாள்.பாட்டி
ஒரு துணியை எடுத்து "இது யாருடையது.புதுசா இருக்கு",என்றார்.

ஆர்த்தி தயக்கமாக"இது என்னுடையது தான் பாட்டி.நான் அவன் வீட்டில் இருந்தப்போ அவன் வாங்கி குடுத்தான்.",என்றாள்.பாட்டி அவளை ஆச்சர்யமாக பார்த்தார்.

"தப்பான எண்ணம் இருக்கவன் டிரஸ் எல்லாம் வாங்கி தர மாட்டான் ஆர்த்தி.உன்னை ஒரு பொருட்டாகவே மதித்து இருக்க மாட்டான்.உனக்கு இத்தனை நாள் சோறும் போட்டு உடையும் வாங்கி குடுத்து இருக்கான் என்றால் அவன் கண்டிப்பாக கெட்டவனாக இருக்க மாட்டான்",என்றார் பாட்டி.

"பாட்டி ஆனா என்ன இங்கே இருந்து கடத்தீட்டு போனவன் அவன்.
அவன் எப்படி நல்லவனாக இருக்க முடியும்",என்றாள்.

"நகைக்காக உன்னை கடத்தினான் ஆனால் உன்னிடம் எப்போதாவது தவறாக நடக்க முயற்சி செய்தானா",என்றார் பாட்டி.

"இல்லை பாட்டி.என்னை பாதுகாப்பாக பார்த்துக் கொண்டான்.",என்று ஒப்புக் கொண்டாள் ஆர்த்தி.

"பார்த்தாயா அந்த பையன் நல்லவன் தான்.சூழ்நிலை தான் அவனை கெட்டவன் ஆக்கி இருக்கிறது.கடவுள் தான் அவனுக்கு நல்வழிகாட்டனும்",என்றார் பாட்டி.ஆர்த்தி பெரு மூச்சு விட்டாள்.
அவள் ஒரு முறை வயிற்று வலியால் துடித்த போது அவன் எப்படி பதறி போனான் என்று நினைத்து பார்த்தாள்.அவளுக்கு குழப்பமாக இருந்தது.எதுவாக இருந்தாலும் அது முடிந்து போன கதை.அதை பற்றி இப்போது நினைக்க வேண்டாம் என்று முடிவு செய்தாள்.

          அன்று மாலை ஐஷ்வர்யாவும் ஆர்த்தியும் வரவேற்பறையில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தார்கள்.அப்போது அர்ஜுன் அவன் அம்மாவோடு உள்ளே நுழைந்தான்.ஆர்த்தியும் ஐஷ்வர்யாவும் அவர்களை வரவேற்றார்கள்.அம்மா ஆர்த்தியை கட்டி அனைத்தார்.

"உன்னை பார்த்தது ரொம்ப சந்தோஷம் மா.",என்றார்.

"நன்றி ஆன்டி.நீங்க எப்படி இருக்கீங்க",என்றாள் ஆர்த்தி.

"நல்லா இருக்கேன் மா",என்றார் அர்ஜுனுடைய அம்மா.
அனைவரும் காபி குடித்துக் கொண்டே மகிழ்ச்சியாக பேசிக் கொண்டு இருந்தார்கள்.

"அர்ஜுனுக்கு நாங்க எல்லாம் சேர்ந்து ஒரு பொன்னு பார்த்து இருக்கோம் ஆர்த்தி",என்றார் அம்மா.

"ஏய் அப்படியா.சொல்லவே இல்லை.யாரு டா அது எனக்கு தெரியாம",என்றாள் ஆர்த்தி.அம்மா எதையோ சொல்ல வாய் எடுக்கும் போது அர்ஜுன் அவள் கையை அழுத்தினான்.அவள் அவனை பார்த்தாள்.அவன் வேண்டாம் என்பதை போல கண் அசைத்தான்.அம்மா அதை
புரிந்து கொண்டாள்.

"நேரம் வரும் போது உனக்கு சொல்லுவான்.அதுவரைக்கும் யார் என்று யோசித்துக் கொண்டே இரு",என்றார் அம்மா.

"ஆன்டீ...... யாரு நு சொல்லுங்க.என் தலையே வெடிச்சு விடும் தெரியலை என்றால்",என்றாள் ஆர்த்தி.

"நான் சொல்ல மாட்டேன்.அவனையே கேளு",என்றார் அம்மா.
இந்த சந்தோஷ பேச்சு வார்த்தை நடந்து கொண்டு இருந்த போது ஒருத்தி மட்டும் மெதுவாக விலகி தன் அறையை நோக்கி சென்றாள்.அதை அர்ஜுன் கவனித்தான்.

