நீயின்றி நானும் இல்லை என் காத...

By Aashmi-S

17.9K 711 286

இது என்னுடைய மூன்றாவது கதை இந்தக் கதையில் இரண்டு கதாநாயகர்கள் அவர்களை தாங்கள் யார் என்று கூறாமலேயே காதலில் வி... More

நீயின்றி நானும் இல்லை என் காதல் பொய்யும் இல்லை
அத்தியாயம் 1
அத்தியாயம்-2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
Epilogue

அத்தியாயம் 23

417 23 4
By Aashmi-S

தங்களின் துணைகள் அனைவரும் காணாமல் போனதில் ஆண்கள் அனைவரும் சற்று கலங்கித்தான் போனார்கள் ஆனால் அதே கலக்கத்தோடு இருந்தால் நிச்சயமாக தங்கள் துணைகளை மீட்டெடுக்க முடியாது என்பதை புரிந்து கொண்டவர்கள் அவர்களை எவ்வாறு மீட்கலாம் என்று யோசிக்க ஆரம்பித்தனர்.

அனைத்து பெண்களின் ஜிபிஎஸ் டிராக் செய்ய உதவும் செயின் அறுக்கப்பட்டு இருந்தது அதனால் என்ன செய்ய என்று குழம்பிக் கொண்டிருந்த நிலையில் அனைவரையும் பார்த்த அஜித் "அண்ணா வைஷ்ணவி மட்டும் காலேஜ் போயிட்டு வந்து இருந்ததுனால அவளுக்கு தெரியாம ஒரு ட்ராக்கிங் டிவைஸ் அவளோட மோதிரத்தில் செட் பண்ணி வச்சிருக்கேன் ஆனால் அது ஏதாவது அவசர தேவைக்கு உதவனும் என்றால் அதுல ஒரு பட்டன் இருக்கும் இன்னைக்கு காலைல எனக்கு என்னமோ டிஸ்டர்பன்ஸா இருந்துச்சு அதனால அவ கிட்ட இத சொல்லி தான் விட்டேன் ஆனா அது அவளுக்கு நியாபகம் இருந்தா நம்ம கண்டுபிடித்துவிடலாம்" என்று கூறினான்.

விஷ்வா "அஜித் அது அவளுக்கு ஞாபகம் இருக்குமா இல்லையா அப்படிங்கறது நமக்குத் தெரியாது நீ நல்லா யோசிச்சு பாரு இங்கே பக்கத்துல உங்க அண்ணனுக்கு தெரிஞ்சா இடம் எது அவன் பண்ற தேவையில்லாத வேலைக்கு யூஸ் பண்ற இடம் எது கொஞ்சம் ஞாபகம் படுத்தி பாரு" என்று கூறினான்.

ஆகாஷ் "அவன் யோசிச்சு சுத்தமா பிரயோஜனம் கிடையாது ஏன்னா அஜித் நம்ம கூட இருக்கிற விஷயம் அவனுக்கு தெரியும் அதனால அவன் நம்மை யோசிக்க முடியாத இடத்தில் தான் வச்சிருப்பான் ஒருவேளை அது நமக்கு ரொம்ப நெருக்கமான இடமாகவும் இருக்கலாம் அதனால எல்லா இடத்திலயும் தேடி பார்க்கிறது தான் நல்லது" என்று கூறினான்.

அவன் கூறியதை அர்ஜூன் அப்படியே ஆமோதித்தான்" நாம இப்போ இவங்க இங்கே இருப்பாங்க அப்படின்னு யோசிக்க முடியாத இடம் எதுவா இருக்கும் அப்படி யோசிச்சு பாரு கண்டிப்பா அது நம்ம வீடா இருக்காது ஏன்னா ஏற்கனவே அங்கே எல்லாம் சிசிடிவி உண்டு அது எங்க போன்ல தான் கனெக்ட் ஆகி இருக்கு சோ யோசி சரியா பத்து நிமிஷம் தான் டைம் அதுக்குள்ள யோசிக்கணும் இன்னும் ரெண்டு மணி நேரத்துக்குள்ள எல்லாரையும் காப்பாற்றியாக வேண்டும் இல்லன்னா பிரச்சினை வெளியே போகிறோம் அஜய் என்ன பண்ணுவான்னு சொல்ல முடியாது" என்று கூறினான்.

