ஆமாம்.. நான் கூட உங்கள் கையில் எந்தப் பரிசினையும் காணவில்லையே??

அ....து..அது...வந்து... அது ரொம்ப சின்ன கிப்ட் டா அதான் நீ அதை கவனிக்கவில்லைப் போல...

அடிப்பாவி..... அவள் கிப்டை காண்பிக்க வேண்டும் என்று அடம் பிடிப்பாளே... ஏன்டி இப்படி கோர்த்துவிடுகின்றாய்?? என்று சதியின் காதோரம் கிசுகிசுத்தான்.

பதிலேதும் கூறாமல் நகைத்துவிட்டு.... உங்கள் அண்ணாவிடம் காண்பித்தே ஆகவேண்டும் என்று கேளுடா... என்றாள்.

அண்ணா ப்ளீஸ் காமிங்க...

இல்லடா குட்டி... அவள் பொய் சொல்கிறாள்.

அண்ணா.... இப்போ நீ காண்பிக்கவில்லை என்றால் உன்னுடன் நான் பேச மாட்டேன்.

சதியைப் பார்த்து செல்லமாய் முறைத்தவாறே....அவள் ஏழு என்று ஆரம்பித்தான். அதற்குள்,

ஏழா? ஏழு இல்லைங்க ஒரே ஒரு மோதிரம் தானே... அதை காண்பிக்க இவ்வளவு நேரமா?? என்றாள் சதி..

எ...என்ன... மோதிரம் என்று அவன் புரியாமல் விழிக்க...

ஐ.. அண்ணா மோதிரம் சூப்பர் என்று அவன் கைகளை உயர்த்திப் பார்த்தாள்.

இதை எப்பொழுது போட்டாய் என்றான் ரகசியமாய்....

நீங்கள் தூங்கும் பொழுதே... என்று சிரித்தாள்.

அண்ணா இதை காட்டுவதற்கு இவ்வளவு நேரமா??

இல்லைமா... உங்க அண்ணி போட்டுவிட்டதே எனக்குத் தெரியவில்லை.

போங்க அண்ணா... அது எப்படி தெரியாமல் இருக்கும்...

அவர் தூங்கிக் கொண்டு இருக்கும் பொழுதே போட்டுவிட்டேன் டா. அதான் உங்க அண்ணாவிற்கு தெரியவில்லை.

நீங்க சொன்ன ஓகே அண்ணி.. என்று சிரித்தாள் அந்தப் பெண்.

குட்டி... நீயும் உங்க அண்ணி பக்கம் போய்டியா... அதற்குள் இந்த அண்ணணின் பேச்சினை நம்பமாட்டாயா?? இங்க வா நீ...

ஐய்யோ அண்ணி... காப்பாற்றுங்கள்... என்று சதியின் பின்னால் மறைந்தாள்.

உன்னைச் சேர்ந்திடவே மீண்டும் பிறந்தேன்.....Där berättelser lever. Upptäck nu