நான் கொண்ட நேசம்

48 7 4
                                    

அலையாடும்
கடலுக்கு
தெரியாது
நான் உன்
நினைவில்
இல்லை
என்று......

மென்மையாக
வீசும்
காற்றுக்கு
தெரியாது
எனது
இந்த தனிமை
நிரந்தரமா
என்று....

சுழலும்
இவ் உலகிற்கு
தெரியாது
நீ இல்லாமல்
என் வாழ்வு
நிலைபெறுமா
என்று ......

பறந்து
விரிந்து
இருக்கும்
வானத்திற்கு
தெரியாது
எனது கவலை
தீருமா
என்று.....

நிற்காமல்
ஓடும்
நீருக்கு
தெரியாது
எனது
கண்ணீர்
முற்று
பெறுமா
என்று.....

இவை
அனைத்திற்கும்
தெரியாத
ஒன்று
நீ
அறிந்தே....

உனக்காக
எனது
எல்லை
இல்லா
நேசம்......💞💞💞💞💞

என் கவிதைகள்Kde žijí příběhy. Začni objevovat