கார்த்தி "கருணா அண்ணாவும் சுகுணா அண்ணிவும் சேர்த்து இவன் தான் கடத்தி இருப்பானா இல்ல அவங்க மிஸ்ஸிங் வேற யார் மூலமாக வா" என்று கேட்டான்.

தீரன் "இல்ல எல்லாரையும் கடத்தி இருக்கிறது அஜய் தான் அதே மாதிரி எல்லாரையும் ஒரே இடத்தில்தான் வச்சிருக்கான் ஆனா எங்க வச்சு இருக்கான்னு தெரியல எனக்கு தெரிஞ்சவங்க யாரும் இன்னும் கண்ணு முளைக்கவில்லை எல்லாரும் மயக்கத்தோட இருப்பாங்கன்னு நினைக்கிறேன் கண்ணு முழிச்சு இருந்தா கண்டிப்பா இவ்வளவு நேரத்துக்கு நமக்குக் கிடைத்திருக்கும்" என்று கூறினான்.

அதன் பிறகு அனைவரும் பொறுமையாக யோசிக்க ஆரம்பித்தனர். சிறிது நேரம் எதுவோ யோசித்த ஆகாஷ் தன்னுடைய அலைபேசியை எடுத்து யாரோ ஒருவருக்கு தொடர்பு கொண்டு பேசினான் பின்பு அனைவரையும் பார்த்து அவங்க எல்லாரும் இருக்கிற இடம் தெரிஞ்சிச்சி வாங்க போலாம்" என்று கூறி அனைவரையும் அழைத்து சென்றான்.

அதே நேரம் பெண்கள் அடைக்கப்பட்டு இருந்த இடத்தில் முதலில் கண்விழித்த அனன்யா தாம் இருந்த இடத்தை பார்த்து ஒரு பெருமூச்சை வெளியிட்டு விட்டு தன் பக்கத்தில் இருந்த அதிதியை ஓங்கி மிதித்தாள் அவள் மிதித்ததால் எடுத்த வலியில் மயக்கத்திலிருந்து வெளியே வந்தாள் முழுதாக தெளிந்த அதிதி தன் பக்கத்தில் இருந்த நிலா மற்றும் வினோதினி இருவரையும் மாறி மாறி அறைந்தாள். அதில் அவர்களும் சுயநினைவு வந்தனர்.

யாருக்கும் கை கால்கள் கட்டப் படாமல் இருந்ததால் ஒருத்தரை ஒருத்தர் எழுப்புவதற்கு ஏதுவாக இருந்தது. அனைவரும் தாங்கள் இருந்த அறையை சுற்றி பார்வையிட்டனர். அதில் ஒரு மூலையில் வைஷ்ணவி மட்டும் கைகள் மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்ததை பார்த்த பெண்கள் நால்வரும் ஓடி சென்று அவளை விடுவித்தனர்.

அவர்கள் கைது செய்ததில் கொஞ்சம் கொஞ்சமாக சுய நினைவு வந்த வைஷ்ணவி அனைவரையும் பார்த்தவள் அவர்களை கட்டிக்கொண்டே கண்ணீர் விட்டாள். பின்பு நினைவு வந்தவளாக அவசரமாக தன் கையிலிருந்த மோதிரத்தில் இருந்த பட்டணை அமுக்கி விட்டாள்.

அவள் அழுவதற்கு காரணம் தெரியாமல் கலக்கமடைந்த பெண்கள் பின்பு அவள் பயத்தால் அதிகமாக அழுகிறாள் என்று எண்ணிக் கொண்டு அவளுடைய முதுகை வருடிக் கொடுக்க ஆரம்பித்தனர். அதில் மெல்ல நிதானம் அடைந்தவள் அனைவரையும் பார்த்து "அக்கா இவங்க எல்லாரும் ரொம்ப மோசமானவங்க நம்ம எல்லாரையும் எங்கேயோ வெளிநாட்டுக்கு கடத்த போறதா பேசிகிட்டு இருக்காங்க அது மட்டுமில்லாம நம்மள கடத்தும் போது போதை மருந்து சேர்த்து கடத்த போறாங்க இதையெல்லாம் என்ன கடத்திட்டு வந்த பிறகு பேசிட்டு இருந்தாங்க அதைப்பார்த்து நான் கத்த ஆரம்பிச்ச பிறகுதான் என்னை இப்படி கட்டி வச்சுட்டாங்க" என்று கூறினாள்.

