அத்தியாயம் 24

469 25 14
                                    

ஆதவன் தன்னுடைய செங்கதிர்களை பூமியில் பரவவிட்டு அனைவரையும் துயில் கலைய தன்னுடைய அன்றாட வேலையை செய்ய ஆரம்பித்தான் ஆனால் அதற்கு அவசியமே இல்லை என்பது போல் அந்த கல்யாண மண்டபமே மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்துக் கொண்டிருந்தது.

மணப் பெண்கள் மூவரும் அழகு பதுமையாக தங்களுடைய அறைகளில் தயாராகிக் கொண்டிருக்க அவர்களுக்கு சிறிதும் சளைக்காத அழகுடன் இருந்தனர் அவர்களின் நாயகர்கள். மணப்பெண்கள் இல்லை என்றாலும் அவர்களுக்கு ஏற்ற அழகுடன் வேலைகளை செய்து கொண்டிருந்தனர் வெண்ணிலா மற்றும் வைஷ்ணவி அதேபோல் நாயகர்களுக்கு ஏற்ற அழகுடன் விஷ்வா கார்த்தி தீரன் மற்றும் அஜித் பட்டு வேட்டி சட்டையில் வேலைகளை செய்து கொண்டிருந்தனர்.

மூன்று மணி மேடைகள் அமைக்கப்பட்டிருக்க தனித்தனியாக அமர்ந்து இருந்து மந்திரங்கள் உச்சரித்து கொண்டிருந்தார் அந்த மண்டபம் முழுவதும் விருந்தினர் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. ஒரு பக்கம் உற்றார் உறவினர் சொந்த பந்தங்கள் என்று நிரம்பியிருக்க மற்றொரு பக்கம் பிசினஸ் சம்பந்தமான தொழிலதிபர்கள் நிரம்பியிருந்தனர்.

ஐயர் மணமகன் உங்களை அழைத்து வர சொல்ல ஆண்மைக்கு இலக்கணமாய் பட்டு வேட்டி பட்டுச் சட்டையில் கழுத்தில் மாலையுடன் தீரன் கார்த்தி அஜித் மற்றும் விஷ்வாவுடன் வந்தனர் ஆகாஷ் அர்ஜுன் மற்றும் சஞ்சீவ். மூவரும் தங்களுக்கென அமைக்கப்பட்டு இருந்த மணவறையில் அமர்ந்தனர். அதன் பிறகு மணமகள் அறையில் ஒரு கண்ணை வைத்துக் கொண்டு அதற்குரிய மந்திரங்களை எந்த ஒரு பிழையும் இல்லாமல் கூறிக் கொண்டிருந்தனர்.

அவர்களின் தவிப்பு புரிந்து பெண்ணை அழைத்து வர சொல்ல மூவரும் ஆவலாக மணமகள் அறையை பார்க்க ஆரம்பித்தனர். அவர்களுடைய ஆர்வத்தை பொய்யாக்கமல் தேவலோகம் பெண்களைப்போல வந்தனர் நாயகிகள் இப்போது மணமகன் மட்டுமல்லாமல் அவர்களுக்கு துணையாக நின்ற தோழர்களும் தங்களுடைய துணைகளை ரசிக்க ஆரம்பித்தனர். விஷ்வா கார்த்தி இருவரும் சமையல் அறையில் ஏதோ வேலையாக சென்றதால் மேலே அவர்களை சுயநினைவு கொண்டு வர ஆள் இல்லை. அதைப் பார்த்து பெரியவர்கள் தான் தலையில் அடித்துக் கொண்டனர். சுகுணா பிரக்னன்டாக இருந்ததால் கருணாவை எந்த ஒரு வேலையும் செய்ய விடாமல் அவளுக்கு துணையாக அமர்த்தி வைத்திருந்தனர் அதனால் அவர்கள் இருவரும் கீழே அமர்ந்திருந்தனர்.

நீயின்றி நானும் இல்லை என் காதல் பொய்யும் இல்லை ( முடிவுற்றது )Where stories live. Discover now