என்னுள் நிறைந்தவள் நீயடி ( மு...

By Aashmi-S

107K 3.4K 343

ஹாய் டியர்ஸ் இது என்னோட நாலாவது தொடர்கதை. இந்த கதையில தன் அக்காவின் திருமணத்தில் மகிழ்ச்சியாக கலந்து கொண்டிரு... More

என்னுள் நிறைந்தவள் நீயடி
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
அத்தியாயம் 31
அத்தியாயம் 32
அத்தியாயம் 33
அத்தியாயம் 34
அத்தியாயம் 35
அத்தியாயம் 36
அத்தியாயம் 37
அத்தியாயம் 38
அத்தியாயம் 39
அத்தியாயம் 40
அத்தியாயம் 41
இறுதி அத்தியாயம்
Epilogue

அத்தியாயம் 13

2.2K 86 6
By Aashmi-S

ருத்ரன் தன் அருகில் அமர்ந்து இருந்த சாகித்யாவின் கைகளை எடுத்து தன் கையில் வைத்துக்கொண்டு அதில் இருந்த மோதிரத்தை பார்த்து "இந்த மோதிரம் நீ என்றிலிருந்து போட்டு இருக்கிறாய் என்று உனக்கு ஞாபகம் இருக்கிறதா" என்று கேட்டான்.

அவன் காரணமில்லாமல் எதற்கும் கேட்க மாட்டான் என்பதை புரிந்து கொண்ட சாகித்யா "நல்லா நியாபகம் இருக்கு உங்களுடைய எங்கேஜ்மென்ட் அன்னைக்கு இத என்னோட கையில கரண்ட் போன சமயத்துல யாரோ போட்டு விட்டாங்க இதை போட்டு விட்டுட்டு எக்காரணம் கொண்டும் இதை கழட்ட கூடாதுன்னு சொன்னாங்க அவங்க சொன்னதுல இருந்த அழுத்தம் என்னால இதை இன்னைக்கு வரைக்கும் கையிலிருந்து கழற்றி எடுப்பதற்கு தைரியம் வரவில்லை" என்று கூறினாள்.

அவளைப் பார்த்து மென்மையாக சிரித்த ருத்ரன் தன் கையில் தான் அணிந்து இருந்த மோதிரத்தை காண்பித்தான். எதற்காக அதை காண்பிக்கிறான் என்று புரியாமல் பார்த்தவள் பின்பு புரிந்துகொண்டு அவனுடைய முகத்தை பார்த்தாள். ஏனென்றால் இருவரும் அணிந்திருந்தது ஜோடி மோதிரம் அதேபோல் அந்த மோதிரத்தை இவள் தான் அவனுக்கு அணிவித்தாள் அதுவும் அவளுக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது.

அதை யோசித்து பார்த்தவள் முகம் வேதனையில் கலங்க ஆரம்பித்தது. அதைப் பார்த்த அனைவருக்கும் உள்ளுக்குள் வலித்தாலும் அதை காட்டிக் கொள்ளாமல் வெளியே அமைதியாக இருந்தனர். ருத்ரன் அவளை தன் கைகளுக்குள் கொண்டு வந்து "உண்மையா உங்க அக்காக்கு என்ன எங்கேஜிமெண்ட் முன்னாடியே பிடிக்காமல் போயிடுச்சு அதற்கு மெயின் காரணம் நிச்சயத்தை பெரிய அளவில் வைக்காமல் இருந்தது மற்றும் அவளுக்கு பிடித்தமானவற்றை அவருடைய விருப்பத்தை கேட்காமல் நாங்களே முடிவு பண்றது நிச்சயதார்த்தம் நடந்த போது கண்டிப்பாக அவள் ஏதாவது செய்வாள் என்று நாங்கள் பெரிதாக எதுவும் கண்டு கொள்ளவில்லை அதேபோல்தான் அவளும் செய்தாள்.