அவள் கூறியதை முழுமையாக யோசித்த அதிதி "இப்ப எல்லாரும் பயந்துபோய் இருந்தோம் என்றால் ஒன்றுமே பண்ண முடியாது அதனால எப்பவும் யோசிக்கிற மாதிரி அமைதியா உட்கார்ந்து யோசித்து எல்லாம் செய்யலாம் முதல்ல நம்ம எங்க இருக்கோம் அப்படிங்கறது தெரியணும்" என்று கூறினாள்.

வைஷ்ணவி "அக்கா காலையில அஜித் இந்த மோதிரத்தை கொடுத்தது அதுல ஒரு ஜிபிஎஸ் இருக்குன்னு சொன்னான் ஏதாவது அவசரம் என்றால் இதை அழுத்த சொன்னான் அதே மாதிரி நானும் செஞ்சுட்டேன் எப்படி இன்னும் கொஞ்ச நேரத்துல அவங்க எல்லாரும் வந்துருவாங்க அதுக்குள்ள நாம கொஞ்சம் உஷாரா இருக்கணும்" என்று கூறினாள்.

அவள் கூறியதைக் கேட்ட வைஷ்ணவியின் இருவரும் அவளை அணைத்துக் கொண்டனர். இவ்வளவு நேரம் நடந்த அனைத்தையும் கண்டுகொள்ளாமல் அந்த அறையை நோட்டம் விட்ட அனன்யா மகிழ்ச்சியாக அனைவரிடமும் வந்து "வாங்க எல்லாரும் வெளியே போலாம்" என்று கூறினாள்.

அவள் அழைத்ததை பார்த்து கடுப்பான வினோதினி "ஏண்டி லூசு கதவை வெளிய லாக் பண்ணி வச்சிருக்காங்க எப்படி வெளியே போக முடியும்" என்று கேட்டாள்.

அவளை முறைத்த அனன்யா எப்படி என்று நான் காட்டுறேன் இப்ப நீ பேசாம வா என்று கூறி அவளை அழைத்துச் சென்ற அனன்யா ஏதோ செய்து கதவைத் திறந்து விட்டாள் முதலில் வெளியே வந்த அதிதி வீட்டைப் பார்த்துவிட்டு அங்கே ஒரு அறை மூடி இருந்ததை பார்த்துவிட்டு ஏதோ தோன்ற அந்த அறை நோக்கி சென்றாள்.

அந்த வீட்டை சுற்றி ஏதோ ஒரு பாதுகாப்பு இருந்தது ஆனால் பெரிதாக மனிதர்கள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது. அந்த அறை கதவை திறந்த அதிதி உள்ளே மயக்கமாக இருந்த கருணா மற்றும் சுகுணாவை எழுப்ப முயற்சி செய்தாள். ஒருவழியாக இருவரையும் எழுப்பி வெளியே அழைத்து வந்தாள். அவர்களைப் பார்த்த மற்றவர்கள் அவர்களை கைத்தாங்கலாக அழைத்து வந்து சோபாவில் அமர வைத்தனர்.

அனன்யா தண்ணீர் எடுத்து வந்து இருவருக்கும் கொடுத்தாள் பின்பு கருணாவை பார்த்து "அண்ணா நீ எப்படி இங்க அது அண்ணி கூட எல்லாரும் வீட்ல தானே இருந்தாங்க நீங்க எப்போ வெளியே வந்தீங்க" என்று கேட்டாள்.

