CHAPTER 37

6.5K 184 41
                                    

JAI POV:

    அடுத்த நாள் காலையில எந்திரிச்சதும் மொதல் வேளையா தாராக்கு ஃபோன் பன்னேன்.ரொம்ப நேரமா ரிங் போய்டே இருந்துச்சு எடுக்கவே இல்லை....நான் ரெண்டு மூனு தடவை ட்ரை பன்னி பாத்தேன் ஆனா அப்பையும் அட்டண்ட் பன்னவே இல்லை....

சரி அப்புறமா ட்ரை பன்னி பாப்போம் இப்ப எதாவது முக்கியமான வேளையா இருப்பா அதான் அட்டண்ட் பன்னலனு நினைச்சு விட்டுட்டேன்....

அன்னைக்கு எல்லாரும் கலை வளகாப்பு ஃபங்ஷன் பத்தி பேச கலை வீட்டுக்கு  கிளம்புனோம்....அப்போ நாங்க போன கார ரொம்ப நேரமா இன்னொரு கார் ஃபாலோ பன்னிட்டு வந்துட்டே இருந்துச்சு....நான் டக்குன்னு சைட்ல நிறுத்திட்டு பாத்தேன்....அந்த காரும் ஸ்டாப் ஆகிடுச்சு.....
ஏன் கார ஸ்டாப் பன்னனு அப்பா என்கிட்ட கேட்டாரு....

"ஜெய் என்னாச்சு...ஏன் கார ஸ்டாப் பன்ன....."

"இல்லப்பா......அதுவந்து......ஒன்னும் இல்லை....."

"ஒன்னும் இல்லன்னா.....ஏன் இங்க நிறுத்திருக்க....."

"ஃபோன் அடிச்சமாதிரி இருந்துச்சு....அதான் நிறுத்துனேன்......வேற ஒன்னும் இல்லப்பா...நம்ம கிளம்பலான்..."னு சொன்னேன்

"ஜெய்....ஆர் யு அல் ரைட்....நான் வேனா ட்ரைவ் பன்னவா டா....."னு கேட்டாரு

"இல்லப்பா....வேண்டாம்....ஐயம் குட்...."னு சொல்லிட்டு கார எடுத்தேன்..

நான் கார எடுக்கவும் அந்த கார் திரும்பி எங்கள ஃபாலோ பன்ன ஆரம்பிச்சது....
நான் மட்டும் தனியா இருந்துருந்தேனா யாருன்னு போய் பாத்துருப்பேன்...ஆனா என்கூட அம்மா...அப்பா... ரேஷ்மி... கலை னு எல்லாரும் இருக்கவும் வேண்டாம்னு விட்டுட்டேன்.நான் எதாவது யோசிக்காம கோவத்துல முட்டாள்தனமா பன்ன போய் மத்தவங்களுக்கு எதாவது ஆச்சுன்னா அப்புறம் என்னைய நானே மன்னிக்க மாட்டேன்...அதான் அமைதியா கார எடுத்துட்டேன்....

அப்புறம் கலை வீடுக்கு கொஞ்ச நேரத்துல போய்டோம்....நான் அந்த கார் நிக்குதானு திரும்பி பாத்தேன்....அந்த கார கானோம்.....நிஜமாவே அந்த கார் நம்மல தான் ஃபாலோ பன்னுச்சா இல்லை நம்மதான் தப்பா எடுத்துக்கிட்டமானு நின்னு யோசிச்சிட்டே வெளில நின்னுட்டு இருந்தேன்.

காதல் ♥️♥️♥️ (Completed)Waar verhalen tot leven komen. Ontdek het nu