நிச்சய பத்திரிக்கை வாசிக்கப்பட்டு மோதிரம் மாற்ற அழைத்தபோது அவளுடன் நீயும் மற்றும் ஒரு சில பெண்களும் வந்தனர். மோதிரம் மாற்றும் நேரத்தில் சர்ப்ரைஸ் என்று கரண்ட் கட் ஆக கொழுந்தியா முறையில் நீயும் ஒரு மோதிரம் அணிவிக்க வேண்டும் என்று கூற நீயும் என் மேலிருந்த பயத்தில் என் முகத்தை கூட பார்க்காமல் மோதிரத்தை அணிவித்தாய் அதேபோல் நானும் உனக்கு மோதிரத்தை அணிவித்து விட்டேன். உன்னுடைய அக்கா அவள் கையாலேயே ஒரு மோதிரத்தை அணிவித்து விட்டு நிச்சயம் முடிந்து விட்டது என்று கூறி விட்டால் அதற்கு காரணமாக அவள் கையில் உள்ள மோதிரத்தை காண்பித்து விட்டாள். அனைவரும் அதையே உண்மை என நம்ப நம் இருவருக்கும் நிச்சயம் நல்ல முறையில் முடிந்தது இது எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் நன்றாகவே தெரியும்" என்று தங்கள் நிச்சயம் நடந்த கதையை கூறினான்.

முழுவதையும் கேட்ட சாகித்யா நொந்துபோய் "உண்மையிலேயே நான் ரொம்ப பெரிய முட்டாளாக இருந்து இருக்கிறேன் அல்லவா என்னை சுற்றி இவ்வளவு விஷயங்கள் நடந்த பிறகும் எதுவுமே எனக்கு தெரியாமல் இருந்து இருக்கிறது அதுமட்டுமல்லாமல் எனக்கு உங்க மேல் இருந்த பயத்தை அனைவரும் நன்றாக உபயோகப்படுத்தி நீங்கள் அனைவரும் நினைத்ததை சாதித்து விட்டீர்கள் அல்லவா" என்று கேட்டாள்.

அவள் கேட்ட கேள்வி அனைவருக்கும் கஷ்டமாகத்தான் இருந்தது ஆனாலும் நடந்தது அனைத்தும் இன்று அவளுக்கு தெரியட்டும் என்று எண்ணிக்கொண்டு அமைதியாக இருந்தனர்.

சாதனா "சரி இதுவரைக்கும் தெரிஞ்சுகிட்ட உன்னோட கல்யாணம் எப்படி நடந்துச்சுன்னு உனக்கு தெரியும் அதுக்கு முன்னாடி உங்க அக்கா ஓடிப்போன விஷயம் உனக்கு தெரியாது இல்ல" என்று கூறி அவன் முகம் பார்த்தாள்.

சாகித்யா ஒரு விரக்தியான சிரிப்பு சிரித்துவிட்டு "அவ எப்படி ஓடிப் போனால் எனக்கென்ன ஆக மொத்தம் உங்க எல்லார் கையிலயும் நான் விளையாட்டு பொம்மையா இருந்து இருக்கேன் இன்னும் கொஞ்ச நேரத்துல அவளும் வந்து விடுவா இப்ப அவளுக்கு உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசை அதையும் நீங்க என்ன பண்ணணுமோ பண்ணிக்கோங்க" என்று கூறி அங்கிருந்து கிளம்ப முயன்றாள்.

அதைப்பார்த்த சாதனா "அடியே அண்ணி இவ்வளவு நேரம் நாக்கு தள்ள தள்ள எல்லா விஷயத்தையும் நாங்க சொல்லி இருக்கிறோம் நீ எப்படி கண்டுபிடிச்ச அந்த கதையை சொல்லிட்டு போ" என்று கேட்டாள்.