கருணா "காலையிலிருந்தே சுகுணா கொஞ்சம் உடம்பு முடியாம இருந்தா அதனால அவளை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனேன் அங்க போய் பார்க்கும்போதுதான் அவ கன்சீவ் ஆக இருக்கிற விஷயம் எனக்கு தெரிஞ்சது சோ அவ கூட கொஞ்ச நேரம் டைம் ஸ்பென்ட் பண்றதுக்கு எங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன் நாங்க சும்மா பேசிக்கிட்டு இருக்கும்போது முதல்ல வாய்ஸ் மெயில் தூக்கிட்டு வந்தாங்க தடுக்க போறதுக்குள்ள சுகுணாவ மயக்க மருந்து கொடுத்து இந்த ரூம் குள்ள அடைக்க போனானுங்க அதை பார்த்து நான் பதறின டைம்ல என்னையும் சேர்த்து இங்க அடச்சீ வச்சுட்டாங்க அதுக்கப்புறம் உங்க எல்லாரையும் கூட்டிட்டு வந்திருக்கான் எப்படியாவது அங்கிருந்து தப்பி போகணும் எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை உங்க எல்லாரையும் காப்பாத்தி பத்திரமாய் கொண்டு போய் சேர்க்கணும் என்று கூறியவன் எழுந்து எவ்வாறு வெளியே செல்வது" என்று யோசிக்கலானான்.

சரியாக அந்த நேரம் அஜய் கிருஷ்ணா தன்னுடைய கூட்டாளிகளுடன் உள்ளே நுழைந்தான். அவனைப் பார்த்து யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை அதைப் பார்த்து இன்னும் கடுப்பான அவன் "என்ன இன்னும் உங்களுடைய ஹீரோஸ் வந்து உங்களை காப்பாத்தி கூட்டிட்டு போவாங்க அப்படின்னு நம்பிட்டு இருக்கீங்களா கண்டிப்பா இது எல்லாம் நடக்காது இன்னும் அரை மணி நேரத்துல உங்க எல்லாரையும் வெளிநாட்டிற்கு பார்சல் பண்ண போறேன் என்று பெண்கள் அனைவரையும் பார்த்தவன் கருணாவை பார்த்து உனக்கு உயிரை மட்டும் விட்டு வைக்கப் போறேன் ஏன்னா உங்க ஆளுக்கு தகவல் சொல்ல ஆள் வேணும் இல்லை" என்று கூறினான்.

அதிதி "லூசா போனவனே உன் மனசுல நீ பெரிய வில்லன்னு நினைப்பா நீ ஒரு டம்மி பீசு நீ சொன்ன அதே அரை மணி நேரத்துல நீ என்ன ஆகப் போற அப்படின்னு பாரு" என்று சவாலாக அவள் கூறினாள்.

அஜய் "அப்படியா செல்லகுட்டி இப்பவே உங்க எல்லாருக்கும் போதை மருந்து போட போறோம் என்ஜாய் பண்ணு" என்று கூறிவிட்டே தன்னுடைய ஆட்களுக்கு கண் காட்டினான். கருணா அவர்களை தடுக்க போக அதற்குள் இருவர் வந்து அவனை அசைக்க முடியாதபடி பிடித்துக் கொண்டனர் போதை மருந்து ஊசியை எடுத்துக்கொண்டு பெண்களை அனைவரும் நெருங்க ஆரம்பித்தனர் சுகுணாவை நடுவில் விட்டுவிட்டு சுற்றி அனைவரும் நின்று கொண்டு தங்களை நோக்கி வருபவர்களை தடுக்க ஆரம்பித்தனர் பொறுத்து பொறுத்து பார்த்த அஜய் சுத்தி நின்ன மற்றவர்களுக்கு கண் காட்ட அவர்கள் அனைவரும் சென்று பெண்களை வளைத்து பிடித்தனர்.

சரியான நேரத்தில் கதவை உடைத்துக்கொண்டு ஆண்கள் அனைவரும் உள்ளே நுழைந்தனர் அதைப் பார்த்த அஜய் கிருஷ்ணா கோபத்தில் கொதிக்க ஆரம்பித்தான். ஆகாஷ் மற்றும் அர்ஜுன் இருவரும் முதலில் சுற்றி இருந்த அனைவரையும் ஒரு நொடியில் வெளுத்து வாங்கி பெண்கள் அனைவரையும் காப்பாற்றிவிட்டனர் அந்தநேரத்தில் அஜய் கிருஷ்ணாவை மற்றவர்கள் அனைவரும் சுற்றி வளைத்தனர்.

