"தோல்வி"

94 9 3
                                    

"தோல்வி"
நாம் சரியானப் பாதையைத்
தேர்ந்தெடுக்க கடவுள்
நமக்கும் அளிக்கும் ஒரு வரம்....

     என்னங்க.... காலைல கல்யாணத்துக்கு தேவையானதுலாம் சரியா இருக்குல்ல!!!! ஒன்னுக்கு நாலு தடவையா செக் பண்ணுங்க...

   ம்... அதெல்லாம் பார்த்தாச்சும்மா... நீ ஏன் இந்த நேரத்துலயும் அலைஞ்சுட்டு இருக்க... மணி 1 ஆகப் போகுது... கொஞ்ச நேரமாச்சும் தூங்கலாமில்ல...

    சரியாபோச்சு போங்க... காலைல 5.30மணிக்கு முகூர்தத்தை வைச்சுக்கிட்டு, போயி படுக்குறதா?? கல்யாணம் நம்ம பொண்ணுக்குங்க... நம்ம சொந்தகாரங்க பொண்ணுக்கு இல்ல...

      என்னம்மா பேசுற நீ... கொஞ்ச நேரமாச்சும் ரெஸ்ட் எடுத்தாதானே நாளைக்கு இன்னும் நல்ல ப்ரெஷ்சா இருக்க முடியும்... வேலைலாம் சரியா நடக்கலை.. எல்லாம் அப்டிஅப்டியே கிடக்குதுன்னா கூட நீ சொல்றது சரி... அதான் எல்லா வேலையும் நடக்குதுல்ல.. பத்தாதுக்கு நான் இருக்கேன்.. தம்பிங்க, அண்ணா, அண்ணி, பெரிம்மா, பெரிப்பான்னு எல்லாம் இருக்காங்க.. மாத்தி மாத்தி கவனிச்சுட்டுதான் இருக்கோம் அப்புறமென்னம்மா...

    எல்லாம் சரிதாங்க.. ஆனால் என் மனசு எப்படிங்க சும்மா இருக்கும்... படபடப்பா இருக்கே...

    நீ போயி கொஞ்ச நேரம் நம்ம திராவகி கூட இரு... எல்லாம் சரி ஆகிடும்.. காலைல அவ, அவங்க மாமியார் வீட்டுக்குப் போகப்போறா.. ஸோ.. கொஞ்ச நேரம் அவக் கூட இரு... அவள கூட இருந்து ரெடி பண்ணு.. அவளுக்கும் கொஞ்சம் டென்சன் இல்லாம இருக்கும்.. ரிலாக்ஸா இருப்பா.

    ம்.. அதுவும் சரிதான்.. நம்ம பொண்ண இப்போதான் குழந்தையா கைல வாங்கின மாதிரி இருக்கு.. ஆனா அதுக்குள்ள கல்யாணமே வந்திருச்சி... காலம் எவ்ளோ வேகமா ஓடுது...

     இப்படி பேசிட்டு இரு இந்த நாலுமணி நேரமும் ஓடப் போகுது என்று சிரித்தார் திராவகியின் தந்தை..

  ம்ஹும்.. உங்களுக்கு இந்த நேரத்துலயும் கிண்டல் தானா.. போங்க நான் போறேன்..

மாற்றம்Where stories live. Discover now