அதைக் கேட்டு கடுப்பான சாகித்யா அவளருகில் வந்து அவள் தலையில் நான்கு கோடுகள் கொட்டிவிட்டு "நான் கண்டுபிடித்தது எல்லாத்துக்கும் முக்கிய காரணம் நீயும் மதியும் தான்" என்று கூறினாள்.

சாதனா தன்னுடைய தலையை தேய்த்துக்கொண்டே "எந்த இடத்தில நாங்க மிஸ் பண்ணினோம் அதை தெளிவா சொல்லிட்டு போ இனி ஏதாவது பிளான் பண்லாம் அப்படினா உஷாரா இருப்போம் அல்லவா இன்னும் கொஞ்ச நேரத்துல உன்னுடைய அக்காகாரி வேற வருவா அவள வேற சமாளிக்கணும்" என்று கூறினாள்.

அவள் கூறிய தோரணையில் தன்னை மறந்து முகத்தில் புன்னகை பரவ விட்டால் சாகித்யா அவளுக்கு அனைத்தும் புரிந்துதான் இருந்தது இவர்களைத் தவிர யாராலும் தன்னை அவ்வளவு நன்றாக பார்த்துக் கொள்ள முடியாது அதுமட்டுமல்லாமல் உண்மையாக ருத்ரன் மேல் தனக்கு ஒரு ஈர்ப்பு உண்டு என்பதையும் அவள் அறிவாள். ஆனால் இவை அனைத்தும் தனக்குத் தெரிந்து நடந்து இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டாள். பின்புதான் எவ்வாறு கண்டுபிடித்தாள் என்பதை கூற ஆரம்பித்தாள்.

சாகித்யா "எனக்கு முதன்முதலில் உங்கள் மேல் சந்தேகம் ஆரம்பித்தது நான் கல்யாணம் முடிஞ்சு காலேஜுக்கு வந்த முதல் நாள்" என்று கூறி சாதனா முகம் பார்த்தாள்.

சாதனா "என்னது முதல் நாளே வா ஐயையோ அப்படி என்னதான் பண்ணினோம்" என்று கேட்டாள்.

அவள் கூறிய தோரணையில் சிரித்த சாகித்யா "அது நாள் வரை நீ என்னை பார்க்கும் பார்வையில் ஒரு பாசம் இருக்கும் அதை நானே பார்த்திருக்கிறேன் எத்தனையோ முறை உன்னிடம் பேச முயற்சி செய்ய தான் நானும் நினைத்தேன் ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை அதற்கு முடியாமல் போனது ஆனால் அன்று நீ பார்த்த பார்வையில் உரிமை இருந்தது அந்த உரிமை உணர்வை திருமணமான அன்றே இவர் கண்ணிலும் நான் பார்த்தேன்" என்று ருத்ரனை கை காண்பித்தாள்.

சுற்றியிருந்த அனைவரும் அவளுடைய அறிவு கூர்மையை மனதிற்குள் மெச்சி கொண்டனர். பின்பு அவளே தொடர்ந்தாள் "ஆனால் அப்போது இருந்த மனநிலையில் எனக்கு பெரிதாக யோசிக்கத் தோன்றவில்லை அன்று என்னை விட்டுவிட்டு செல்லும்போது யாரைப்பற்றியும் கவலைப்படாமல் நான் நன்றாக இருப்பேன் என்று அமைதியாக கிளம்பினார். ஆனால் சந்தியா மற்றும் அர்ச்சனா இருவரையும் பார்க்கும்போது இவருடைய கண்ணில் ஒரு எச்சரிக்கை செய்யும் உணர்வை நான் கண்டேன் நான் ஆனால் அதே இது மற்றவர்கள் மேல் படியும் போது ஒரு பாசமான உணர்வு இருந்தது உன்மேல் பார்வை விழும்போது அளவுக்கு அதிகமாகவே நான் கண்டேன்.

