பெண்களுக்காக எச்சரிக்கை பதிவு

Start from the beginning
                                    

இது பெண்களுக்கு:

தோழிகளே, நமது பயம் தான் இது போன்ற கயவர்களின் மூலதனம்,அதனால பயப்படாம அனைத்தையும் எதிர் கொள்ளுங்கள், உங்களை தனியாக எதிர் கொள்ள முடியவில்லை என்றால் அப்பாவிடமோ, அண்ணனிடமோ, தோழன் இடமோ மறைக்காமல் உண்மையை கூறி உதவி கோருங்கள், மிஞ்சி மிஞ்சி போனால் ஏன் facebook பயன்படுத்துறனு திட்டுவங்க அவ்வளவு தான், ஆனால் இந்த மாதிரி பொறுகிங்க கிட்ட கஷ்டப்படுறதை விட அப்பாகிட்ட திட்டு வாங்கறது மேல் என்று நினையுங்கள், யோசிச்சி முடிவு பண்ணுங்க.நாம் மட்டும் இல்லை வெளிநாடுகளிலும் இது போன்ற நிகழ்வுகள் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது, உதாரணமாக இளம் பிரிட்டிஷ் நடிகை, எம்மா வாட்சன் , ஐநா மன்ற கூட்டம் ஒன்றில், பாலின சமத்துவம் குறித்துப் பேசியபோது, அவர் தன்னை உலகளாவிய கும்பல் ஒன்றின் தொடர் தொந்தரவுக்கு இலக்காவோம் என்று நினைத்திருக்கமாட்டார்.

அதேபோல வீடியோ விளையாட்டு ஒன்றை உருவாக்கிய ஸோ க்வின்னும் பெண் எதிர்ப்பாளர்களின் வெறுப்புப் பிரசாரத்துக்கு இலக்கானார். அவர் உருவாக்கிய வீடியோ விளையாட்டு ஒன்றைப்பற்றி சாதகமாக ஊடகங்களில் செய்திகள் வரவேண்டும் என்பதற்காக உடலுறவில் ஈடுபட்டதாக அவரது முன்னாள் ஆண் நண்பர் பொய்யான குற்றச்சாட்டு ஒன்றைக் கூற, அதைத் தொடர்ந்து அவருக்கு எதிராக, இணைய வீடியோ விளையாட்டுகளில் ஈடுபடுவர்கள் , பெண்களுக்கு எதிரான வெறுப்பைக்கக்கும் கருத்துக்களை வெளியிட்டு அவருக்கு கடும் தொல்லை தந்தனர். இதில் அவரைப் பாலியல் வல்லுறவு செய்வோம், கொலை செய்வோம் என்ற மிரட்டல்களும் அடங்கும்

ஹாலிவுட் நடிகை ஜெனிஃபர் லாரன்சும் அவரது நிர்வாணப் படங்கள் கசியவிடப்பட்டு இணைய உலகில் பரவிவிடப்பட்டதை அடுத்து இதே போல பாலியல் ரீதியான பிரச்சனைகளுக்கு இலக்கானார். ஐ. நா வின் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான புள்ளி விவரத்தை படி மூன்றில் ஒரு
பகுதி பெண்கள் அவர்கள் வாழ்க்கையில் உலகெங்கும் ஏதோவொரு வித வன்முறையை எதிர்கொள்கிறார்கள்.

சட்டங்கள் அறிவோம் சரித்திரம் படைப்போம்Where stories live. Discover now