°•°•♥19♥°•°•

Start from the beginning
                                    

     டேய்... என்னடா... இப்படி ப்பீல் பண்ற?? உன்னை நான் ரொம்ப ஜாலி டைப்னு அல்லவா நினைத்தேன்....

    ம்.... ஆமா... ஆனாலும் நானும் சாதாரண மனிதன் தானே... என்ன.. என் உணர்வுகளை பல நேரங்களில் வெளிப்படுத்தாமல் கட்டுப்படுத்திக் கொள்ள தெரிந்து வைத்திருக்கின்றேன் அவ்வளவுதான். உன் முன்னால் நான் வெளிப்படுத்துவதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. நீ என் மனைவி ஆகிற்றே.... என் சுக துக்கங்களை உன்னிடம் பகிர்வது தான் நியாயம். பணத்தால் கிடைக்கக்கூடிய அனைத்தும் கிடைத்தது... எனினும் எனக்கு எந்த மகிழ்ச்சியும் இல்லை... உறவு.. பாசம்.. உணர்வுகள்னு எதுவுமே இல்லாமல் தனிமையில் மட்டுமே வாழ்ந்துக் கொண்டிருக்கின்றேன்.. இந்த வீடு மட்டும் தான் எனக்கு ஆறுதல். இதற்குள் வந்தால் ஒரு நிம்மதி... ஆனால் அது உன்னோடு இருக்கும் பொழுதுதான் முழுமையடையும் என்றும் தோன்றுகிறது.

      டோன்ட் வொரி சிவ்... இனி நான் இருக்கின்றேன், நீ இழந்த அத்துனையையும் உனக்கு வழங்குவதற்கு...

    ம்.. உன்னை பார்த்த நொடியில் நான் உணர்ந்துவிட்டேன். எனக்கானவள் நீ என்றும்.. நான் இழந்ததை நீ மீட்டுத் தருவாய் என்றும்....

      ம்.. கரெக்டா தான்டா நினைத்திருக்கிறாய்... நான் பார்த்துக் கொள்கிறேன்...

     தாங்யூடி... என்று ஹக் பண்ண வந்தவனை... டேய்..  என்று செல்லமாய் எச்சரித்தாள்...

     ஸாரி... ஸாரி டி... கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன். கல்யாணம் ஆகலைங்கிறதையும் மறந்துட்டேன்...

    ம்..ம்...

    ரியலி ஸாரி டி...

    இட்ஸ் ஓகே டா . உன்னைப் பற்றி எனக்குத் தெரியாதா... விடு.. வா சாப்பிடலாம்.

     ஒரு டம்பளரில் கஞ்சி சாதமும், பிளேட்டில் ரசம் சாதமும் கொஞ்சம் காரச் சட்னியையும் வைத்து எடுத்துக் கொண்டு வந்தாள்.

     பர்ஸ்ட் இந்த கஞ்சி சாதத்தைக் குடி... அது பிடிக்கலைனா இந்த ரசம் சாதத்தை சாப்பிடு டா...

உன்னைச் சேர்ந்திடவே மீண்டும் பிறந்தேன்.....Where stories live. Discover now