அப்போது நான் அதை எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை ஆனால் என் மனதில் இருப்பதை யாரிடமாவது கூறினால் நான் கொஞ்சம் தெளிவு பெறுவேன் என்று எண்ணிக் கொண்டிருக்கும் போது சரியாக நீ அனைத்தையும் பற்றி கேட்டாய் நானும் அனைத்து விஷயங்களையும் வெளியே கூறும்போது தான் ஒரு சில விஷயங்களை யோசிக்க ஆரம்பித்தேன் அதை எப்படி என்னுடைய வீட்டில் எந்த வித எதிர்ப்பும் கூறாமல் இந்த திருமணத்திற்கு சம்மதித்தார்கள் இந்த திருமணம் செய்வதற்கு என் குடும்பமே எவ்வாறு உதவி செய்தது என்னை தெளிய வைக்க சக்தி கூறியது என்று அனைத்து கேள்விகளும் ஒன்றின் பின் ஒன்றாக என் முன்னே வந்து நின்றன சிறிது நேரம் அதை யோசித்துவிட்டு உங்கள் அனைவரின் முகத்தை பார்க்கும்போது உன்னுடைய  முகத்தில் மற்றும் மதியின் முகத்தில் நான் கூறிய விஷயங்கள் புதிதாக தெரிந்தது போன்ற எந்தவித ரியாக்ஷனும் இல்லை அதை வைத்தே நீங்கள் இருவரும் ஏதோ ஒரு வகையில் என்னுடைய வாழ்க்கையில் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள் என்பதை நான் புரிந்து கொண்டேன்.

ஆனால் அப்போது தர்ஷன் பிரச்சனை பெரிய பிரச்சனையாக இருந்ததால் அதை முதலில் முடிவுக்குக் கொண்டுவர நினைத்தேன் அதேபோல் அந்தப் பிரச்சனை ஒரு முடிவுக்கு வர கொஞ்சம் கொஞ்சமாக நடந்ததை யோசிக்க ஆரம்பிக்கும் போது எப்படி என் குடும்பம் ருத்ரன் மற்றும் அவர் அப்பா அம்மா கண்முன்னே வந்தார்களோ அதே போல் தான் நீயும் மதி இருவரும் என் கண்முன்னே வந்தீர்கள். அதேபோல் யாரும் என்னிடம் பேசும்போது ஒரு முறை கூட ராஜியை பற்றி கேட்கவில்லை அவளைப் பற்றி பேசக்கூட யாரும் நினைக்கவில்லை நானே திருமணம் முடிந்த அன்று பேச நினைக்கும் போது அவள் அவள் காதலனுடன் இருக்கிறாள் என்ற விஷயம் மட்டும் கூறிவிட்டு அது முடித்து விட்டார்கள்.

ஒவ்வொரு விஷயமாக யோசிக்க யோசிக்க நினைத்ததைச் செய்து முடிக்கும் என் கணவன் எதற்காக ராஜி மண்டபத்தை விட்டு செல்வதற்கு விட்டு விட்டான் என்ற கேள்வி என்னுள் பூதாகரமாக எழுந்தது. அதற்கு என் திருமணம் நடப்பதற்கு காரணம் என்னுடைய நாத்தனார் என்ற விஷயம் வரும்போது யார் அந்த நாத்தனார் திருமணம் நடப்பதற்கு காரணமாக இருந்தவரே ஏன் என்னுடன் பேசாமல் இருக்கிறாள் அப்படி என்றால் ஏதோ ஒரு வகையில் அவள் என்னுடன் பேசிக் கொண்டுதான் இருக்கிறாள். எனக்குத்தான் அவள் யார் என்று தெரியவில்லை என்ற உண்மைப் ஆணி அடித்தார் போல் உறைத்தது.