பெண்களையும் கருணாவையும் பாதுகாப்பாக வைத்துவிட்டு விஷ்வா மற்றும் கார்த்தி இருவருக்கும் ஆகாஷ் கண் காட்டினான் அதை புரிந்துகொண்ட அவர்களும் அவர்களுக்கு தேவையான உணவுகளை கொண்டுவந்து வைத்தனர் இவ்வளவு நேரம் பசிக் கொடுமையில் இருந்த பெண்களுக்கு தங்கள் துணைகளை கடவுளாக தெரிந்தார்கள்.

சஞ்சீவ் "நாங்க எல்லாரும் எப்படி வந்தோம் முடியும் தெரியாம கடுப்பா இருக்கா ஒவ்வொருத்தரும் யோசிக்கும்போது எல்லா இடத்திலேயும் விசாரித்து விட்டு இருந்தோம் ஆனா இந்த வீட்டை நாங்க யோசிக்கவே இல்லை ஆனால் ஆகாஷ் யோசித்து பக்கத்து வீட்டில் உள்ளவர்களை விசாரித்தபோது நீங்கள் இங்கு இருப்பது தெரிந்தது அதனால் நாங்கள் கிளம்பி வந்து கொண்டிருந்தோம் அப்போது அஜித் கொடுத்த ஜிபிஎஸ் மோதிரத்தை வைஷ்ணவி ஆன் செய்ய எங்களுக்கு இவர்கள் இருக்கும் இடம் கன்ஃபார்ம் ஆக தெரிந்து விட்டது அதனால் சிறிதும் தாமதிக்காமல் இங்கு வந்து சேர்ந்து விட்டோம்" என்று கூறி முடித்தான். இதைக் கேட்ட அஜய் கிருஷ்ணா இன்னும் கோபமடைந்து அவர்களை அடிக்க கை ஓங்க முன்பு அனைவரும் அவனை அடி வெளுத்த ஆரம்பித்தனர்.

தங்கள் முன்பு இருந்த உணவுகளை சாப்பிட்டுக்கொண்டே அஜய் கிருஷ்ணாவை அனைவரும் அடிப்பதை ரசித்துக் கொண்டிருந்தனர். ஏற்கனவே அவனுடைய போதைப்பொருள் விற்பனை தெரிந்த ஆகாஷ் அர்ஜுன் தீரன் மூவரும் பாரபட்சமில்லாமல் அவனை வெறுக்க ஆரம்பித்தனர் அதிலும் பெண்கள் காணாமல் போன இவ்வளவு நேரத்தில் அவர்கள் பட்ட துன்பம் அத்தனையும் சேர்த்து அவனை வெளுத்துக் கட்டினார். அவன் வாங்கிய அடிகள் அத்தனையும் அஜித் எந்தவித பாசமும் இல்லாமல் பார்த்துக்கொண்டிருந்தான் ஏனென்றால் தன் அண்ணனால் எவ்வளவு குடும்பங்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறது என்பது அவனுக்குத் தெரியும் அதனால் அவனை கொன்றாலும் பரவாயில்லை என்ற ரீதியில் அமைதியாக நின்று கொண்டிருந்தான்.

பின்பு தங்களுடைய பாதுகாவலர்கள் மூலம் அவர்களை தங்களுடைய இடத்திற்கு மாற்றி விட்டு பெண்கள் அனைவரையும் அவரவர் துணைகள் அணைத்துக் கொண்டனர் அவர்களும் தங்கள் நாயகர்களின் கலக்கம் தெரிந்து தங்கள் மனதில் இருந்த பயம் விலகி கட்டிக்கொண்டனர் எவ்வளவுதான் வெளியே வீரமாக காட்டினாலும் ஒரு நிமிடம் உள்ள பயந்து கொண்டுதான் இருந்தனர். எனவே அந்த இறுகிய அணைப்பு அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான உணர்வை தந்தது.

