"அப்போ  என் அம்மாகாக இங்க ஜாய்ன் பன்ன வந்துருக்க.....நான் சொன்னதுக்காக இல்லை."

" இல்லை...ஆண்டிக்காக மட்டும்தான் வந்தேன்.நீ அன்னைக்கு என்கிட்ட பேசிட்டு போனதுக்கு அப்புறம் உன்ன பாக்கவே கூடாது உன்கிட்ட பேசக்கூடாதுன்னு இருந்தேன்.ஆனா இப்ப பாரு உன்கிட்டையே வேலை பாக்க உக்காந்துருக்கேன் அதுவும் உன்னோட பீ.ஏ வா.....எல்லாம் என்னோட நேரம்."னு தலையில அடிச்சிக்கிட்டா.

"ம்ம்......வந்தப்போ இருந்ததுக்கு இப்ப பரவாயில்ல."

"என்னது பரவாயில்லை....."

"இல்லை வந்தப்போ தயங்கி தயங்கி பேசிட்டு இருந்த இப்போ நல்லாவே பேசுற முன்னேற்றம்னு சொன்னேன்.
எனிவேஸ் உனக்கு ஓகேனா நீ இன்னைல இருந்து ஜாய்ன் பன்னிக்கோ.வெளில செக்ரெட்ரி இருப்பாங்க அவுங்ககிட்ட எதுனாலும் கேளு சொல்லித்தருவாங்க.
ஆல் த பெஸ்ட்."னு சொல்லிட்டு அவ ஃபைல குடுத்தேன்.அவ பட்டுனு என் கையில இருந்து வாங்கிட்டு எந்திருச்சு போய்ட்டா.
அவ பன்றத பாத்துட்டு எனக்கு சிரிப்பு வந்துருச்சு.

அவ பன்ன மாதிரி வேற யாராவது என் முன்னாடி பன்னிருந்தாங்கன்னா இன்னேரம் நடக்குறதே வேற.ஆனா அவ அப்புடி திமிரா என் முன்னாடி நடந்துக்குறப்போ எனக்கு அவ மேல கோவம் வரல சிரிப்புதான் வந்துச்சு.

ம்ம்...இனிமேல் டெய்லி ஃபன்னு தான் போன்னு சிரிச்சிட்டே என் வேலையை பாக்க ஆரம்பிச்சேன்.

அதுக்கப்புறம் டெய்லி நான் வேணும்னே கலைக்கிட்ட எதாவது சொல்லி அவள கடுப்பேத்திட்டே இருப்பேன்.அவளும் கோவப்பட்டு போய்டுவா.காமடியா இருக்கும்....

அவ என்னோட பீ.ஏ ன்றதால அவ எப்பவுமே என் கூடவே தான் இருந்தாகனும் வேர வழியில்லை.

எங்க நான் மீட்டிங் போனாலும் ஒன்னாதான் போவோம்.ஒருசில நேரம் வெளில போக வேண்டியதெல்லாம் வரும்.அந்த டைம்லதான் நானும் அவளும் நல்லா க்ளோஸா பழக ஆரம்பிச்சோம். என்மேல இருந்த கோபத்த எல்லாம்  மறந்துட்டு என்கூட சகஜமா ஃப்ரெண்ட்லியா பழக ஆரம்பிச்சா.

காதல் ♥️♥️♥️ (Completed)Dove le storie prendono vita. Scoprilo ora