அதுக்கப்புறம் நான் கலைக்கிட்ட எல்லாத்தையும் ஷேர் பன்னிக்க ஆரம்பிச்சேன்.அவளும் எல்லாத்தையும் என்கிட்ட ஷேர் பன்னுவா.நான் இவ்வளோ கம்மியான டைம்ல யார்க்கிட்டையும க்ளோஸா பழகுனது இல்லை.கலைக்கிட்ட அப்புடி இருந்தது எனக்கே ஆச்சரியமா இருந்துச்சு.

இப்புடியே கொஞ்ச நாள் எங்க ரெண்டு பேருக்கும் ஜாலியா போய்டு இருந்துச்சு.

அதுக்கப்புறம் ப்ரீயா என்னோட கம்பெனில வந்து ஜாய்ன் பன்னா.

அவ வந்ததுக்கு அப்புறம் கலை என்கிட்ட டிஸ்டென்ஸா இருக்குற மாதிரி இருந்துச்சு.அவளவா என்கிட்ட பேசமாட்டா வெளகியே இருப்பா.

ப்ரீயா கலைக்கிட்ட கொஞ்சம் ரூடா நடந்துப்பா.இருந்தாலும் நான் எதுவும் சொல்லமாட்டேன்.ஏன்னா கொஞ்ச நாள் முன்னாடிதான் அவ சூசைட் அட்டண்ட் பன்னிருக்கா நான் அவள திட்டிட்டா  திரும்பவும் எதாவது பன்னிப்பாலோன்னு எனக்கு ஒரு பயம்.

நான் கலைக்கிட்ட ப்ரீயா என்ன சொன்னாலும் அவகிட்ட கொஞ்சம் பொறுமையா நடந்துக்க சொன்னேன்.அவக்கிட்ட ஏன்னு நான் காரணத்தை சொல்லல.
அவளும் அமைதியா சரின்னு ஒத்துக்கிட்டா.

அப்புடியே கொஞ்ச நாள் போச்சு.....

அப்போதான் ஒரு பெரிய டீல் ஒன்னு வந்துச்சு.எங்க கம்பெனிக்கும் இன்னொரு கம்பெனிக்கும்  அந்த டீல்காக போட்டி இருந்துச்சு.

எப்படியும் அந்த டீல் எனக்குதான் கிடைக்கனும்னு  அதுக்கு தேவையான எல்லாத்தையும் நானே ரெடி பன்னேன்.

டீல் ஃபைனல் ஆறதுக்கு மொதல் நாள் நைட்டு நான் முக்கியமான ஃபைல் ரெடி பன்னிட்டு இருந்தேன்.

அப்போதான் என் கேபின் கதவ யாரோ தட்னாங்க.நான் யாருன்னு கேட்டேன்.கலை உள்ள வந்தா.

"ஏ.....கலை நீ இன்னும் வீட்டுக்கு போகலையா நைட்டு எட்டு மணி ஆச்சு ஆண்டி பயந்துட்டே இருக்க போறாங்க."னு சொன்னேன்.

"அதெல்லாம் அம்மாகிட்ட சொல்லிட்டேன்.ஜெயந்தி அண்டிதான் உனக்கு கால் பன்னாங்கலாம் நீ எடுக்கலன்னு பயந்துட்டு எனக்கு ஃபோன் பன்னாங்க. அதான் என்ன பன்றன்னு பாக்க வந்தேன்.மொதல்ல ஆண்டிக்கு ஃபோன் பன்னி பேசிட்டு ஜெய்"னு சொன்னா.

காதல் ♥️♥️♥️ (Completed)Where stories live. Discover now