கலாட்டா 21

Start from the beginning
                                    

'அய்யய்யோ இந்தம்மாக்கு எதாச்சும் ஆச்சினா, நம்மை டார்கெட் பண்ணி திட்ட ஆரமிச்சிடுவாங்களே', பயத்தில் அங்கும் இங்கும் நடந்து சரசு முகத்தில் தண்ணீர் தெளித்து பார்த்தாள் சக்தி.

மெல்ல கண் திறந்த சரசுவை அழைத்துச்சென்று மெத்தையில் படுக்க வைத்தாள், "அக்கா, டென்ஷன் ஆகாதிங்க, பாத்துக்கலாம், கல்யாணத்த நிறுத்திடலாமா." சக்தி தீயை பற்ற வைக்க, "அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் சக்தி, இந்த விசயத்த என் கிட்ட விட்டிடு, நான் பார்த்துக்கரேன்." சரசுவின் வார்த்தையை கேட்டு அதிர்ந்து நின்றாள் சக்தி.

"வாட் ப்ளான் அக்கா?, என்னையும் கூட வச்சிக்கோங்க, உங்களுக்கு உதவியா இருப்பேன்" கெஞ்சலாய் சக்தி கேட்க, ம்ம்ம் என தலையசைத்த வண்ணம் அங்கிருந்து நகர்ந்தாள் சரசு.

"அப்பாடா... நாம வந்த காரியம் சிறப்பாக முடிந்தது, நல்லது...." என நிம்மதி பெரு மூச்சியுடன் ஆனந்தமாக வீட்டை நோக்கி நடையைக்கட்டினாள் சக்தி.

மாலை ஆறு மணி, வீட்டின் முன் வைத்திருக்கும் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்தான் சிவா.

அங்கே போர்ட்டிகோவில் ஒய்யாரமாக அசைந்துக்கொண்டிருந்த ஊஞ்சலை ஒன்றை கையில் பிடித்து நிறுத்தினாள் சரசு.

யோசனையின் உச்சத்தில் இருக்கிறாள் என்பது அவளின் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது, ஊஞ்சலில் அமர்ந்து மெல்ல ஆடினாள்.

"ம்மா... என்ன? " கேள்வியுடன் அவளை நோக்கி வந்தான் சிவா.

"என்னடா?" சரசின் பதில் கேள்வி,

"அதைத்தான் நானும் கேட்டேன், வாட் மேட்டர்??" சிவா மீண்டும் கேட்க,

"நத்திங்..." சரசின் பதில்.

"மை டார்லிங்க்கு என்னாச்சி?, ஏதோ டல்லா இருக்கு பட் எங்கிட்ட சொல்ல மாட்டேனுது"

"வார்த்தையாலே ஆளை கவுத்திடுவடா நீ, பெரிய மனுசன் ஆகிட்ட, என்கிட்ட சொல்லாமலே யோசிச்சி முடிவெடுக்குற" பொடி வைத்து பேசினாள் சரசு.

'என்னடா, அம்மா பேச்சே சரியில்லையே, ஒரு வேலை பார்வதி விசயம் தெரிஞ்சிருக்குமோ??, ச்சே ச்சே ... கண்டிப்பா வாய்ப்பேயில்லை, அது எனக்கும் பார்வதுக்கும் மட்டும் தானே தெரியும், வேற என்ன விசயமா இருக்கும்?, ஒரு வேலை போன வாரம் கல்யாணம் ப்க்ஸ் ஆனதுக்கு ப்ரண்ட்ஸ்கு கொடுத்து சரக்கு பார்ட்டி அம்மா காதுக்கு வந்திடுச்சோ?? சரி மன்னிப்பு கேட்டு வைப்போம், எந்த மேட்டர்னு அவங்களே ஆரமிப்பாங்க', மன கணக்கு எல்லாம் முடிந்ததும், "அம்மா, சாரிம்மா... நானே சொல்லனும் தான் நினைச்சேன்" பேசிக்கொண்டே சரசின் முகத்தை நோட்டம் விட்டான்.

நோ ரியாக்ஷன், மீண்டும் துவங்கினான், "அந்த ஆனந்து தான் மா ப்ரண்ட்ஸ் பார்ட்டி கேட்டு என்ன டார்ச்சர் பண்றாங்க ஒழுங்கா அரேஞ்ச் பண்ணு அப்படினு என் உயிர வாங்கிட்டான் மா, உனக்கு தெரியும் இல்ல, நான் எப்பவும் குடிக்க மாட்டேன், பட் அவங்க கிட்ட கண்டிப்பா வாங்கி தர முடியாது அப்படினு சொல்ல முடியல அம்மா..." தயங்கி தயங்கி ஒலரி முடித்தான் சிவா.

"ஓ சார் இது வேற பண்ணீங்களா" என சரசு சிவாவிடம் கேட்டு அங்கிருந்து வேகமாக வீட்டிற்குள் சென்று விட, 'என்னது இது வேறயா? அப்போ நீங்க வேற விசயத்துக்கு கோபத்தில இருக்கீங்களா??, அய்யோ, அய்யோ..., வாலண்ட்ரியாக போயிட்டு மாட்டிக்கிட்டயே டா சிவா, வாட் எ பேட் டைம் இட் இஸ் .. ச்சே' புலம்பியவாரே ஊஞ்சலில் அமர்ந்தான்.

💝எங்க(ள்) கல்யாணம்?🙅🎊 பாகம் 1 (Full Story On Amazon Kindle)Where stories live. Discover now