மாயம்: 26

2.6K 103 22
                                    


நாட்கள் வேகமாகவும் காதலாகவும் கரைந்து ஓடின வர்ஷித் ஆதிகாவிற்கு. சுப்பிரமணியன் எவ்வளவோ யோசித்து பார்த்தார் 'சொத்துக்கு உன்னை வாரிசாக அறிவிக்கப்போகிறேன்' என வர்ஷித்திடம் எப்படி சொல்வது என.  ஏனென்றால், பள்ளி படிக்கும்போதே கொஞ்சம் விவரம் அறிந்த வயதிலேயே வர்ஷித் சொல்லிவிட்டான், "நான் வளர்ந்து வரும்போது,  என்கையில் சொத்து எதுவும் நீங்க கொடுக்கக்கூடாது" என. அன்று  விஷ்ணுக்கும் வர்ஷித்திற்கும் பெரிய வாக்கு வாதமே நடந்தது.

இரவு அனைவரும் சாப்பிடும்போது சுப்பிரமணியன், "சாப்பிட்டு எல்லாரும் இங்கயே கொஞ்ச நேரம் இருங்க பேசணும்" என்றார். எல்லாரும் சாப்பிட்டு முடித்து நடுக்கூடத்திற்கு வந்தனர். வர்ஷித்தை அழைத்து அருகில் அமரவைத்துக்கொண்டார் அவனது தந்தை. "என்னப்பா?" என அவன் கேட்க அவனின் கரம் பிடித்து "உனக்கு இது புடிக்காதுனு எனக்கு தெரியும்பா. ஆனால், எனக்கு வேற வழி தெரில" என அவர் கூறும்போதே கொஞ்சம் யூகித்திருந்தான். "இனிமேல் என்னோட பொறுப்பெல்லாம் நீங்க ஏத்துக்கப்பா,  கம்பெனிய இனி நீ பாத்துக்கோப்பா,  சொத்துக்கும் இனி நீ தான் வாரிசு" என அவர் கூற அவன் கையை அவரிடமிருந்து வெடுக்கென பிடுங்கி கொண்டு எழுந்தான். அவனின் வேகத்தை கண்டனர் திகைத்து போனர். "முடியவே முடியாதுப்பா" என கோபத்தில் கூறி பின் ஒரு நொடி எடுத்தவன் "இந்த ஊருல உள்ளவங்க, உங்க பிரண்ட்ஸ்,  ஆபீஸ்ல உள்ளவங்க எல்லாருமே இதான் சொல்றாங்கப்பா. நான் பணத்துக்காகத்தான் உங்ககிட்ட பழகுறேன்னு, இதுல நீங்க வேற இப்படி செய்தா எல்லாரும் சொன்னது உண்மைன்னு ஆகிரும்ப்பா,  இது எனக்கு வேணாம்ப்பா ப்ளீஸ்" என வேதனை நிறைந்த குரலில் கூறினான். "நீ கண்டவங்களுக்காக  யோசிக்கிறத விட்டுட்டு உன்னோட அப்பாவுக்காக யோசி, எனக்கும் வயசாகிட்டே போகுது, என்னால பிசினஸ்லாம் பாக்க முடியல. இனிமேல்,  நீதான் இதெல்லாம் பாக்குற. என்னோட பிள்ளைக்கிட்ட தான இப்படியெல்லாம் சொல்ல முடியும், நீ எங்கள அப்பா அம்மாவா நினைச்சா இதுக்கு ஓத்துக்கோ" என சுப்பிரமணியும் கோபத்துடன் தீர்க்கமான முடிவாய் சொன்னார். அவனுக்கோ கோபம் தலைக்கேற, மடமடவென மாடி படியேறி சென்றான்.
      
அறைக்கு சென்று பால்கானியில் இரவு காற்றின் இனிமையை ரசிக்க முடியாமல்,  கோபம் முகத்தில் கொப்பளிக்க நின்றான். இவற்றை பார்த்த ஆதிகா,   அத்தை மாமாவிடம் சென்று "அவர்கிட்ட நான் பேசி புரிய வைக்கிறேன் நீங்க கவலைப்படாம தூங்குங்க" என அவர்களை அனுப்பிவிட்டு மேல அறைக்கு வந்தாள். வர்ஷித் அருகில் சென்று நின்றுகொண்டாள். அவனோ,  "நீ போய் தூங்குமா,  நான் வரேன்" என கூறியும் அவள் நகராமல் நிற்க வேதனை நிறைந்த குரலில் "நீயாவது நான் சொல்றத கேளு ஆதிமா" என்றான்.

  என்னடி மாயாவி நீ (முடிவுற்றது)Kde žijí příběhy. Začni objevovat