மொத்த குழப்பத்தையும் கொண்டே நான் விடுமுறையில் வீட்டிற்கு செல்லும்போது அங்கே உன்னுடைய போட்டோவை பார்த்தேன் அப்போதே எனக்கு பாதி விஷயங்களுக்கான விடை தெரிந்து விட்டது ஆனால் இந்த திருமணம் எதற்காக நடைபெற்றது உண்மையில் என்னை பிடிக்காமல் பழிவாங்குவதற்காக நடைபெற்றால் எதற்காக இவர்கள் அனைவரும் என்னை நன்றாக பார்த்துக் கொள்கிறார்கள் என்ற கேள்வி அடுத்து வந்தது. இரண்டு நாட்கள் விடுமுறையில் வெளியே செல்லும்போது அங்கே என் கணவன் என் உயிர் தோழியான சாந்தினியுடன் மிகவும் பாசமாக பேசிக்கொண்டிருந்தான்.

அப்போதே தெரிந்து விட்டது என் குடும்பத்தில் உள்ளவர்களும் இதில் முக்கிய கூட்டு என்று அதனால் தான் வேண்டுமென்றே கல்லூரி வந்த அன்று உங்கள் இருவரிடமும் கேட்டேன் நான் முதலில் கேட்ட கேள்வியில் இருவரும் ஒரு நொடி பயந்துபோய் பின்பு உஷார் ஆகி சகஜமாக நின்று கொண்டிருந்தனர். அதிலேயே கண்டுபிடித்துவிட்டேன் நீதான் என் இனிய நாத்தனார் என்று அதனால்தான் நீ இந்த திருவிழாவை பற்றி கூறும் போது அமைதியாக வருவதற்கு சம்மதித்து நின்றேன் ஆனால் நானே வீட்டில் பேசி சம்பளம் வாங்குகிறேன் என்று கூறினால் கண்டிப்பாக உனக்கு சந்தேகம் வரும் என்று தான் உன்னையே சம்மதம் வாங்க வைத்தேன்.

இப்பொழுது நான் வெளியே சென்றாலும் ஏதாவது ஒரு வகையில் யாராவது ஒருவர் எனக்கு பாதுகாப்பாக என்னை தனியே விடாமல் உடன் இருப்பவர் இதற்குப் பின்னால் ஏதோ ஒரு காரணம் இருக்கிறது என்று எனக்கு புரிந்து கொண்டே இருந்தது. அதனால்தான் நீ வீட்டிற்கு சென்ற நேரத்தில் வெளியே செல்வோம் என்று அனைவரும் கூறிய போது மறக்காமல் அவர்களுடன் சென்றேன் எதற்காக என்னை பொத்தி பொத்தி பாதுகாப்பார்கள் என்பதற்கான காரணம் என ராஜி என்ற விஷயம் அப்போது தான் எனக்கு தெரிந்தது.

அதுநாள் வரை நடந்த விஷயங்கள் அனைத்தையும் யோசிச்சு பார்த்தபோது ராஜ் மேல் தவறு இருக்காது நீங்கள் தான் ஏதோ செய்து இருக்கிறீர்கள் அதனால்தான் அவள் யாரோ ஒருவருடன் வெளியேறி இருக்கிறா என்று எண்ணிக்கொண்டேன். ஆனால் அது தவறு என்பது போல் ராஜி என்னிடம் பேசினாள் அப்போதே புரிந்து கொண்டேன். நிச்சயமாக ராஜி ஏதோ ஒரு வகையில் என் வாழ்வை அழிக்க முடிவு செய்தே அனைத்தையும் செய்கிறாள் என்ற விஷயத்தை அதனால் தான் எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை நான் இந்த திருவிழாவிற்கு செல்கிறேன் நீ வேண்டும் என்றால் ருத்ரன் குடும்பத்திடம் பேசி முடிவை எடுத்துக் கொள் என்று கூறி விட்டு அமைதியாக இருந்து விட்டேன்.