       ஐஷ்வர்யா தன் அறையில் இருக்கும் ஜன்னல் வழியாக வெளியே வெரித்து பார்த்துக் கொண்டு இருந்தாள்.அர்ஜுன் உள்ளே நுழைந்தான்.

"ஏன் இங்கே தனியாக இருக்கிறாய்",என்றான்.ஐஷ்வர்யா என்ன சொல்லுவது என்று தெரியாமல் தடுமாறினாள்.

"இல்லை தலை வலிக்குது.அதான் மேலே வந்தேன்",என்றாள்.அவன் அவளை உற்று பார்த்தான்.அவள் குற்றஉணர்ச்சியில் தலையை குனிந்தாள்.

"நல்ல ஒரு வாய்ப்பு கிடைத்தும் ஏன் அக்காவிடம் நீங்கள் உங்கள் காதலை சொல்லவில்லை.ஆன்டி சொல்ல வரும் போது தடுத்துவிட்டீர்கள்.",என்றாள் ஐஷ்வர்யா.
அர்ஜுன் மௌனமாக இருந்தான்.

சிறிது நேரம் கழித்து "உண்மையிலேயே உனக்கு இந்த கல்யாணத்தில் சந்தோஷம் தானா",என்றான்.ஐஷ்வர்யா திடுக்கிட்டாள்.

"சந்தோசம் தான்.ஏன் இப்படி கேட்குரீங்க",என்றாள் அதிர்ச்சியாக.

"உனக்கு சந்தோஷம் இல்லை.எனக்கு தெரியும்.உண்மையை சொல்லு ஐஷ்வர்யா",என்றான்.அவள் தடுமாறினாள்.

"என்ன சொல்லனும்.உங்களை விட நல்ல கணவன் என் அக்காவுக்கு கிடைக்க மாட்டார்",என்றாள்.

"ஆனால் உன் அக்கா என்னை காதலிக்கவே இல்லை ஐஷ்வர்யா",என்றான் சோகமாக.அவள் குழம்பினாள்.

"என் அம்மா எனக்கு பொன்னு பார்த்ததாக
சொல்லும் போது அவள் சந்தோஷமாக யார் என்று கேட்டாள்.அவள் முகத்தில் சிறு சலனம் கூட இல்லை.அவள் என்னை ஒரு நல்ல நண்பனாக மட்டும் தான் நினைக்கிறாள்.",என்றான். 

"அர்ஜுன் இது முட்டாள்தனம்.நீங்களே ஒரு முடிவுக்கு வராதீர்கள்.சொன்னால் தானே அவளுக்கு உங்கள் காதல் புரியும்",என்றாள்.

"உண்மை தான் யாருக்குமே சொன்னால் தான் காதல் புரியும்.நீ எப்போது உன் காதலை சொல்ல போகிறாய்",என்றான்.ஐஷ்வர்யா உறைந்து போனாள்.அவள் உடம்பெல்லாம் நடுங்கியது.படபடப்பு ஆனாள்.

"சொல்லு ஐஷ்வர்யா.உன் மனதில் என்ன இருக்கிறது.மறைக்காமல் சொல்லு",என்றான்.ஐஷ்வர்யா அழ தொடங்கினாள்.அர்ஜுன் அவள் அருகில் சென்று அவள் கையை பிடித்தான்.

"நான் என் காதலை சொல்ல வேண்டியது ஆர்த்தியிடம் அல்ல உன்னிடம்.ஐ லவ் யு ஐஷ்வர்யா.என்னை ஏற்றுக் கொள்வாயா",என்றான் கெஞ்சலாக.

ஐஷ்வர்யா அழுது கொண்டே அவன் தோளில் சாய்ந்தாள்.இருவரும் அந்த தருனத்தை பொக்கிஷம் போல தக்க வைத்துக் கொண்டனர்.

Note:Hello friends.So how do you like this chapter.Was it a better twist.Give me your valuable comments n votes.Do tell me what you think about this story.Few more chapters n you will know the climax.Thank you all.Keep reading.

Continue Reading

You'll Also Like

1.5K 81 33
எதிர் பாராத விதமாய் கனவுகளின் நிழல்களில் மாட்டிக்கொண்டு நிகழ்காலத்தை எண்ணி பயம் கொள்ளும் பெண்ணவள். அவளின் பயத்தை போக்க முயற்சி செய்யும் அவளின் குடும்...
196K 5.1K 127
காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வ...
143K 4.3K 31
Hero - Arunprasad Heroine - visalini ... ..... ......... ............ ................. Ivanga life'la enna nadakkuthu...??? Devathai...
1K 204 14
Cover edit by: @Staraddixt17 *** நன்மைக்கென்று நினைத்து செய்த செயல் தீங்கானது... *** "ஐ ஹேட் யூ! என் கண் முன்னாடி நிக்காத"அவள் பல வருடங்களுக்கு முன்...