பகுதி - 4

Start from the beginning
                                    

சாராவின் கைகளை பிடித்தபடி "வா போகலாம்" என்றான்.

உடனே கையை உதறி விட்டவள் அர்ஷாட் இன் அருகில் சென்று நின்று கொள்ள

"சாரா ஏன்டி இப்படி பண்ர? அவன் ஏதாவது நினைச்சிக்க போறான்" என்றான் மெதுவாக அர்ஷாட்.

"விடு மச்சான் எல்லாம் சரி ஆகிடும் அவளே பயந்து போய் இருக்கா"

"சரி போகலாம் " என கிளம்ப முற்படுகையிலே

"நானா ஒரு நிமிடம்" என்றவள் நடைபோட்ட திசையை அனைவரும் நோக்க

அவளோ யாரோ ஒருவரை தேடி சென்றாள்.

"என்னடா ?!" என அஹமட் அர்ஷாட் ஐ பார்த்து கைகளால் சைகை செய்ய

"கொஞ்சம் பொறு...பார்க்கலாம்" என்றான் அர்ஷாட்.

முதுமையின் அடையாளங்களை முகத்தில் ஏந்தியபடி இயலாமையின் உருவாய் கதிரையில் வீற்றிருந்த தன் பாட்டியின் முன்னே மண்டியிட்டவளாக அமர்ந்து கொண்டு அவர்களது கைகளைப் பற்றிக் கொண்டவள்
"சொல்லு நான் போகட்டுமா?!" என்று கேட்ட வார்த்தைகள் அவர்களை சற்று தடுமாறத் தான் செய்தது.

"எனக்கு தெரியும் சாரா...நீ என்னட்ட சொல்லாம இந்த வீட்ட விட்டு அடி எடுத்து வைக்க மாட்டனு
இங்க பாரம்மா நீ எத பற்றியும் கவலைப்படாத இங்க இருக்குறவங்க நீ எப்படி போனாலும் பரவாயில்லை காசு பணம் தான் முக்கியம்னு எவனோ ஒருத்தன் தலையில உன்ன கட்டி விட தான் பார்த்தாங்க அந்த நேரம் நான் எவ்வளவு துடிச்சன்னு என்னொருத்திக்கு மட்டும் தானம்மா தெரியும் உன்ன பெத்தவங்க ஆசிடன்டுல போய்ச் சேந்ததும்
உன்னை உயிரா நினச்சி வளர்த்தவ நான் நீ நல்லா இருக்குறத பார்க்கனும் என்றது தான் என்னோட ஆசை
இதற்கு மேல இங்க வர முடியாதேன்னு கவலைப்படாத இந்த நரகத்துல இருந்து சுதந்திரம் கிடச்சிருச்சினு நினச்சு சந்தோஷமா இருமா..."என இடையிடையே பாதி வார்த்தைகளை விழுங்கியபடி கஷ்டப்பட்டு கூறி முடித்து விட்டு தன் கைகளை தூக்கி அஹமட் ஐ அழைக்க உடனே அவ்விடத்திற்கு வந்தவன் "சொல்லுங்கம்மா" என்றான்.

காதலே கண்ணீர்! (முடிவுற்றது) ✔Where stories live. Discover now