நான் நினைத்தது போல்தான் அனைத்தும் நடந்தது இங்கே வந்து சேர்ந்தபோது தாத்தா மட்டும் பார்ட்டி பாசமாக பார்த்ததையும் அதை சாதனா கண்டித்ததையும் பார்த்து என்னையறியாமல் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டேன். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் மேலே மாடிக்கு ஏறும்போது திருமணம் நடந்தபோது ஒன்றாக அனைவரும் எடுத்த போட்டோவை இங்கே மாட்டி வைத்து இருந்தீர்கள் அதை பார்த்து எனக்கு சிரிப்புதான் வந்தது எனவே சிரித்துக்கொண்டே அறைக்கு சென்று விட்டேன்.

ஆனால் எதை வைத்து நீங்கள் இங்கே வந்து இருப்பதை வெளியே கொண்டு வருவது என்று யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் தான் கடவுளாக உதவி செய்தது போல் வந்தான் வருண் அவனை வைத்தே நீங்கள் வந்ததையும் தெரியப்படுத்தி எனக்கும் தெரிந்து விட்டது என்பதையும் உங்கள் அனைவருக்கும் புரிய வைத்துவிட்டு நான் தெரிந்து கொள்ளாத சில விஷயங்களையும் தெரிந்து கொண்டேன்" என்று கூறியவள் ஒரு நிமிடம் அனைவரையும் பார்த்துவிட்டு மறுபடியும் தொடர்ந்தாள் "இன்னும் சிறிது நேரத்தில் ராஜி வந்து கொண்டிருக்கிறாள் அவ மட்டுமல்ல அவள் பின்னே என்னுடைய வாழ்க்கையை காப்பாற்றுவதற்காக அவளுடைய முன்னாள் காதலனாக இருந்த மதன் வந்து கொண்டிருக்கிறான்.

ராஜி வந்து என்ன பேசப் போகிறா என்ற விஷயம் உங்க எல்லாருக்கும் தெரியும் அப்படின்னு நினைக்கிறேன் அதனால எல்லாருமா சேர்ந்து அவளுக்கு எப்படி புரிய வைப்பீர்களா இல்ல எனக்கு விவாகரத்து வாங்கி கொடுத்துட்டு அவளுக்கு திரும்ப கல்யாணம் பண்ணி வைப்பீங்களா அது எல்லாம் எனக்கு தெரியாது ஆனா எல்லாம் முடிக்க வேண்டியது உங்க பொறுப்பு அவ பிரச்சனை முடிஞ்ச பிறகு நான் ஒரு முடிவெடுத்து இருக்கேன் அந்த முடிவை நான் சொல்றேன்" என்று கூறி முடித்த அவள் நேராக தர்ஷன் முன்பு சென்றாள் "உனக்கு நான் எல்லாத்தையும் தெளிவா முதலிலேயே சொல்லி முடிச்சிட்டேன் ஆனால் யாரோ ஒரு தங்க திரும்பவந்து உன்னோட மனச மாத்தி நம்பிக்கை கொடுத்து என் பின்னாடி வர வச்சாங்க அவங்க எதுக்காக அப்படி பண்ணாங்க அப்படிங்கற விஷயமே இன்னும் கொஞ்ச நேரத்துல உனக்கு தெரிஞ்சிடும் அதுக்குப்பிறகு நீ என்ன முடிவு எடுக்கிறோம் அதை என்கிட்ட சொல்லு அதை பொறுத்து நான் உனக்கு பதில் சொல்றேன்" என்று கூறினாள்.

அவள் கூறியதைக் கேட்ட தர்ஷன் மனதில் "இன்னும் என்னவெல்லாம் நடந்து இருக்கிறதோ நான் உண்மையா ஒரு பொண்ண லவ் பண்ணா தானே செஞ்சேன் அதுக்கு இவ்வளவு பெரிய சிக்கலான பிளாஷ்பேக் கடவுளே" என்று எண்ணிக் கொண்டு அமைதியாக தலையசைத்தான்.