பின்பு அனைவரும் ஒன்றாக தங்களுடைய வீட்டிற்கு சென்றனர் அங்கே பெரியவர்கள் அனைவரும் மாற்றி மாற்றி கேள்வி கேட்க என்ன சொல்வது என்று புரியாமல் அனைவரும் விழித்துக் கொண்டிருந்தனர் சரியாக அந்த நேரம் வைஷ்ணவி "சரி கேள்வி கேட்டது எல்லாம் போதும் சுகுணா அண்ணி பிரக்னண்டா இருக்காங்க அவங்களுக்கு தேவையான எல்லாத்தையும் செய்யுங்கள்" என்று கூறினாள்.

அதை கேட்டே பெரியவர்கள் அனைவரும் மகிழ்ந்து போனார்கள் பின்பு வேறு எதைப்பற்றியும் சிந்திக்காமல் இந்த கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர் முன்பைவிட பாதுகாப்பை எவ்வளவு அதிகப்படுத்த முடியுமோ அவ்வளவு அதிகப்படுத்தி வைத்தனர் ஏற்கனவே அடிபட்ட பாதுகாவலர்கள் அனைவரையும் தங்கள் சொந்த செலவில் சிகிச்சை அளித்து அவர்களை வீட்டில் வைத்தனர். அங்கு நடந்த விஷயத்தை பற்றி எதுவும் பேசிக்கொள்ள வேண்டாம் அதை முழுவதுமாக மறைத்து விடுவோம் என்று அனைவரும் கூறி ஒரு மனதாக ஒத்துக் கொண்டதால் அதைப்பற்றி யாரும் பேசிக்கொள்ளவில்லை.

அதன் பிறகு அனைவரும் கல்யாண ஏற்பாட்டில் கலந்துகொள்ள ஆயத்தமானார்கள் அன்று மாலை ஆண்கள் அனைவரும் தங்களுடைய துணைகளுக்கு மருதாணி வைத்து விட ஆரம்பித்து இருந்தனர் மகிழ்ச்சியுடன் தங்கள் கைகளில் கொடுத்துவிட்டு அமைதியாக தங்கள் துணைகளை ரசித்துக்கொண்டே அமர்ந்திருந்தனர்.

ஆண்கள் கர்ம சிரத்தையாக தங்கள் துணைகளுக்கு மருதாணி வைத்து விட்டு அவர்களை ரசிக்க ஆரம்பித்தனர். அதன் பிறகு அனைவரும் உணவு முடித்துவிட்டு தங்களுடைய வேலைகளை பார்க்க ஆரம்பித்தனர். அன்றைய நாள் அப்படியே முடிய மறுநாளும் கல்யாண வேலைகளில் அனைவரும் பிஸியாக சுற்றிக் கொண்டிருந்தனர்.

மறுநாள் திருமணம் என்ற நிலையில் முந்தைய நாள் இரவு அனைத்து ஜோடிகளும் மொட்டை மாடியில் தனித்தனியாக அமர்ந்து கதை பேசிக் கொண்டிருந்தனர். வைஷ்ணவி அஜித் இருவரும் தூங்க சென்றுவிட விஷ்வா கார்த்தி ஏதோ வேலையாக வெளியே சென்றிருந்தனர்.

தீரன் தன் அருகில் இருந்த நிலாவை இறுக அணைத்துக் கொண்டே "நிலா எந்த ஒரு நிலைமை வந்தாலும் என்னை எக்காரணம் கொண்டும் விட்டு விட்டுப் போய் விடாதே நீ இல்லை என்றால் நான் வெறும் உயிரில்லாத உடல் மட்டுமே கண்டிப்பாக நீ இல்லை என்றால் என்னால் உயிர் வாழ முடியாது அதனால் எக்காரணம் கொண்டும் அன்று நடந்தது போல் இனி என்னை தவிக்க விடாதே" என்று கூறினான்.

நிலாவும் அவனுடைய தவிப்பு புரிந்து "கண்டிப்பா உன்னை விட்டு எங்கேயும் போகமாட்டேன் சாவே வந்தாலும் உன்னையும் கூட்டிட்டு தான் போவேன் அதனால எப்போதும் எதிர்க்கும் நீ கலங்காதே" என்று கூறி அவனுடன் ஒன்றினாள்.

