பகுதி - 5

Start from the beginning
                                    

மறுகணமே "ஏங்க இவன் என்ன சொல்ரான் பாருங்க "என எதையுமே பொருட்படுத்திக் கொள்ளாமல் தன் பாட்டில் அமர்ந்து கொண்டு இருந்த சாஹிப் ஐ பார்த்து கூற

படித்துக் கொண்டு இருந்த பேப்பரை மடித்து மேசை மீது வைத்து விட்டு மெதுவாக எழுந்து வந்தவர் " ஷமீனா நீ கொஞ்சம் பொறுமையாக இரு" என அவளை அமைதிப் படுத்தி விட்டு அஹமட் இன் எதிரில் வந்து நின்று கொள்ளவே இவர் வேறு என்ன சொல்ல போகிறாரோ என தரையைப் பார்த்த தலை நிமிரவில்லை அவனுக்கு.

அவன் எதுவும் பேசவில்லை என்றதும் அவரே பேசலானார்.

"இங்க பாருப்பா எனக்கு உன் மேல நிறைய நம்பிக்கை இருக்கு நீ எது பண்ணாலும் சரியாத் தான் பண்ணுவன்னு நான் நம்புகிறேன் அதற்கு காரணம் என்னோட வளர்ப்பு மேல நான் வச்சி இருக்க நம்பிக்கை தான்
அத்தோட இவ்வளவு காலத்துல நீ எல்லாமே எங்களுக்காக தான் பண்ண அது யாராலுயுமே மறுக்க முடியாத உண்மை" என சுற்றும் முற்றும் பார்த்த படி கூறியவர் மேலும் தொடர்ந்தார்."சின்ன வயதில் இருந்து மற்ற பிள்ளைகள் மாதிரி எனக்கு அது பிடிச்சிருக்கு இது பிடிச்சிருக்கு வாங்கிக் கொடுங்கனு நீ கேட்டதில்ல அப்படி இருக்க முதல் தடவையாக உனக்கு பிடிச்சத நீ செஞ்சி இருக்க அதனால நான் உன்னோட இந்த முடிவுக்கு ஒரு நாளும் குறுக்காக நிற்க மாட்டேன்". என்றவர்

"நீ உள்ளே போகலாம்" என சொல்லவே

வாய் பேச வராதவன் "சரிப்பா" என பதிலை ஒற்றை வார்த்தையில் சுருக்கிச் சொல்லி விட்டு அவர் சொன்னதை செய்தான்.

"ஷமீனா ஆண்டி!!" என ஓலமிட்டவாறு ஓடி வந்தாள் ஷமீனாவின் தம்பி மகளான ஷீமா.

அவளோ அழகில் தேவதை , வசதியிலும் துளி கூட குறைவில்லை , வீட்டிற்கு ஒரே பொண்ணு , அவள் எது சொன்னாலும் அப்படி அச்சுபிசகாமல் செய்யும் அப்பா அம்மா அத்தோடு தன் ஆசைப்படியே வக்கீலாக வேலை பார்க்கிறாள் மொத்தத்தில் அவள் வாழ்க்கை சுவர்க்கம் தான் என்று இருந்தது.

ஓடி வந்து அவள் அருகில் அமர்ந்து கொண்டவள் "ஆண்டி என்ன இது?! அஹமட் இப்படி பண்ணிட்டானே நீங்க தானே சொன்னீங்க என்ன ஆனாலும் அவன் என்னை தான் கல்யாணம் பண்ணிப்பான்னு இப்போ என்ன ஆச்சு பாருங்க என புலம்புவது தாங்க முடியாமல்

காதலே கண்ணீர்! (முடிவுற்றது) ✔Where stories live. Discover now