கலாட்டா 8

Start from the beginning
                                    

"என்னத்தாயி, அந்த தட்டைத்தூக்கி வர கூட தெம்பில்லையா?? " என்று திண்ணையின் கூட்டத்தில் ஒரு குரல் வர, "அட புள்ள இன்னும் மாப்பிள தம்பியை நினைச்சிக்கிட்டே நடந்து வந்திருக்கும்" என்றார் மற்றொருவர்.

எல்லா வித்தைகளையும் செய்துவிட்டு எனக்கென்ன என்பதைப்போல அறையில் மறைந்துக்கொண்ட சிவாவை பொய்யான கோபத்தோடு எட்டிப்பார்த்தாள் பார்வதி.
"மாட்டிவிட்டுடாத பார்வதி,  ப்ளீஸ்" என்றவாரே அறையில் இருந்து எட்டிப்பார்த்து கெஞ்சிக்கொண்டு இருந்தான் சிவா.

அங்கே சப்தம் கேட்டு, வெளியே வந்த பரிமளம் பார்வதிக்கு உதவ எண்ணிணாள். "சீக்கிரம் எடு டி, வெத்தலைய மட்டும் தண்ணியில ஒரு முறை கழுவிட்டு வெளியே கொண்டு போயி கொடு" என பரிமளம் பேசிக்கொண்டே கீழிருந்தவற்றை எடுத்து தட்டில் வைக்க, பார்வதி அடிக்கடி வலப்பக்கம் இருக்கும் அறையை திரும்பித்திருப்பி பார்த்ததை கவனித்தாள்.

"என்னடி அங்க அடிக்கடி பார்வை?" என பரிமளம் கேட்க, என்ன சொல்வது என யோசித்தவாரே, "அது வந்தும்மா, அந்த அறை தாழ்ப்பாள் போடாம இருக்கேனு பார்த்தேன்" என தான் பங்கிற்கு உளரி கொட்டியது சிவாவின் காதில் கேட்டது. 

"அடிப்பாவி, இப்போ கதவைப் பூட்டிட்டா நான் எப்படி வெளியே வருவேன்" என மனதிற்குள்ளே புலம்பிக்கொண்டு இருக்க, அதற்கு ஏற்றார்போல பரிமளமும் அறையின் கதவை தாழிட்டாள்.

"போச்சுடா" என தலையில் கை வைத்துக்கொண்டு அறைக்குள்ளே தரையில் அமர்ந்தான் சிவா. சற்று நேரத்தில் தாழ்ப்பாள் திறந்த சப்தம் கேட்டதும் பதுங்கும் புலி பாய்வதற்கு தான் என அறியாமல் அறை திறந்தும் அவன் வெளியே வரவில்லையே என உள்ளே சென்று எட்டிப்பார்த்தாள் பார்வதி.

கதவின் பின்புறம் மறைந்திருந்தவன் அவள் உள்ளே நுழைந்ததும் சப்தம் இல்லாமல் வெளியே  சென்றுவிட, அறையெங்கும் தேடி அவனைக் காணாததால் சற்று சோர்வுடன் வெளியே வந்தவள், அக்கம்பக்கம் தேட, அவளைத்தேடி வருபவன் போல அவள் முன்னே வந்த சிவா, "பார்வதி நீ இன்னும் சாப்பிடலையாமே உன்ன அத்தை தேடினாங்க, உன்ன எங்க பார்த்தாலும் கையோட அழைச்சிட்டு வர சொன்னாங்க, வா போவோம்" என அவளின் கையை பிடித்துக்கொண்டு முன்னே நடக்க, சரியான காரியசாலி தான், என்ன சாதூரியமாக அனைவரின் முன்னும் கையைப் பிடித்துக்கொண்டு இலகுவாக நடக்கிறான். சற்றே கூச்சம் அதிகரிக்க, கையை விடுங்க, ப்ளீஸ்... நேனே வரேன்" என்றாள் பார்வதி. "நோ நோ உன்னை கையோட அழைச்சிட்டு வர சொல்லிருக்காங்க, அமைதியா என் கூட வா" என விடாக்கொண்டனாக அவளை அழைத்துச் சென்றான்.

அனைவரும் இலைப் போட்டு பார்வதிக்காக காத்திருக்க, அவர்கள் வந்ததும் "அக்கா நீங்க போயிட்டு சாப்பிடுங்க, நான் பரிமாறுகிறேன்" என்றாள் பவித்ரா. "ஹே பவி நான் சும்மாதானே இருக்கேன், நான் பரிமாறேன், நீயும் போயிட்டு உட்கார்ந்து சாப்பிடு" என சிவா கூற அனைவரும் மறுத்தனர். "வேண்டாம் மாமா, சரசு அத்தை பார்த்தா மாமியார் வீட்டுல அவங்க பையன கொடுமை செய்யுறோம்னு நினைச்சிப்பாங்க" என பவித்ரா கிண்டலாக கூற, "அதெல்லாம் அப்படி நினைக்க மாட்டேன் சின்னவளே" என்ற குரலுடன் அங்கே ஒரு எண்ட்ரி கொடுத்தாள் சிவாவின் அம்மா சரசு.

ஐய்யய்யோ இவர்கள் வருவதை கவனிக்காமல் கேலியடித்துவிட்டோமே என குனாக நாக்கை கடித்தாள் பவித்ரா.

"உங்களுக்கு எதற்கு சிரமம்" என பரிமளம் பேச வாயெடுக்க, சிரமம் எதுவும் இல்லை அண்ணி, வீட்டிலும் எங்களுக்கு அவன் தான் பரிமாறுவான், இது எல்லாம் பழக்கப்பட்ட வேலை தான் என சிவாவின் முகத்தை பார்த்த வண்ணம் சிவாவிற்கு சரசு சப்புக்கொட்ட, அய்யய்யோ அம்மா நன்றாகவே தன்னை ஏற்றி தூற்றுகிறார், வீட்டில் ஒரு வேலை சாப்பாடு கூட அவர்களுக்கு பரிமாறியதில்லை என்பதை சொல்லாமல் சொல்கிறார். அது இவர்களுக்கு புரியாது என மனதை தேற்றிக்கொண்டான் சிவா.

சிவாவைப் பார்த்தவள், உங்கள் சம்பாசனையும் எனக்கு புரியும் என்றவாறு கீழே குனிந்து சிரித்துக்கொண்டிருந்தாள் பார்வதி.

💝எங்க(ள்) கல்யாணம்?🙅🎊 பாகம் 1 (Full Story On Amazon Kindle)Where stories live. Discover now