°•°•♥19♥°•°•

Magsimula sa umpisa
                                    

    ம்.. சரி மட்சியா.. பார்த்துக்கோ... ஏதாவதென்றால் கால் செய். பணம் வைத்திருக்கின்றாயா?? இல்லை டிரான்ஸ்பர் செய்யவா?

   ம் இருக்குடி..

   சரி... ஈவ்னிங் சீக்கிரம் வந்துவிடு மட்சியா. ரெகுலர் டைமிற்கெல்லாம் வீட்டிற்கு சென்றுவிட வேண்டும்.

   ம் சரி மதனா.

    வீடு என்றதும் தன் தாய், தந்தையைப் பற்றி யோசித்தாள். நான் அவர்களுக்குத் தெரியாமல் இங்கு வந்திருக்கின்றேனே... மறைப்பது குற்ற உணர்ச்சியைத் தூண்டியது..

   சிவ்வின் இருமல் சத்தத்தில் மனம் கலைந்தாள். அவனுக்கு மதிய உணவு செய்ய ஆரம்பித்தாள். சமையலைச் செய்து கொண்டே அவன் வீட்டையும் சிறிது மாற்றியிருந்தாள்.

   கஞ்சி சாதம், காரச் சட்னி, ரசம் என காய்ச்சலின் போது உண்ணத் தோன்றும் அனைத்தையும் சமைத்துக் கொண்டிருந்தாள்.
    அதற்குள் சிவ் உறக்கம் கலைந்து அவளைத் தேடிக் கொண்டு சமயலறைக்கு வந்தான்.

     என்னடி இவ்வளவு சமைத்துக் கொண்டிருக்கிறாய். நான் ஒருவன் தான் இங்கு இருக்கப் போகிறேன் என்பதை மறந்துவிட்டாயா??

    இல்லைடா... காய்ச்சலின் போது நமக்கு என்ன சாப்பிடத் தோனுகின்றதோ அதைச் சாப்பிட வேண்டும். அதான்... உனக்கு காரமா சாப்பிடனுமா.. இல்லை புளிப்பாக சாப்பிடனுமானு தெரியலை... எல்லாவற்றையும் செய்துவிட்டேன்... சாப்பிடுகிறாயா??

    வேணாம் மட்சியா.. கொஞ்ச நேரம் ஆகட்டும்... நீ வந்து அமர்ந்து கொள். எவ்வளவு நேரம் தான் நின்று கொண்டே இருப்பாய்?

   அவ்வளவு தான்டா வேலை முடிந்தது. சரி வா.. நீ முதலில் வந்து அமர்.

     தாங்க்ஸ் மட்சியா...

    எதுக்குடா??

    யோசிக்காமல் என் வீட்டிற்கு வந்ததற்கு... என் அன்னையைப் போல் என்னை பார்த்துக் கொண்டதற்கு.... சிறு வயதிலேயே இழந்துவிட்ட பாசத்தினை, அரவணைப்பினை மீண்டும் தந்ததற்கு...

உன்னைச் சேர்ந்திடவே மீண்டும் பிறந்தேன்.....Tahanan ng mga kuwento. Tumuklas ngayon