கண்ணாடி வளையல் சலசலக்க........
கெண்டை கால்கொலுசு சத்தமிட......
அவளுக்கான வாசம்
என்னை இழுக்க.....
இடையோடு ஆடும்
கூந்தலில் அப்படியே மனம் விழுந்து போக......
பின்னலில் இருக்கும் பூச்சரத்தில்
நானும் பின்னிக்
கொள்ளும் ஆசையில் அவள்
பின்னோடு செல்ல .....
சிறு சொடக்கோடு அவள்
பாடி செல்ல....
அதில் மொத்தமும் நான்
சொக்கி போக......
அவள் பாத சுவடுகளை
பார்த்து கொண்டே அதன்
மீது நான் நடக்க......
அரவம் கேட்டு அவள் பின்னே திரும்ப........
திருதிருவென நான்
விழிக்க.........
ஒற்றை புருவம்
உயர்த்தி என்னவென்று
அவள் கேட்க.....
நானோ பதில் கூற முடியாமல்
தவி தவிக்க......
அவள் ஏதோ விசித்திரமாய்
எனை பார்க்க.......
ஒன்றுமில்லை என்றதோடு அவளுக்கு முன்னே
நான் செல்ல....
நான் சென்ற என் பாதசுவட்டின் மேல் நடந்து அவளும் உணர்த்திவிட்டால் அவளுக்கும் என் மீது விருப்பமென்று......
முதலில் யார் சொல்வது
என்ற யோசனையில் நான்
மூழ்கிருக்க.........
அதற்கு முற்றுப்புள்ளி
வைக்கும் ஒற்றை வார்த்தையை அவளே கூறிவிட்டாள்.........
பத்தடி தூரம் பத்தாதடா
பக்கத்தில் வந்து என் கரம் கோர்த்திடுயென.....