சாதனா சாகித்யாவைப் பார்த்து "நீ என்ன வேணா முடிவு எடுத்துக்கோ அதை பத்தி எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் நாங்க ஒரு சில முடிவு எடுத்து இருக்கிறோம் அதையும் நீ உன்னோட முடிவு சொன்ன பிறகு நான் சொல்றேன்" என்று கூறினாள்.

அதைக்கேட்ட சாகித்யா கொந்தளித்து விட்டாள் "அடியே என்ன நாத்தனார் கொடுமை பன்றியோ எல்லாத்துக்கும் சேர்த்து வச்சு உங்க அண்ணனை கொலை பண்ணி விடுவேன் இதுநாள் வரைக்கும் உங்க அண்ணனுக்கு இந்த விஷயம் தெரியாது அப்படின்னு நினைச்சு தான் பயந்துகிட்டே இருந்தேன் ஆனால் எல்லா விஷயமும் உங்க அண்ணனுக்கு தெரியும் அப்படின்னா தெரிந்த பிறகு நான் ஒன்னும் பயப்பட மாட்டேன் சும்மா எப்ப பாரு ஏதாவது குதர்க்கமாக முடிவு எடுப்பாங்க கடைசில நம்ம அதில் மாட்டி கிட்டு தலைய பிச்சிகிட்டு திரியணும்" என்று கூறி அங்கிருந்த தலகாணி தூக்கி அவள் முகத்தில் எறிந்துவிட்டு மேலே செல்ல கிளம்பினாள்.

அவள் கூறியதை பார்த்து அனைவரும் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை பரவியது கண்டிப்பாக ஏதோ ஒரு முடிவெடுத்து இருக்கிறாள் ஆனால் இந்த பந்தத்தில் இருந்து பிரிந்து செல்ல மாட்டாள் என்பது அனைவருக்கும் நன்றாக புரிந்தது. சக்தி ஏதோ கூற வாய் திறக்கும் நேரத்தில் சரியாக வாசலில் இருந்த வேலையாட்களிடம் ராஜி ஏதோ பேசிக்கொண்டிருப்பது கேட்டது அதைக்கேட்ட சாகித்யா அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு மேலே அறைக்கு சென்றுவிட்டாள்.

அவளுடைய தோழிகள் அனைவரும் இதுவரை நடந்த அனைத்தையும் பார்த்து அதிர்ந்து போய் நின்று கொண்டிருந்தனர் அடுத்து என்ன நடக்கும் என்ற ஆவலில் எங்கேயும் செல்லாமல் அங்கேயே நின்று விட்டனர். ஆண்கள் அனைவரும் அங்கு உள்ள சோபாவில் வந்து அமர சாதனா தன் அண்ணன் அருகில் வந்து அமர்ந்தாள். மற்றவர்கள் அனைவரும் அங்கங்கே நின்று கொண்டனர் சரியாக ராஜி அனைவரும் இருக்குமிடம் வந்து சேர்ந்தாள்.

இனி என்னவெல்லாம் நடக்க போகிறது என்பதனை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

தங்களுடைய கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் தோழி என்னுடைய பதிவுகளில் ஏதேனும் பிழைகள் இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்.

Continue Reading

You'll Also Like

162K 14.2K 63
A GIRL, "KADAVULE INDHA VELAYACHUM ENAKKU SET AAGANUM ADHUKKU MUNNADI INDHA VELA ENAKKU KIDAIKKANU.... NEE UN KULANDHAIYA KOODAVE IRUNDHU KAAPATHIRU...
420 10 3
என்னோட முதல் கதை... இப்போ அமேசான் re எடிட்க்காக மொத்தமா மாத்தி இருக்கேன்🧘🧘
15.4K 1.4K 39
காதல் என்ற வார்த்தையையே வெறுக்கும் நாயகன், தன் மனதிற்கு பிடித்தவளை சந்திக்கும்போது, காதலில் விழாமலா போய்விடுவான்? தனக்கு ஏற்பட்டிருந்த கசப்பான அனுபவத...
198K 5.2K 129
காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வ...