மாயம்: 26

Start from the beginning
                                    

அவனை சமாதானப்படுத்த தண்ணீர் கொடுத்து அறைக்குள் உட்காரவைத்து வர்ஷித் கைகளை எடுத்து தன் கரங்களுக்குள் பொதித்து வைத்து, "உன் பேச்சை கேட்காம, நான்  வேறு யாரு பேச்சை கேட்பேன், நான் சொல்றதையும் கொஞ்சம்  பொறுமையாக கேளு மாமா" என கூற அவன் ஆதிமாவின் முகத்தை பார்த்து அமர்ந்திருந்தான்.
    
"அத்தை மாமா சொன்னதுபோல நானும் சொல்ல வரல. ஆனா,  அவுங்க சொல்றதையும் கொஞ்சம் யோசிச்சு பாரு  மாமா. உன்னோட முடிவுல யாரையும் கஷ்டப்படுத்திடாத" என அவள் கூற அவனோ "அப்படி நான் பார்த்தா, அது எனக்கே கஷ்டம்டி. எத்தனை பேரு என் காதுபட பேசிருக்காங்க தெரியுமா,  பணத்துக்காகதான் இந்த வீட்ல இவன் இருக்கான்ணு. இதுனாலயே விஷ்ணுவோட சொந்தகாரங்ககூடெல்லாம் சண்டை,  அப்பவே சொன்னேன் என்ன மறுபடியும் ஹாஸ்டல்ல விட்டுருங்கனு, அதுக்கு இங்க யாருமே ஒத்துக்கல. அப்பவே சொல்லிட்டேன் சொத்துல எனக்கு பங்கு கொடுக்கக்கூடாதுனு. ஆனா,  இப்போ மறுபடியும் இப்படி பேசினா" என அவன் கூற ஆதிகா "இங்க யாருக்கும் நீ நல்லவன்னு நிரூபிக்க தேவை இல்லை மாமா. இப்போ மத்தவங்கள பத்தி யோசிச்சு அத்தை மாமாவ கஷ்டப்படுத்திடாத மாமா. சரி நீ முதல இந்த பிரச்சனையை பக்கத்துல வச்சி பாக்காம கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகிட்டு,  அப்பறம் பாரு மாமா இதற்கான பதில் கண்டிப்பா கிடைக்கும்" என கூறி அவன் நெற்றியில் இதழ் பதித்தாள். அவனது நெஞ்சில் பலபேரின் பேச்சு வேதனையாய் உருமாறி அவனை வருத்த, அவன் நிம்மதியை தேடி "எனக்கு நிம்மதி தரனும்னா அது உன்னால மட்டும்தான் முடியும் ஆதிமா" என கூறினான். அதன் அர்த்தம் புரிந்தவளின்  முகம் சட்டென சிவந்து, சம்மதம் கூறியது.

இங்கு  மன காயத்திற்கு தன் காதலை மருந்தாக்கி கொண்டிருந்தான். காதலில் இன்பம் மட்டுமில்லை,  தன் இணைக்கு ஒரு துன்பம் என்றால் அதை குணப்படுத்தும் ஆற்றல் காதலுக்கே உடையது. அதுவே இங்கு நிகழ்ந்தது. அவனது உள்ளத்து வலியை உணர்ந்தவள் அவனுக்கு தன் காதலையே வலி நிவாரணி ஆக்கினாள் அவனுக்காக.

     
விடிந்தும் தூங்குபவளை எழுப்ப மனம் வராமல்,  மெத்தையில் சீராக படுக்கவைத்து,  போர்வையை போர்த்தி நெற்றியில் இதழ்  பதித்து,  குளிக்க சென்றான். குளித்து வந்து பார்க்கும்போது விழித்திருந்தும் எழாமல் இருந்தாள். இரவு முழுவதும் தனக்கு ஆடையாக இருந்தவனை காணும் என்ற தவிப்பிலும்,  தனது ஆடை ஏதும் அருகில் இல்லை எனும் கோபத்திலும் போர்வைக்குள் படுத்திருந்தாள். அவன் வெளியே வந்தவுடன் "டேய் கடன்காரா! என்னைய எழுப்பிவிடாம எங்கடா போன,  அய்யோ என் ட்ரெஸ்...ஹூம்" என கோபத்தில் கத்தியவளின் நிலைமையை பார்த்து விஷம சிரிப்புடன் நின்றான். 'பார்வைய நொண்டிப்புடுவேன்' என செய்கை செய்து முறைத்தாள். "சரியான ராட்சசி" என முணுமுணுத்து விட்டு ஆடை எடுத்து கொடுத்து, அவள் கன்னத்தில் மென்முத்தமிட்டு நன்றியும் கூறினான். அவள் சிரிப்புடன் விலகினாள்.

  என்னடி மாயாவி நீ (முடிவுற்றது)Where stories live. Discover now