ஆகாஷ் தோளில் சாய்ந்திருந்த அனன்யா "சிலநேரம் யோசிக்கும் போது நடந்தது எல்லாம் கனவு மாதிரி தெரியுது நீ எனக்கு கிடைப்பாயா மாட்டியா அப்படின்னு எத்தனை நாள் தவிச்சி போய் இருக்கேன் தெரியுமா வெளியே சந்தோஷமா தெரிஞ்சாலும் உள்ளுக்குள்ள சில நேரம் அவ்வளவு கஷ்டமா இருக்கும் ஆனா இப்போ ரொம்ப சந்தோசமா இருக்கேன் என்னோட கனவு நனவான மாதிரி இருக்கு" என்று கூறினாள்.

ஆகாஷ் அவளின் நெற்றியில் இதழ் பதித்து விட்டு "எக்காரணம் கொண்டும் உன்னை நான் விட்டுவிட மாட்டேன் நீ கவலைப்படாதே" என்று கூறியவன் மனதில் "கல்யாணம் முடிந்த பிறகு ஒரு சில முக்கியமான வேலை இருக்கு அதை எல்லாத்தையும் முழுசா முடித்தா தான் நாங்க நிம்மதியா இருப்போம்" என்று எண்ணிக்கொண்டான்.

அர்ஜுன் மற்றும் அதிதி தங்களுடைய கைகளை கோர்த்து கொண்டு அமைதியாக அந்த சூழலை ரசித்துக் கொண்டிருந்தனர் அவர்கள் இருவருக்கும் அதுவே போதுமானதாக இருந்தது அந்த அமைதியை ஒருவர் மீது இன்னொருவர் வைத்திருந்த காதலை அழகாக காண்பித்துக் கொண்டே இருந்தது அதனால் அவர்களும் அமைதியாக இருந்தனர்.

சஞ்சீவ் மற்றும் வினோதினி இருவருக்கும் பேசுவதற்கு ஆயிரம் இருந்தாலும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு ஒரு மெல்லிய புன்னகையுடன் அமர்ந்து இருந்தனர் அவர்கள் இருவர் மனதிலும் கண்டிப்பாக என்னால் இனி தங்கள் வாழ்வில் வருமா என்று தெரியாது அதனால் கிடைத்த அமைதியை பயன்படுத்திக் கொண்டு ஒருவரை ஒருவர் ரசித்துக் கொண்டிருந்தனர்.

அதன்பிறகு நேரமாவது உணர்ந்து தங்களுடைய அறைகளில் தஞ்சம் புகுந்து கொண்டனர்.

நாளை நமது மூன்று ஜோடிகளுக்கும் திருமணம் அதேபோல் மாலை நான்கு ஜோடிகளுக்கும் ரிசப்ஷன் என்னுடைய வாசக நண்பர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து வந்து வாழ்த்தி தவறாமல் அன்பளிப்புகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். வரும்போது மறக்காமல் கொரோனா காரணமாக அறிவுறுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு வழிகளை பின்பற்றி வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ஏனென்றால் போலீஸ் பிடித்தால் சங்கம் பொறுப்பேற்காது.

தங்களுடைய கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் தோழி என்னுடைய பதிவுகளில் ஏதேனும் பிழைகள் இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்.



Continue Reading

You'll Also Like

497K 16.8K 62
எதிர்பாரா திருமண பந்தத்தில் இணையும் இருவரது காதல் கதை..
200K 5.2K 130
காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வ...
61.5K 4.1K 70
தனிமை... அவனுக்கு வேண்டியதெல்லாம் அது மட்டும் தான். அவனுடைய உலகம் வித்தியாசமானது. அந்த உலகத்தில் அவனுக்கு வேறு யாரும் தேவைப்படவில்லை. அவனும் அவனது தன...
16.2K 1.5K 40
காதல் என்ற வார்த்தையையே வெறுக்கும் நாயகன், தன் மனதிற்கு பிடித்தவளை சந்திக்கும்போது, காதலில் விழாமலா போய்விடுவான்? தனக்கு ஏற்பட்டிருந்த கசப்பான அனுபவத...